மனைவியை சந்தோஷப்படுத்த
ஒரு நல்ல செய்தி
போலீஸ் ஆபிஸர்
: ஒரு நல்ல போலீஸ் ஆபிஸர் கெட்டவங்களை எல்லாம் பிடிச்சு ஜெயிலில் போட்டாலும் அவர் வீட்டிற்கு
போனால் மனைவியால் ஹவுஸ் அரஸ்ட் பண்ணப்படுகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாதுதானே
பேராசிரியர்
: அவர் என்னதான் ஆராய்ச்சி படிப்பு எல்லாம் படித்து முடித்துவிட்டு பல்லாயிரக்கணக்கான
மாணவர்களுக்கு லெக்சர் கொடுத்தாலும் அவர் வீட்டிற்கு வந்தால் மனைவியின் லெக்சரை தினமும்
கேட்டால்தான் சாப்பாடுகிடைக்கும்
முதலாளி(CEO:)
ஒரு பெரிய கம்பெனியின் CEO:வாக இருந்து அவருக்கு கிழ் ஆயிரத்திற்கும் மேல் வேலைக்காரர்கள்
வேலை செய்து வந்தாலும் தன் வீட்டிற்கு வந்த பின் தன் மனைவி சொல்படி கேட்கும் வேலைக்காரனாகவே
வீட்டில் இருக்கிறார்கள்
நீதிபதி : நாட்டிற்கே
நீதி வழங்கினாலும் அவர் வீட்டிற்கு வந்தால் மனைவியிடம் நீதிக்கு கெஞ்சதான் வேண்டி இருக்கிறது.
செஃப் : ஹோட்டலில்
தலமை செஃப் ஆக இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பேருக்கு உணவு தாயாரித்து கொடுத்தாலும்
தன் வீட்டிற்குள் வந்த பின் மனைவியின் தலைமையில் தான் உணவு தாயாரிக்கப்படுமே தவிர செப்ஃபின்
தலமையில் அல்ல
தலைவர்(கலைஞர்)
தமிழகத்திற்கே தலைவராக இருந்தாலும் வீட்டிற்கு வந்த பின் மனைவி(கள்) சொல் கேட்டுதான்
ஆட வேண்டி இருக்கிறது..
ஆகவே பெண்களே
நீங்கள் மிக சிறந்த பதவிகளை தக்க வைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
பிளாக்கர்கள் (மதுரைத் தமிழன்): என்னதான் சொந்தமாக பதிவுகள் எழுதினாலும், மனைவியிடம் காட்டிய அனுமதி பெற்ற பின்புதான் பதிவை வெளியிட முடிகிறது.
ReplyDeleteஇந்த பதிவை உங்க மனைவி படிச்சா உங்களுக்கு பூரிக்கட்டை அடி கொடுக்கிறதை விட்டுடுவாங்கன்னு நினைக்கறேன்! அருமை!
ReplyDeleteசெமை
ReplyDeleteபெண்களின் பெருமையைப் பேசும் பதிவு.
ReplyDeleteம்.... இதை உங்கள் மனைவியிடம் காண்பித்த பிறகு தானே வெளியிட்டீர்கள். பூரிக்கட்டை பறந்திருக்குமே!
ReplyDeleteரொம்ப காயமோ அதான் இப்படிப் போட்டு ....இனி பூரிக்கட்டை அடி இருக்காதுனு சொல்லுங்க......சகோதரி பார்த்தாங்களா ...பெருமை அடைந்திருப்பாங்களே!! விருந்து கிடைச்சிருக்குமே...
ReplyDelete