Sunday, July 7, 2013



கலைஞரின் ஆட்டமும் விஜயகாந்தின் ஓட்டமும்

பிரபாகரினின் மகன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானதால் தமிழகத்தில் எழுந்த கண்டங்களும் அதை தொடர்ந்து இலங்கை பிரச்சனைக்கான ஆதரவு தீயை போல மீண்டும் பெருக ஆரம்பித்ததும் தானும் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் இல்லையென்றால் நமக்கு மதிப்பில்லை என்ற எண்ணத்தால் துண்டை உதறி தோளில் போட்டு வீராப்பாக வெளியே வந்த கலைஞர். அதே கலைஞர் தன் மகள் வெற்றி பெற பலரும் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர் நம்பியவர்கள் அவரை காலை வாரி விட்டதால் வேறு வழியில்லாமல் தோளில் போட்ட துண்டை தலையில் போட்டு விட்டு வந்தவர்களிடமே ஆதரவு கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது... எந்த தகப்பனும் தன் பெண் குழந்தைக்காக தன்மானத்தையும் இழக்கவே தயாராக இருப்பான் அதற்கு கலைஞரும் விதிவிலக்கு இல்லை என்பதை நிருபித்தார்..இதனால் அவருடைய தலைமையை பலர் கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்( இந்த விஷயத்தில் யாரு என்ன சொன்னாலும் நான் அவரைப்பராட்டுகிறேன் )

இதற்காக அவர் வரும் தேர்தலில் கூட்டணி வைத்து கொள்ளலாம் என்று  வாக்குறுதிகள் கொடுக்காமல் மிக புத்திசாலிதனமாக ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார் அந்த விளையாட்டின்படி ஆதரவுக்காக காங்கிரஸிடம்  திமுக தலைகள் பேசிய பேரத்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கூட்டணி பற்றி பேச்சு கிடையாதாம். மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு தருகிறோம், தேர்தல் அறிவிக்கப்படும் வரை, ஆளும் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என்கிற உறுதி மட்டும்தான் தரப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் தனக்கு ஆட்டம் காட்டியவர்களுக்கு கலைஞர் ஆட்டம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.

இவர் இப்படியென்றால் இதுவரை ஆட்டம் போட்ட விஜயகாந்தின் நிலமை மிகவும் ஆட்டம் காணத் தொடங்கி இருக்கிறது. தன்னிடம் வேட்பாளரை நிறுத்தச் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் காலை வாரிவிட்ட காங்கிரஸ்சை இனி எப்படி நம்புவது என மிகவும் குழப்பத்தில்  இருக்கிறாரார் இப்படி இருப்பவரிடம் . அவரைச் சுற்றியுள்ளவர்கள் பாரதிய ஜனதா நரேந்திர மோடியை முன்னிறுத்துமேயானால் மூன்றாவது அணி அமைத்து விடலாமே என்றுஆலோசனை கூறுகிறார்களாம்.


கடந்த கால அரசியல் வரலாற்றில்  திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பாஜக தீண்டத்தகாததாக இல்லாதபோது நாம் மட்டும் ஏன் கவலைப்பட வேண்டும் என்பது அவரைச் சுற்றி உள்ளவர்களின்  வாதம். அதிமுக உறவு இல்லை என்பது நிச்சயமாகிவிட்டது. திமுகவுடன் சேர்ந்தால் தனக்கு கிடைக்கும்  எம்ஜிஆர் அனுதாபிகளின் வாக்கு கிடைக்காது. இந்த நிலையில் பாஜாகாவை நோக்கி ஒடலாமா அல்லது கட்சியும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம் என்று ஒடிவிடலாமா என்று நினைத்து பாட்டில் பாட்டிலாக தண்ணி கு()டித்து கொண்டு இருக்கிறார்.

ஒருவேளை இவர் கட்சி தேர்தலில் நின்று எங்காவது ஒரு இடத்தில் ஜெயித்து வந்தாலும் அப்படி ஜெயித்து வருபவரை ஜெயலலிதா பாணியில் அந்த உறுப்பினரை விலைக்கு வாங்கிவிடலாம் என்று அதிமுகாவும் திமுகாவும் காத்து கொண்டிருக்கின்றன..


நமது இந்திய அரசியல் என்பது வானிநிலை அறிக்கை போன்றது நாம் ஒன்று சொல்ல அதற்கு மாற்றாகவும் நடக்க வாய்ப்பு உண்டு அதுவரை நாம் பொருத்து இருந்து பார்ப்போம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

***********************************************************************************************

 
 
 
 
 
 
 




3 comments:

  1. நாம் ஒன்று நினைக்க அவர்கள் வேறு கணக்கு போடுவார்கள்..மக்கள் தீர்ப்பு வேறொன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. என்ன அரங்கேறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  3. ஆட்டம் ஆரம்பமாயிடுச்சோ?!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.