Wednesday, November 21, 2012






அஜ்மல் கசாப் தூக்கு  காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை வலுவிலக்க நடத்தப்பட்டதா?


2008 நவம்பர் மாதம் 26 அன்று மும்பையில் நடந்த தீவரவாதத்தில் ஈடுபட்டு பிடிபட்ட அஜ்மல் அதற்கான   பலனை நான்கு ஆண்டுகள் கழித்து 2012 நவம்பர் 21 அன்று அடைந்தான்

இந்திய ஜனாதிபதி பிராணப் முகர்ஜி  அஜ்மல் கசாப்  சார்பாக அனுப்பட்ட மெர்ஸி பெட்டிசனை நவம்பர் 5 ல் தள்ளுபடி செய்தார். அதன் பிறகு அவனின் தூக்கு தேதியை ரகசியமாக வைத்து அவனை தூக்கிலிட்ட பின் இன்று காலை அறிவித்தார்கள். அவனது சாவை டாக்டர்கள் உறுதி செய்த பின்னர்தான்  செய்தி அறிவிக்கப்பட்டது. இந்த தூக்கை ரகசியமாக செய்ததன் காரணம் பல இடங்களில் இருந்து வரும் பிரஷர்களை சாமாளிக்கவே...

இந்திய நேரப்படி நவம்பர் 21 காலை 7.30 மணியளவில் பூனேயில் உள்ள யேர்வாடா சிறைச்சாலையில் வைத்து நடத்தப்பட்டது.


President Pranab Mukherjee had rejected Kasab's mercy petition on November 5, but the execution was kept under wraps and the announcement was made only after he was hanged.  The Lashkar-e-Toiba terrorist was shifted from Mumbai's Arthur Road Jail to Pune's Yerwada Jail this Monday.  Yerwada Jail is one of the two jails in Maharashtra where prisoners on death row are hanged.


இவ்வளவு நாள் பொறுத்து இருந்தவர்கள் இந்த தூக்கை இப்போது நடத்த வேண்டிய அவசியம் என்ன?   அஜ்மல் கசாப்விற்கு வாங்கி தரும் பிரியாணிக்கு பட்ஜெட் இல்லாத தாலா அல்லது   காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை வலுவிலக்க நடத்தப்பட்டதா?


காங்கிரஸ் இந்த தண்டனையை நடத்தியதால் இந்திய அரசாங்கித்திற்கு பாகிஸ்தானால் மறைமுக  அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளது அதனால் நாம் இந்தியர்கள்  ஒற்றுமையாக இருக்க வேண்டும் இந்த நேரத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கலைத்தால் இந்தியாவின் பாது காப்ப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்ய ஏதுவாக இருக்க வேண்டும் என்ரு கருதிதான் இதை செய்து இருக்க வேண்டும் இந்த ஐடியாவை சிறுவாணிகத்தில் அந்திய மூதலீட்டை குவிக்க விரும்பும் மேலை நாடினர்தான் கொடுத்து இருக்க வேண்டும். அவர்களுக்கு இந்திய மக்களின் பலவீனம் எது  எதற்கு மிக அதிக உணர்ச்சிவசப் படுவார்கள் என்று மிக நன்கு உணர்ந்தவர்கள் . இதை மேலை நாட்டிற்கு அடிமையாக உள்ள அரசியல் வாதிகள் மூலம் நிறைவேற்றி உள்ளார்கள் என்பதாகதான் தெரியவருகிறது.



அஜ்மல் கசாப்பை  தூக்கிலிட்டதில் எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பது மிக நிச்சயம். அஜ்மல் கசாப்க்கு ஆதரவாக ஒரு காக்கை கூட ஆதரவு தராது என்பது மிக உண்மை.


காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஒரு நல்ல விஷயம் இது ஒன்றுதான் அதறகாக அதை பாராட்டும் வேளையில் இந்திய வணிகத்தில் அந்நிய முதலிட்டை அனுமதித்து இந்திய சிறு வணிகர்களை தற்கொலை முயற்சிக்கு தள்ளிவிடும் அதை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என்பதை மட்டும் இந்த சமயத்தில் மறந்து விட வேண்டாம்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்





7 comments:

  1. அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதில் எந்த ஒரு இந்திய குடிமகனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பது மிக நிச்சயம்//// ஏற்று கொள்ள இயலாத கருத்து!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் இவன் தவறு செய்தான் என்பது கண்கூடாக கண்டவர்கள் அனேகம். அதனால் இந்த தண்டனை மிக மிக சரியே.

      Delete
  2. பாஜக வை சரிகட்டவாக இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் இருக்கலாம்

      Delete
  3. //இவ்வளவு நாள் பொறுத்து இருந்தவர்கள் இந்த தூக்கை இப்போது நடத்த வேண்டிய அவசியம் என்ன? அஜ்மல் கசாப்விற்கு வாங்கி தரும் பிரியாணிக்கு பட்ஜெட் இல்லாத தாலா அல்லது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை வலுவிலக்க நடத்தப்பட்டதா?//

    கருணை மனு நிராகரிக்கப்பட்டது நவம்பர் 5-ல். 15 நாள் கூட எடுத்துக்கொள்ளக்கூடாதா, அவனை தூக்கில் போட?

    ReplyDelete
    Replies
    1. 15 நாட்கள் என்ன கூடவே எடுத்து கொள்ளலாம்.இவ்வளவு நாள் பொருத்தவர்கள் ஏன் இப்போது அவசரம் காட்ட வேண்டும். தங்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும் போது இதை நிகழ்த்தியதால்தான் அவர்கள் மீது சந்தேகம் வருகிறது

      Delete
  4. நல்ல ஒரு எச்சரிக்கை .பதிவு . நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.