Sunday, August 19, 2012
கலைஞரின் பேஸ்புக் அறிமுகமும் அநாகரிகமான தமிழர்களும்


கலைஞர் நல்லவரா கெட்டவரா தலைவரா சாணக்கியரா சுயநலவாதியா என்பது பற்றி பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கலாம். ஒருவருக்கு நல்லவராக தோன்றும் ஒருவர் மற்றவர்களுக்கு கெட்டவர்களாக தோன்றலாம். (உதாரணமாக எல்லோருக்கும் நல்லவராக தெரிந்த மகாத்மா காந்தி  ஒருத்தருக்கு கெட்டவராக தோன்றியதால்தான் சுட்டு கொல்லப்பட்டார்) இந்த பதிவு கலைஞர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பது பற்றியல்ல.

அவர் தமிழகத்தின் உள்ள ஒரு முக்கிய கட்சியின் தலைவர். அவர் பொதுமக்களின் கருத்தை அறிய இணையத்தில் அவர் சார்பாக பேஸ்புக்கில்  வியாழக்கிழமை அன்று ஒரு கணக்கை தொடங்கினார்கள். அவர் பேஸ்புக்கில் இணைந்த செய்தி அறிந்த நாகரீகம் கொண்டவர்கள் எனப்படும் தமிழ்மக்கள் அநாகரிகமாக  அவருக்கு அனைத்து திசைகளிலும் இருந்து மிக மோசமான வார்த்தைகளால் கமெண்ட் செய்துள்ளனர். அதில் பல கருத்துகள் ஓருமையிலும் மிக கீழ்தரமாகவும் இருந்தது. இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்காத கலைஞரின் பேஸ்புக்கை மேனேஜ் செய்பவர்கள் மாலையில் இருந்து பேஸ்புக் அக்கவுண்டை நிறுத்தி அதன் .பின்பு சில மாற்றங்கள் செய்து வெள்ளி மாலையில் இருந்து மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளனர்..


கலைஞரை கீழ்தரமாக விமர்சனம் செய்த படித்தவர்கள் மிகவும் கிழ்தரமானவர்கள் என்பதில் யாருக்கு சந்தேகம் இல்லை. நான் உங்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன் நீங்கள் படித்தவர்கள் புத்திசாலி தனமானவர்கள் என்றால் அவரின் பேஸ்புக்கிற்கு சென்று தரமான நியாமான அவர் மனசாட்சி சுடும்படி மிக நாகரிகமான வழியில் கேள்வி கேட்டு அரசியலில் சாணக்கியர் என்பவரை நிலைகுலையச் செய்திருக்க வேண்டும். நீங்கள் கேட்ட கேள்விகள் நியாமானதாக இருந்து அவர் பதில் சொல்லாமல் இருந்தால் அந்த கேள்விகளை அவரின் எதிர்கட்சிகாரர்கள் அவரிடம் அதே கேள்வியை மற்றைய மீடியாக்கள் மூலம் கேட்க செய்து பொதுமக்கள் பலருக்கு சென்று அடையச்  செய்து அவர்களையும் சிந்திக்க செய்து இருக்க வேண்டும். அப்படி சிந்தனை செய்யும் மக்கள் வருங்கால தேர்தலில் அதற்கான விடையை அவருக்கு சொல்லி தருவார்கள்.


ஆனால் இதை எல்லாம் விட்டு அவரை கிழ்தரமாக விமர்சித்தால் நீங்களும் கிழ்த்தரமானவர்களே அதில் ஏதும் மாற்றம் இல்லை  .


இணைய நண்பர்களே நமக்கு என்று ஒரு தரம் உண்டு அதை நாம் ஏன் குறைத்து  கொள்ள வேண்டும். அதனால் தரமான நியாமான கேள்விகளை அவரை திக்குமுக்காடச் செய்வோமா? அதை செய்ய உங்களால் முடியுமா?

நிச்சயம் நம்மால் இந்த சமுக தளத்தின் மூலம் ஒரு புதிய புரட்சியை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உங்களால் முடியும் என்றால் நீங்களும் முயற்சி செய்து தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவோம்.இது அவரது பேஸ்புக் முகவரி:
இது அவரது டிவிட்டர் முகவரி:


டிஸ்கி : கலைஞருடன் எப்போதும் போட்டியிடும் தைரியலட்சுமி என்று அழைக்கபடும் ஜெயலலிதாவுக்கு தைரியம் உண்டா இப்படி ஒரு ஆபிஸியல் பேஸ்புஜ் அக்கவுண்ட் ஆரம்பிக்க?


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கட்சி சார்பற்ற நடுநிலை கருத்துக்கள் உங்கள் பார்வைக்காக

41 comments:

 1. இணைய நண்பர் அநாகரிகமான, மாற்றிக் கொள்ளலா

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன்

   Delete
 2. தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தமிழகத்தில் மட்டுமல்ல அவர்களின் மனதிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டும்

   Delete
 3. நல்ல கருத்துக்கள்! உடன் படுகிறேன்! கடைசியில் கேட்டீங்க பாரு ஒரு கேள்வி? சூப்பர்!

  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
  http://thalirssb.blogspot.in/2012/08/1.html

  ReplyDelete
 4. முகநூளில் சிலர் அநாகரீக பதிவுகள் செய்கிறார்கள், தரம் தாழ்ந்த வார்த்தை பயன்படுத்துகிறார்கள்

  ரம்ஜான் சிறப்பு கவிதை...
  உங்கள் பார்வைக்கும் கருத்துரைக்கும் அன்புடன் அழைக்கிறேன்.நன்றி....
  http://ayeshafarook.blogspot.com/2012/08/blog-post_371.html

  ReplyDelete
  Replies
  1. பொது இடங்களில் பேசும் போது அநாகரிகமான வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க கற்று கொள்ள வேண்டும்.
   உங்கள் பதிவிற்கு கண்டிப்பாக வந்து பார்க்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் முகநூல் பக்கத்தை அளித்தால்...காரணம் தெரிந்த துன்பங்கள்(பக்கங்கள்) மட்டுமல்ல ,காரணம் தெரியாத துன்பங்களுக்கும்(பக்கங்களும்) காரணம் தெரிந்து விடும்.துன்பங்கள் போக வேண்டுமல்லவா,...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் உண்மைதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. கருணாநிதிக்கு மரியாதையா?

  அதுக்கு கொஞ்சம் விஷம் குடித்து சாகலாம்.  ///டிஸ்கி : கலைஞருடன் எப்போதும் போட்டியிடும் தைரியலட்சுமி என்று அழைக்கபடும் ஜெயலலிதாவுக்கு தைரியம் உண்டா இப்படி ஒரு ஆபிஸியல் பேஸ்புஜ் அக்கவுண்ட் ஆரம்பிக்க?///

  முதல் கேள்வி..

  கலைஞர் என்ற வஸ்து எது? அது ஒரு உயிரினமா?

  ரெண்டாவது....

  ஜெயலலிதா என்றால் என்ன?

  ReplyDelete
 7. தரங்கெட்ட தமிழர்கள்.....என்னா ஒரு சொல்?

  அப்ப நீ யாரு?

  நீ ஒரு பிராமணனா?

  நீ ஒரு துலுக்கனா?

  நீ ஒரு கிருத்துவனா?

  ஒரு தமிழன் தரம்கெட்டு தமிழரை இப்படிப் பேசமாட்டான்.

  தரம் கெட்டவர்களுக்கு தரம் கெட்ட அளவிலேயே பதிலும் கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தரம் குறைந்த வார்த்தைகளை பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தரங்கெட்டவர்கள்தான் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக் இருந்தாலும் இனைத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் தேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இது பொருந்தும்.

   Delete
 8. எழுத்துப் பிழைகளை சரி செய்து விடுங்க,

  ReplyDelete
  Replies
  1. நன்றி...இப்பொது வெகேஷன் செல்கிறேன் வந்ததும் சரி செய்கிறேன்

   Delete
 9. "அவர் தமிழகத்தின் உள்ள ஒரு முக்கிய கட்சியின் தலைவர்...."
  தமிழர்களுக்கு அவர் தலைவராயிருந்திருந்தால் தமிழன் தாறுமாறாக இலங்கையில் கொலையுரும்போது இவர் செய்துகொண்டிருந்த வேலை என்ன.. டெல்லியில் பதவி பேரம் பேசினார்.. ஜெயலலிதா மாதிரி பொத்திகிட்டு சும்மாயிருப்பதை விட்டு Face book.. Twitter.. இதெல்லாம் தொறந்து வெளிய வந்தா இப்படித்தான் கும்முவாய்ங்க..

  ReplyDelete
  Replies
  1. நல்லா கும்மட்டும் ஆனால் வார்த்தையில் சிறிது நாகரிகம் இருக்கட்டும் என்பதுதான் எனது கருத்து நண்பரே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 10. \\உதாரணமாக எல்லோருக்கும் நல்லவராக தெரிந்த மகாத்மா காந்தி ஒருத்தருக்கு கெட்டவராக தோன்றியதால்தான் சுட்டு கொல்லப்பட்டார்.\\ ஒரு தடவை சாப்பிட்டால் திரும்ப எந்த நோயுமே வராத மருந்து கண்டுபிடிசாதா நீங்கள் சொன்னா, ஆஸ்பத்திரி வச்சு நடத்துரவனுங்க உங்களை ராவோட ராவா குளோஸ் பண்ணிடுவாங்க பாஸ். அதற்காக நீங்கள் தேசத் துரோகி என்றாகிவிடுமா? சரி காந்தி என்ன சாராயக்கடையை நடத்தி மக்களை அழித்து மனைவி, துணைவி, இணைவிகளுக்கு மற்றும் அதுங்க போட்ட குட்டிகளுக்கென்று சொத்து சேர்த்தாரா? நாட்டை காட்டிக் கொடுத்து ஊழல் செய்தாரா? யாருக்கு யாரை கம்பேர் பண்றீங்க பாஸ்? இத்தனையும் செய்தவரை நல்லவரா கெட்டவரா என்று கூட சொல்ல முடியாதா பாஸ்? காமடி பண்ணாதீங்க பாஸ்.

  ReplyDelete
  Replies
  1. //சரி காந்தி என்ன சாராயக்கடையை நடத்தி மக்களை அழித்து மனைவி, துணைவி, இணைவிகளுக்கு மற்றும் அதுங்க போட்ட குட்டிகளுக்கென்று சொத்து சேர்த்தாரா? நாட்டை காட்டிக் கொடுத்து ஊழல் செய்தாரா? யாருக்கு யாரை கம்பேர் பண்றீங்க பாஸ்?//

   தங்களின் கருத்து மிகவும் அருமை. எளிமை , பொறுமை, இவற்றின் வடிவம் காந்தி.

   Delete
  2. நல்லவரா கெட்டவரா என்று நான் சொல்லித்தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லையே.. நண்பரே. உங்களுக்கும் கலைஞர் மீது நல்ல கோபம் வந்தாலும் நீங்கள் உங்கள் கருத்துக்களை எப்படி நாகரிமாக நீங்கள் பதிகிறீர்கள் அதைதான் இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வருகிறேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 11. \\நீங்கள் படித்தவர்கள் புத்திசாலி தனமானவர்கள் என்றால் அவரின் பேஸ்புக்கிற்கு சென்று தரமான நியாமான அவர் மனசாட்சி சுடும்படி மிக நாகரிகமான வழியில் கேள்வி கேட்டு அரசியலில் சாணக்கியர் என்பவரை நிலைகுலையச் செய்திருக்க வேண்டும்.\\ பாஸ்..........இவரு இதுக்கெல்லாம் அசையும் ஆள் இல்லை பாஸ். நீங்க எத்தனை கேள்வி கேட்டாலும் அசராம பதில் தான் சொல்லுவாரு [நித்தி மாதிரி] ஒரு போதும் திருந்தக் கூடியவர் இல்லை.

  \\நீங்கள் கேட்ட கேள்விகள் நியாமானதாக இருந்து அவர் பதில் சொல்லாமல் இருந்தால் அந்த கேள்விகளை அவரின் எதிர்கட்சிகாரர்கள் அவரிடம் அதே கேள்வியை மற்றைய மீடியாக்கள் மூலம் கேட்க செய்து பொதுமக்கள் பலருக்கு சென்று அடையச் செய்து அவர்களையும் சிந்திக்க செய்து இருக்க வேண்டும்.\\ வீராணம் ஊழலில் இருந்து ஸ்பெக்ட்ரம் வரை கேள்வி கேட்டுகிட்டுத்தான் இருக்காங்க, பலன் என்ன? எல்லாமே ஊத்தி மூடியாச்சு, அல்லது சீக்கிரம் ஊத்தி மூடப்படும். அவர்கள் கையில் சிக்கிய பணம் நரி தின்ற கோழி மாதிரி, ஒருபோதும் திரும்பக் கூவாது? என்ன கேட்டு என்ன பிரயோஜனம்?

