Friday, June 28, 2013



அமெரிக்காவில் வாழ்வதால் உயிர் பிழைத்திருக்கும் இந்திய குழந்தை


கடந்த வாரம் நடந்த உண்மை நிகழ்ச்சி. எனது நண்பருக்கு மிக நெருங்கிய நண்பர் வீட்டில் நடந்தது. அந்த நண்பரின் மனைவி அடுப்பில் தண்ணிரை கொதிக்க வைத்திருக்கிறார். அது எப்படியோ தவறி அவரின் 5 வயது குழந்தையின் இடுப்பிற்கு கீழ்  கொட்டி உடம்பே வெந்துவிட்டது. அவர் உடனே 911 யை கூப்பிட்டு நிலைமையை தெரிவித்தார்கள் உடனே பல ஆம்புலன்ஸும் போலிஸ்கார்களும் அவர் வீட்டை நோக்கி பறக்கத் தொடங்கினர்..( இங்கே 911 தொடர்பு கொண்டால் அருகில் உள்ள உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார்கள் பல திசையில் இருந்தாலும் குறைந்தது  2 ஆம்புலன்ஸ் 3 போலிஸ் கார்களும் வந்துவிடும்)

வீட்டை அடைந்த ஆம்புலன்ஸில் உள்ளவர்கள் நிலமையின் தீவிரத்தை உணர்ந்தவர்கள் அந்த குழந்தைக்கை சிசிச்சை அளிக்க நூவார்க்(Newark) உள்ள குழந்தை ஹாஸ்பிடல்தான் சிறந்தது என முடிவு செய்தனர். விபத்து நடந்த வீட்டில் இருந்து அந்த ஹாஸ்பிடலுக்கு செல்ல டிராபிக் இல்லாவிட்டால் குறைந்தது 45 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிடும் என்பதால் உடனே எம்ஜெர்ன்ஸி ஹெலிஹாப்டருக்கு போன் செய்து அதை வீட்டிற்கு மிக அருகில் உள்ள ஸ்கூல் கிரவுண்டில் இறக்க செய்து அந்த குழந்தையை அழைத்து சென்றனர். அந்த ஹெலிஹாப்டர் வருவதற்குள் இவர்கள் அந்த குழந்தையை ஆம்புலன்ஸில் எடுத்து அந்த ஸ்கூல் கிரவுண்டிற்கு எடுத்து சென்றார்கள் இதெல்லாம் கண்மூடி கண் திறப்பதற்குள் நடந்தது. இறுதியாக அந்த நண்பரின் குழந்தைக்கு சர்ஜரி செய்து அந்த குழந்தை பிழைத்தது.
 
இப்படி ஒரு விபத்து இந்தியாவில் நடந்து இருந்தால் என்ன நிகழ்ந்து இருக்கும் என்று உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியது இல்லையே....

இப்போது புரிகிறதா அமெரிக்கா வந்த இந்தியர்கள் இந்தியாவை அளவிற்கு மேல் நேசித்தாலும் ஏன் இங்கேயே தங்கிவிடுகிறார்கள் என்று...

சென்னையில் இருக்கும் முதலமைச்சர் மீட்டிங்கிற்காக வெளி நகரங்களுக்கு செல்லும் போது விபத்து ஏற்பட்டால் கூட இந்த மாதிரி உதவி கிடைத்திருக்குமா என்பது ஒரு கேள்விகுறியே!!!!

தமிழகத்தில் ஒரு போலீஸ் ஆபிஸருக்கு நேர்ந்த கதி( மறந்தவர்களுக்காக )


அன்புடன்
மதுரைத்தமிழன்
(அமெரிக்காவில் இருந்து)

2 comments:

  1. இந்தப் பொறம்போக்கு அரசியல்வாதிகள் போகறதுக்காக எத்தனை எத்தனையோ அவசரங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களை அரை மணி நேரம், ஒரு மணி நேரம் காக்க வைத்து வெறுப்பேற்றுகிறார்கள் இங்கே. அந்தக் குழந்தையை இங்குள்ள ட்ராஃபிக்கில் கொண்ட சென்றால் என்னவாகியிருக்கும்ன்னு நினைச்சுப் பாக்கவே முடியல. இவ்வளவு துரிதமா முடிவெடுக்கற பொறுப்பும், அக்கறையும் கூட நம்மவர்களிடம் கம்மிதான். ஏன் அமெரிக்காவுலயே இந்தியர்கள் தங்கிடறாங்கன்னு எனக்கு இப்ப தெள்ளத் தெளிவாப் புரிஞ்சிட்டுது நண்பா!

    ReplyDelete
  2. ஆம், நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மையே. சென்னையில் எந்த நேரத்திலும் சாலைகள் நெரிசலாகவே இருப்பதால், ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட குறித்த நேரத்தில் நகர முடியாமல் முடங்கிவிடுவதை அன்றாடம் பார்க்க முடிகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பவிலும் கனடா, ஆஸ்திரேலியாவிலும் இம்மாதிரி எமர்ஜென்ஸி சிகிச்சைகள் தாமதமின்றி கிடைப்பதால் உயிர்கள் எளிதாக காப்பாற்றப்படுகின்றன. எனவே இங்கு பிழைக்க வருபவர்கள் இங்கிருந்து வெளியேற நினைப்பதேயில்ல்லை என்பது நிஜமே.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.