உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, August 2, 2012

மதுரைக்காரய்ங்க...வாராய்ங்கடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
மதுரைக்காரய்ங்க...வாராய்ங்கடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

மதுரைக்காரானால் சென்னை பர்மா பஜார் ஆட்டம் கண்டது

ஒரு மதுரைக்காரன் சென்னையை சுற்றிபார்க்க வந்தான். அப்போது அவன் பர்மா பஜாரில் ஷாப்பிங்க் செய்ய போனான். அப்போது அவன் கூட சென்ற நண்பனுக்கு போன் வந்தது. அதன் பிறகு அவனுக்கு அவசரமாக வேறு வேலைவந்ததால் நீ ஷாப்பிங்க் பண்ணிவிட்டு வீட்டுக்கு ஒரு ஆட்டோ பித்து வந்து விடு என்று சொல்லி மேலும் இங்கு ஷாப்பிங் பண்ணும் போது எல்லாம் டபுள் மடங்காக விலை சொல்லுவார்கள் அதன் அவர்கள் சொல்லும் விலையில் பாதியாக குறைத்து கேட்டு வாங்கு என்று சொல்லி விட்டு அந்த நண்பண் போய்விட்டான்.

அந்த மதுரைக்காரன் ஒரு கடைக்கு போய் அங்கிருந்த ஒரு செல் போனை பார்த்து அதன் விலையை கேட்டான். அதற்கு கடைக்காரன் ரூ 10,000 என்று சொன்னார். உடனே அந்த மதுரைக்காரன் ரூ5000 க்கு வருமா என்று கேட்டான். அதற்கு கடைக்காரன் சரி ரூ 7000 தாருங்கள் என்று சொன்னார். உடனே அந்த மதுரைக்காரன் அதில் பாதியாக குறைத்து  3500 க்கு வருமா என்று கேட்டான். கடைக்காரார் இறுதியாக 5000 ரூ என்று சொன்னார். இந்த மதுரைக்காரன் விடவில்லை அப்ப 2500 க்கு தாருங்கள் என்று கேட்டார். இவன் அடவாடித்தாங்காமல் அந்த கடைக்காரன் இந்தா இந்த போனை நான் உனக்கு இலவசமாக தருகிறேன் எடுத்துக்கிட்டு கண்காணாமல் போய்விடு என்று வெறுத்து போய் சொன்னான். அந்த மதுரைக்காரன் அப்போதும் விடவில்லை அப்ப ரெண்டாக தாருங்கள் என்று கேட்டான்.

அதுக்கு அப்புறம் அந்த பர்மா பாஜார்ல என்ன நடந்திருக்குமென்று நினைக்கீறீர்கள்????? 

டிஸ்கி :  1. சென்னை பதிவர் கூட்டத்திற்கு வரும் மதுரைக்காராய்ங்க கூட சென்னை பதிவர்கள் ஷாப்பிங்க செல்ல வேண்டாம் என்று கடந்த வாரத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

2. பர்மா பாஜார் வியாபாரிகள் கையில் உருட்டுக்கட்டையுடன் அலைவதாக தகவல்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் ( நான் அந்த மதுரைக்காரன் அல்ல )        

25 comments :

 1. நானும் மதுரைக்காரன் தான். நான் உங்களை பர்மா பஜாருக்கு கூட்டிட்டுப் போறேன் நண்பா. உருட்டுக் கட்டைல்லாம் நம்ம பொது வாழ்க்கைல சகஜமப்பா... ஹி... ஹி...

  ReplyDelete
  Replies
  1. நான் வரலை அந்த விளையாட்டுக்கு.....

   Delete
 2. ஆஹா
  நானும் சென்னை பதிவர் சந்திப்புக்கு
  போகலாம் என நினைத்திருக்கிறேன்
  அதற்குள் பிறந்த் வீட்டுப் பெருமையை
  அவிழ்த்து விட்டுவிட்டீர்களே
  ம்..ம்.. பார்ப்போம்

  ReplyDelete
  Replies
  1. பேச்சில் மதுரைகார்கள் மிககெட்டி அதிலும் நீங்கள் மிக மிக கெட்டி அது நீங்கள் போகும் புகுந்த வீட்டிற்கு தெரிந்தால் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும்தானே

   Delete
 3. நம்மள நாமே அசிங்கபடுத்தலாமா!

