உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, August 30, 2014

ஸ்டாலினின் மானம் காக்க கலைஞர் எடுத்த நல்ல முடிவு.????


ஸ்டாலினின் மானம் காக்க கலைஞர் எடுத்த நல்ல முடிவு.????செய்திகளும் நக்கல்களும்....
செய்தி : வாஜ்பாய், அத்வானி ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படவில்லை என்றும், அவர்கள் வழிகாட்டிகளாக அங்கம் வகிக்கிறார்கள் என்றும் பாஜக விளக்கம்

மதுரைத்தமிழன் :ஆமாங்க அவங்களை லைட்பாய்காளாக ஆக்கிவிட்டார்கள்செய்தி : தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்

மதுரைத்தமிழன் ஸ்டாலினின் மானம் காக்க கலைஞர் எடுத்த நல்ல முடிவு.செய்தி: கலாநிதி மாறன் சகோதரர்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறதே? நீங்கள் சொல்லித்தான் இந்த செய்தியே எனக்குத் தெரியும். இதில் கருத்துக் கூற விரும்பவில்லை.

மதுரைத்தமிழன் : ஆமாங்க அடுத்த குடும்பம் கட்சியிலே நடக்கறது மட்டும் கலைஞரிடம் சொல்லுறாங்க தன் குடும்பம் கட்சியிலே நடக்குற விஷயத்தை மட்டும் அவருக்கு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்கசெய்தி : 3 பேருக்கு மேல் ஏற்றினால் பர்மிட் ரத்து: ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை

மதுரைத்தமிழன் :சொல்லுறதை இன்னும் தெளிவா சொல்லுங்கப்பா ஆட்டோவுக்கு உள்ளேதான் வெளியில இல்லேன்னு
சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி 'பேஸ்புக்'கில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், ஆதரவாளர்களாக பதிவு செய்துள்ளனர்.

மதுரைத்தமிழன் :தலைவரே என்னை போல நடுநிலையாளர்களும் மற்ற கட்சியில் உள்ளவர்களும் ஊடகத்தினரும் இதில் சேர்ந்துள்ளனர் அவர்களுக்கு நீங்கள் பண்ணும் காமெடியை பார்க்க மட்டுமே இங்கு சேர்ந்துள்ளனர் என்பது உண்மை. அதனால் இந்த ஆதரவாளர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம்காங். அரசின் திட்டம், விருதுகளின் பெயர்களை மாற்ற மோடி முடிவு

மதுரைத்தமிழன் அம்மா வழியில் அயராது உழைக்க முயல்கிறாரா மோடிபாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்-அமித்ஷா.

வாய் மட்டும் தான் வேலை செய்யுது.மத்ததெல்லாம் அப்படியே இருக்கு

டுவீட்டரில் சுபாஷ் ‏
தன் காமம் தீருவதற்கு முன் தனக்குத் தேவையானது உடலல்ல என்று பரத்தையைக் கூட நம்ப வைத்துவிடுவான் ஆண்!"

டிவிட்டரில் ஜெய்

நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguy

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. ஹாஹாஹஹ.....மு. க ஃபேஸ்புக்கில் சும்மா லைக் போடறதை தப்பா ஆதரவுன்னு நினைச்சுட்டாரு போல.....

  ReplyDelete
  Replies
  1. ஜாயின்பண்ணுபவர்கள் எல்லாம் ஆதராளாவர்கள் என்று தவறாக நினைத்து கொண்டார் தலைவர்

   Delete
 2. ஓட்டு வாங்குறவங்களை நல்லவே ஓட்டுறீங்க பாஸூ...

  ReplyDelete
  Replies
  1. அவங்ககிட்ட கைநீட்டி காசு வாங்கினா இப்படி எல்லாம் எழுத முடியாதே நண்பா இதுதான் பத்திரிக்கையாளரும் வலைப்பதிவருக்கும் உள்ள வித்தியாசம்

   Delete
 3. நடிகர் ஜெய்யின் டிவிட்டர் பஞ்ச் டயலாக் சும்மா நச்சுன்னு இருக்கு

  ReplyDelete
  Replies
  1. நடிகர் ஜெய் அல்ல

   Delete
 4. வணக்கம்
  இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/12/ar-2011.html?showComment=1419016437833#c8701066033669350162

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி நேரம் கிடைக்கும் போது சென்று படிக்கிறேன்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog