Thursday, July 4, 2013




எதாவது பதிவு போடலாம் என்று மனது நினைத்தது ஆனால் அதற்கு ஏட்டிக்கு போட்டியாக மூளை ஒத்துழைக்க மறுத்தது ( அது யாருப்பா உனக்கு மூளை இருக்குதா என்று கேட்பது . உண்மையாகவே  சொல்லுறேன் எனக்கு மூளை பெரிசாவே இருக்குது ஆனால் அது காலியாத்தான் இருக்கிறது ஆனா காலியாக இருப்பதானால் யாருக்கும் வாடகைக்கு விடமுடியாது இப்ப சந்தோஷம்தானே ) அப்பதான் என் மனைவி தனக்கு மிக சிறந்த மூளை இருப்பதாக பெருமை அடித்தாள். சரி போனா போதுன்னு அவளிடம் கொஞ்ச நேரம் கடனாகி வாங்கி இந்த பதிவை இடுகிறேன். அவ மூளை நான் நினைப்பதற்கு ஏட்டிக்கு போட்டியாக இருப்பதும் கொஞ்சம் வசதியாக போய்விட்டது.

அந்த மூளையை நான் உபயோகித்து எழுதிய பதிவுதான் இந்த ஏட்டிக்கு போட்டி பதிவு


ஏட்டிக்கு போட்டி
 
 
கல்யாணம் சொர்க்கத்தில் நிர்ணயிக்க படுவதாக சொல்லுகிறார்கள் ஆனால் கல்யாண வாழ்க்கை நரகத்தில் நடக்கிறது என்ற உண்மையை  மட்டும் சொல்லாமல் விட்டு விடுகிறார்களே.
 
பார்த்தால் காதல் வருவது அந்த காலம் ஆனால் பேஸ்புக்கில் லைக் போட்டால் காதல் வரும் இந்த காலத்தில்
 
ஆண்கள் பலசாலிகள் ஆனால் பெண்களுக்கு அடிமைகள்.
 
பிடித்தது காதல் கல்யாணம் ஆனால் பண்ணுவது பெற்றோர்கள் பாத்து வைத்தவர்களை
 
படிப்பது ஹெல்த் புக்ஸ் ஆனால் சாப்பிடுவது ஜங்க் புட்
 
செய்வதோ பாவங்கள் ஆனால் தேடுவதோ புண்ணியங்கள்
 
கட்டியதோ நல்லப் பெண்ணை ஆனால் தேடுவதோ கள்ளக் காதலியை
 
படிப்பதோ தர்மத்தைப் பற்றி ஆனால் செய்வதோ அதர்மங்களைதான்
 
இந்திய கலாச்சாரம் மிக உயர்ந்த கலாச்சாரம் என்று வாயால் மட்டும் சொல்லிவிட்டு, செயலிலோ மேலை நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவது
 
சுவரில் எழுதி இருப்பது நோ பார்க்கிங் ஆனால் காரை நிறுத்துவது அந்த சுவருக்கு அருகில்.
 
பஸ்ஸில் எழுதி இருப்பது பெண்களுக்கான சீட் ஆனால் உட்கார்ந்து வருவதோ ஆண்கள்
 
அம்மா கையால் சாப்பிட்டது அந்த காலம் ஆனால் அம்மா உணவகத்தில் சாப்பிடுவது இந்த காலம்
 
கப்பல், கடல் தண்ணியில் மிதக்கும், தமிழ் மக்கள் டாஸ்மாக் தண்ணியில் மிதப்பார்கள்
 
சட்டசபை தேர்தலுக்கு பின் மின்சாரம் வெட்டு வந்தது  நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ஒயர் வெட்டு வரும்
 
நம்மை வளர்த்த அம்மா நமக்கு தந்தது  பால் பாட்டில் ஆனால் நாம வளர்த்த(ஒட்டு போட்டு ) அம்மா நமக்கு தருவது சரக்கு (டாஸ்மாக்) பாட்டில்
 
நாட்டு மக்களை காப்பாற்ற நாம் தலைவர்களை தேர்ந்தெடுத்தால் அந்த தலைவர்களோ தங்கள் வீட்டு மக்களை காப்பாற்ற பாடு படுகிறார்கள்.
 
அன்புடன்
மதுரைத்தமிழன்



3 comments:

  1. ஏட்டிக்கு போட்டி எடக்குமடக்கா இருக்கு...

    ReplyDelete
  2. உங்க மூளையை விட அண்ணி மூளை நல்லாவே சிந்திக்குது

    ReplyDelete
  3. சிந்திக்க கூடிய, சுவரில் "பசக்" என்று ஒட்ட வேண்டிய அருமையான மூளை சார் உங்க மனைவியுடையது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.