  ReplyDelete
 12. இங்கு வந்து பதிவிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் இபோது நான் வெகேஷன் செல்வதால் என்னால் உடனுக்குடன் பதில் அளிக்க இயலாது வந்ததும் முடிந்த வரை அனைவருக்கும் பதில் அளிக்கிறேன்.

  தயவு செய்து நமக்கு பிடிக்காதவர்கள் யாராக அவர்கள் நமக்கு பகைவர்களாக இருந்தாலும் தரம் குறைந்த வார்த்தையால் விளிக்க வேண்டாம். உங்களின் ப்ரிந்து கொள்ளளுக்கு மிகவும் நன்றி

  ReplyDelete
 13. //தயவு செய்து நமக்கு பிடிக்காதவர்கள் யாராக அவர்கள் நமக்கு பகைவர்களாக இருந்தாலும் தரம் குறைந்த வார்த்தையால் விளிக்க வேண்டாம். // அப்ப தரங்கெட்ட தமிழர்கள் என்று விளிப்பது மட்டும் தரம் உயர்ந்த வார்த்தைகளோ? அவர்கள் செய்த அநாகரிகமான செயல்களுக்கு நீங்கள் எவ்வாறு தரம் குறைந்த வார்த்தைகளான தரங்கெட்ட தமிழர்கள் என்று விளித்தீர்களோ.. அது போல தமிழர் தலைவர் என்று அவர் செய்த துரேகத்திற்கான கண்டனக் குரல்களுக்கு தரம் கெட்ட முறையில் விளித்த உங்களை தரம் கெட்ட பதிவர் என அழைக்கலாமா நன்பரே.

  ReplyDelete
  Replies
  1. தரங்கெட்ட என்ற வார்த்தை தரம் குறைந்ததாக வார்தையாக உங்களுக்கு படும் போது அதைவிட அநாகரிகமாக வார்த்தைகளை பயன்படுத்துபவர்களை என்ன சொல்லி அழைக்கலாம் என்று நீங்களே சொல்லுங்களேன்.

   என்னை தரங்கெட்ட பதிவர் என்று நீங்கள் நினைத்தால் என்னை தரங்கெட்ட பதிவர் என்று அழைக்க ஆட்சேபனை ஏதும் இல்லை


   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 14. தூற்றும் நேரத்தில் தூற்ற வேண்டும் வாழ்த்தும் நேரத்தில் வாழ்த்த வேண்டும். பிறந்த நாள் அப்போது யாராக இருந்தாலும் அவர் நலமுடன் இருக்க வாழ்த்த வேண்டும் என்பது என் எண்ணம்..... madurai Tamilan.

  I agree with your concerns.
  But I don't know the degree of தூற்றம்.
  I don't know why many of the educated guys are against MK.
  As of my understanding whom so ever had a chance to loot public money regardless politics or position doing the same.. that also more than 95%. Either AIDMK , DMK, Congress, BJP, ML, PSP, SJP, MDMK, PMK, DMDK, Hindu Musli, Christian, Sikh.

  I already came to a conclusion all these guys whom so ever தரம் குறைந்த வார்த்தையால் விளிக்கும் all awaiting a chance to loot the money from the others.

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில் கலைஞர் மட்டுமே ஏதோ ஊழல் செய்துவிட்டது மாதிரியும் மற்ற தலைவர்களும் மக்களும் மகா யோக்கியர்கள் மாதிரி நினைத்து கொண்டு தூற்றிவாருகிறார்கள். மற்றவர்களை தூற்றுவதற்கு முன்னால் நாம் எப்படி என்று சற்று நினைத்து பார்க்க வேண்டும்.


   உங்கள் வருகைக்கும் நீங்கள் இட்ட தரமான கருத்துக்கும் நன்றி

   Delete
 15. ஒரு மனுசன ஆரசியல் பண்ண உட மட்டேங்கலப்பா  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

 16. நெத்தியடி பதிவு.பேஸ்புக்கில் கலைஞரை எந்த அளவுக்கு கழுவி ஊற்றுகிறார்கள் என்பது அவருக்கும் தெரியாமல் இல்லை.கலைஞர் பேஸ்புக் வந்திருப்பதே நிறைய பேரின் கேள்விக்கு பதிலளித்து தன்னிலை விளக்கம் கொடுக்கத்தான்.ஆரோக்கியமான வாதத்தை அவர் முன் வைததிருந்தால் கண்டிப்பாக பதில் சொல்லியிருப்பார். அதைவிட்டுவிட்டு ஆபாசமாக கமென்ட் போடுவது நீங்கள் சொல்வது போல தரங்கெட்ட தமிழர்கள்தான்.

