Friday, July 5, 2013



2025-ல் தமிழகத்தில் இப்படிபட்ட செய்திகளை கேட்கலாம்





ஜெயலலிதாவும் கனிமொழியும் தேர்தலில் சேலை கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவர்கள் இருவரும் டெபாசிட் இழந்து தோல்வியை தழுவினர்
கல்லூரியில் மாணவியை சேலை கட்டச் சொல்லி ராகிங்க் பண்ணியதால் மாணவி அவமானத்தில் தற்கொலை.
பட்டப் பகலில் தமிழக தலைநகரில் பஸ்ஸில் வைத்து ஒரு பெண்ணிற்கு சேலை கட்ட ஐந்து ஆண்கள் முயற்சி அதை கேட்ட நாடே கொதித்து போய்யுள்ளது...இதை கண்டித்து பெண் உரிமை குழுவினர் நாடு முழுவதும் போராட்டம்.
தமிழகத்தில் உள்ள சில கிராமங்களில் இன்னும் சில பெண்கள் சேலை கட்டுகின்றனர். இவர்களுக்கு எதிராக கலாச்சார காவலர்கள் போராட்டம்
மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி விசாரித்ததில் பெண் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சேலைகட்டுவதை அறிந்தவர்கள் இப்படி ஒழுக்கமற்ற முறையில் செயல்படும் பெண் நமக்கு தேவை இல்லை முடிவு செய்தனர்

கல்லூரியில் நடந்த மாறுவேடப் போட்டியில் சேலை கட்டி வந்த பெண்ணிற்கு முதல் பரிசு காரணம் இப்படி சேலைகட்டி வருவதற்கு மிகவும் தைரியம் வேண்டுமென்பதால் அவருக்கு பரிசு கொடுக்கப்பட்டது
சினிமா படத்தில் சேலை கட்டி பெண் வரும் காட்சிகளில் 'இது கலாச்சாரத்திற்கு தீங்கானது' என்று கண்டிப்பாக போட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது
சேலைகட்டி பெண்கள் இருப்பது போல படங்கள் உள்ள பத்திரிக்கைகள் ஆபாச பத்திரிக்கை என்றும் இதை பார்க்க வயது 21 ற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்






தமிழகத்தின் இளம் பெண்கள் சேலைகட்டும் கலாச்சாரத்தில் இருந்து ஜீன்ஸ் கலாச்சாரத்திற்கு அதி வேகமாக மாறி வருகின்றனர் என்ற செய்தியை அறிந்தததன் விளைவே இந்த பதிவு.....

இது படித்து சிரிக்க மட்டுமே.....

மீண்டும் உங்களை அடுத்த பதிவில் சாக அடிக்க வருகிறேன்...... அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது


உங்கள் அன்பிற்குரிய
மதுரைத்தமிழன்

டிஸ்கி: அட யாருப்பா இதெல்லாம் ஒரு பதிவா என்று என்னை அடிக்க கல்லைத் தூக்குவது...இப்படி எல்லாம் நீங்கள் எனக்கு எதிராக செயல்படுவீர்கள் என்பதால்தான் உங்கள் கண்ணில் தென்படாமல் வீரப்பன் போல மறைந்து வாழ்கிறேன்

2 comments:

  1. ரசிக்கும்படியான சுவாரஸ்யமான ஆரூடம்
    படித்துக் களித்தோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா இப்படி எல்லாம் விரைவில் கண்டிப்பாக நடந்து விடும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.