Friday, June 7, 2013



கலைஞர் பெற்று எடுத்து வளர்த்த பிள்ளைகளில் இருவர் பிணியாளர்கள் சொல்வது கழக உடன்பிறப்பு

இன்று  பதிவுகளை படிக்கும் போது ஒரு பதிவில் ஒரு கழக உடன்பிறப்பு   இப்படி சொல்லி இருக்கிறார்.
///அழகிரி, கனிமொழி என "பிணி"களை வளர்ப்பதும் பழனிமாணிக்கம் என எல்லோருக்கும் தெரியும். பிணியை களை எடுக்கும் முயற்சி அடுத்து.///

இதனை பார்த்தது என் மனதில் தோன்றிய சில கருத்துக்கள்தான் இந்த பதிவு

இந்த பதிவாளர் ஸ்டாலினை கண்முடித்தனமாக ஆதரிக்கும் திமுகவின் ஒரு உடன் பிறப்பு என நினைக்கிறேன். அவர் ஸ்டாலினை கண்மூடித்தனமாக ஆதரிக்கட்டும் அதில் தப்பே இல்லை ஆனால் அவர் அழகிரி, கனிமொழி  இருவரையும்  "பிணி" என அழைப்பது எந்த விதத்தில் சரியாகும். இவர்கள் இருவரையும் இப்படி இழிவாக பேசுவது அவர்களை பெற்று எடுத்த கலைஞரையும் இழிவாக பேசுவது போலத்தானே அதை இந்த உடன் பிறப்பு மறந்துவிட்டாரா என்ன?


திமுக கலைஞரின் குடும்ப சொத்தாக போய்விட்டதால் ஸ்டாலினுக்கு என்ன பங்கு தருகிறீர்களோ அதே பங்களிப்பு எங்களுக்கும் வேண்டும் என்று கனிமொழி அழகிரி அவரின் தந்தையாரிடம்தான் போராடிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்க முடியும். தன் தந்தையிம் சொத்தில் பங்கு கேட்பது அவர்களின் உரிமைதானே......

அதை தவிர கனிமொழி அழகிரி அப்படி என்ன திமுகாவிற்கு கெடுதல் செய்துவிட்டனர்? சில பேர் சொல்லாம் கனிமொழி என்று சொல்லும் போது 2ஜியை குறிப்பிடலாம் இந்த 2 ஜி பிரச்சனையில் கனிமொழி ஒரு பகடைகாயாகதான் ஆக்கி இருக்கிறார்கள் அவர்கள் குடும்பத்தினர் எனலாம். அதற்காக அவர் தன் குழந்தையை குடும்பத்தை பிரிந்து அனுபவித்த சிறைவாசம் ஸ்டாலின் அனுபவித்த சிறைவாசத்தை விட மிகவும் அதிகமே அதுவும் ஒரு பெண் வேறு மாநில சிறையில் அடைபட்டு இருப்பது மிகவும் எளிதான காரியம் அல்ல அடுத்தாக அழகிரி மேல் சொல்லப்படும் குற்றச் சாட்டு அவர் மத்திய மந்திரியாக இருந்து ஒன்றும் செய்யவில்லை என்பது அவர் மாநில அரசியலில் சடுகுடு விளையாடுபவர் அவரை மத்திய அரசியலுக்கு தள்ளி விட்டது யார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏன் இந்த ஸ்டாலின் அவர்களை ஒரு வருடம் மத்திய அமைச்சாராக்கி பார்த்தோமானால் தெரியும் அவரின் வண்டவாளம். தனக்கு வந்தால்தான் தலைவலியின் அருமை புரியும்.


 கிண்டல் செய்வது எளிது அழகிரிக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று கிண்டல் செய்பவர்கள் ஸ்டாலின் எந்த அளவு ஆங்கிலம் பேசுவார் என்பதையும் கொஞ்சம் வீடியோ எடுத்து போடுங்களேன். ஸ்டாலின் நா சபைக்கு வந்து டெசோ தீர்மானங்களை கொடுத்த போது நா அதிகாரிகளிடம் என்ன பேசினார் யார் பேசினார் என்று கொஞ்சம் விளக்கமாகவே சொல்லுங்களேன். சரி அதை கொடுத்ததுதான் கொடுத்தார் அதன் பின் அதன் விளைவாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இன்று வரை நா அதிகாரிகளிடம் ஒரு போன் அடித்து கேட்டு இருப்பாரா என்று சொல்லுங்களேன்

கனிமொழி அழகிரியை பிணி என்று சொல்லுபவர்கள் MK கனிமொழி  MK அழகிரி MK ஸ்டாலின் என்று கூகுலில் ஸர்ச் செய்து பாருங்கள் அதில்  வரும் ரிசல்டை பார்த்தால் யாரு செய்தது பிணி(Sick) என்று புரியும்..





அதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம் அதற்காகவே இங்கு அதை ஸ்கிரின் ஷாட் எடுத்து போட்டு இருக்கிறேன். இப்போது சொல்லுங்கள்.

இறுதியாக தான் மட்டும் பேரும் புகழுடன் இருக்கனும் என்று  உடன் பிறந்த சகோதர சகோதரிகளை அணைத்து செல்லாத எண்ணம் கொண்ட ஒருவர் பிணியாளர் இல்லை கூறுவது நாலும் தெரிந்தவர்களை சிரிக்கவே வைக்கிறது.

அன்புடன்
மதுரைத்தமிழன்







07 Jun 2013

4 comments:

  1. கூகிள் ஸர்ச் காட்டிய விவரங்கள் செம! உங்கள் எழுத்தில் வரிக்கு வரி உண்மை! என் பலத்த ஆமோதிப்பு!

    ReplyDelete
    Replies


    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!! நான் ஸ்டாலின் பற்றி பல விபரங்களை கூகுலில் திரட்டும் போது எப்போதும் இது மாதிரிதான் வருகிறது. இதற்கு மேல என்ன சொல்லரதுன்னு தெரியலைங்க

      Delete

  2. டாஷ் போர்டில் வரும் உங்களது சில பதிவுகளைச் சொடுக்கினால் ஏதும் வரமாட்டேங்குது. ஒரு வேளை அவை யாராலோ சென்சார் செய்யப்படுகிறதோ.?

    ReplyDelete
  3. ஸ்கீர் ஷாட்.... :))

    இதையெல்லாம் நியாகப்படுத்தக் கூடாது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.