அந்நிய முதலிட்டு ஆதரவுக்கு கலைஞர் சொல்லும் காரணம் Vs சொல்லாத காரணம்
|
|
உடன்பிறப்புக்கு சொல்லும் காரணம்
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவினை தி.மு.கழகம் ஏற்கவில்லை, எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டினை ஏற்கனவே அறிவித்திருந்தாலும் கூட நாடாளுமன்றத்தில் 184-வது விதியின்கீழ் இந்தப் பிரச்னை தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்ற பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகளின் கோரிக்கையைப் பொறுத்தவரை அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறுமேயானால் இன்று மத்தியிலே உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்ந்து விடக்கூடும் என்ற நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை.
அதன் விளைவுகளைச் சிந்திக்கும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏதும் ஏற்படுமானால், 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை பூதாகாரமாகக் கிளப்பி, அதன் காரணமாக இமயம் முதல் குமரி வரை பெரும் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ள பா.ஜ.க. தலைவர்கள் நடத்திய கூட்டுச் சதி அம்பலமாகி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றெல்லாம் இல்லாத புகார்களைக் கற்பனையாகக் கூறி,
மத்திய அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பழி சுமத்திய பா.ஜ.க. போன்ற மதவாதக் கட்சிகளுக்குத் தான் ஆதாயம் என்ற நிலையை எண்ணிப் பார்க்கும்போது, மத்தியில் அதே பா.ஜ.க. வினுடைய ஆதிக்கமோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசோ ஆட்சிப் பொறுப்புக்கு வருமேயானால், இன்னும் எத்தனை அலைக்கற்றை ஊழல் புகார்கள், பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரானச் செயல்கள் போன்ற மதவாதப் பயங்கரங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் எண்ணிப் பார்த்து,
அத்தகைய மதவாத அரசோ -ஊழல் பீதிகளைக் கிளப்பி வஞ்சக வலையில் மக்களைச் சிக்க வைக்கும் எந்தவொரு அரசோ பதவிக்கு வந்து விடுவதற்கும் இடம் தரக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் மறந்து விடுவதற்கில்லை.
இதையெல்லாம் சிந்திக்கும்போது இந்தப் பிரச்சினையில் மத்திய ஆளுங்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம் என்பதையும் மறந்து விடுவதற்கில்லை.
மாநிலங்களைப் பொறுத்தவரையில், மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக எடுத்த முடிவு கட்டாயப்படுத்தப் படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால்,தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் சில்லரை வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் எத்தகைய இடைஞ்சலும் வராது என்ற நம்பிக்கை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்துள்ள ஒரு ஆட்சி நிலையான ஆட்சியாகவும், நிலைகுலையாத ஆட்சியாகவும் இருந்தால்தான், பொது அமைதியும், பொருளாதாரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி நிலையும், அவற்றின் காரணமாக மக்களின் நல்வாழ்வும் உறுதிப்படும்.
இவற்றையெல்லாம் யோசித்து, இந்தப் பிரச்சினைக்கான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது, அன்னிய முதலீடு பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இன்னமும் இருந்தாலும், உடனடியாக இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டால், அதன் காரணமாக ஏற்படக் கூடிய எதிர்மறை விளைவுகளை எண்ணிப் பார்த்து, கசப்பான நிலையில் இந்தப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தர முடிவு செய்கிறது”.
|
உடன்பிறப்புக்கு சொல்லாத காரணம்
நான் ஆட்சி கவிழ்ந்து விடுவதால்தான் FDI க்கு நாடாளுமன்றத்தில் ஆதவளிக்கிறேன் என்று நேற்று சொன்னேன் அல்லவா?. உனக்கு நினைவிருக்கும். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் தானே அரசு கவிழும். இது FDI தீர்மானத்திற்கான ஓட்டெடுப்பு தான். இந்த தீர்மானம் வெற்றி பெறும் அல்லது தோல்வி அடையும். அரசு அல்ல என்று நீ கேட்பது எனக்கு தெரியும்.அரசின் முடிவை திரும்ப பெறும் சூழல் தானே வரும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது நல்லது தானே என்று நீ உனக்குள் முணுமுணுப்பது என் கவனத்திற்கு வந்தது. அது பொதுமக்களுக்கு மிகவும் நல்லதுதான் ஆனால் பொதுமக்களுக்காக சேவை செய்யும் எனது மக்களுக்குக்கும் என்னை நம்பி இருப்பவர்களுக்கும் நல்லதல்லவே அதனால் நான் என்ன செய்ய உடன்பிறப்பே? எனக்கு வேறு வழியில்லை. அதனால்தான் இப்படி சொல்லி தான் பலரை நம்ப வைக்க வேண்டியதிருக்கிறது.
