உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 12, 2013

தமிழக மந்திரி சபையும் உளவுத்துறையும் ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்படுகிறதா?


தமிழக மந்திரி சபையும் உளவுத்துறையும் ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்படுகிறதா?


ஜெயலலிதா அவர்களின் செயல் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது  அதனால்தான் என்னவோ  தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல்  அடுத்த கட்சிகளை உடைக்க முயற்சிக்கிறார்...

அதில் ஒன்றுதான் வருகின்ற ராஜ்யசபா சீட்டுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.அறிவித்த மறுநாளில் வேட்பாளரில் சிலரை மாற்றியது. எந்த ஒரு புத்திசாலியும் ஒரு பொறுப்பான பதவிக்கு ஆளை செலக்ட் செய்யும் போது செய்வது  இரண்டு செயல்களை ஒன்று தனக்கு வேண்டியவரை நம்பிக்கைக்கு பாத்திரமானவரை செலக்ட் செய்வது அல்லது அந்த பதவிக்கு வேண்டியவனை வெளியிடத்தில் இருந்து ஆராய்ந்து அதன் பின் அவனை நியமிப்பதால் அவன் அந்த காரியத்தை பொறுப்பாக செய்து நமக்கு நல்ல பெயரை பெற்றுத் தருவானா என் ஆராய்ந்து இறுதியில் ஆளை செலக்ட் செய்வது. ஆனால் தன்னை மிகவும் அதிபுத்தி சாலியாக கருதும் அம்மையார் அப்படி செய்ய தவறிவிட்டார் ராஜ்ய சபா சீட்டுக்கு ஆளை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அதனால் தான் முதல் அறிவித்த பெயரில் மறுபடியும் மாற்றம் செய்து வெளியிட்டு இருக்கிறார். புத்திசாலி ஒரு முடிவு எடுக்கும் போது தெளிவாக ஆராய்ந்து முடிவு எடுப்பார் அப்படி முடிவு எடுத்த பின் அதில் உறுதியாக இருப்பார், ஆனால் ஜெயலலிதாவின் பல முடிவுகளை பார்க்கும் போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சிறுபிள்ளைத்தனமான முடிவாக இருக்கிறது.


முதலைமைச்சருக்கு எல்லாம் தெரிந்து இருக்க முடியாது அதனால் ராஜ்யசபா தேர்தல் நாள் அறிவித்த போது தனக்கு உதவுவதற்காக இருக்கும் மந்திரி சபையை கூட்டி அவர்களிடம் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் அவர்களை தேர்ந்தெடுப்பதால் கட்சிக்கும் பொதுமக்களுக்கு என்ன நலம் பயக்கும் என  அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து அதன் பிறகு அவர்கள் சிபாரிசு செய்யும் நபர்களைப் பற்றி  முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் உளவுத்துறையிடம் கொடுத்து அவர்களின் பின்புற நடவடிக்கைகளை ஆராய்ந்து அதன் பின் வேட்பாளரை செலக்ட் செய்து அறிவிக்க வேண்டும் அப்படி செய்து இருக்கிறாரா ஜெயலலிதா என்று பார்த்தால் இல்லை என்று மட்டும் தெரிகிறது ஒரு வேளை அப்படி செய்து இருந்தால் இப்படி மாற்றங்களை மீன்டும் அறிவிக்க வேண்டிய நிலை இருந்திருக்காது அல்லவா? இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஒரு வேளை அவர் அப்படி செய்து இருந்தால் அதில் தவறு நிகழ காரணமாக இருப்பவர்கள் அமைச்சர்களும் உளவுத்துறையும் தான். இன்னும் சற்று கூர்ந்து பார்த்தால் அமைச்சர்களும் உளவுத்துறையும் முதல்வருக்கு எதிராக செயல்பட்டு தவறான தகவல்களை அவருக்கு தந்து இருக்கலாம் அல்லவா?


ஜெயலலிதா அவர்கள் ராஜ்யசபாவுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து போது அதில் இருந்தவர் சரவணப் பெருமாள். 2 நாட்களுக்கு அப்புறம் அவருக்கு பதில் வேறு ஒருவர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த இரண்டு நாட்களில் நடந்ததுதான் என்ன? தமிழக் அமைச்சர்களும் உளவுத்துறையும் ஜெயலலிதாவிடம் இந்த பெருமாள் சொல்லாமல் மறைத்த செய்திகளை இணையதளங்கள் பல் வெளியிட்டதுதான் காரணம். அந்த செய்திகள்தான் ஜெயலலிதா அவர்களை சிறுபிள்ளைதனமாக அந்தர் பல்டி அடிக்க வைத்தது

இப்போது இணையதளங்கள் அறிவிக்கப்பட்ட ராஜ்யசபா வேட்பாளர்கள் பின்னனியை குடைந்தெடுத்து செய்திகளை வெளியிடுகிறார்கள் அதன் படி முதலில் சிக்கியது சரவண பெருமாள் என்ற வேட்பாளரின் கதை. இன்று சவுக்கு என்ற இணையதளத்தில் (http://www.savukku.net/)  ( தலைச்சிறந்த எம்.பி  என்ற இந்த செய்தி வந்துள்ளதுஇவர் பின்னணி இவ்வளவு சீக்கிரம் தோண்டப்பட்டது மிக அதிசயம். கஸ்டம்ஸ் போட்ட வழக்கின் முழு அறிக்கை ஒரே நாளில் வந்தது மிக ஆச்சர்யம். அவர் கடத்தல் தொழில் செய்து சிறை சென்றவர். ரவுடிப்பட்டியலில் இருந்தவர். திமுக, மதிமுக என்று வலம் வந்தவர். 54 வயதில் மாணவரணி தலைவர். இது தவிர முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கணக்கில் ஒரு சில புகார்களும் உண்டாம். இவர் தற்போது மிக மூத்தத அமைச்சரின் மகனுக்கு கணிச தொகை கொடுத்து ராஜ்ய சபா சீட் வாங்கியுள்ளார். இந்த அமைச்சரின் மகன்தான் அதிமுகவின் முக்கிய அதிகார மையம். காரியம் நடக்க இவரை அணுகினால் போதும்.

இந்த மாதிரி பல இணையதளங்கள் வெளியிட்ட செய்திகளினால்தான் இந்த சிறுபிள்ளைத்தனமான மாற்றம் என்றால் அதிசய்படுவத்ற்கு ஒன்றுமில்லை

இதை படிக்கும் மக்களே ஒன்று சொல்லுங்கள்  ஜெயலலிதா அவர்கள் சிறுபிள்ளைதனமாக செயல்படுகிறாரா அல்லது தமிழக மந்திரி சபையும் உளவுத்துறையும் ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்படுகிறதா?

இவர்களை வைத்துதான் ஜெயலலிதா பிரதமர் ஆகப்போகிறார் என்று நினைத்தால் நகைப்பாக உள்ளது. காரணம் இப்படி இவர் நடந்தால் திவிரவாதிகளை முதலில் மந்திரியாக நியமிக்கும் நிலைமையும் ஏற்படும்தானே


ஏதோ என் மனதில் பட்டதை இங்கே கொட்டியுள்ளேன். முடிந்தால் உங்கள் மனதில் உள்ளதையும் இங்கே கொட்டிச் செல்லவும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments :

  1. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.... :(

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog