இணையத்தில் புகழ் பெற்ற பதிவாளாராக அல்லது பேஸ்புக்கில் பேமஸ் ஆவது எப்படி?
1. முதலில் ஒரே பெயரில் ப்ளாக் ஸ்பாட்ல பேஸ்புக்குல டீவிட்டர்ல அக்கவுண்ட் துவக்கி கொள்ளுங்கள். அதன் பின் தமிழ்மணம் தளத்திற்கு போய் அதில் யாரவது பதிவை சேர்த்து இருந்தால் உடனே அதற்கு பின்னுட்டம் போட்டுவிடுங்கள் மற்றவர்களை விட நீங்கள் முந்திவிட வேண்டும்.நீங்கள் பின்னுட்டம் போடுவதற்கு அந்த பதிவுகளை முழுவதும் படித்து இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.ஒவ்வொரு பதிவிற்கும் கிழே லேபில் இருக்கும். அதை மட்டும் படித்து கருத்து இட வேண்டும். உதாரணமாக லேபிளில் நகைச்சுவை, கவிதை, கதை, சமையல் குறிப்பு என்று இருந்தால் அந்த லேபிளை கட் அண்ட் பேஸ்ட் பண்ணி அதனுடன் நன்றாக இருக்கிறது அருமையாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி என்று போட்டுவிட வேண்டும். இதையெல்லாம் மற்ரவர்கள் செய்வதற்கு முன்பு நாம் முந்திவிட வேண்டும்
2/ இரண்டாவதாக உங்ககிட்ட ஒரு கேமரா இருக்கனும்...பெண்ணாக இருந்தால் அன்று நாம் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை வீட்டில் உள்ள தட்டில் போட்டு அதை ஸ்டவ் அருகில் வைத்து போட்டோ எடுத்து இன்று நான் சமைத்தது என்று பதிவிட வேண்டும் ஆண்களாக இருந்தால் உங்க கால்ல ஒரு கொசு வந்து கடிக்கும் போது உங்க கேமராவை எடுத்து . அந்த கொசுவை zoom பண்ணி ஒரு போட்டோ எடுத்து "என் உயிர் காதலி உயிர் வாழ என் இரத்தத்தையும் கொடுக்கும் கர்ணன் என்று ஒரு கவிதையோ அல்லது கேப்ஷனோ போட்டீங்கன்னு வைங்க சும்மா பின்னுட்டம் வந்து குவியும் அல்லது பேஸ்புக்கில் வெளியிட்டால் லைக்கு அள்ளிக்கும்.
3. ஊழல், பசிக்கொடுமை, ஏழ்மை,பெண்களை இழிவு படுத்துதல் இந்த மாதிரி விஷயங்கள கண்டா நீங்க பொங்கல் பானை மாதிரி பொங்கிடனும் "உதாரணமா நைஜிரியாவில் எலும்பும் தோலுமாக இருக்கும் படத்தை நெட்டில் சுட்டு அந்த படத்திற்கு பக்கத்தில் ரஜினி கட் அவுட்டுக்கு பால் ஊத்தும் படத்தையும் மெர்ஜ் பண்ணி போட்டு பசிக்கும் உயிருக்கு குடிக்க தண்ணியில்லை ஆனால் உயிரில்லாத கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் நடக்குது எங்க தமிழ் நாட்டுல என பதிவிட வேண்டும். இப்படி போட நீங்கள் பட்டினிகிடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நல்ல ஹோட்டலில் வயிறுமுட்ட சாப்பிட்டு கூட பதிவு போடலாம்
4.அப்புறம் இந்த விஜய் டிவியில வருகிற சரவணன்மீனாட்சி, 7 சி, சூப்பர் சிங்கர் போன்றவைகளை பார்ப்பதே மிக கேவலம் மாதிரி அலட்டி அதையெல்லாம் பார்க்க உங்களுக்கு நேரம் இல்லாத மாதிரி பீலாவுடனும்.
