இலையை எந்த பக்கம் மடிப்பது என்பது கலாச்சாரா பழக்கமா அல்லது சமயப் பழக்கமா?
இன்று பதிவர்கள் நடத்திய விழா பற்றிய பதிவுகளைப் பற்றி படித்த போது என் கண்ணில்பட்டது இந்த பதிவு இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்?
இதை படித்த பின்பு ஒரு பழக்கத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக அறிந்து கொண்டு விவாவதத்தில் ஈடுபட்டு ஒரு சிலர் தம்மை மிகுந்த பகுத்தறிவாளர்களாக கருதி அதை மூடப்பழக்கம் என்று கூறி விவாதித்து வருகின்றனர்.
எனது அறிவுக்கு எட்டியமட்டில், என்னைவிட வயதில் மூத்தவர்கள் சொன்னதில் இருந்தும், நான் புரிந்து படித்து கொண்டதில் இருந்தும் இந்த இலையை மடிப்பது என்பது ஒரு கலாச்சார பழக்கமே என்றுதான் தெரியவருகிறது..
இலையை எதிர்பக்கமா சாப்பிட்டு மடித்தால் மீண்டும் இந்த விருந்து /உறவு வேண்டாம்னு என்று நாம் மறைமுகமாக விருந்து தருபவர்களுக்கு சொல்லும் செய்தியாகும். இது ஒரு தமிழ் கலாச்சார பழக்கம் ஆகும். இப்படி நாம் ஒரு செய்தியை மறைமுகமாக சொல்வதன் மூலம், விருந்து தருபவர் விருந்து உண்டவருக்கு நம்மீது ஏதோ மனச்சங்கடம் உண்டாகி இருக்கிறது என்று கருதி விருந்து உண்டவரிடம் நான் செய்த எந்த செயல் உங்கள் மனதை பாதித்தது என்று கேட்டு அதற்கு விளக்கம் சொல்லி சமாதானம் செய்ய முயல்வார்.
அதுபோல இறந்த வீட்டில் போடும் சாப்பாட்டில் எல்லாரும் இலையை எதிர்ப்பக்கமாக மடிக்கணும் இதற்கு அர்த்தம் இது போல் துக்க சாப்பாடு சாப்பிட இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்பதுதான்.
இது ஒரு தமிழக கலாச்சாரத்தின் பழக்கம் . இது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தின் பழக்கம் அல்ல. நாம் பின்பற்றும் பழக்கம் வேறு மூட நம்பிக்கைகள் என்பது வேறு இதை இரண்டையும் போட்டு குழப்பி கொள்ள கூடாது.
பழக்கவழக்கத்திற்கு மேலும் சில உதாரணங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன். நாம் யாருக்காவது ஆங்கிலத்தில் இமெயில் அனுப்பும் போது எல்லா லெட்டர்களையும் கேப்பிட்டல் லெட்டரில் எழுதி அனுப்பினால் அந்த இமெயிலை பெறுபவர் மீது நாம் கோபம் கொண்டு உள்ளோம் என்பதாக அர்த்தம்.
அதுபோல ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது நாம் கைகுலுக்கும் போது நாம் வலது கையை உபயோகபடுத்தி கைகுலுக்கி கொள்வோம்.. இதுவும் ஒரு பழக்கமே. இது ஒரு மனித கலாச்சார பழக்கம் என்று சொல்லலாம். இதைபோலவே இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் சொல்லி வலது கையை உபயோகித்து கைகொடுத்து கட்டியணைப்பதும் ஒரு பழக்கம்தான். வலது கை, இடது கை இரண்டும் சரிக்கு சமமாக இருந்தாலும் நாம் எல்லோரும் வலதுகையையே உபயோகப்படுத்துவது நமது பழக்கமே ஆனால் அப்படி செய்வது மூடப்பழக்கம் அல்ல.
