Wednesday, July 24, 2013






அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இவர்கள் கடிதம் எழுதினால்?( நகைச்சுவை கடிதங்கள் )


:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா, "விசா' வழங்கக் கூடாது என கேட்டு, அமெரிக்க அதிபர், பராக் ஒபாமாவுக்கு, 65 எம்.பி.,க்கள் கடிதம் எழுதி  இருக்கிறார்கள்.


எல்லாவிஷயங்களிலும் அநாவசியமாக மூக்கை நுழைக்கும் அமெரிக்க என்ன உலகத்திற்கே பெரிய அண்ணனா என்று குதித்த இந்திய தலைவர்கள் இப்போது தங்கள் நாட்டு தலைவர்கள் சம்பந்தமாக அமெரிக்காவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இப்படி தரம் தாழ்ந்து போய்விட்டார்களா இந்திய தலைவர்கள் என்று நினைக்கும் போது  வெட்க கேடாக இருக்கிறது

இந்த செய்தியை கேள்விபட்ட பா.., செய்தித் தொடர்பாளர், நிர்மலா சீதாராமன், ""இந்திய அரசியல் சண்டையை, "தேர்டு அம்பயர்' அமெரிக்காவிடம் கொண்டு செல்வதா?'' என, கேட்டுள்ளார்

இந்திய அரசியல் சண்டையை, "தேர்டு அம்பயர்' அமெரிக்காவிடம் கொண்டு செல்வதா?' என்று இப்போது கேட்கும் பாரதிய ஜனதாகட்சியின்  பா.., செய்தித் தொடர்பாளர், நிர்மலா சீதாராமனுக்கு  அவர்  கட்சி தலைவரே அமெரிக்காவில் சென்று "தேர்டு அம்பயரே  எங்கள் தலைவர் மோடிக்கு  விசா கொடுங்கள் என்று காலில் மட்டும் விழுந்தால் ஒன்றும் இல்லையாம் ஆனால் மற்றவர்கள்  கடிதம் அனுப்பினால் மட்டும் கோவம் பொத்துகிட்டு வருகிறதாம் ??

இந்திய தலைவர்கள் நல்லா காமெடி பண்ணுறாங்கப்பா?

சரி அவங்கமட்டும்தான் காமெடி பண்ணலாமா? நாம பண்ணக் கூடாதா என்ற எண்ணத்தில் எழுந்ததே இந்த பதிவு;

ஜெயலலிதா ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில் : அண்ணே ஒபாமா அண்ணே இந்த கர்நாடாககாரன் தண்ணிர் திறந்து விடமாட்டேங்கிறான் நீங்கதாண்னே அவங்களுக்கு புத்தி சொல்லனும்.


கலைஞர் ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில் : தம்பி நீ என் தங்க கம்பி. நம்ம மன்மோகன் சிங் தம்பி  அண்ணியை வீணாக இந்த தள்ளாத வயதில் மூத்த அண்ணியை டில்லிக்கு விசாரனைக்கு வா என்று அதிகாராமாக இன்று மிகப் பெரிய பதவியில் இருப்பதால் ஆணையிடுகிறான். அந்த தம்பிக்கு உன் மேல் பாசம் அதிகம் இருப்பதால் நீ சொன்னால் அவன் கேட்பான் அவனுக்கு அறிவுறை சொல்லி இந்த விசாரணையை தடுத்து நிருத்தப்பா?


விஜயகாந்த ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில் : அண்ணனே இந்த அம்மா என் கட்சியில் உள்ள எல்லாரையும் விலைக்கு வாங்குகிறார்கள் ஆனால் என்னை மட்டும் வாங்க மாட்டேங்கிறார்கள் வயதான காலத்தில் நான் தனியாக இருந்துவிடுவேனோ என்ரு பயமாக இருக்கிறது அதனால் என்னையும் அவர்கள் கட்சியில் சேர்த்து கொள்ள அறிவுறையை உங்கள் சகோதரிக்கு சொல்லுங்கள் அண்ணே. இப்ப தமிழ்னாட்டுக்குள்ள நடமாடவே பயமாக இருக்கிரது அண்ணே

வைகோ ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில் : அண்ணே நீங்க இலங்கை பிரச்சனை விஷயத்தில் தலையிட்டு தீர்க்கவும் இல்லையென்றால் எனது நடைப்பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி வாசிங்டன்னில்தான் முடியும் சொல்லி புட்டேன்


ஸ்டாலின் ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில் : அண்ணே அப்பா எனக்கு தலைவர் பதவி கொடுத்துட்டு ஒதுங்கி போகாமா அவரே இன்னும் தலைவர் மாதிரி ஆக்டிங்க் பண்ணி  இருக்கிறார் அதனால என்னால எந்த முடிவு எடுக்க முடியல நீங்கதான் அப்பாவுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லனும்


