மனதை நெகிழவைக்கும் போராட்டம்(Never Give Up) இளகிய மனதுள்ளவர்கள் இதில் இணைத்துள்ள வீடியோவை பார்க்க வேண்டாம்)
உன் உடம்பில் உள்ள ஒவ்வொரு துளி இரத்தத்தையும் உபயோகித்து யுத்தம் செய். நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்.
படிப்பு வரவில்லையா படிப்போட போராடு....வேலைக் கிடைக்கவில்லையா அது கிடைக்கும் வரை போராடு....குடித்துவிட்டு கொடுமை படுத்தும் கணவணா, ஆணவக் கணவனா, சந்தேகத்தில் துன்புறுத்தும் கணவனா விடாதே இறுதி வரை போராடு
கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அரசியல் தலைவர்களா ...விடாதே அவர்கள் சொன்ன வாக்குறுதியை நிறை வேற்றும் வரை...அணுமின் நிலையம் ஆபத்தா விடாதே இறுதிவரை அதை தடுத்து நிறுத்த போராடு....தமிழ் ஈழம் வேண்டுமா...தலைவன் பிராபாகரன் இல்லையா கவலை படாதே. ஆனால் உன் உடலில் இன்னும் உயிர் இருக்கிறதே அதனால் விடாது போராடு.
என்னடா இவன் எதற்கு எடுத்தாலும் விடாது போராடு என்கிறானே என்று நினைக்கிறிர்களா அல்லது இப்படி போராட முடியாது என்று நினைக்கிறீர்களா..
அப்படி நீங்கள் நினைத்தால் இந்த வீடியோ படக் காட்சியை பார்த்துவிட்டு சொல்லுங்கள். உங்களால் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எதிர்த்து போராடி வெல்ல முடியுமா அல்லது முடியாதா என்று.
நான் பார்த்த இந்த யூடியுப் காட்சி அப்படியே மனதில் பதிந்து விட்டது. இந்த படக்காட்சியை பார்த்த பின்னால் என்னால் முடியாது என்ற சொல்லே என் அகராதியில் இருந்து நீக்கி விட்ட ஒரு உணர்வு என்னுள் ஏற்பட்டுள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் என்பதை முடிந்தால் பின்னுட்டமாக இடுங்கள் . இதை உங்கள் நண்பர்களுக்கும் குழந்தைகளூக்கும் உறவினர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கும் தவறான ஆட்சி புரிபவர்களுக்கு எதிராக போராடுபவர்களூக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்
ingulab zindabad
ReplyDeleteஇன்குலாப் ஜிந்தாபாத் மறுபடியும்...
ReplyDeletearumai!
ReplyDeletevideovum arumai!
தெய்வத்தால் ஆகாதெனெனும் தன் முயற்சி மெய்வருத்த கூலி தரும்(குறள் கரெக்டா?!) என்பதை ஆறறிவு ஜீவன்களான நாம் நம்புறதில்லை. ஆனா, ஐந்தறிவு ஜீவன்கள் நம்புது.
ReplyDeleteவரிக்குதிரை உயிர் பிழைச்சது ஆறுதல இருந்துச்சு
ReplyDeleteவீடியோவும், வார்த்தைகளும் அருமை.
ReplyDeleteமுயன்றால் முடியாதது ஏதுமில்லை.
ஆக்க பூர்வமான பதிவு!
ReplyDeleteGood One...
ReplyDeletesooper mamu sooper hats of bro nalla karuthu
ReplyDelete