5. அப்புறம் தமிழ் படங்களை பாத்தாலே இந்த தமிழ் படங்களே இப்புடித்தான் மிக மட்டமாக இருக்கிறது என்று சொல்லி நீங்க அமெரிக்காவுலதான் பிறந்து வளர்ந்த மாதிரியும், இங்கிலீஸ் படங்கள் மட்டும் தான் பாப்பீங்கங்குற மாதிரி சீன்போடனும்...
6. நம் உறவினர்கள் நண்பர்கள் நம்வீட்டில் வேலைசெய்யும் தொழிலாளி நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுவான் அதை பத்தியெல்லாம் கவலைப்பட கூடாது பத்திரிக்கைகளில் யாரவது கேன்ஸரால் ஹார்ட் அட்டாக்கால் மிக கஷ்டப்படுகிறார்கள் அந்த நபருக்கு பண உதவி தேவை என்ரு போட்டிருந்தால் அந்த செய்தியை அப்படியே பேஸ்புக் மற்றும் பதிவுகளில் போட்டு அந்த நபருக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் மட்டும் விட வேண்டும் அதை நமக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லி அந்த செய்தியை பகிரச் சொல்ல வேண்டும். ஒரு ரூபாய்கூட நாம் யாருக்கும் கொடுக்க வேண்டாம்
7. பேஸ்புக்கில் அல்லது பதிவில் "இதை படிப்பவர்கள் என்னைவிட புத்திசாலி" என்று ஒரு ஸ்டேடஸ் போடுங்கள் அதை படிப்பவர்கள் அனைவரும் ஐ லைக் இட் என்று சொல்லிவிட்டு போவார்கள்
8. எல்லார்கிட்டயும் பாசமா இருக்கனும்... பக்கத்துவிட்டுல இருக்கிறவங்கிட்ட மூஞ்சி குடுத்து கூட பேசமாட்டீங்க...ஆனா அவங்க பொய்யா ஒரு profile உருவாக்கி ஒரு பொய்யான படத்தை போட்டு வைத்திருப்பார்கள் அது தெரியாமல் அவர்களிடம் நட்பு கொண்டு ஆல் த பெஸ்ட் மச்சி" கலக்குங்க மச்சி" "சூப்பர் மச்சி" என்று பாராட்டிவிட்டு வரணும். அது பொல பதிவாளர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் மனசுக்குள் தவறாக ஆயிரம் நினைத்தாலும் அல்லது நேரில் என்ன பேசினாலும் பரவாயில்லை ஆனால் இணையத்தில் பேசும் போது பெயர் சொல்லி கூப்பிடக் கூடாது. ஆனால் சகோ என்றோ அக்கா என்றோ அம்மா என்றுதான் அழைக்க வேண்டும். இது ஒரு எழுதாத சட்டம்
9. ஆண்கள் எவ்வளவு நன்றாக எழுதினாலும் பாராட்டி 2 வரிகள் எழுதிவிடக் கூடாது. அதே சமயத்தில் பெண்கள் என்ன கிறுக்கினாலும் நீங்கள் எப்படி இவ்வளவு அழகாக சிந்திக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும்.
10 பெண் பதிவாளர்களை விடாமல் துரத்தி சென்று ஒன்றுக்கும் உபயோகமில்லாத அவார்டுகளை அள்ளித்தரவேண்டும்
11. அரசியல் தலைவர்கள் ஊழல் செய்து மாட்டிக்கிட்டால் பொங்கி எழுந்து பதிவிடனும் ஸ்டேடஸ் போடனும் ஆனா நாம் லஞ்சம் கொடுத்து நமக்கு வேண்டிய வேலைகளை அது தவறாக இருந்தாலும் சட்டத்தை உடைச்சி செய்து கொள்ள வேண்டும், வருமான வரி ஏய்க்க வேண்டும் நாம் செய்யும் தவறுகளை மட்டும் பதிவிடும் போது நினைத்து பார்க்க கூடாது.
