தந்தி சேவைக்கு பதிலாக இ-போஸ்ட்டை பயன்படுத்துங்கள்: தபால் துறை
ஜூலை மாதம் 15ம் தேதியுடன் தந்தி சேவை நிறுத்தப்படவிருப்பது என்பது மக்கள் அறிந்த செய்தியே.காரணம் செல்போன் வசதியும் இண்டர்நெட் வசதியும் எல்லா இடங்களிலும் வந்துவிட்டதால் தகவல் தொடர்பு மிகவும் எளிதாகிவிட்டது. ஆனாலும் இவ்வளவு வசதி இருந்தாலும் சில சமயங்களில் நாம் எழுத்து மூலமாக சில தகவல்களை நாம் கிராமத்தில் இருக்கும் வயதானவர்களுடன் பறிமாறவும் மிக விரைவில் தெரிவிக்கவும் இ-போஸ்ட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்
தந்தி சேவையைப் போன்றே இ-போஸ்ட் சேவையை இந்திய தபால்துறை வழங்குகிறது. இச்சேவையில், ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10
கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படுகிறது. கணினிமயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் இச்சேவை அளிக்கப்படுகிறது.
அச்சடிக்கப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட அல்லது சிடியில், அல்லது பென் டிரைவில் பதியப்பட்ட தகவலை இ-போஸ்ட் மையத்தில் கொடுத்தால், அது ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் மூலம் மின்னஞ்சல் செய்யப்படும். அது பெறுனர் இருக்கும் ஊரில் உள்ள மையத்தில் அத்தகவல் பிரிண்ட் எடுக்கப்பட்டு, உறையிலிடப்பட்டு தபால்காரர் மூலம் உரிய முகவரியில் சேர்க்கப்படும்.தபால் முகவரி தவிர உலகின் எந்தப்பகுதியில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் கொண்டு சேர்ப்பதற்கும் இச்சேவையைப் பயன்படுத்தலாம். இச்சேவை இந்தியாவில் உள்ள 1,55,000 போஸ்ட் ஆபிஸ் மூலம் நடை பெறுகிறது. இந்த திட்டத்தில் மேலும் பல போஸ்ட் ஆபிஸ் சேர்ந்து கொண்டே இருக்கிறது
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக இ-கார்ப்பரேட் எனும் சிறப்புத் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரே சமயத்தில் 9,999 முகவரிகளுக்கு தகவல் அனுப்பலாம். இதற்கு ஏ4 பக்க அளவிலான தகவலுக்கு ரூ.6
கட்டணமாக வசூலிக்கப்படும். ஒரே முறை குறைந்தது 50 அல்லது அதற்கு அதிகமான முகவரிக்கு தகவல் அனுப்பும் நிறுவனங்களுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.5
கட்டணமாக வசூலிக்கப்படும்.
பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இணையதள முகவரி .
ePOST: For
Business Contact:
B D & M Directorate,Department of Posts, MOC &
IT, New Delhi - 110001
Ph. 91-11-23096148,23096152, e-mail:
epost@indiapost.gov.in
மேலும் e-post ஆபிஸ் மூலம் போஸ்டல் ஆர்டர், https://www.epostoffice.gov.in/eipo_info.htm எலக்ட்ரானிக் மணியார்டர், https://www.epostoffice.gov.in/electronic_money_order.html
போஸ்டல் லைஃப் இன்ஸூரன்ஸ் https://www.epostoffice.gov.in/pli.html உடனடி மணியார்டர்
https://www.epostoffice.gov.in/instant_money_order.html போன்ற இணைய சேவைகளை இந்திய தபால் துறை வழங்குகிறது. இதை வெளிநாட்டு இந்தியர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்
eIPO or Electronic Indian Postal Order (launched by
the Department of Posts, Ministry of Communications & IT, Government of
India) is a facility to purchase an Indian Postal Order electronically by
paying a fee on-line through e-Post Office Portal i.e. https://www.epostoffice.gov.in.
It can also be accessed through India Post Website www.indiapost.gov.in. At
present, this facility is available only for Indian Citizens abroad across the
globe to facilitate them to seek information under the RTI Act, 2005. Both
Debit and Credit Cards of any Bank powered by Visa/Master can be used for this
purpose.
The user needs to get himself registered at the
website. He has to select the Ministry/Department from whom he desires to seek
the information under the RTI Act and the eIPO so generated can be used to seek
information from that Ministry/Department only. A printout of the eIPO is
required to be attached with the RTI application. If the RTI application is
being filed electronically, eIPO is required to be attached as an attachment.
It may be noted that this facility is only for
purchasing an Indian Postal Order electronically. All the requirements for
filing an RTI application as well as other provisions regarding eligibility,
time limit, exemptions etc., as provided in the RTI Act, 2005 will continue to
apply.
அன்புடன்
மதுரைத்தமிழன்
இந்த பதிவு தகவலுக்காகவும் அறியாதவர்கள் அறிந்து கொள்ளவும் எனது எதிர்கால உபயோகத்திற்காவும் மற்றும் தமிழகத்தில் தங்களது எதிர்ப்பை பிரதமருக்கு எதிராக தெரிவிக்க தந்தி அடித்து வந்தவர்கள் இந்த முறையை உபயோகப்படுத்தலாம் என்று தெரிவிக்கவும் வெளியிடப்படுகிறது
காலம் கடந்து நவீனப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.முன்னரே இது போன்று செயல் பட்டிருந்தால் பல கொரியர் சர்வீஸ்கள் முளைத்திருக்காது
ReplyDeleteநல்ல பதிவு தொடரட்டும் தங்கள் பணி
ReplyDeleteVery good article thank you Giri.
ReplyDeleteநல்ல பகிர்வு.....
ReplyDeleteதந்தி சேவை மறைந்தாலும் அதன் நினைவுகள் மறக்காது....
இ-போஸ்ட் பற்றிய தகவல்கள் நன்று.