குலாம் நபி ஆசாத் என்னை சந்தித்த போது கூட இதைத்தான் சொன்னேன். சஸ்பென்ஸாக வைக்கிறேன். பின்னர் அறிவிக்கிறேன் என்று. அவரும் சரி என்று டில்லி போய் அதை சோனியா அவர்களிடம் சொன்னார். அதன்பின் சோனியா அவர்கள் சஸ்பென்ஸ் இல்லாமல் ஒரு சிறுபட்டியல் அனுப்பினார் அந்த சிறு பட்டியல் இதோ
.மகனின் மந்திரி பதவி பறிபோகும்...கனிக்குதான். திகாரில் வரவேற்ப்பு மடல் வாசிக்கப்படும்..ஸ்பெக்ட்ரம் விஸ்வரூபம் எடுக்கும்..கலைஞர் தொலைக்காட்சி மூத்த பொறுப்பாளரும் அழைக்கப்படுவார்..20 % உள்ள கனியே உள்ளே போகும்போது..80 % நிர்வாகிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் தள்ளுபடியா அஞ்சா நெஞ்சனின் மகனின் பதுங்கல் வெளியே வந்தாகவேண்டும்..அப்படிப்பட்ட கவனிப்பு நடக்கும்..பதவி இழந்த மகனின் கோலோச்சும் விதம் கட்சியில் பிளவை உண்டாக்கும்..இன்னமும் வீதிக்கு வாராத பல பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று சொல்லி இருந்தார்
அது மட்டுமல்ல நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் எங்களுக்கு ஓட்டு போடுங்கள், உங்கள் மனைவி பிள்ளைகள் வெளியே இருக்கட்டும் எனக்கூறியதால், அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்ததால், 'நான் அன்னிய முதலீட்டை ஆதரிக்கிறோம்' என்ற நிலைப்பாடை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்த தள்ளாத வயதில் தள்ளப்பட்டேன் என்பதை நினைத்துப்பார்க்கும் போது என் நெஞ்சு பொருக்கவில்லை .
இப்படி நான் ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் பொதுமக்களுக்காக பாடும்படும் என் குடும்பத்திற்கு வரும் நிலமையை கொஞ்சம் யோசித்துபார்...உடன்பிறப்பே
|
இந்த பதிவு பல தினசரி மற்றும் வார இதழ்களை படித்ததன் அடிப்படையில் தொகுத்து எழுதப்பட்டது.
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
எனது அடுத்தப்பதிவு ஜெயலலிதா அவர்களுக்கு நான் எழுதிய கடிதம் தமிழ்நாட்டில் 24 மணிநேரம் பவர்கட் ஆகாமல் இருக்க வழி. இந்த கடிதம் ஜெயலலிதா அவர்களுக்கு மட்டும் எழுதப்பட்டது என்றாலும் எனது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாளை பதிவிடப்படுகிறது. அதனால் மீண்டும் உங்களை வர அன்புடன் அழைக்கிறேன்
|
Home
»
அரசியல்
»
கலைஞர்
»
செய்திகள்
» அந்நிய முதலிட்டு ஆதரவுக்கு கலைஞர் சொல்லும் காரணம் Vs சொல்லாத காரணம்
Wednesday, November 28, 2012
2 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
//மகனின் மந்திரி பதவி பறிபோகும்...கனிக்குதான். திகாரில் வரவேற்ப்பு மடல் வாசிக்கப்படும்..ஸ்பெக்ட்ரம் விஸ்வரூபம் எடுக்கும்..கலைஞர் தொலைக்காட்சி மூத்த பொறுப்பாளரும் அழைக்கப்படுவார்..20 % உள்ள கனியே உள்ளே போகும்போது..80 % நிர்வாகிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் தள்ளுபடியா அஞ்சா நெஞ்சனின் மகனின் பதுங்கல் வெளியே வந்தாகவேண்டும்..அப்படிப்பட்ட கவனிப்பு நடக்கும்..பதவி இழந்த மகனின் கோலோச்சும் விதம் கட்சியில் பிளவை உண்டாக்கும்..இன்னமும் வீதிக்கு வாராத பல பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று சொல்லி இருந்தார்
ReplyDeleteஅது மட்டுமல்ல நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் எங்களுக்கு ஓட்டு போடுங்கள், உங்கள் மனைவி பிள்ளைகள் வெளியே இருக்கட்டும் எனக்கூறியதால், அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்ததால், 'நான் அன்னிய முதலீட்டை ஆதரிக்கிறோம்' என்ற நிலைப்பாடை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்த தள்ளாத வயதில் தள்ளப்பட்டேன் என்பதை நினைத்துப்பார்க்கும் போது என் நெஞ்சு பொருக்கவில்லை .
இப்படி நான் ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் பொதுமக்களுக்காக பாடும்படும் என் குடும்பத்திற்கு வரும் நிலமையை கொஞ்சம் யோசித்துபார்...உடன்பிறப்பே//
உண்மையை தெளிவாக புட்டு புட்டு வைத்திருகிறீற்கள் வாழ்த்துக்கள்
சிவப்பு எழுத்தில் உள்ளது அத்தனையும் டாப்பு. \\இந்த தள்ளாத வயதில் தள்ளப்பட்டேன்\\ ROFL
ReplyDelete