12. நீங்கள் மாற்று மதத்தை பற்றி கண்டிப்பாக தவறாகத்தான் எழுத வேண்டும் தப்பி தவறி மாற்றுமதத்தில் இருக்கும் நல்லதை பாராட்டி எழுதிவிட்டால் உங்கள் சொந்த மதத்தினரால் விலக்கி வைக்கபடுவீர்கள் ஜாக்கிரதை...
13. மறக்காமல் பிராமிணன், பார்ப்பான் என்று சொல்லி ஏதாவது திட்டி எழுதிவிட வேண்டும்
14. கலைக்கண்ணோடு போட்டோ எடுத்து வெளியிடனும். அது கஷ்டமே இல்லைங்க.....ரொம்ப ஈஸிங்க கேமராவை உங்க குழ்ந்தைகள் கையில் கொடுத்து போட்டோ எடுக்க சொல்லி அதை வெளியிட வேணமுங்க..குழந்தை இல்லாதவர்கள் கேமராவை நேராக பிடிக்க கூடாது சைடாகவும் பிடிக்க கூடாது மிக கோணலாக வைத்து படம் எடுக்க வேண்டும் அப்படி எடுத்ததை நீங்கள் வெளியிட வேண்டும்.
15. உங்க அம்மா ,மனைவி, மகள் பிறந்த நாளை கூட மறந்துவிடலாம் ஆனால் சக பதிவாளர்கள் பிறந்த நாளை மட்டும் ம்றந்துவிடாமல் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி ஒரு கேக் படத்தையும் அதோடு அட்டாச் செய்து வெளியிட வேண்டும்
16. பொண்டாட்டி பிள்ளைகள் உருட்டுகட்டையால் அடித்தாலும் அடிவாங்கி கொண்டு அசராமல் பதிவிட வேண்டும்
இன்னும் சொல்ல நிறைய இருக்கு ஆனால் அதை ஒரு பதிவில் சொல்லிவிடக்கூடாது என்பது வலைப்பதிவில் எழுதாத சட்டம் என்பதால் நான் இதோடு நிறுத்தி கொள்கிறேன்...நேரம் கிடைக்கும் போது வேறு ஒரு பதிவில் சொல்லுகிறேன்
(இது தற்போது இணையத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களின் தொகுப்பே)
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
17.) இந்தப் பதிவில் சொன்னமாதிரி மாசத்துக்கு ஒருதடவை பொதுப்படையா பொங்கி ஒரு பதிவிடனும்.
ReplyDelete18.)அப்பப்ப யாராவது ஒருத்தரை கையிப்பிடிச்சி வம்பிழுக்கவும் தவறக்கூடாது...:-)))))))))))))
இப்படிக்கி
மதுரைத் தமிழன்.
-----------------------------------------
நண்பரே விட்டுபோன 2 பாய்ண்ட் உங்களுக்கு பதிலா, உங்க சார்பா இங்கே போட்ருக்கேன் .
ஹஹஹா :-))))))))))))
ஜெய் நான் அடுத்த பதிவிற்க்காக வைத்திருந்த பாயிண்டை இப்போ போட்டு உடைச்சிட்டீங்களே. ஹூம்ம்ம்ம்ம்ம்
Deleteநச் நச் நச் !!!
ReplyDeleteநீங்கள் சொன்ன மாதிரி லேபில் பார்த்து பின்னூட்டம் போடவில்லை....
அத்தனை பாயிண்டையும் படித்து ரசித்து சிரித்து விட்டு தன பின்னூட்டம் போட்டு உள்ளேன்
ஹஹஹா !!
///அத்தனை பாயிண்டையும் படித்து ரசித்து சிரித்து விட்டு தன பின்னூட்டம் போட்டு உள்ளேன் ///
Deleteஉண்மையா அப்படியானால் நாளைக்கு உங்களுக்கு எக்ஸாம் வைக்க போறேன் ரெடியா இருந்துக்குங்க
சும்மா குத்து குத்து கும்மாங்குத்து பண்ணி இருக்கீங்க
ReplyDeleteகருப்பு எம்ஜியார் விட்ட குத்து மாதிரி இருந்துச்சா?
