
எனது தளத்தில் வந்த தவறான செய்திக்கு மனமுவந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான் தமிழ்...Read more
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா? தமிழகத்தில் உள்ள கல்லூரிகள...Read more
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"&n...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
முக நூலில் பல பேர்... உங்களின் மன்னிப்புக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteடிஸ்கி :உங்கள் பாணி ஹிஹி...
எனது தவறை மன்னித்து நீங்கள் என்னை பாரட்டியது பதிவுலகமே என்னை மன்னித்தது போல இருந்தது நன்றி
Deleteநானும் இச்செய்தியை என் பதிவில் பகிர்ந்திருந்தேன்... தினமலரில் பார்த்து...
ReplyDeleteஇன்னைக்கு அந்த செய்தி பொய் என தினமலரே வெளியிட்டுள்ளது.
எதை நம்ப????? ஊடகங்கள் தீர ஆராய்ந்து செய்திகள் போட வேண்டும்...
பதிவர்களாகிய நாம் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை வைத்து சில சமயம் பதிவுகளில் பதிவெழுதுகிறோம். அந்த செய்தி பொய் என அறிய நேர்ந்தால் மிகவும் வேதனையடைய வேண்டி உள்ளது.
நானும் நண்பரின் இந்த பதிவு வாயிலாக மன்னிப்பு கோருகிறேன்....
பிரகாஷ் , தினமலர் தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக இன்று எப்படி செய்தி திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள் பாருங்கள், அவர்களும் தவறான செய்தியை விசாரிக்கமல்தானே வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி எல்லாம் செய்திகள் வேளியிடாததுமாதிரியும் டிவி சேனல்கள் மட்டும் தவறான செய்தி வெளியிட்டு இருப்பதாக உண்மையின் உரைகல் செய்தி வெளியிட்டு இருக்கிரது இன்று
Deleteஇறந்துவிட்டாரா நடிகை கனகா? வீண் பரபரப்பை ஏற்படுத்திய "டிவி' சேனல்கள்
------------------------------------------------------
சென்னை: "புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள், நேற்று பிற்பகல் வெளியிட்ட தகவல், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உயிருடன் உள்ள நடிகை கனகா, ""நான் நலமுடன் உள்ளேன். ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இந்நிலையில், "நடிகை கனகா புற்றுநோயால் அவதிப்படுகிறார். கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்' என, இரண்டு தினங்களுக்கு முன், தகவல் வெளியானது. இதுகுறித்து, ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, தகவல் உறுதியாகவில்லை. இதனால், நடிகை கனகா எங்கு இருக்கிறார் என, இரண்டு நாட்களாக பரபரப்பு காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று பிற்பகல், "நடிகை கனகா இறந்துவிட்டார்' என, சில தமிழக, "டிவி' சேனல்களில், "பிளாஷ் நியூஸ்' வெளியானது. இது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகை கனகா வீடு உள்ளது. அங்கு, பத்திரிகையாளர்கள் சென்றபோது, கனகா, அவர் வளர்க்கும் பூனைகளுக்கும்,கோழிகளுக்கும் நிதானமாக தீனி போட்டுக் கொண்டு இருந்தார். அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், நடந்த விஷயம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது நடிகை கனகா கூறியதாவது: நான், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்பட்டது, தவறான தகவல். நான், சென்னை வீட்டில் தான் இருகிறேன். எனக்கு புற்றுநோய் என, வதந்தி பரவியிருக்கிறது. நல்ல வேளை, "எய்ட்ஸ்' என்று செய்தி வரவில்லை. இந்த வதந்திகளை, என் தந்தை என்று கூறிக் கொள்ளும், தேவதாஸ் என்பவர் தான் பரப்புகிறார். இதையே காரணமாக வைத்து, என்னை சந்தித்து பேசி, என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார். பத்திரிகைகளில் செய்தி வந்ததும், என்னை தேடி ஆலப்புழாவுக்கு அவர் செல்லாமல், என் சென்னை வீட்டிற்கு வர முயன்றதை வைத்து பார்க்கும் போது, அவர் தான் என்னை பற்றி தவறான செய்தி பரப்பியிருக்கலாம் என, சந்தேகப்படுகிறேன். என் அம்மாவுக்கு ஒரு நல்ல கணவனாக, எனக்கு நல்ல தந்தையாக அவர், எந்நாளும் நடந்து கொண்டதில்லை. அம்மா இறந்த பின், எனக்கு பல சிரமங்கள் வந்தன. அவற்றை சமாளித்து, அமைதியாக வாழ்ந்து வருகிறேன். அப்பா என்று சொல்லிக் கொண்டவருக்கு, என்னைவிட, என் சொத்து மீது தான் அதிக கவனம். இதனால் தான், எனக்கு ஆண்களை பிடிக்காமல் போனது; "இனி திருமணம் வேண்டாம்' என, முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்து வருகிறேன். என் வீட்டில், வேலைக்காரி மட்டுமே உடன் இருக்கிறார். எக்காரணத்தை கொண்டும் என் தந்தை என, கூறிக் கொண்டிருக்கும் தேவதாசை, என் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவிற்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன். சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சித்தேன். அவர்கள் பேச விரும்பவில்லை; பரவாயில்லை. பத்திரிகைகளில் எனக்கு புற்றுநோய் என செய்தி வந்தது, வருத்தமாக இருக்கிறது. தற்போது, நான் இறந்துவிட்டதாக செய்தி வந்து இருப்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், உங்களின் (பத்திரிகையாளர்கள்) சந்திப்பால், நான் நல்லபடியாக இருப்பது, மக்களுக்கு தெரிந்துவிடும்; இது சந்தோஷமாக இருக்கிறது; யார் மீதும் நான் வருத்தப்பட்டு என்னவாகப் போகிறது. இவ்வாறு, நடிகை கனகா கூறினார்.
பல சமயங்களில் இந்த மாதிரி தவறான செய்திகள் பதட்டத்தினை உண்டுபடுத்திவிடும்......
ReplyDeleteஏற்கனவே நடிகர் ”மைக்” மோகன் இறந்துட்டார். ராஜ் கிரண் இறந்துட்டார்ன்னும் புரளி கிளப்பி இருக்காங்க. இதுப்போல ஒரு தனி மனிதர் இறந்துட்டார்ன்னு வெத்து வதந்தியால சாதிக்க போவது என்ன?ன்னு தான் எனக்கு தெரியலை.
ReplyDeleteசெய்தி ஊடகங்கள் செய்கிற அஜாக்கிரதையின் காரணத்தால் எவ்வளவு பெரிய விளைவு பார்த்தீர்களா?. இது உலகமுழுக்கப் பரவியிருந்தது. பாவம் கனகா. நீண்ட நாள் வாழவேண்டும்.
ReplyDeleteஎங்களின் வானொலியில் இறந்த செய்தியினைச் சொல்லி, கனகா நடித்த படங்களின் பாடல்களை ஒலிபரப்பு செய்யத்துவங்கிவிட்டார்கள். கொடுமை கொடுமை.
பத்திரிக்கைத் தொழில் வேசித்தொழிலைவிட கேவலமாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டன என்பது என் கருத்து. பணம் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் செய்தியை திருத்தி வெளியிடமுடியும் என்பது பலரும் அறிந்ததே! இதில் பாதிப்பானவர்கள் பலருள்ளனர். அதனால் தான் ஒவ்வொரு கட்சியும் தனக்கென்று தனியாக ஒரு செய்தித்தாளையும் ஒரு தொலைக்காட்சி சானலையும் வைத்துக்கொண்டுள்ளனர். இனி நாமும் (தனி மனிதன்) ஆளுக்கொரு சானலை ஆரம்பித்தால் தான் முடியும் போல!
ReplyDeleteமுடியலடா சாமி!
அந்த செய்தியை படித்தது நான் உடனே thatstamil.com சைட் போயி பார்த்தேன். அப்பிடி ஏது அதில் உண்மையில்லைன்னு போட்டிருந்தார்கள். ஆகவே நான் அதை பெரிதாக கண்டுகொல்லவில்லை. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்.........
ReplyDeleteஇறந்தவர்களின் மரண அத்தாட்சிப் பத்திரத்தைப் பெற்ற பின்னரோ
ReplyDeleteஅல்லது இறந்தார் என்ற தகவலை நேரில் கண்ட பின்னரோ தான்
பத்திரிகையாளர்கள் இத் தகவலைப் பிரசுரிக்கலாம் என்ற வலுவான
சட்டம் கொண்டுவரப் பட வேண்டும் .கடந்த சில வாரங்களுக்கு முன்னர்
நான் கேள்வியுற்றதும் அனுபவப் பட்டதும் .வேண்டாத ஒருத்தர் இப்படித்தான்
இறந்து விட்டார் என்ற தகவலைக் கொடுத்து மரண அறிவித்தல் பகுதியில்
வெளியிட்டுள்ளார் .ஆனால் அந்த மனிதர் இறக்கவில்லை என்பது தான்
உண்மை .கனகாவின் தரப்பிலும் இப்படியானதொரு சம்பவம் தான்
நிகழ்ந்திருக்கக் கூடும் .பத்திரிகைகளில் நீங்கள் வாசித்த தகவலை வைத்துக் கொண்டு
இட்ட கருத்துத் தவறு என்று உணர்ந்து கேட்ட மனிப்பு பாராட்டிற்குரிய செயல் .
இந்த ஆக்கத்தினைப் படிக்கும் வலைத்தள உறவுகள் இன்று முதல் பத்திரிகைகளிலோ
அல்லது முகநூலிலோ வரும் இது போன்ற செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்கு
இன்றைய நிகழ்வு ஓர் அனுபவப் பாடமாகவே அமையட்டும் .மிக்க நன்றி சகோதரே
பகிர்வுக்கு .
நாம் முதலில் தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இது போன்ற செய்திகள் பகிரப்பட்டு விடுகின்றன.இதை தவிர்ப்பது நல்லது.
ReplyDeleteமன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுஷன்.
தினமலரை பார்த்து நானும் அதை என் தளத்தில் பகிர்ந்து விட்டேன்! ஊடகங்களின் செய்திகளை நாம் பகிரும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடமாக அமைந்துவிட்டது!
ReplyDelete