  ReplyDelete
  Replies
  1. நண்பா இது நகைச்சுவை மதுரைகாரார்களுக்கு நல்ல பேச்சு திறமையும் நகைச்சுவை திறமையும் உண்டு என்பது உலகறிந்த உண்மை. இதில் அசிங்கம் ஏதும் இல்லை நண்பா.. அசிங்கம் என்பது 2 நாட்களுக்கு முன்பு மதுரை டாக்டர் பள்ளி சிறுமியை ரேப் பண்ணினாரே அதுதான் அசிங்கம் அந்த மாதிரி விஷயம் மதுரக்காரன் செஞ்சான் என்பதில்தான் அசிங்கம் அதற்க்காத்தான் நான் கூனி குறுகிபோகிறோம்

   Delete
 4. அடடே 2 மதுரைக்காரங்க கிட்ட இருந்து தப்பிக்கனுமா...இன்னும் எத்தன பேர் இருக்கிங்க பா..

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சென்னை பதிவாளார் கூட்டத்தில் பார்க்கதானே போகிறீர்கள் மதுரை ஆட்கள் படையெடுக்க போகிறார்கள் அவர்கள் காட்டும் அன்பு மழையில் நனையப் போவது உறுதி

   Delete
 5. காமெடி! அருமையாக உள்ளது! பாராட்டுக்கள்!
  இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
  http: thalirssb.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி நண்பரே

   Delete
 6. நீங்க மதுரைய்லதானே இருக்கீங்க. உங்க பக்கத்துல உள்ளவங்க இப்போ என்ன செய்றாங்க?

  ReplyDelete
  Replies
  1. நான் இப்போது மதுரையில் இல்லை நண்பா

   Delete
 7. மதுரைக்காரர்களே.... கையோட மீனாட்சியையும்
  கூட்டிக்கிட்டு போயிடுங்க.... அப்புறம் யாரு
  உங்கள அடிக்க வருவார் என்று பார்ப்போம்.

  ReplyDelete
 8. மதுரைக்காரர்களே... கையோட மீனாட்சியையும்
  கூட்டிக்கொண்டு போங்கள். அப்புறம் யாரு
  வர்ராங்கன்னு பார்ப்போம்...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே கொஞ்சம் நல்ல ஐடியா தரக் கூடாதா மீனாட்சியை இழுத்துகிட்டு மதுரை பஸ்ஸாண்டை தாண்டுறதுக்குள்ள அவங்க அப்பா நம்மளை வெட்டி போட்டுறுவாங்க....

   Delete
 9. maduraikaranu soli maduraiya acikapatuthura

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை நகைச்சுவையோடு பார்க்கணும்... அடுத்தாக நாம் மற்றவர்களை கிண்டல் பண்ணுவதைவிட நம்பளை நாம் கிண்டல் பண்னுவதுதான் நல்லது அது வேற யாரையும் பாதிக்காது

   Delete
 10. மதுரைக்காரங்க விவரம் தான்...
  ஆனால் இப்படி இல்லையே...

  ReplyDelete
  Replies
  1. இதுவும் ஒருவகையான விபரம்தான் நண்பரே இப்படி பேரம் பேசி வாங்காவிட்டால் தலையில மிளகாய் அரைச்சுடுவாங்க

   Delete
 11. அருமையான பதிவு . நான் மதுரையில் இருக்கும் சென்னைக்காரி

  ReplyDelete
  Replies
  1. ஓ....நீங்க தான் அந்த சென்னை நண்பரா நல்ல ஐடியா கொடுத்துட்டு எஸ்கேப் ஆனவர்

   Delete
 12. நாங்க சிதம்பரத்தையே சாமாளிக்கிரவங்க....!மதுரைய சமாளிக்க மாட்டமா...?

  இப்படிக்கு

  சென்னை பதிவர்கள்!

  ReplyDelete
  Replies
  1. சென்னை பதிவர்கூட்டத்திற்கு வரும் மதுரைகாரர்களை நீங்க எப்படி சமாளிக்க போறீங்க என்று பார்ப்போம் நண்பரே

   Delete
 13. எதுக்கு சார் அரிவாள் படமெல்லாம் போட்டிருங்க்கீங்க? ஏடாகூடமாய் பின்னுட்டம் போட்டால் வாயிலயே வெட்டுவீங்களா?

  ReplyDelete
  Replies
  1. அருவாளை நாங்க கையில்தான் வைச்சிருப்போம் ஆனால் அதை எப்போது யூஸ் பண்ண மாட்டோம் பள பளண்ணு வெள்ளை வேட்டி கட்டினா நாங்கள் பைக்குல வருவோம் ஆனா கைலி கட்டினா அருவாளை யோடுதான் வருவோம். அது எங்கள் பிறவி பழக்கம் ஹீஹீஹீஹீஹீஹீஹீ

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog