விஜய் டிவி நிகழ்ச்சிகளின்
தரம் இப்படிதான் இருக்கிறது! ( சிறு விமர்சனம்
)
ஒரு காலத்தில் விஜய்டிவியை
பார்க்க ஆரம்பித்ததே அதில் வரும் #நீயாநானா என்ற நிகழ்ச்சிக்காகத்தான்
அப்போது அதில் வரும் விவாதங்கள் சூடு பறக்க இருக்கும். ஆனால் இப்போது அதில் வரும் விவாதங்கள்
சூடு ஆறிப் போன கஞ்சி மாதிரியாகிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் விவாவதிக்க வருவதெற்கென்றே
குத்தகைக்கு எடுத்த மாதிரி அதே அறிவு ஜீவிகள் மட்டும் திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களிடம் விவாதத்திற்கான தலைப்புக்கள் முதலிலேயே கொடுக்கப்பட்டுவிடுவதால் அவர்கள்
கல்லூரி பரிட்சைக்கு படிப்பதுமாதிரி இந்த நிகழ்ச்சிக்கும் நெட்டில் நேரம் செலவழித்து
சர்ச் பண்ணி தங்களை தயார் பண்ணி வந்து நிகழ்ச்சிகளில் அப்படியே வாந்தி எடுக்கின்றனர்.
இந்த அறிவு ஜீவி கும்பல்களிடையே சில பொதுமக்களையும் கலந்து உட்கார வைத்து நிகழ்ச்சி
இயற்கையானதாக இருப்பது மாதிரி செட்டப் செய்துவிடுகின்றனர். இந்த பொதுமக்களில் யாரவது
தெரியத்தனமாக உளறிவிட்டால் இந்த அறிவுக் கூட்டமும், கோபிநாத்தும், கேமராவும் அவரை குறி
நோக்கி கும்மி எடுத்துவிடுவார்கள்
முன்பு எல்லாம் #நீயா நானா நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் டிவிட்டரில் பேஸ்புக்கில் வலைததளங்களில் மிக பரபரப்புடன் விவாதிக்கப்படும் ஆனால் கடந்த ஒராண்டுகளுக்கு மேலாக அப்படி ஏதும்
நடக்கவில்லை... இப்போது நீயா நானாவை பார்த்த கூட்டத்தை #தந்திடிவியும்
#புதியதலைமுறை டிவியும் தட்டிப்பறித்துவிட்டன என்றுதான் சொல்லலாம் அதிலும் தந்திடிவியில்
#பாண்டே நடத்தும் நிகழ்ச்சியும் புதிய தலைமுறையில்
இருந்த #குணசேகரனும் தட்டிப் பறித்துவிட்டார்கள் அவர்கள்
நடத்தும் விவாதங்கள்தான் இணைய தளங்களில் மட்டுமல்ல
அரசியல் தளங்களிலும் மக்களிடமும் பேசும் பொருளாகி
இருக்கின்றது. தேர்தலுக்கு அப்புறம் விஜயகாந்தின்
நிலமை போலதான் கோபிநாத்தின் நிலமையும் இருக்கிறது
இப்போது விஜய்டிவியில்
நடக்கும் நீயா நானா பார்ப்பதும் சன் டிவியில் வரும் சொல்லுங்கண்ணா சொல்லுங்க நிகழ்ச்சியை
பார்ப்பதும் ஒன்றாகத்தான் இருக்கிறது. என்ன நீயா நானா ஸ்டுடியோவிற்குள் வைத்து
நடத்தப்படுகிறது ஆனால் சொல்லுங்கண்ணா சொல்லுங்க பொது வெளியில் வைத்து எடுக்கப்படுகிறது
அவ்வளவுதான் வித்தியாசம்
அடுத்தாக இப்போது #விஜய்டிவியில் #அச்சம்தவிர் என்ற காமடி நிகழ்ச்சியும், #கலக்க போது யாரு என்று பார்ப்பவர்களை கொல்லும் அதிபயங்கர நிகழ்ச்சியும்
நடை பெறுகிறது. எனக்கு புரியவில்லை ஏன் இந்த நிகழ்ச்சிகளுக்கு தவறான தலைப்பை
தேர்தெடுத்து இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை
மேலும் தமிழ் கலாச்சாரத்தை
சீரழித்துவிடுவதெற்கென்றே #கனெக்க்ஷன் கனெக்க்ஷென்
மற்றும் #ஜோடி என்ற அருமையான நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்
இப்போது #நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை அரவிந்த்
சாமியை கொண்டு நடத்திவருகிறார்கள். சுவாராஸ்யம் கொஞ்சம் கூட இல்லாமல் அரவிந்த சாமி
நடத்தும் நிகழ்ச்சியை முழுமையாக பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு கோடி விஜய் டிவி
அறிவித்தால் அதிக மக்கள் இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்க்க கூடும்
விஜய் டிவியில் நல்ல நிகழ்ச்சிகள்
ஒன்றுமே இல்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது அவர்களும் ஒரு சில நல்ல
நிகழ்ச்சிகளை அவ்வப்போது நத்துகிறார்கள் அதில் ஒன்று #ஒருவார்த்தை
ஒரு லட்சம் மற்றும் #தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
என்ற நிகழ்ச்சியும் எல்லா வயதினரும் பார்த்து மகிழக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கிறது
அதற்காக விஜய் டிவியை நாம் பாராட்டுவோம் ஆனால் அந்த நிகழ்ச்சிகள் தொடரந்து வருவதில்லை போல இருக்கிறது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
மாசத்துக்கு ரெண்டு தரம் 'தம்பிக்கு எந்த ஊரு?' படம் போடுவார்கள்!
ReplyDeleteசிறு விமர்சனம் மட்டும் அல்ல
ReplyDeleteசரியான விமர்சனமும் கூட
விஜய் டீவி நிகழ்ச்சிகளின் தரம் குறைந்துதான் போய்விட்டது! சிறப்பான அலசல்!
ReplyDeleteதமிழ் பேச்சு எங்கள் மூச்சு இப்போதும் வருகிறதா?. கனெக்ஷன் பார்த்தாலே எரிச்சல் தரக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று. ஜகனின் கோணங்கித் தனங்களும் பேச்சும் ரசிக்கும் படி இல்லை.நீயா நானாவிலும் சுவாரசியம் இல்லை. முன்பு இரண்டு மணிநேரம் இருந்த நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரமாக குறைக்கப் பட்டது ஒரு ஆறுதல்.நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் இன்னுமொரு மொக்கை
ReplyDeleteமஹா மொக்கை நிகழ்ச்சிகள் - நான் பார்ப்பதில்லை என்றாலும் சில சமயம் வீட்டினர் பார்க்கும்போது இதை எல்லாம் எப்படி பார்க்கறீங்க என்று கேட்கத் தவறுவதில்லை.
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே! விஜய் டிவி பார்த்து ரொம்ப வருடம் ஆச்சி
ReplyDeleteடி வி பக்கம் 99% போவதில்லை. போனாலும் படம் ஏதேனும் நல்லதாக இருந்தால் மட்டுமே. ஒரு வார்த்தை ஒரு லட்சம் மட்டும் அதுவும் ரெகுலராக எல்லாம் இல்லை எப்போதேனும் பார்ப்பதுண்டு.
ReplyDeleteகீதா
விஜய் tv சில சீரியல் களை முழுமையாக ஒளிபரப்பு செய்வசெய்வது இல்லை
ReplyDeleteசிவம்
உறவுகள் தொடர்கதை