Tuesday, July 23, 2013




இந்திய அரசாங்கம்(காங்கிரஸ்) ஆண்மையற்ற அரசாங்கமா?


நான் திணமணி நாளிதழில் படித்த செய்தியும் அதன் பின் என் மனதில் எழுந்த எண்ணமும்தான் இன்றைய பதிவு.

போடா நீயும் உன் எண்ணமும் என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது... நீங்க என்ன வேணா என்னைத்திட்டிகோங்க பரவாயில்லை ஆனா நான் சொல்ல வரதை சொல்லிவிட்டுப் போறேன் ஒகே வா

முதலில் நான் படித்த செய்தி உங்கள் பார்வைக்கு


ஊடுருவலை பெரிதுபடுத்தினால் இந்திய - சீன உறவு பாதிக்கும்'
By dn, பெய்ஜிங்
First Published : 24 July 2013 12:58 AM IST

எல்லையில் ஆங்காங்கே நிகழும் ஊடுருவல் சம்பவங்களைப் பெரிதுபடுத்தினால், அது இந்திய - சீன உறவுகளைப் பாதிக்கும் என்று சீன அரசின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஊடுருவல் தொடர்பாக இந்திய - சீன அதிகாரிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை பேச்சு நடைபெற்ற சூழ்நிலையில் இது போன்று கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதற்கிடையே சீன அரசின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:÷""ஊடுருவல் விவகாரத்தை பெரிதுபடுத்தி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இது இந்திய - சீன உறவைப் பாதிக்கும். இரு நாட்டவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும்.

எல்லைப் பிரச்னை ஒரே நாளில் தீர்க்கக் கூடியது அல்ல. தனித்தனி சம்பவங்களை (எல்லையில் ஊடுருவல்) பெரிதுபடுத்தினால், அது இருதரப்பு உறவைப் பாதிக்கும்'' என்று தெரிவித்துள்ளது.

Courtesy : திணமணி



இந்த செய்தி சீன அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதை படித்து பார்க்கும் போது மனதில் தோன்றியது இதுதான்.

இந்த செய்திப்படி சீன ராணுவம் இந்தியாவில் ஊடுருவவில்லை என்று எங்கும் அவர்கள் மறுக்கவில்லை ஆனால் அதைப் பற்றி பேசினால் நமது உறவு பாதிக்கப்படும் என்று சீன அரசாங்கம்  இந்தியாவை மிரட்டுகிறது என்றுதான் தோன்றுகிறது அல்லவா

அது எப்படி எனக்கு புரிகிறது என்றால் ஒரு தொழிலாளி  வேலைக்கு போன பின்பு அவன் முதலாளி அவன் மனைவியை அடிக்கடி  வந்து சந்த்திப்பதாக பக்கத்து வீட்டுகாரகள் ,  அந்த தொழிலாளியிடம் சொல்லும் செய்தியை அறிந்த அந்த முதலாளி, அந்த தொழிலாளியை கூப்பிட்டு உன் பக்கத்து வீட்டுகாரகள் சொல்வதை செவி எடுத்தால்  நம் இருவருக்கும் உள்ள தொழிலாளி முதலாளி உறவு மிகவும் கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுவது போல அல்லவா இருக்கிறது.

அந்த முதலாளியின் எச்சரிக்கையை கேட்டபின் அந்த தொழிலாளி அமைதியாக இருந்தால் அவனது ஆண்மையை சந்தேகிக்க வேண்டியிருக்கிறாதாகவே இருக்கிறது எனக்கு..

அப்ப உங்களுக்கு?


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. சுருக்கமாகச் சொல்லிப்போனாலும்
    நெஞ்சைத் தைப்பதுபோன்றுதான் இருக்கிறது
    ஆனாலும் என்ன செய்ய இருப்பவர்கள்
    அப்படித்தானே இருக்கிறார்கள்

    ReplyDelete
  2. எங்களை அடித்தால் உடனே திருப்பி அடிப்போம் - அமேரிக்கா

    எங்களை அடித்தால் உடனே போர் தொடுப்போம் - பிரிட்டன்

    எங்களை அடித்தால் நாங்கள் உங்களோடு கிரிக்கெட் விளையாடமாட்டோம் - இந்தியா

    எங்கேயோ படிச்சது, உங்க பதிவுக்கும் இது பொருந்தும் இல்லையா ?

    வெட்ககேடு....!

    ReplyDelete
  3. பாகிஸ்தான்,சீனா இலங்கை விஷயங்களில் மெத்தனத்தை கடைபிடித்து வருவது எரிச்சலூட்டக் கூடியது.கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும். இந்திய சந்தை மிகப்பெரியது இந்த பலத்தை பயன்படுத்தி மற்ற நாடுகளை மிரட்டலாம். மென்மையான அணுகுமுறைகள் ஏமாளியாகத்தான் காட்டும்.

    ReplyDelete
  4. இந்தியா இதுவரை எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்ததில்லை என்று பீத்திக்கொள்பவர்களுக்கு செருப்பை அசிங்கத்தில் குழைத்து உச்சந்தலையில் அடித்தமாதிரி ஒரு பதிவு! மிகவும் அருமை நண்பா!

    ReplyDelete
  5. நாக்கை பிடுங்கிக் கொள்வது போல சரியான கேள்வி! ஆண்மையற்ற காங்கிரஸ் ஆளும் வரை நமக்கு ஆப்புதான்!

    ReplyDelete
  6. ஆனால் தமிழனைக் கொல்லவேண்டுமென்றால் மட்டும் காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்தோ வீரம் வந்துவிடுகிறது ....

    ReplyDelete
  7. செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்
    அல்லிடத்துக் காக்கலின் காவாக்கால் என் ?

    அப்படின்னு தான் வள்ளுவன் சொல்லிகீறாரு.

    செல்லா இடத்து இவரு கோவப்பட்டு ஏன்னா ஆவப்போது?

    இன்னா ராஜ தந்திரம் பாருங்கண்ணே !!

    சிலிர்க்குது அண்ணே நம்ம வீரம் !!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.