இந்தியாவில் பாத்ரூம் போனால் தண்ணிர் விட்டு சுத்தம் செய்வோம் ஆனால் மேலைநாடுகளில் பேப்பர்வைத்து சுத்தம் செய்வோம்..இதுவும் ஒரு பழக்கமமே
இப்போது அந்த பதிவர் இலையை மடித்து வைக்கும் பழக்கத்தை மூடப் பழக்கம் என்றும் தான் பகுதறிவாளார் என்றும் கிழ்கண்டாவாறு எழுதி இருக்கிறார்
///கருமாதி எனப்படும் 16 ஆம் நாளுக்கு அப்புறம் போடும் சாப்பாட்டில் எல்லாரும் எலையை எதிர்ப்பக்கமாக மடிக்கணும் அர்த்தம் இது போல் துக்க சாப்பாடு சாப்பிட இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்பது. "
அதாவது எதிர்ப்புறம் எப்போது மடிப்பாங்களாம் என்றால்... இனி துக்கமே இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்றாம்..! இது அறிவியல் பூர்வமாக சாத்தியமா..? ஒரு மனிதன் பிறந்தால் அவன் நிச்சயம் இறந்தே ஆக வேண்டும் அல்லவா..! இதுதானே உலக நியதி..? இதுதானே நிகழ்வில் உண்மை..? இவர் இலையை எதிர்புறமாக மடித்தால் மட்டும் இனி இறப்பு இந்த வீட்டின் பக்கமே வராமல் ஓடி விடுமா..? எல்லாரும் அந்த வீட்டில் சாவே இல்லாத சிரஞ்சீவி என்று ஆகிவிடுவார்களா..? இலையை எதிர்ப்புறம் மடித்து இப்படி 'காலத்தை வென்ற' ஒரு வீட்டையாவது காட்ட இயலுமா...? அந்த கருமாதி அந்த வீட்டில் வந்ததுக்கு காரணம்... இதற்கு முன்னர் இந்த தலைகீழி இலையை எதிர்ப்பக்கம் மடிக்காமல் போனதா..? ஹா...ஹா...ஹா... என்னப்பா இது... மூடநம்பிக்கை..///
அவர் சொல்வதில் "ஒரு மனிதன் பிறந்தால் அவன் நிச்சயம் இறந்தே ஆக வேண்டும் அல்லவா..! இதுதானே உலக நியதி..? இதுதானே நிகழ்வில் உண்மை" என்பது இந்த கருத்தில் யாருக்கும் அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் அதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது..
அவர் அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை ஆனால் அதன் பிறகு அவர் நாம் பின்பற்றும் பழக்கத்தை மூடப் பழக்கம் என்று சொல்லவதுதான் நாம் அவரை பற்றி சிந்திக்க வைக்கிறது.
''இவர் இலையை எதிர்புறமாக மடித்தால் மட்டும் இனி இறப்பு இந்த வீட்டின் பக்கமே வராமல் ஓடி விடுமா..? எல்லாரும் அந்த வீட்டில் சாவே இல்லாத சிரஞ்சீவி என்று ஆகிவிடுவார்களா..? இலையை எதிர்ப்புறம் மடித்து இப்படி 'காலத்தை வென்ற' ஒரு வீட்டையாவது காட்ட இயலுமா...? அந்த கருமாதி அந்த வீட்டில் வந்ததுக்கு காரணம்... இதற்கு முன்னர் இந்த தலைகீழி இலையை எதிர்ப்பக்கம் மடிக்காமல் போனதா..? ஹா...ஹா...ஹா... என்னப்பா இது... மூடநம்பிக்கை"
இந்த பகுத்தறிவாளர் மேற் சொன்ன வாதத்தின்படி அவர் குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டால் அவர் அழுது கொண்டிருக்காமல் கல்யாணவீட்டில் மைக்செட் போடுவது போல போட்டு பாட்டு ஒலிபரப்பி, எல்லோருக்கும் இனிப்புகளை பறிமாறி விருந்து கொடுப்பார் போலிருக்கிறது. காரணம் இந்த பகுத்தறிவாளருக்கு பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் இவர் இறப்பு வீட்டிற்கு சென்றால் Many many happy returns of the day என்று சொல்லி வாழ்த்தி வருவாரா அல்லது மற்றவர்கள் பின்பற்றி வரும் பழக்கங்களை பின்பற்றுவாரா என்பது எனக்கு தெரியவில்லை
நான் இந்த பதிவின் மூலம் சொல்லவருவது பழக்கம், கலாச்சார பழக்கம் என்பது வேறு மூடநம்பிக்கைகள் என்பது வேறு .அதற்கு வித்தியாசம் தெரியாமல் கேலி செய்ய கூடாது என்பதுதான்
என்ன மக்களே நான் சொன்னது சரியா ? இல்லை தவறு என்றால் என் புத்திக்கு புரியும்படி விளக்கம் தாருங்களேன்.
