Friday, November 9, 2012



காதலில் அல்ல கல்யாண வாழ்க்கையில் சொதப்புவது எப்படி?
 




நானும் என் மனைவியும் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இரண்டாவது தடவையாக பார்த்து விட்டு   பால்கனியில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம் ,அப்போது நான் ஒரு கிளாஸில்  மதுவை கொஞ்சம் ஸ்டிராங்க ஊற்றி அருந்தி கொண்டிருந்தேன் எதுக்கு ஸ்ராங்காக் ஊற்றி   அருந்துகிறேன் என்று கேட்கிறீர்களா அது ஒண்ணுமில்லைங்க குடிக்கும் முன் என் மனைவி சொன்ன 2 கிளாஸுக்கு மேல் அருந்த கூடாது என்று  அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தாள் ஆனால் நமக்கோ நாலு கிளாஸ் தேவைப்படும் அதானல் இரண்டு கிளாஸில் நாளு கிளாஸுக்கு தேவையான மதுவை ஊற்றி அருந்திக் கொண்டிருந்தேன்..

அப்போது நான் மது அருந்தியவாறே சொன்னேன்உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை

என் மனைவி கேட்டாள் என்ன ஐயாவுக்கு  மிக ரொமாண்டிக் மூட் போல! நீண்ட நாட்கள் கழித்து நீங்கள் இப்படி பேசுகிறீர்கள்  இது நீங்கள் படம் பார்த்ததாலா அல்லது  உங்களுக்குள் போன மது பேசுகிறதா?”

அதற்கு நான் பேசாமல் தலையை ஆட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும் ஆனால் அப்ப விதி என்கூட விளையாடிவிட்டது போல அதனால்நான் அவளிடம் நான் மதுவோடு தான் பேசிக் கொண்டிருக்கிறேன் உன்னோடு அல்ல என்று சொல்லிவிட்டேன் அவ்வளவுதாங்க!!”

அதுக்கு பிறகு என்ன நடந்தது என்று நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?





அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
அப்பாவிகணவன் "மதுரைத்தமிழன்

9 comments:

  1. வெளுத்து கட்டிட்டாங்களா?!

    ReplyDelete
    Replies
    1. அவங்க வெளுத்து கட்டலைங்க என்னையைத்தான் துணியை வெளுத்து கட்டச் சொன்னாங்க

      Delete
  2. பால்கனியில் அமர்ந்து பௌர்ணமி நேரம் (அப்)பாவி ஒருவன் மது குடிக்க. நீயின்றி எப்படி வாழ என உளற. என்மேல் காதலா என மனைவி கேட்க... மதுமேல்தான் என்று உண்மை உரைக்க.. ஓ. மேலே கேட்காதே...! ஆஹா... என்ன ரசனையான பகிர்வு நண்பா.

    ReplyDelete
    Replies
    1. கருத்தை சொல்லி உங்களை வைச்சே பதிவு எழுதியிருக்கலாமோ என்று நினைக்கிறேன் உங்களின் வர்ணனை மிக அழகாக இருக்கிறது

      Delete
  3. ரெண்டே கிளாஸ் என்ற கண்டிஷனையும் ஏத்துகிட்டா மாதிரி யும் இருக்கணும் வேணும்கிற அளவுக்கும் போட்டுக்கணும்........... நல்ல ஐடியாவா இருக்கே............. ஆனா மப்புல உண்மையை உளறி கொட்டிட்டீங்களே பாஸ்..........

    ReplyDelete
    Replies
    1. மப்புல இருந்தாலும் உளறாத ஆளுதானுங்க இங்க என்னவேணாலும் தைரியமா கொட்டலாம் இந்த பக்கம் நம்ம வீட்டம்மா எட்டி கூட பாக்கமாட்டாங்க

      Delete
  4. வர்ணனைகள் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. epavumae intha boys ipadi thaan ulariyae matikuvanga.....

    neenga solrathu poinu terinjum kuda yethukutu nambura mari nadikira wife yeno unmai sonna pudika matithu avangaluku FACT FACT FACT

    athuku tan sonna rendu glass ah correct ah uthi irukanum yeamathuningala venum ungaluku ....

    manaivi solae manthiram...... got it

    ReplyDelete
  6. ஓ!இதுதான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வதா?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.