Sunday, July 14, 2013



தமிழகம் உருப்புட்டுருமுடோய் (விஜய் டிவிக்கு தமிழகம்  சார்பாய் பாராட்டுகள் )






வனப்பகுதிக்கு சென்று  இருந்த நான் அங்கு விலங்குகள் ஒன்றையும் பார்க்க முடியவில்லை ஒருவேளை இந்த மதுரைத்தமிழன் வருவதை கண்டு பயந்து ஒளிந்து கொண்டிருந்ததோ என்று எண்ணிய நான் வீட்டிற்கு வந்ததும் டிவியை ஆன் பண்ணிய நான் முதலில் பார்த்தது சிங்கம் (சூர்யா) சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு சென்று இருப்பதை அறிந்ததும்  ஆச்சிரியம்.


வைஷ்ணவா கல்லூரில் இந்த சிங்கம் தான் நடத்தி வரும் அகரம் பற்றிய அறக்கட்டளை பற்றிதான் பேசப் போகிறாரோ என்று எண்ணினேன். காரணம் கல்லூரியில் நடக்கும் விழா என்பதால் நான் அப்படி நினைத்தேன் அப்புறம்தான் நடந்ததைப் பார்த்த பின் தான் டேய் மதுரைத்தமிழா நீ சரியான மாங்காய் மடையானாக இருக்கிறாயே இந்த காலம் பற்றி  உனக்கு தெரியவில்லையே என்று தலையில் அடித்தது போலிருந்தது


நான் மாங்காய் மடையனாக இருக்கலாம் ஆனால் அதி புத்திசாலிகள் சிங்கம் 2 திரைப்பட விழாவை கல்லூரியில் நடத்தியவிஷயம் தான் மனதில் நெருடலாக இருக்கிறது. ஒரு நடிகனை கல்லூரிக்கு  அழைத்து விழா நடத்த அனுமதி அளித்த( M.O.P Vaishnav college) கல்லூரி நிர்வாகத்திற்கும்  அதனை நடத்தி செல்லும் பிரின்சிபாலிற்கும் என்னால் கண்டனம் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. உங்களிடம் ஒரு கேள்வி இந்த விழாவை உங்கள் கல்லூரியில் நடத்தியதால் நீங்க சாதித்தது என்ன? அல்லது உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் கற்று தந்ததுதான் என்ன?



சினிமா மூலம் மக்கள் சிரழிந்தது போதாமல் அது இப்போது டிவிக்கள்(விஜய்) மூலமும் சிரழிக்கபட்டு வருகிறது ஆனால் அது இதுவரை நுழையாத இடமாக இருந்த கல்லூரிகளில் நுழையவும் உங்கள் கல்லூரியான M.O.P வைஷ்ணவா  பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.. நீங்கள் நடத்துவது திரைப்பட கல்லூரியாக இருந்தால் இந்த கேள்வியே எழுந்து இருக்காது ஆனால் நீங்கள் நடத்துவது அப்படிபட்ட கல்லூரி இல்லையே அப்புறம் நீங்க ஏன் இப்படி பாலில் ஒரு துளி விஷத்தை கலந்து இருக்கிறீர்கள்.

ஏன்டா தமிழகத்தில் நல்ல செயலை செய்து சாதித்து கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் உங்கள் கண்ணில் தெரியவில்லையா என்ன?

இந்த விழாவை கல்லூரியில் நடத்தி மாணவர்களின் பொன்னான ஒரு நாளை வீணாக்க உங்களால் எப்படி முடிகிறது


இந்த கல்லூரியில் உங்கள் பிள்ளைகளை பணம் அள்ளிக் கொடுத்து படிக்க வைக்கும் பெற்றோர்களே இப்படி ஒரு விழாவை நடத்தும் கல்லூரி நிர்வாகத்தை நீங்கள் எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்கும் நீங்களா உங்கள் சமுகம் முன்னேற்றத்திற்காக போராடப் போகிறீர்கள் ?



பெண்கள் கல்லூரியில் சூர்யாவை கூப்பிட்டு இருக்கிறார்கள் இது ஆண்கள் கல்லூரிக்கு மிக அவமானம் அதனால் இந்த களங்கத்தை போக்க நமீதாவை ஆண்கள் கல்லூரிக்கு அழைத்து குத்துபாட்டு பாடச்  சொல்லலாம் இதோட நிறுத்திடலாமா அப்புறம் நம் வருங்கால மாணவர்கள் எப்படி முன்னேறுவாங்க அதனால இந்த போட்டியில அடுத்தாக PlayBoy மேகஷினில் வரும் மாடல் அழகிகளை கல்லூரிக்கு கூப்பிட்டு  மாடல் எப்படி செய்கிறார்கள் என்பதை காட்டலாம் அல்லது போல் டான்ஷ் ஆடுபவர்களை கூப்பிட்டு ஷோ காட்டலாம்
\\
இப்படி எல்லாம் பண்ணுங்க தமிழக மாணவர்கள் நல்லா உருப்புட்டுருவாங்க & இந்தியா வல்லரசாக மாறிவிடும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : நண்பர்களே நடிகர்கள் நடிகைகள் கல்லூரிக்கு வருவதை நான் தப்பு என்று சொல்லவில்லை. அவர்களும் மனிதர்கள்தான் அவர்களும் வரலாம். அது கல்லூரி ஆண்டு விழா பொங்கல் விழா பாரதிதாசன் விழா இது போன்ற விழாக்களுக்கு IAS ஆபிஸர்களை அரசியல் தலைவர்களை அழைப்பதுபோல சினிமாத் துறையினரையும் அழைக்கலாம் அதில் தப்பு இல்லை.

ஆனால் சிங்கம் 2 ரீலிஸ் ஆகி அதற்கு இன்னும் பாப்புலாரிட்டி க்ரியேட் பண்ணுவதற்காக இந்த கல்லூரியை பயன்படுத்தி அதற்கு இளம் பெண் மாணவர்களை உபயோகப்படுத்தியதைதான் நான் இங்கு கண்டிக்கிறேன்

8 comments:

  1. ஒரு தொலைக்காட்சி பணம் அள்ளுவதற்காக இவ்வாறு செய்வது சமூகச் சீரழிவு தான்...

    அகரம் தலைவருக்கும் இது 'அ'சிங்கம் தான்...!

    ReplyDelete
  2. தமிழக விவரம் தெரியாம இந்த பதிவை போட்டிருக்கீங்க சகோ! இது என்னமோ புதுசு போல அலுத்துக்குறீங்களே! இதுப்போல ஆயிரம் விழா தமிழக கல்லூரில நடந்துடுச்சு. வேலூர் விஐடி ஆண்டு விழாவுக்கு சிம்பு, விஜய், சூர்யா போய் வந்திருக்காங்க. திருவண்ணாமலை அருணை இஞ்சினியரிங் காலேஜ்ல விஷால், எங்க ஊரு காலேஜ்ல ஆர்யா, என் பிள்ளைங்க ஸ்கூல் ஆண்டு விழாவுல நடிகர் பாண்டியராஜன், அஜய் ரத்தினம், ஜீவா வந்திருந்தாங்க. இதுக்கெல்லாம் என்ன சொல்ல போறீங்க?!

    ReplyDelete
  3. நடிகைகள் மருதுவக்கல்லூரிகளுக்கு...ஆண்கள் ஹாஸ்டல் டேய்க்கு வந்துள்ளார்கள்..!

    ReplyDelete
  4. hello wheneaedrr dhaadhaa cum kalvi vallal jaypiar gave doctrate to vijay nobodody comment

    ReplyDelete
  5. பயணம் எப்படியிருந்தது?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.