நீங்கள் படித்து ரசிக்க 94,694,400 நொடிகளை கடந்து வந்த பதிவுதளம்
எனது வலைத்தளம் முன்று ஆண்டுகளை கடந்து நான்காம் ஆண்டிற்கு சிறு குழந்தையைப் போல அடி எடுத்து வைக்கிறது. இந்த வலைத்தளம் குழந்தையைப் போல கள்ளம்படமின்றி மனதில்பட்டதை சொல்லி சென்று கொண்டிருக்கிறது. அதை அரவணைத்து குழந்தையப் போல சீராட்டி ஆதரவு தரும் உங்களுக்கு எனது மனம்மார்ந்த நன்றிகள்
இந்த வலைதளம் வியாழன், ஜூலை 15th, 2010 ல் ஆரம்பிக்கபட்டு இன்று திங்கள் ஜூலை 15th, 2013 வரை 1,096 நாட்களை கடந்து வந்துள்ளது. அதாவது மூன்று ஆண்டுகள். அதாவது 156 வாரம் & 4 நாட்கள் மணிக்கணிக்கில் சொல்ல வேண்டுமானால் 26,304 மணிநேரம் அதை நிமிஷங்களில் சொல்ல வேண்டுமானால் 1,578,240 minutes.
1,096 நாட்களை நொடிகளாக மாற்றினால் 94,694,400 seconds.
உங்களின் ஆதரவோடு 733 பதிவுகளை இட்டுள்ளேன். ஜூலை 15 2010 ல் முதன் முதலாக ராம்தாஸ் அவர்கள் பற்றிய சிறு நக்கல் துணுக்கை இட்டு பயணத்தை ஆரம்பித்தேன். எனக்கு முதன் முதலாக கமெண்ட் வந்ததது 8/27/10 ல் தான் அதை புன்னகை தேசம் பதிவாளர் சாந்தி அவர்கள் இட்டு ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர் வலைத்தளத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு பேஸ்புக் பக்கம் போய்விட்டார் அவர் அன்றும் இன்றும் எனது தோழியாகவே இருந்து வருகிறார்.( அப்போது எல்லாம் தனபாலன் ரமணி சார் போன்ற ஆட்கள் கிடையாது பதிவு எழுதியதும் கமெண்ட் போட )
அவரைத் தொடர்ந்து இந்த வலைதளத்தில் 498 உண்மையான நபர்கள் ஃப்ளோவர்களாக தொடர்ந்து வருகின்றனர் அந்த 498 ம் உண்மையான ஃப்ளோவர்களே மற்றவர்களை போல அதிக ஃப்ளோவர்களை காண்பிக்க ஃபேக் ஐடிக்களை க்ரியேட் பண்ணி சேரக்கவில்லை. அதற்கு சாட்சியே எனக்கு வரும் ஹிட்டுக்கள்.
எனது தளத்தின் வெற்றிக்கு காரணம் நான் செய்திகளை வித்தியாசமான முறையில் தருவதும் சுவையாகவும் நகைச்சுவையாகவும் தருவதுதான். அதுமட்டுமல்லாமல் நான் தமிழை வளர்க்கவோ அல்லது இலக்கியத்தை படைக்கவோ அல்லது ஒழுக்கத்தை போதிக்கவோ இங்கு வரவில்லை. ஆனாலும் எனது பதிவுகள் ஏதும் ஒழுக்கத்தை மீறி வரவில்லை இங்கு நான் ஒழுக்கத்தை பற்றியோ அறிவுரைஸ் சொல்லியோ எழுதாததன் காரணம் இங்கு வருபவர்கள் 5 லிருந்து 10 வயது சிறுவர்கள் அல்ல எல்லாம் வயதிற்கு வந்தவர்கள்தான் அவர்களுக்கு எது ஒழுக்கம் ஒழுக்கமில்லை என்பது நன்றாகவே தெரியும் ..அதனால் அதை பற்றி எழுத எனக்கு விருப்பம் இல்லை
இந்த தளம் எனது பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கப்பட்டது அது உங்களை பொழுதை சுவாராஸ்யமாக போக்கவும் உதவும்
இப்படி ஆரம்பிக்கபட்ட தளத்தின் பேனர் பலவிதமாக உருமாறி இப்போதைய பேனராக இறுதிவடிவம் பெற்று இருக்கிறது கடந்த மூன்று ஆண்டுகளில்
இறுதியாக என்னை இங்கு ஃப்ளோ செய்து ஆதரவு தருபவர்களுக்கும், கூகுல் ப்ளஸில் , இண்டலியில் மற்றும் பேஸ்புக்கில் தொடர்பவர்களுக்கும் எனது மனம்மார்ந்த நன்றிகள் உங்கள் ஆதரவை தொடர்ந்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
எனது தளத்தை லிமிடெட் எடிசனாக (அதாவது ஃப்ளோ செய்பவர்கள் மட்டும் படிக்க) ஆக்கலாமா என்று நினைத்து கொண்டிருக்கிறேன் ஆனால் எனக்கு அதிகம் சைலண்ட் ரீடர்கள் இருப்பதால் சிறிது யோசனையாக இருக்கிறது. அதனால் முடிவு எடுக்க சில காலம் பிடிக்கும் என நினைக்கிறேன்
எனது அடுத்த பதிவு புதிய பதிவாளர்கள் வெற்றி பெற எனது அனுபவ டிப்ஸ்
அன்புடன்
மதுரைத்தமிழன்
உங்களை கலாய்க்க இப்படி ஒரு சகோதரி கிடைப்பான்னு அப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் போல. அதான் என் திருமண நாள் அன்னிக்கு ஆரம்பிச்சு இருக்கீங்க. நீங்க தீர்க்கதரிசிதான் சகோ! அதனால, பேசாம ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சுடுங்க. நல்லா கல்லா கட்டலாம். கூடவே சிஷ்ய பிள்ளைகளையும் கட்டலாம் :-)
ReplyDeleteசகோ உங்களின் திருமணநாளில் ஆரம்பிக்கபட்டதுதான். ஆனால் சகோவிற்காக ஆரம்பிக்கவில்லை ஆனால் சகோவை கட்டிய தியாகிக்காக(மாப்பிள்ளைக்காக ) ஆரம்பித்தேன்..
