வேட்டிகட்டும் மதுரக்காரய்ங்களா நீங்க?
நான் சின்ன புள்ளையாக இருக்கும் போது மதுரையில் இருக்கும் எஸ்.எஸ்.காலனியில் உள்ள கம்பர் தெருவில் வசித்து வந்தோம். அப்போது நாங்க டவுனுக்கு( அப்போது மதுரை பெரியார் பஸ் ஸ்டானில் இருந்து மீனாட்சி அம்மன் கோயில் வரை உள்ள பகுதியத்தான் டவுன் என்று அழைப்பாரகள் ) போவது என்றால் அரசரடி மைதானத்திற்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில்தான் வந்து பஸ் ஏறுவோம்.
பஸ் நம்பர் 7 or 7A என நினைக்கிறேன் அது அண்ணா நகர் பஸ்ஸாண்டில் இருந்து கிளம்பி சிம்மகல் ஆரப்பாளையும் அரசரடி மகப்பாளையம் வழியாக பெரியார் பஸ் நிலையம் செல்லும். அப்போது எல்லாம் பஸ்ஸில் கூட்டம் இருக்கும் ஆனால் இப்போது மாதிரி அல்ல. அப்படி ஒரு நாள் குடும்பத்துடன் செல்லும் போதுதான் இந்த நிகழ்ச்சி நடந்தது,
பஸ் மகப்பூபாளையம் ஸ்டாப்பை தாண்டி கவர்மெண்ட் கேர்ல்ஸ் ஸ்டாப்பை அடையும் முன் ஒருவர் டிரைவரை நோக்கி டிரைவர் அய்யா பஸ்சை கொஞ்சம் நிறுத்தங்கய்யா எவனோ ஒருவன் நான் கட்டின வேட்டியை அவுத்துட்டு போறான்னய்யா என்று கத்தினார்.
பஸ்ஸில் உள்ளவர்களுக்கு ஆச்சியமாகவும்` அதே சமயத்தில் சிரிப்பாகவும் இருந்தது காரணம் பஸ்ஸில் பர்ஸை அல்லது ஜெயினை திருடுவார்கள் என்றுதான் எல்லோரும் கேள்வி பட்டு இருப்போம் ஆனால் உடுத்தின வேட்டியை யாரவது லவட்டிகிட்டு பொவான என்று ஆச்சரியப் பட்டுப் போனோம்.
பஸ் டிரைவரும் பஸ்ஸை நிறுத்தி பார்த்த போதுதான் நடந்தது என்ன வென்று தெரிந்தது. அதை அறிந்ததும் சிரிக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். அப்படி என்ன நடந்தது என்று அறிய ஆர்வமா உங்களுக்கு?
ஐப்படி ஒன்னும் பெரிசா நடக்கலங்க....வேட்டியை பறி கொடுத்த ஆள் வேட்டியை தரையை தொடும் அளவிற்கு தழைய தழைய கட்டி இருந்திருக்கிறார். அவருக்கு முன்னால் இருந்தவரும் அப்படி தான் கட்டி இருந்திருக்கிறார் போல அவர் இறங்கும் பஸ் ஸ்டாப் வருவதற்கு முன் அந்த ஆள் வேட்டியை மடித்து கட்டி இருந்திருக்கிறார். அப்படி கட்டும் போது அவர் பின்னால் இருந்தவரின் வேட்டியின் நுனி அவர் மடித்து இறுக்கி கட்டும் போது அதில் மாட்டி இருக்கிறது. அந்த நபர் முன்படிக்கட்டு வழியாக இயறங்குவதற்காக நகர்ந்து செல்லும் போது அவருடன் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறது. இது அந்த பஸ்சை நிறுத்தி பார்த்த போதுதான் எல்லோருக்கும் புரிந்தது.
இதுதானுங்க நடந்த விஷயம்......அதனால மக்களே பஸ்ஸுக்குள் வேட்டியை மடித்துகட்டும் போது ஜாகிரதையாக இருங்க அவரிடம் மாட்டியது வேட்டி உங்க மோசமான நேரம் எந்தவொரு பெண்ணின் சேலை முந்தானை இப்படி மாட்டிக் கொண்டால் பெரிய விபரீதமே நடக்கும்....தர்ம அடி மன்னர்கள் அதிகம் இருக்கும் ஊர் மதுரைய்ங்க..ஜாக்கிரதை ஜாக்கிரதை..
அன்புடன்
மதுரைத்தமிழன்.
படிக்காதவர்கள் படிக்க...
ஆமாம் ஆமாம்
ReplyDeleteமதுரை வேட்டி வாலாஸ்
கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான்
இருக்கனும்,
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வேட்டிவாலஸ் மட்டுமல்ல சேலை கட்டும் பெண்களும் முந்தானையை பஸ்ஸில் தொங்கவிட்டு சென்றால் இப்படி நடக்க வாய்ப்புண்டு. அதனால் முந்தானையை அவ்ர்கள் இடுப்பில் சொருகி கொள்ள வேண்டும்
Deleteநல்ல நகைச்சுவை தான், சொல்லி'டீங்களல்லே ! சீக்கிரம் சினிமாவில் இந்த சீன் வந்திடும் .. :)
ReplyDeleteவந்தாலும் வரும்
Delete