நாடாளுமன்ற தேர்தலுக்கு நிறைய நாட்கள் இருந்தாலும் ஜெயலலிதா அவர்கள் யாருடனும் கூட்டணி கிடையாது தமது கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் அதிரடியாக அறிவித்தார் அதை அவர் அறிவிக்கும் முன் அவரும் அவருக்கு நெருங்கிய பத்திரிக்கை துறை நண்பருடன் கலந்து ஆலோசித்துதான் அப்படி அவர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இப்படி முன் கூட்டியே ப்ளான் செய்யும் சாணக்கியாரனா கலைஞருக்கு வயதாகிவிட்டதாலும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளிலும் தினசரி தலையிட்டு வருவதாலும் நேரம் இல்லாமல் போவதாலும் அவரால் முன் கூட்டியே ப்ளான் போடமுடியவில்லை. ஆனால் இந்த தடவை ரேஸில் ஜெயலலிதா அவர்கள் சற்று முன்னாலே வந்து ப்ளான் போட்டு அதற்கேற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறார்.. எவ்வளவுக்கு எவ்வளவு சீட்டுகளை நாடாளுமன்ற தேர்தலில் கைப்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு மத்திய அரசில் செல்வாக்கு பெற முடியும் இன்னும் சொல்லக் கூடப் போனால் பிரதமர் ஆககூட வாய்ப்புகள் வரக் கூடும் என்று நன்கு புரிந்துள்ளார்.
ஜெயலலிதாவும் அவர் பத்திரிக்கை நண்பரும் போட்ட பிளான் இப்படித்தான் இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்
ஜெயலலிதாவின் நண்பராக திரு. மோடி அவர்கள் இருந்தாலும் அவருக்கு அவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்லுக்கு முன்பு ஆதரவு தர விரும்பவில்லை. அவருக்கு ஜெயலலிதா அவர்கள் ஆதரவு தருவது தெரிந்தால் ஒட்டில் ஒரு பங்கு குறைய வாய்ப்பு உண்டு அது சில இடங்களில் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என நினைக்கிறார். அதே சமயத்தில் பிஜேபி கூட கூட்டணி வைக்காததர்க்கு காரணம் தமிழ் நாட்டில் அவர்களுக்கு கொஞ்சம் கூட ஒட்டு வங்கி இல்லை. மேலும் அவர்கள் கூட சேர்ந்தால் மத சார்பற்ற மக்களின் மற்றும் மாற்று மதத்தினரின் ஒட்டும் கிடைக்காமல் போய்விடும். இந்த ஒட்டுக்கள் பிஜேபியின் ஒட்டு வங்கியை விட அதிகம் ஒட்டுக்களை கொண்டது. அதுமட்டுமல்லாமல் பிஜேபி தனித்து போட்டி இடும் போது சில தொகுதிகளில் மட்டும் போட்டி இடும். ஆனால் மற்ற தொகுதிகளில் இருக்கும் பிஜேபி வோட்டுக்கள் ஆட்டோமெட்டிக்காக மதப் பாசத்தால் ஜெயலலிதாவிற்கு கிடைத்துவிடும் அதனால் அவருக்கு மற்றவர்களை விட வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை அறியலாம்
காங்கிரஸ் இப்போது மத்தியில் ஆட்சி செய்வதால் மக்கள் எப்போதும் ஆளுங்கட்சிக்கு எதிராகவே ஒட்டு அளிப்பார்கள் அதிலும் எண்ணற்ற ஊழல்கள் நடந்து இருப்பதால் அவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை அதனால் பிஜேபிக்கு வாய்ப்புகள் இருந்தாலும் அவர்களிடையே உட்கட்சி ஒற்றுமை இல்லாததாலும் மோடியை பிரதமர் பதவிக்கு போகஸ் செய்வதால் மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காமல் போக வாய்ப்புகள் உண்டு மோடியை தவிர வேறு யாரையும் பிரதமர் பதவிக்கு போகஸ் செய்தால் ஒரு வேளை கூட்டணி கட்சிகள் பிஜேபிக்கு ஆதரவு தந்து பிஜேபி ஆட்சி மலரச் செய்யும் ஆனால் இப்போதைக்கு மோடி அவர்கள்தான் பிரதமர் வேட்பாளராக இருக்கிறார்.மோடி இருந்தால் பிஜேபிக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று சொல்லும் போது மோடி பிரதமர் போட்டியில் இருந்து விலகும் போது தன்னால் பிரதமர் ஆக முடியவில்லை அதனால் தம் கட்சியில் உள்ள யாரும் பிரதமர் ஆகிவிடக் கூடாது என்று நினைக்கும் பட்சத்தில் அங்கு அவர் ஆதரவு தரவிரும்பும் ஒரே தலைவர் ஜெயலலிதாவாக இருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை
ஒரு வேளை எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் மற்ற கட்சிகளை விட கொஞ்சம் அதிக சீட்டுகளை பெறும் போது மற்ற கட்சிகள் ஆட்டோமெடிக்காக காங்கிரஸை ஆதரிக்கும் அப்போது மிக அதிகம் பெற்ற அதிமுகவும் தனது ஆதரவை தந்து மிக முக்கியமான இடத்தை பெறும்
திமுக கட்சி தன் சுயமரியாதை இழந்து காங்கிரஸ் கட்சியுடன் இருந்து வந்ததால் அதற்கு சற்று இறங்கு முகமே அது ஜெயலலிதா அவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அதுமட்டுமல்ல பாமகா மற்றும் தேமுதிக கட்சிகள் அதிமுகவிடன் சேர வாய்ப்பில்லை அதே சம்யத்தில் திமுக கூட்டணியுடன் சேரவும் வாய்ப்பு இல்லாமல் ஜெயலலிதா இந்த ராஜ்ய சபா தேர்தலில் குழப்பும் உண்டாக்கி அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாதபடி செய்துவிட்டதால் பாமகா மற்றும் தேமுதிக கட்சிகளின் வாக்கு வங்கிகள் செல்லாத வோட்டு வங்கியாக மாறிவிட்டது இதனால் திமுக கூட்டணிக்குதான் அதிகம் பாதிப்பு
அன்புடன்
மதுரைத்தமிழன்
அரசியல் விவகாரத்துல நான் அவ்வளவு ப்ரைட் கிடையாதுய்யா... அதனால... நோ கமெண்ட்ஸ்!
ReplyDeleteமிகச் சரியான விளக்கம்
ReplyDeleteஅருமையான அரசியல் அலசல்
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteதிமுக'வுக்கு பாதாளம் அளவுக்கு இறங்குமுகம் இருக்கிறது, அது இலங்கை தமிழர்களின் மரணங்களும் அதற்காக திமுக'வின் நாடக அரங்கேற்றங்கள் எல்லாம் எப்போதும் மக்கள் மனதில் இருந்து மாறவே மாறாது.
ReplyDeleteஅருமையான , தேவையான அலசல்
ReplyDeleteமாற்று சக்தி வந்தால் தேவலாம்
ReplyDeleteபொதுவாவே எனக்கு அறிவு கம்மி.., இதுல அரசியல் அறிவு..., ம்ம் நோ கமெண்ட்ஸ்
ReplyDeleteகணக்கு சரி! ஆனால் இன்னும் காலமிருக்கே!!!!!?
ReplyDelete