Sunday, November 4, 2012



அதிக பாதிப்பு ஏற்படுவது சண்டியராலா அல்லது சாண்டியாலா(Sandy)

ஆர்பாட்டத்துடன் வெளியே வந்த
சாண்டியை(Sandy) பார்த்ததும்
எப்போதும் வீட்டில் ஆர்பரிக்கும்  சண்டியர்
அன்று மட்டும் வீட்டில் அமைதியை தவழவிட்டார்

சாண்டியால்(Sandy) வீட்டிற்கு வெளியே உள்ள
பொருட்கள் பறந்ததாலோ என்னவோ
அன்றுமட்டும் சண்டியாரல் வீட்டில்
பறக்கும் தட்டும் கரண்டியும் பறக்கவில்லை

சாண்டியால்(Sandy) ஏற்பட்ட உர்..உர் சத்தத்தில்
சண்டியரின் உர்.உர் என்ற கர்ஜனை
அன்றுமட்டும் அடங்கிப் போனது

சாண்டியின் கோரமுகத்தை பார்த்த
சண்டியரின் முகத்தில் கோபம் விலகி
அன்றுமட்டும் சாந்தம் வீசியது

சாண்டி அல்லது சண்டியரால்
வாழ்க்கையில் எப்போதும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது
ஆனால் சாண்டி வந்தால் சண்டியர் போய்விடுகிறார்
சாண்டி போனால் சண்டியர் வந்து விடுகிறார்

ஆனால் வாழ்க்கையில்  சண்டியரோ அல்லது சாண்டியோ
வந்தால் சாந்தி மட்டும் காணாமல் போய்விடுகிறது

மேலே இருப்பது அமெரிக்காவில் வசிக்கும் ஒரு  நண்பரின் மனைவி எனக்கு எழுதி அனுப்பியது அதில் சில மாற்றங்கள் செய்து இங்கே பதிவாக இட்டுள்ளேன்



டிஸ்கி : ஒவ்வொரு  வீட்டிலும் சண்டியர் உண்டு .சில வீட்டில் அது பெண் சண்டியராகவும் சில வீட்டில் அது ஆண் சண்டியராகவும் இருப்பதும் மட்டும் நிஜம்.

மக்களே எங்கள் வீட்டில் நான்தான் சண்டியர் என்று சொல்ல ஆசை ஆனால் சண்டியர் பட்டத்திற்கு ஆசைபட்டால் அடுத்த வேளை சாப்பாட்டை மறந்து விட வேண்டும் அதனால் நான் சண்டியர்  பட்டம் பெறும் ஆசையை விட்டுவிட்டேன்.

மதுரைத்தமிழனின் தத்துவம்:

"சாண்டி வந்தால் ஒரு வாரம் மட்டும் தான் பவர்கட்
ஆனால் சண்டியர் (மனைவி) வந்தால் வாழ்க்கை முழுவதும் பவர்கட்"
இப்படிக்கு சண்டியாரல் பாதிக்கப்பட்ட கணவர்களின் சங்கம்


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

13 comments:

  1. அற்புதமான பழமொழி
    சுவாரஸ்யமான பதிவு
    ரசித்துப் படித்தோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி ரமணி சார்

      Delete
  2. ரொம்ப வாழ்கையில அடிபட்டு விட்டீங்க என்று நல்லா தெரியுது......

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
    Replies
    1. உஷ்ஷ்ஷ்...சத்தம் போட்டு பேசாதீங்க

      Delete
  3. ஒரு பூரிக்கட்டை போதாது.

    ReplyDelete
    Replies
    1. ஏன் நீங்க பெரிய சண்டியரா?

      Delete
  4. நமக்கு யாரும் பவர் கட பண்ண முடியாது. ஏன்னா நமக்குதான் பவரே இல்லையே! ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி...பாவம் நீங்கள் நாந்தான் மோசம் போயிட்டேனு நினைச்சா நாட்ல என்னைப் போல நிறைய பேர் இருக்காங்க போலிருக்குது

      Delete
  5. உங்களுக்கு பூரிக்கட்டை மட்டும் பத்தாது.., மத்து, ஜல்லிக்கரண்டிலாம் கூட ஆய்தங்களா சேர்த்துக்கனும்

    ReplyDelete
    Replies
    1. என்ன நீங்க பெரிய தாதா போலிருக்குதே?

      Delete
  6. ²§¾¡...
    ºñÊÂáø À¡¾¢ì¸ôÀð¼ Á¨½Å¢¸Ç¢ý ºí¸ò¾¢ÖÕóÐ "ÁÛ" Åó¾ Á¡¾¢¡¢ ¦¾¡¢¸¢È§¾..
    «Ð þôÀÊ..
    ºñÊÂáø À¡¾¢ì¸ôÀð¼ "¸½Å÷¸Ç¢ý" ºí¸Á¡¸ ¯Õ¦ÅÎò¾¢Õ츢羡??
    ¯í¸ÙìÌ ¿øÄ Á¢É¢Š¦¼÷ ¸¨Ç þÕìÌÐí§¸¡...

    ..
    „À¡..
    º¢ýÉ "ô¨Ãý" ³ ´¦Å÷-«‹ ¾¢íì ÀýÉ ¨Åì¸¢Ã¡í¸¦Ç..
    ±ýÉ ¦¸¡Î¨Á ºÃŽ¡ þÐ? (´‹ ºÃŽ¡, ¿£Ôõ "À¡¾¢¸ôÀð¼ ¸½Å÷¸Ç¢ý ºí¸Á¡"?)




    shabaa..
    chinna "brain" ai over-ah think panna vaikkiraangaLe..
    enna kodumai saravaNaa idhu? (oh saravaNaa, neeyum "paathikappatta KaNavargaLin sangamaa"?)

    ReplyDelete
  7. அது அந்த பயம் இருக்கனும்..!

    ReplyDelete
    Replies
    1. அப்படி நான் என்ன சொல்லிட்டேன்னு என்னை இப்படி வந்து மிரட்டுறீங்க சகோ

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.