Thursday, November 29, 2012






தமிழகத்தில் 24 மணி நேரமும் பவர் கிடைக்க ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதம்



அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு மதுரைத்தமிழன் எழுதும்  கடிதம். நான் உங்களுக்கு பல முறை கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன் ஆனால் அத்தனை கடிதங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களின் பார்வைக்கு கொண்டு வராமல் மறைத்து விடுவதால் இந்த கடிதத்தை பொதுக் கடிதமாக எழுத நேரிட்டது.



அம்மா அவர்களே தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனை பவர் பிரச்சனை. பவர் பிரச்சனை என்றால் திமுக-வில் கலைஞருக்கு அடுத்தாக யாரு பவருக்கு வரவேண்டும் என்ற பிரச்சனை என்பதல்ல. இது தமிழகத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிய பிரச்சனை. அதுதாங்க மின்சாரப் பிரச்சனை

இந்த பிரச்சனைக்காக எல்லோரும் உங்களை குறை கூறுகிறார்கள். அதற்கு நீங்கள் என்ன செய்யமுடியும். அம்மாவாகிய நீங்கள் மின்சாரம் அதிகம் வைத்து கொண்டா வஞ்சனை செய்யப் போகிறீர்கள் இது எப்படி மக்களுக்கு புரியப் போகுதென்று தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் உங்களின் முக்கிய எதிரியும் தமிழகத்தின் இன்னொரு தலைவரும் மத்திய அரசாங்கத்தோடு சேர்ந்து மின்சாரம் அதிகம் தமிழகத்தீற்கு கிடைத்துவிடக் கூடாது என்று போராடிக் கொண்டிருக்கிறார்.


இப்படி பல பிரச்சனைகளில் நீங்கள் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள் இதற்கு காரணம் நீங்கள் பெண்ணாக பிறந்தது மட்டுமல்லாமல் பெண் முதல்வராக இருப்பதால்தான். நீங்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் பவர்கட்டினால் கஷ்டப்படுகிறார்கள் இந்த நிலமை நீடித்தால் மின்சாரசெல்லும் வயரை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற நிலமை மாறிவிடும் அதுவும் நல்லதற்கல்ல.மேலும் இரவு நேரத்தில்  மின்சாரம் கிடைப்பதை தமிழக மக்கள் பார்க்க வேண்டுமானால் சிங்கப்பூர் துபாய் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு வந்துதான் பார்க்கமுடியும் என்ற நிலமையும் ஏற்பட்டுவிடும் அதுவும் நல்லதற்கல்ல.

ஒரு பெண் முதல்வாரகிய நீங்கள் இப்படி கஷ்டப்படுவதை பார்த்து இந்த மதுரைத்தமிழனால் பார்த்து கொண்டிருக்க முடியவில்லை. அதனால் என்னிடம் இருந்த மூளையை மிகவும் கசக்கி பிழிந்து இராப்பகலாக யோசித்து ஒரு வழியை கண்டுபித்துள்ளேன். இந்த முறையை நீங்கள் உபயோகப்படுத்தினால் மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சார சப்ளை கிடைக்கும். மக்களுக்கு வேண்டியதெல்லாம் 24 மணி நேரம் மின்சாரம்தானே?

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தமிழகத்தை  7 பகுதிகளாக பிரித்து ஒரு நாளைக்கு ஒரு பகுதியில் மட்டும் 24 மணி நேரம் பவர் சப்ளை செய்யுங்கள் இப்படி செய்தால் 24 மணி நேரமும் பவர் கிடைக்கும்தானே....மக்கள் இப்போது கேட்பது  24 மணி நேரம் பவர் சப்ளைதான் ஆனால் 7 நாட்களுக்கும் வேண்டும் என்று இது வரை குரல்தரவில்லை அதனால் இந்த ஐடியாவை செயல்படுத்தி பாருங்கள்..

அப்ப நான் வரட்டுமா அம்மா......


டிஸ்கி : மக்களே இதை படித்துவிட்டு எனக்கு பாராட்டுவிழா எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் அதுபோல அவார்ட் எதுவும் கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டாம்.. நான் புகழுக்காக இதை செய்யவில்லை



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

21 comments:

  1. மருதைகாரன் மூளைக்காரன்யா :-)))))))))

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயம் மதுரக்காரய்ங்களுக்கு மட்டும்தனே தெரியுது

      Delete
  2. Replies
    1. அண்ணே நாம மதுரகாரய்ங்க அதுதானால குட் ஐடியா நம்க்கு மட்டுந்தானே தெரியும்

      Delete
  3. அருமையான யோசனை.

