அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்
வழக்கமாக தீபாவளித் திருநாளில் ஆபிஸ் இருப்பதால் மனைவி ஆபிஸுக்கு சென்றுவிட்டு ஈவினிங்க்தான் பலகாரம் பண்ணுவாள்.ஆனால் இந்த தடவை சாண்டி புயல்காரணமாக அவள் வீட்டில் இருந்து ஆபிஸ் வேலை செய்வதால் அவள் ஆசையாக என்னிடம் சொன்னாள். இந்த தடவை எனக்கு நேரம் அதிகம் கிடைப்பதால் உங்களுக்கு பிடிச்சதை செய்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்றாள்.
அதற்கு நான் எனக்கு பிடிச்சததை நீ செய்ய விரும்பினால் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இரு என்று விளையாட்டாக சொல்லிவிட்டேன். அவ்வளவுதாங்க
அதன் பிறகுதான் உண்மையான தீபாவளி ஆரம்பித்தது தீபாவளி வெடி வாங்காத குறையை அவள் வாயால் வெடித்தே தீர்த்துவிட்டாள் அதுமட்டுமல்ல என் மனைவி எண்ணெய் பலகாரம் பண்ணுவதற்கு பதில் என்னையையே பலகாராமாக நினைத்து பொரித்து எடுத்துவிட்டாள்.
எனக்கு ஒண்ணுமே புரியலைங்க. இந்த மதுரைக்காரன் வாய் திறந்து உண்மையையே பேசினாலும் வம்பாகவே முடிந்து விடுகிறது.ஹீம்ம்ம்ம்ம்ம்ம்
மக்கா எனக்கு அட்வைஸ் சொல்லுங்க மக்கா அட்வைஸ் சொல்லுங்க.... அட்வைஸ் ப்ளிஸ் இனிமே அடிவாங்க உடம்பில் தெம்பு இல்லைங்க....
~~~~~~~~~~~~~~~~~~
சமையலறை டிப்ஸ்
கோதுமை மாவுடன் கொஞ்சம் ரவை, மைதா, அரிசிமாவு கலந்து பூரி செய்தால் பல மணி நேரத்துக்கு உப்பலாக, மொறுமொறுவென இருக்கும் ( என் கன்னத்தால் என் மனைவியின் கையில் ஒங்கி அடித்தால் கூட கன்னம் 2 நாள் பூரி போல உப்பலாக இருக்கும். பாவம் என் மனைவிக்கு கை வலிக்கும் என்பதால் இதை நான் அடிக்கடி செய்ய மாட்டேன்)
சிறிய வெங்காயத்தை உறிக்கும் போது கண்ணீர்வராமல் உரிக்க அதன் மேல்பகுதியையும் கிழ் பகுதியையும் சிறிது கட் பண்ணிவிட்டு வெங்காயத்தை நீரில் போட்டு விட்டு அதன் பின் உறித்தால் கண்ணில் இருந்து கண்ணீர் வராது இது எனது டிப்ஸ். என் மனைவியின் டிப்ஸ் பேசாமல் கணவரிடம் கொடுத்துவிட்டால் கண்ணிரே வராது என்பதுதான்
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் |
விலகியிருந்து பார்க்கும்போதுதான் எல்லாம் சிக்கல் நிறைந்ததாகவே தெரியும் ஆனால் துணிவோடு புகுந்து சென்றால் வானமும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். அதனால் எதற்கும் தயக்கம் வேண்டாம் தைரியமாக செய்யுங்கள். வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும் எனவே வாழ்வை நேசியுங்கள், உங்களை நேசியுங்கள் உங்கள் குடும்பத்தை நேசியுங்கள் குடும்பம் & வாழ்க்கை உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கி நிற்கும்.
படித்ததில் ரசித்தது சூப் ஸாங்
டக்கரா ஜீன்ஸ் போட்டு
பீட்டர் போல பேசிக்கிட்டு
ரவுசு பண்ணும் யூத்துக்கு... வேணும்
டேஸ்ட்டி சூப் ஸாங்கு...
கோல்டு பிடிச்ச நோஸூக்கு... இதமா -
காஃப் செய்யும் தொண்டைக்குப்... பதமா -
பெப்பர் ஸால்ட்டு தூவிக் குடும்மா,
டொமோட்டோ சூப் ஒண்ணு...
ஒயிட் ஸாஸ் யூ கம்மு..
பிஃப்டி நீயும் பே பண்ணு...
மேலே சொன்ன மேட்டர் எல்லாமே
ஃப்ரீயா கிடைக்கும் வீட்டில் தானே?
க்யூட்டா அதுக்கொரு நேம் சொல்லு
மிளகு ரசமுன்னு பேர் சொல்லு
கு.ஷண்முகப்ரியா,
சென்னை-73.
(திணமணியில் வெளிவந்தது)
Every girl has three guys in her life. The one she loves, the one she
hates, and the one she can’t live without. And in the end, they are all
the same guy.
|
Home
»
கணவன்
»
கிறுக்கல்கள்
»
தீபாவளி
»
நகைச்சுவை
»
மனைவி
»
வாழ்க்கை அனுபவம்
» அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்
Sunday, November 25, 2012
3 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
சூப் ஸாங் - படித்தது தான்...
ReplyDeleteடிப்ஸ்... செம...
செலவு இல்லாம, சுற்று புற சூழல் கேடு இல்லாம் வெடி வெடிச்சிருக்கு.
ReplyDeleteInteresting monolog, you also can find here interesting topic about lifelove quotes
ReplyDelete