பதிவிட்டது போதும் முதலில் விழித்து கொள்ளுங்கள் பதிவாளர்கள் , ட்விட்ர்ஸ், பேஸ்புக் கணக்காளர்களே!
நான் ஹிந்து செய்திதாளில் வந்த செய்தியை படித்து பதிவிட நினைத்திருந்த போது அதையே நம் தருமி ஐயா அவர்கள் அதை பதிவாக இட்டுள்ளார் . எனவே அவர் அனுமதியுடன் அந்த பதிவேயே இங்கு நான் பதிவாக இடுக்கிறேன்.தயவு செய்து இதை படித்து அவருடன் சேர்ந்து ஒற்றுமையாக செயலாற்ற உங்களை கேட்டுகொள்கிறேன்.
ஒரு அவசர அழைப்பு ... என்ன செய்யப் போகிறோம்??
*
ஒண்ணும் புரியலே உலகத்திலே .....
சின்மயி பற்றி எல்லோரும் எழுதி .. நாம அதை வாசிச்சி .. ஒண்ணும் பண்ணாம எல்லோரும் தூங்கியாச்சி. தூக்கத்திலிருந்து எழுப்புறது மாதிரி அடுத்த ஒரு ‘குண்டு’ விழுந்திருக்கு பதிவர்கள் மேல்.
பாவம் ... சீனிவாசன் அப்டின்னு ஒரு சின்ன பதிவர் .. ட்விட்டரில் வெறும் 16 followers மட்டுமே வச்சிருக்கிற இவரு மகாத்மா கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி ஒரு டிவிட் போட்டிருக்கார். கார்த்தி இதைப் பத்தி e-mail-ல் ஒரு பிராது கொடுத்திருக்கிறார். நம்ம சுறுசுறுப்பான CBCID காலங்காத்தால அஞ்சு மணிக்கு இந்த சீனிவாசனைக் கைது செஞ்சிட்டாங்க. சீனிவாசன் பத்திரமாக காவல் துறையின் ‘பாதுகாப்பில்’ இருக்கிறார்.
சீனிவாசன் வேறும் ஒன்றும் செய்யவில்லை... ஒரே ஒரு ட்விட் கொடுத்திருக்கிறார்: ”கார்த்திக் சிதம்பரம் ராபர்ட் வாத்ராவை விட நிறைய சொத்து சேர்த்துட்டார் என்று செய்திகள் வருகின்றன”.
சீனிவாசன் கெஜ்ரிவாலின் ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பில் ஆர்வமுள்ளவர். ’பத்திரிகைகளில் வந்த செய்தியை நான் டிவிட்டினேன். இதில் அவமதிப்பு எங்கே என்று தெரியவில்லை’ என்று சொல்லியுள்ளார்.
இச்செய்தியைப் பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore
based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’
IT Act Section 66-A என்ற இந்தச் சட்டம் பேச்சு சுதந்திரத்திற்குக் கடுமையான தடைகளைத் தருகிறது.
நாம் எங்கே போகிறோம்?
பதிவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்??
பதிவுகளில் என்ன எழுதினாலும் சிறைத் தண்டனை என்பது சின்மயி விஷயத்திலும், கார்த்திக் விஷயத்திலும் மேடையேறி விட்டன.
விழிப்போமா?
பி.கு.
உமாசங்கர் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசால் தண்டிக்கப்பட்ட போது ஒரு பதிவில் -
http://dharumi.blogspot.in/2010/08/426-just-idea.html - ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்காக 45 பதிவர்கள் உடனே ஒரு பதிவிட்டு - http://dharumi.blogspot.in/2010/08/427.html - தங்கள் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியிருந்தார்கள். அது போல் இப்போது நாம் எல்லோரும் இணைந்து ஒரு நாள் ஒட்டு மொத்தமாக ஒரே பதிவை இட்டு நாம் தூங்கவில்லை என்பதை அரசுக்கு உணர்த்த அழைக்கிறேன்.
அந்தப் பொதுப்பதிவை வழக்கறிஞர் யாரேனும் ஒருவர் விரைந்து தயாரித்து உதவினால் நலம்
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
டிஸ்கி : முடிந்தால் இதை எல்லோரிடமும் எடுத்து சொல்லுங்கள்...மற்ற பதிவாளர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்
சின்மயி விவகாரம் படித்துத் தெரிந்து கொண்டேன். சீனிவாசன் விஷயம் இப்போதுதான் படிக்கிறேன். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கான எதிர்க்குரலை அனைவரும் எழுப்புவோம் நண்பரே.
ReplyDeleteஇங்கு வருகை தந்து ஆதரவையும் தந்த உங்களுக்கு எனது நன்றிகள் முடிந்தால் தருமி சாரை தொடர்பு கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யுங்கள்
Deleteஇணைந்து குரல் கொடுப்போம்
ReplyDeleteஇங்கு வருகை தந்து ஆதரவையும் தந்த உங்களுக்கு எனது நன்றிகள் முடிந்தால் தருமி சாரை தொடர்பு கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யுங்கள்
Deleteஇதற்கு சரியான முடிவு எடுக்கவும்.
ReplyDeleteஇங்கு வருகை தந்து ஆதரவையும் தந்த உங்களுக்கு எனது நன்றிகள் முடிந்தால் தருமி சாரை தொடர்பு கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யுங்கள்
Deleteப்ப்ப்பயமாய் இருக்கே.சனி பெயர்ச்சி யாருக்கும் நல்லாயில்லை போல.
ReplyDeleteசனியை குறை கூறிய உங்கள் மேல் சனி சார்பாக கேஸ் போடலாம் என நினைத்து கொண்டு இருக்கிறேன்
Deleteஒன்றுபட்டு குரல் எழுப்புவோம்.
ReplyDeleteஇங்கு வருகை தந்து ஆதரவையும் தந்த உங்களுக்கு எனது நன்றிகள் முடிந்தால் தருமி சாரை தொடர்பு கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யுங்கள்
Deleteஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeletehttp://otti.makkalsanthai.com/upcoming.php
பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
அட கொடுமையே! இனி கீ போர்டுல கை வைக்கும் போது யோசிச்சுத்தான் வைக்கணுமோ? நல்ல அரசாங்கம்டா சாமி! இது அவமதிப்பு ஒண்னும் இல்லியே?
ReplyDeleteநல்ல அரசாங்கம் என்று நீங்கள் கிண்டல் பண்ணியது போல இருக்கிறது எதற்கும் ஒரு வக்கிலை பார்த்து வைத்து கொள்ளுங்கள்
Deleteநமக்குள் பிரச்சினைகள் ஏதும் இருந்தாம் அதை ஓரமாக வைத்துவிட்டு அனைவரும் ஒன்றாக குரல் குடுக்க வேண்டிய நேரம் இது. Let us be united for this cause. Late us be united to fight for freedom of speech & writing.
ReplyDeleteஇங்கு வருகை தந்து ஆதரவையும் தந்த உங்களுக்கு எனது நன்றிகள் முடிந்தால் தருமி சாரை தொடர்பு கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யுங்கள்
Deleteகருத்து சுதந்திரம் நிச்சயம் அடிமைபடுத்தப் படும் நாள் அருகாமையில் இருக்கிறது.. இன்னமும் அவரவர்க்கு என்று குழுமம் வைத்து கொண்டாடமல் ஒட்டுமொத்த பதிவுலகம் அல்லது தமிழ் பதிவுலகம் ஒரே குழுமமாய் உருவாக வழி செய்ய வேண்டும் சகாக்களே!!!
ReplyDelete