சோனியா  ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில்  அண்ணே நீங்க சொன்னாமாதிரி வால்மார்டுக்கு இந்தியாவில் இடம் கொடுத்தாச்சு நீங்க அனுப்பிய கமிஷனும் என் அக்கவுண்டில் வந்து சேர்ந்தாச்சுன்னு  இத்தாலியில் உள்ள உறவினர்கள் சொன்னார்கள். அதுக்கு நன்றி இந்தியாவில் வேற என்ன வேணும்னு சொல்லுங்க நான் செஞ்சு தரேன்

கமல் ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில் :  அண்ணே நான் உங்க நாட்டு FBI க்கு உதவுவதாக படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறேன். நீங்க சொன்னாதான் எனக்கு ஆஸ்கர் அவார்டு தருவாங்களாம் அதனால உங்களுக்கு சொல்லலாமுன்னனு இந்த கடிதம் எழுதி இருக்கிறேன் நீங்க எனக்கு உதவினா நான் அடுத்து எடுக்கும் படத்தில் உங்களை ஹீரோவா போட்டு எம்ஜியார் படத்தை ரீமேக் பண்ணி எடுக்குறேன் அத்ற்கு அப்புறம் நீங்கதான் இந்திய பிரதமர்


விஜய் ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில் : அண்ணே நம்ம டாடியோட தொந்தரவு தாங்க முடியலண்ணே எப்ப பாரு அண்ணண் ஒபாமாவை பாரு  We can change  We can change  என்று  சொல்லி பதவியை பிடிச்சிட்டாரு நீயும் அது மாதிரி தமிழக மக்களிடம் சொல்லி ஆட்சியைப் பிடின்னு சொல்லிக்கிட்டே இருக்காருங்க நானும் தமிழக மக்களிடம்  change , change என்று சொல்லும் போது நான்  என்னவோ  பிச்சைகாரன் என்று நினைத்து சில்லரையை தூக்கி ஏறிகிறார்கள். உங்களுக்கும் அப்படிதான் நிகழ்ந்ததா என்று சொல்லுங்கண்ணே.


மதுரைத்தமிழன் ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தில் : அண்ணே என்னமோ சட்டம் எல்லாம் கொண்டு வரீங்க ஆனால் மனைவிகள் கணவன்மார்களை பூரிக்கட்டையால் அடிப்பது மிக கடுமையான குற்றம் என்று சட்டம் கொண்டு வாருங்கள் என்றும் பல முறை கடிதம் எழுதி செவி சாய்க்கவில்லையே அது ஏன் அண்ணே... நான் கேள்விபட்டது உண்மையா அண்ணே நீங்க சட்டம் கொண்டு வர முயறிக்கும் போதெல்லாம் உங்க மனைவி உங்களை பூரிக்கட்டையை காண்பித்து மிரட்டி அதை தடுக்கிறார்களாமே ? அது உண்மையா அண்ணே

அப்ப சரி அண்ணே நாம இரண்டு பேரும் கடவுளுக்குதான் கடிதம் எழுத வேண்டுமண்ணே !


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. மிக மோசமான முன் உதாரணங்கள். நம்முடியி பிரச்சனைகளை நாம் தீர்த்துக் கொள்ளாமல அமெரிக்காவை நாடுவது மகா கேவலம்.

    நீங்கள் எழுதிய கடிதங்கள் கற்பனை என்றாலு உண்மை நிலையும் அப்படித்தான் இருக்கிறது
    கடைசி கடிதம் சூப்பர்

    ReplyDelete
  2. .அன்புள்ள ஒபாமா அவர்களுக்கு,
    இங்கே இப்போ ஒரு மாநிலத்தில் தண்ணீர் கஷ்டம். இன்னொரு இடத்தில் மழை வெள்ளம். போக்குவரத்துக்காக சாலைகளை இணைக்கிறேன் என்று மரங்களை வெட்டி தள்ளுகிறார்கள். வீட்டிலும் பள்ளிகளிலும் மரம் நடுங்கள் என்கிறார்கள். எப்படி மழை பெய்யும்? .நதிகளை இணைக்கணும்னு யாருக்கும் தோணல. யார் தண்ணி ஊற்றுவது? பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நடக்கிறது. வேட்டி கட்டிய பிரதமர் வேண்டும் என்கிறார்கள். ஒரு டஜன் எட்டு முழ வேட்டி அனுப்புகிறேன். கட்டிப் பழகிக்கங்க. இந்தியன் சிடிசென்ஷிப் உடனே வாங்கி விடலாம்( கொஞ்சம் டாலர் கையிலிருக்கட்டும். இந்திய ரூபாய் இப்போ ரொம்ப சீப்) இந்தியாவை யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்று ஆக்க நல்ல திட்டங்கள் தீட்டுங்கள்.
    இப்படிக்கு
    சகாதேவன்

    ReplyDelete

  3. ஹா.ஹா... நல்ல கற்பனை

    ReplyDelete
  4. கலக்கலான கடிதங்கள்.... ரசித்தேன்....

    சந்தடி சாக்குல நீங்களும் ஒரு கடிதம் எழுதிட்டீங்க! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.