Tuesday, July 16, 2013

கார் டிரைவர் கற்று தந்த பாடம்


வெகேஷன் சென்றுவிட்டு வந்த ஒருவர், விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல டாக்ஸியை கூப்பிட்டு அதில் ஏறினார் டாக்ஸி மெதுவாக பார்க்கிங்க் ஏரியாவை விட்டு வெளி வந்து கொண்டிருந்த போது திடீரென்று பார்க் பண்ணி இருந்த மற்றொரு கார நாங்கள் வருவதை கவனிக்காமல் வெளியே ஸ்பீடாக எங்கள் கார் முன்னே வந்தது.


உடனே  கார் டிரைவர் சடன் பிரேக் போட்டாதால் டாக்ஸி  வேகமாக திரும்பி அருகில் வந்த கார்மேல் மோதாமல் ஒரு  இஞ்ச் வித்தியாசத்தில் தப்பியது. அந்த காரின் டிரைவர் டாக்ஸி டிரைவர்தான் தவறு செய்தார் என்று கருதி காட்டு கத்தல் கத்தினார்.

ஆனால் டாக்ஸி டிரைவர் எந்த வித கோபமும் படாமல் அந்த கார் டிரைவரை பார்த்து புன்னகைத்தாவாரே தன் கையையும் அசைத்து சென்றார் அதாவது மிகவும் நட்பு உணர்வு கொண்டவர் போல சென்றார்.

பயணி அந்த டாக்ஸி டிரைவரை பார்த்து கேட்டார்..  அந்த கார் நம்மை இடித்து இருந்தால் நாம் ஹாஸ்பிடலில் அல்லவா இருக்க வேண்டியிருந்திருக்கும் உன்னால் எப்படி கோபப்படாமல் அமைதியாக இருக்க முடிகிறது.

அப்போதுதான் அந்த டாக்ஸி டிரைவர் அந்த பயணிக்கு குப்பை வண்டி த்யரியை எனக்கு கற்று தந்தார்.

அந்த டாக்ஸி டிரைவர் சொன்னார் பல மனிதர்கள் குப்பை வண்டியை போல இருக்கின்றனர். அவர்கள் குப்பை வண்டியில் பலவிதமான குப்பைகள் இருப்பதை போல இவர்களும் இயலாமை, கோபம், ஏமாற்றம் போன்ற பலவித குப்பைகளை சமுவதும் சுமந்து கொண்டு இருக்கின்றனர்.

குப்பை வண்டி நிறைந்ததும் அந்த குப்பையை  வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் கொட்ட  இடம் தேடுவது  போல இப்படிபட்ட மனிதர்களும் நம்மீது கொண்டு வந்து கொட்ட முயற்சிக்கும் போது அதை பெர்சனலாக எடுத்து கொள்ள வேண்டாம் அதை நாம்  அப்படியே எடுத்து கொண்டு நமது ஆபிஸ் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் மீது அந்த குப்பைகளை  பரப்புவதற்கு பதிலாக நாம்   புன்னகை மற்றும் நட்பாக கை அசைப்பதன் மூலம் அதை அங்கே தட்டி விட்டு செல்ல வேண்டும்


வெற்றி பெற விரும்பும் எவரும் குப்பைவண்டி அவர்களின் நாள் எப்படி நடக்க வேண்டும் என்று முடிவு செய்ய அனுமதிக்க மாட்டார்கள்
.
Life’s too short to wake up in the morning with regrets,

so … Love the people who treat you right.

Pray for the ones who don’t .

Life is ten percent what you make it and ninety percent how you take it!




அந்த டாக்ஸி டிரைவரிடம்  இருந்து  அந்த பயணி மட்டுமல்ல நானும் பாடம் கற்றுக் கொண்டேன். அப்ப நீங்க???



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: நான் ஆங்கிலத்தில் படித்த இந்த கதை எனக்கு மிகவும் பிடித்ததால்  எனது பாணியில் இங்கு தந்துள்ளேன்.

9 comments:

  1. வெகு அருமை! குப்பை வண்டிகளை நிறைய நானும் அன்றாட வாழ்வில் சந்திக்கிறேன். இனி இன்னும் அழகாய் தவிர்த்துவிடுவேன். அருமையான கதையை அழகா பகிர்ந்ததுக்கு டாங்ஸுங்கோ!

    ReplyDelete
  2. சொல்லப்பட்ட உதாரணம் நல்ல பாடம்...

    ReplyDelete
  3. நல்ல அறிவுரைதான். இப்படிப்பட்ட உபதேசங்களை புத்தகத்திலயோ இல்ல ஆன்மீகத்துலயே கிடைச்சுடாது. நம்மிடையே இருக்கும் இதுப்போன்ற மனிதர்கள் மூலமாதான் பல அறிவுரைகளை நாம் கத்துக்குறோம்.

    ReplyDelete
  4. miga arumai. naan miga periya kuppai vandi. inimel konjam konjamaga kuppaiyai kuraika vendum. tnx a lot for example.

    ReplyDelete
  5. குட்டிக் கதைகள் எப்போதுமே மனத்தைக் கவர்பவை.
    டிரைவர் சொன்ன பாடத்தை கற்றுக் கொண்டால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.உண்மையில் கற்றுக் கொள்வோமா?

    ReplyDelete
  6. நல்ல அறிவுரை... ஆங்கிலத்தில் படித்ததை உங்கள் பாணியில் சொல்லி இருப்பது நன்று.

    ReplyDelete
  7. அருமையான உபதேசம்.

    ReplyDelete
  8. VERY GOOD LESSON ABOUT GARBAGE TRUCK

    ReplyDelete
  9. அருமையான கதை! நானும் கற்றேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.