  ReplyDelete
  Replies
  1. பதிவில் நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு கருத்து சொன்னதற்கு மனமார்ந்த நன்றி

   Delete
 17. கெட்ட வார்த்தை சேரிகளுக்கு மட்டும் சொந்தமாக இருந்த நிலை போய் இன்று கீபோர்டையும், மவுஸையும் வைத்து விஞ்ஞான உச்சியில் நிற்கும் படித்தவனுக்கும் சொந்தமாகி தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளும் புழங்கும் சாக்கடையாக இண்டெர்னெட் இயங்கி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அடி மனதில் தேங்கிக் கிடக்கும் வக்கிரத்திற்கு வடிகாலாக இணையம் மாறிப் போனதுதான் உண்மை. பிரபல பத்திரிகைகளின் செய்தி பின்னூட்டங்களும் விதிவிலக்கல்ல.ஜெயலலிதா ஃபேஸ்புக்கில் நுழைந்தால் இதை விட வண்டை வண்டையான் வார்த்தைகளை அவர் சந்திக்கக் கூடும். காரணம் இணையத்தில் உலாவும் மெத்தப் படித்தவனுக்கு இது ஒரு விதமான கொள்ளிக்கட்டை சொரிதல். அவ்வளவுதான்.

  ReplyDelete
  Replies
  1. இணையத்தில் நடக்கும் உண்மையை பட்டவர்த்தமாக போட்டு உடைத்து சொன்னதற்கு மனமார்ந்த நன்றி

   Delete
  2. கலைஞரை இப்படி அநாகரிகமான பேசுபவர்கள் அவருடைய நிலையில் அவர்கள் இருந்தால் தமிழகத்தை உலகின் சிறந்த நாடாக ஆக்கி இருப்பார்களா என்ன?

   Delete
 18. மென்மையாகப் பேசுவதாலேயே ஒருவர் நல்லவராகி விட முடியாது. கலைஞரின் சாணக்கியம் அவரை 6 முறை முதல்வராக்கி யிருக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களை உலக அளவில் கோடீசுவரர்களாக்கியிருக்கிறது. ஆனால் இலங்கைப் பிரச்சனையிலும், தமிழர்களின் பிரச்சனைகளிலும் எந்த வித நன்மையும் விளயவில்லை என்பதே உண்மை.

  இப்படிச் செய்தீர்களே இது நியாயமா என்று மென்மையாகக் கேட்டால் மட்டும் அவருக்கு குற்ற உணர்ச்சி வரப்போவதில்லை.

  திட்டி எழுதுவதால் மாட்டுத்தோலுக்குச் சுரணை வந்துவிடப்போவதில்லை.

  ஜெயிலுக்குப் போய் விட்டு வந்ததால் திருடன் திருடுவதை விட்டு விடப் போவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் நீங்கள் இட்ட தரமான கருத்துக்கும் நன்றி

   Delete
 19. தரங்கெட்டது என்பதையே தவறானது என்று சொல்பவர்கள் கலைஞருக்கு எதிராக எழுதப்பட்ட வார்த்தைகளை என்ன சொல்வார்களோ

  ReplyDelete
  Replies

  1. அவர்களை பொறுத்தவரை அவர்கள் சொல்வதும் செய்வது நாகரிமான செயல்கள் என்று கருதுவார்கள்
   உங்கள் வருகைக்கும் நீங்கள் இட்ட தரமான கருத்துக்கும் நன்றி

   Delete
 20. இந்த பதிவை-
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

  வருகை தாருங்கள்!
  தலைப்பு ; படித்தவர்கள்.....

  ReplyDelete
  Replies
  1. என்னை வலைச்சாரத்தில் அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றிகள் பல...கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்

   Delete
 21. என்னால் பதிவர் திருவிழா விற்கு வர முடியவில்லை என்ற வருத்தம் தான், நான் பதிவர் உலகிற்கு ஒன்ற மாத குழந்தை, என் தளத்திற்கும் வாங்களேன்.

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.