Deleteஆசிரமம்தானே ஊரில் ஒரு நல்ல இடமாக வாங்கி போடுங்கள் சீக்கிரம் துறவியாக அங்கு வந்து அமர்கிறேன் வருகிற லாபத்தில் ஆளுக்கு சரி பங்கு ஒகேவா
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... முந்தயவற்றை தகவல்கள் + படமாக சேமித்து வைத்ததற்கும் பாராட்டுக்கள்... ராஜி சகோதரி கலக்கல்... நீங்கள் அதை விட....! ஹிஹி...
ReplyDeleteசும்மா பாராட்டை மட்டும் தர வேண்டாம் உங்கள் ஊர் பிரியாணிதான் வேண்டும் அதனை அனுப்பிவையுங்கள்
Deleteவித்தியாசமான முறையில் தாங்கள் எழுதிவருவது அருமை.... இப்படியே தொடருங்கள்....
ReplyDeleteமேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
வித்தியாசமானவைகலை படித்து ரசிக்க உங்களை போல உள்ளவர்கள் இருக்கும் வரை நிச்சயம் முடிந்தவரையில் வித்தியாசமாக தர முயற்சிக்கிறேன்
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வாழ்த்துகள். அமெரிக்காவில் உங்கள் பார்வையில் உள்ள அனுபவங்களை தொடர்ந்து எழுத வேண்டுகின்றேன்.
ReplyDeleteமுயற்சி செய்கிறேன் நண்பரே
Deleteவாழ்த்துக்கள். லிமிட்டடாக மாற்ற வேண்டாம்.
ReplyDeleteமுரளி உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல
Deleteஅண்ணே அப்படியே நம்ம DD அண்ணங்கிட்டே கன்சல்ட் பண்ணி கர்ஸரை அந்த செகப்பு டப்பாக்குள் கொண்டுசெண்டால் அப்படியே இன்னிக்கு தேதிக்கு அப்டேட் (நொடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருஷம்) ஆகிறா மாதிரி மாத்துங்கண்ணே. சூப்பரா இருக்கும்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல
Deleteஇந்த பதிவு படித்து முடித்த சில தினங்களில் வேஸ்டான பதிவாகிவிடும் அதனால் அவரை நாம் தொந்தரவு செய்ய வேண்டாம்
வாழ்த்துகள் .சகோ ராஜிக்கும் திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குழந்தை கொஞ்சம் வாலுதான்.லிமிட் செய்ய வேண்டாம்.
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல
Deleteவாலு குழந்தையைத்தான் பலருக்கும் பிடிக்கும் அதானால் நான் வாலாகவே இருக்க விரும்புகிறேன்
உங்கள் வலைக்கு வந்து பாலோயர்ஸில் நான் 500 வது நபர்
ReplyDeleteஎன்ற பெருமிதம் கொல்கிறேன். சாரி, கொள்கிறேன்.
எனக்கு ஏதேனும் பொற்கிழி பரிசு உண்டெனில், நான்
தாய் மண்ணுக்குத் திரும்பி வந்த உடன் பெற்று கொள்கிறேன்.
சுப்பு தாத்தா
www.subbuthatha.blogspot.com
உங்கள் வலைக்கு வந்து பாலோயர்ஸில் நான் 500 வது நபர்
ReplyDeleteஎன்ற பெருமிதம் கொல்கிறேன். சாரி, கொள்கிறேன்.
எனக்கு ஏதேனும் பொற்கிழி பரிசு உண்டெனில், நான்
தாய் மண்ணுக்குத் திரும்பி வந்த உடன் பெற்று கொள்கிறேன்.
சுப்பு தாத்தா
தாத்தா உங்களுக்கு பொற்கிழி அல்ல கிளி போல உள்ள பொண்ணை உங்களுக்கு பரிசாக தருகிறேன் ஆனால் பாட்டிகிட்ட அனுமதி முதலில் வாங்கி கொள்ளுங்கள் இல்லையென்றால் உங்களை கிழி கிழி என்று கிழித்துவிடுவார் அதன் பின் உங்களுக்கு கிலி பிடித்துவிடும்.
Deleteநான் உங்களின் தாய் மண்ணிற்கு வருவதற்கு இப்போதைக்கு எண்ணமில்லை. ஆனால் இப்போது நீங்கள் இருக்கும் மண்ணுக்கு அருகில் 5 மைல் தூரத்தில்தான் நான் வசிக்கிறேன். நீங்கள் இருப்பது south brunswick, nj நான் இருப்பது North brunswick நம்ம வீட்டை தாண்டிதான் நீங்கள் பல இடங்களுக்கு செல்லுவீர்கள்
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வாழ்த்துகள் மதுரைத் தமிழன்..... இன்னும் பல ஆண்டுகள் பதிவுலகில் தொடர்ந்து அசத்திட வாழ்த்துகள்.....
ReplyDelete