Thursday, June 16, 2016



அமெரிக்காவை நல்லா புரிஞ்சுக்கோங்க மக்களே


US Senate rejects Bill on special status for India, proposed after Modi-Obama talks 


அமெரிக்காகாரன் மோடிக்கு கைதட்டிய பின் இப்படியும் தட்டி இருக்கிறான்


பேஸ்புக்கில் நிர்மலன் குமார் சொன்ன வரிகளில் ஒரு வரியை இங்கே சொல்லவிரும்புகிறேன் "கைத்தட்டல் அனைத்தும் அவன் பழைய பொருளை வாங்கும் வரை மட்டுமே. அதில் நீ உனது கமிஷனை எடுத்துக்கொள். அவ்வளவே."

--------------------------

மோடிக்கு ஒன்றும் அமெரிக்கா மரியாதை செலுத்தவில்லை அமெரிக்க செய்வது எல்லாம் இந்தியாவிற்கு அதாவது இந்திய பிரதமருக்குதான் மரியாதை தருகிறது அதுவும் இந்திய ஒரு ஜனநாயக நாடு என்பதால் மரியாதை எல்லாம் தரவில்லை அங்கு இருக்கும் வியாபார மார்கெட்டிற்காகத்தான் அமெரிக்க இப்படி நாடகமாடுகிறது என்பதுதான் உண்மை

இது தெரியாமல் என்னவோ மோடி சாதனை செய்துவிட்டார் அதனால்தான் அமெரிக்க இப்படி இறங்கி வந்து மரியாதை செய்கிறது என்று மோடியின் அடிவருடிகளும்  சிந்திக்க தெரியாத இந்திய மக்களும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.


அடுத்த தேர்தலில் நீங்கள் வடிவேலையோ அல்லது செந்திலையோ அல்லது கவுண்ட  மணியையோ இந்திய பிரதமராக தேர்ந்தெடுத்து அவர்களும் மறைமுகமாக அமெரிக்காவிற்கு இந்திய மார்க்கெட்டை திற்ந்து விட்டால் அவர்களுக்கும் இப்படி மரியாதை கிடைக்கும். ஆனால் அதே சமயத்தில் அவர்களின் பதவி முடிந்துவிட்டால் அவர் தலையில் இருந்து  உதிர்ந்த மயிருக்குதான் சமம்.


உலகத் தலைவர்களிடையே மிக அதிகம் படித்தவர் மன்மோகன் சிங் அவர் அமெரிக்க வரும் போதெல்லாம் அவரை மிகவும் மதித்து நடத்தினர் அதுமட்டுமல்லால் அவர் மிகவும் படித்தவர் என்பதால் பல நேரங்களில் மிகவும் சிறப்பாக நடத்தினர். அப்படி மிகவும் படித்தவரான மன்மோகன் சிங்க் மோடி மாதிரி பில்டப் ஏதும் செய்யவில்லை.. அப்படிபட்டவரை அமெரிக்கா இப்போது சுத்தமாக மறந்துவிட்டது. ஆனால் டீக்கடை டபாரா மாதிரி இப்போது சத்தத்தை மிகவும் அதிக அளவு எழுப்பும் மோடியையா வருங்காலத்தில் அமெரிக்க பாராட்டிக் கொண்டா இருக்கும்.


அடுத்த தேர்தலில் மோடி தோற்றுவிட்டு அதன் பிறகு அமெரிக்கா வர முயற்சி செய்யட்டும் அப்போது பாருங்கள் என்ன நடக்கும் என்பதை  அப்படி அவர் வர முயற்சித்தால் இங்குள்ள சீக்கியர் அல்லது இஸ்லாமியர் அவர் மீது வழக்கு தொடுப்பார்கள் குஜராத் சம்பவம் மீண்டும் தட்டி எழுப்பப்படும் அதனால் இங்கு மீண்டும் வர விசா மறுக்கப்படும்.

இது தான் உண்மை அப்படி இல்லை என்று நினைப்பவர்கள் பொருத்து இருந்து பாருங்கள்.

அன்புடன்
மதுரைதமிழன்

படித்ததில் பிடித்தது
Sujit Sircar   : Sometime I wonder whether Modi has won election in 2014 or won a world tour package!

2 comments:

  1. மிகச் சரி
    அங்கு தேர்தல் முடிவுகளைக் கூட
    பொருளாதர முடிவுகள் தானே
    முடிவு செய்கிறது

    ReplyDelete
  2. இந்த மோடிக்கே வீசா தரக் கூடாது என்று இருந்தவர்கள்தானே அமெரிக்கர்கள் இப்போதும் மோடியின் சில கொள்கைகளை அமெரிக்க செனடர்கள் கேள்வி கேட்கிறார்களாமே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.