Deleteஆகா ! ஐடியாக்கள் நன்னாருக்கே , எனக்குத் தெரியாம போச்சு, முயற்சி பண்ணி பார்ப்போம். :P
ReplyDeleteஉங்களை மாதிரி நல்லா எழுதி புகழ் பெருவர்களுக்கு இதெல்லாம் நத்திங்க் ஜீ
Deleteநல்ல வேலை இந்த Facebook கருமாந்திரத்தில் அக்கவுன்ட் இருந்தாலும், நான் மாட்டலே. அது பத்தி நீங்க சொன்னது எதுவும் விளங்கலே. பெண் பதிவர்கள் எவ்வளவு கேனையா எழுதினாலும் ஆஹா, ஓஹோ பேஷ்....பேஷ்.... என்று சொல்லும் கூட்டம் இருக்கத்தான் செய்யுது.......
ReplyDeleteநல்ல வேலை இந்த Facebook கருமாந்திரத்தில் அக்கவுன்ட் இருந்தாலும், நான் மாட்டலே.//
Deleteபேஸ்புக்குல சிக்காத அப்பாவியா நீங்க? அது எப்படி உங்களை சீக்கிரம் அதுல இழுத்துவிட்டுவிட வேண்டியதுதான் நண்பா
பேஸ்புக்கில் அல்லது பதிவில் "இதை படிப்பவர்கள் என்னைவிட புத்திசாலி" என்று ஒரு ஸ்டேடஸ் போடுங்கள் அதை படிப்பவர்கள் அனைவரும் ஐ லைக் இட் என்று சொல்லிவிட்டு போவார்கள்..சூப்பர் ஐடியா..
ReplyDeleteஉங்க பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தி பாருங்கள் .....யாரும் லைக் போடமாட்டாங்க காரணம் நீங்களும் நானும் பெண் அல்ல
Deleteஒவ்வொரு பதிவுவிலும் ஒவ்வொரு கருத்துகளை சொல்லிக் கவர்கிறீர்கள் எங்களை!
ReplyDeleteஎப்படி சார் முடியுது உங்களால் :-))))))))))
சார் நீங்க என்ன கிண்டல் பண்ணவில்லையே.....எதாவது கோபம் என் மேல் இருந்தா சொல்லுங்க நான் இந்தியா வரும் போது உங்களை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்டுகிறேன்
Deleteஉங்களின் உற்சாகமுட்டும் கருத்துக்கு எனது மனம் மார்ந்த நன்றிகள் & இதயம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteநம்ம வீட்டுல தீபாவளி கிடையாது இருந்தாலும் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்
Delete10 பெண் பதிவாளர்களை விடாமல் துரத்தி சென்று ஒன்றுக்கும் உபயோகமில்லாத அவார்டுகளை அள்ளித்தரவேண்டும்
ReplyDeleteengalai migavum sirikka vaitha.... aanaal unmaiyaana article idhu.
ஹலோ சிம்பிள் தமிழா நீங்கள் போட்ட பல கருத்துகள் ஆங்கிலத்தில் உள்ளதால் படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது முடிந்தால் அடுத்த தடவை நீங்கள் டைப் செய்யும் போது இங்கு சென்று டைப் பண்ணி காப்பி பேஸ்ட் செய்து போடுங்கள் http://www.google.com/transliterate/Tamil
Deleteநல்ல ஆலோசனைகள். வலியவர்களும் எளியவர்களும் மோதிக் கொண்டு பிரச்சினையாகிற போது யார் பக்கம் நியாயம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் வலியவர்களை கடுமையாக விமரிசனம் செய்ய வேண்டும், என்கிற ஆலோசனையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
உங்க லேபல்ல நகைச்சுவை,உண்மையில சீரியசான பதிவுதான், 10 ல இருந்து 15 வரை செம கலக்கல்.
ReplyDelete(லேபல் பாத்துட்டு அப்படியே வரிசையா நம்பர் போட்டிருந்தீங்களே அதைப்பாத்துட்டேன் இல்ல.நம்ம பின்னூட்டம் எப்படி?)