    ReplyDelete
    Replies
    1. ஜெயதேவ் இது உங்களுக்கு புரியுது ஆனா???

      Delete
  4. expected more creative ideas form Mathuraith thamizhan. Not comedy. sorry for the criticism.eagerly I visited your site to know about that ideas. But dis-appointed. any how vanakkam thank u.

    ReplyDelete
    Replies
    1. தணிகை சார் வணக்கம்? criticism பண்ணுங்க சார் அது நல்லதுதான் சார் ஆனா எனக்கி தெரிஞ்சது கிண்டலும் கேலியும்தான் சார் அதுவும் யாரையும் காயபடுத்தாம பண்ண முயற்சி பண்ணுகிறேன் சார் அவ்வளவுதான் சார் நம்ம மூளைக்கு எல்லாம் கிரியேட்டிவ் ஜடியா எல்லாம் வாராது சார்

      Delete
  5. அமெரிக்காவிலே இருக்கிற தைரியத்தில் அம்மாவுக்கே ஐடியா கொடுக்கிரிங்களா, யாரோ அழைப்பு மணி அடிக்கிறாங்க பாருங்க நம்ம ஊரு போலிசா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஐடியா கொடுக்குறதுகெல்லாம் அம்மா கவனிப்பாங்காளா என்ன?

      Delete
    2. யாரையும் விடுவதில்லை என முடிவு செய்திருக்கிறார்கள். ஜாக்கிரதை.

      Delete
    3. அமெரிக்க பதிவாளரை கைது பண்ணினா உலகப் புகழ் பெற்ற பதிவாளராக ஆகிவிடுவேன் ஹீ.ஹீ

      Delete
    4. கண்ணா தட்டு தூக்க ஆசையா

      Delete
  6. அம்மாவின் பிள்ளைகள் மின்சாரம் இல்லாமல் படும் கஷடத்தை உங்களை தவிர வேறு யாரும் எடுத்து சொல்ல முடியாது அருமை.
    நல்ல பதில் வந்தால் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தான்.

    ReplyDelete
    Replies
    1. அம்மா பிள்ளைகளுக்கு எப்போதும் நல்லதுதான் செய்வாங்க வெயிட் பண்ணுங்க

      Delete
  7. படவா ராஸ்கோல் எங்க அம்மாகிட்ட பேசுறதுக்கே அவனவன் பயந்துகிட்டு ஒன்னுக்கு போய்கிட்டு இருக்கும்போது சுண்டக்கா பய நீ யோசனை சொல்ல வந்திட்டீயா...ஒண்ணுமில்ல தம்பி நான் அம்மா கட்சியில இருந்தா ஒங்க பதிவுக்கு எப்பிடி கருத்து போடுவேன்னு ஒரு நிமிஷம் நெனச்சி பாத்தேன் ..அவ்வளவுதான்..நான் வரட்டா....

    ReplyDelete
    Replies
    1. கெட்டது சொல்லறதுண்ணாத்தான் பயப்படனும் அண்ணே...அப்புறம் அம்மா கட்சிகராங்களுக்கு பதிவுக்கு வரதுக்கே வழி தெரியாதுண்ணே... அவங்க என்ன திமுக கட்சிகாரங்களா நெட்டுலேயே சுத்துறதுக்கு...அண்ணே உங்க ஐடி நல்லா இருக்குண்ணே இப்படி நல்ல ஐடி வைச்சுகிட்டு பதிவு போடாம இருக்கீங்க

      Delete
  8. இம்புட்டு புத்திசாலியா இருக்குறீங்க... நீங்க ஏன் இங்க வந்து ஒரு கட்சி தொடங்க கூடாது!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. கட்சி தொடங்கலாம் தலைவராகவும் இருக்கலாம் ஆனா இந்தியாவில் நமக்கு ஒட்டுரிமை கிடையாதே

      Delete
    2. antha rights irunthalum vanthudatinga engal apo apo sinthika vakira velaya seiyura moolai...... aprm srutrathu epdnu sinthika arambuchadum rendae mudiyala...... nalathu madantha santhosm athanga power power

      Delete
  9. Nigeriyavil siruneerilirunthu minsaarm tayarikalamnu kandupidichurukanga ipd etho solvinganu ethirparthane......yeamathitingalae ....paravala palakapatathu tanae nama ARASIYALVATHIKALIDAM

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.