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனனின் அறிவுக்கு எட்டிய செய்திகள்
இங்கு பதிவாக உங்கள் பார்வைக்கு
(அது யாருப்பா உனக்கு அறிவு எல்லாம் இருக்குதா என்று கேட்பது.உஷ்ஷ்ஷ்...சத்தம் போட்டு கேட்காதீர்கள்)
வணக்கம் சகோ,
ReplyDelete//நான் இந்த பதிவின் மூலம் சொல்லவருவது பழக்கம், கலாச்சார பழக்கம் என்பது வேறு மூடநம்பிக்கைகள் என்பது வேறு .அதற்கு வித்தியாசம் தெரியாமல் கேலி செய்ய கூடாது என்பதுதான்//
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்............
"அவர்கள் தெரியாமல் செய்யவில்லை.அவர்கள் மத புத்தக்த்தில் சொன்ன விடயங்கள் தவிர பிற மத,சமூக விடயங்கள் அனைத்தையும் தாழ்த்தி விமர்ப்பதுதான் நோக்கம்!".
இதுவரை வெளிவந்த அவர்களின் அனைத்து பதிவுகள்,வாதங்கள் அனைத்துமே இதற்குள் அடங்கி விடும்!!!!!!!
ஆகவே நாம்தான் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்!!!!!!!!!!.
நன்றி
சார்வாகன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றிகள்..நீங்கள் மேலும் இட்ட சில கருத்துகளில் சில வரிகள் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாமல் இருப்பதாக் நான் கருதியதால் நான் அதை எடிட் செய்து வெளியிட்டுள்ளேன். அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்.. நன்றி
Delete/////இது ஒரு தமிழ் கலாச்சார பழக்கம்/////
ReplyDeleteஎந்த அடிப்படையில் இதை சொல்லுறீங்க
இது சம்பந்தமா சங்க கால இலக்கியங்களில் உள்ளதா??நற்றினை,குறுந்தொகை,ஐயிங்குருநூரு,அகநானூறு,புற நானூறு,போன்ற எட்டு தொகை இலக்கியங்களில் இருக்குதா?? இல்லை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இருக்க??/ இருந்தா சொல்லுங்க அப்பத்தான் அது தமிழ் கலாச்சார பழக்கம் இல்லைனா மூடப்பழக்கம் தான்
ரப்பாணி உங்கள் வருகைக்கும் சிறுபிள்ளைதனமான உங்கள் கருத்துக்கும் நன்றி. உங்கள் கருத்துபடி புத்தகங்களில் இல்லையென்றால் அது மூடநம்பிக்கை. அப்படியான நீங்கள் நம்பி ப்லோ செய்யும் மத புத்தகத்தில் இண்டர்நெட் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறதா ஆமாம் என்றால் அதற்கான ஆதாரத்தை தெரிவிக்கவும் இல்லையென்றால் நீங்களும் நெட் என்ற சொல்லக்கூடடிய மூட நம்பிக்கையை ப்லோ செய்வது எதனால் என்பதை விளக்கவும்
Deleteசார்வகன் அவர்கள் சொன்ன கருத்தில் இருந்து சில வரிகளை கட் செய்து அதை இங்கு வெளியிட்டு இருக்கிறேன்
Delete@சகோ ரப்பாணி
///எந்த அடிப்படையில் இதை சொல்லுறீங்கஇது சம்பந்தமா சங்க கால இலக்கியங்களில் உள்ளதா??நற்றினை,குறுந்தொகை,ஐயிங்குருநூரு,அகநானூறு,புற நானூறு,போன்ற எட்டு தொகை இலக்கியங்களில் இருக்குதா?? இல்லை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இருக்க??/ இருந்தா சொல்லுங்க அப்பத்தான் அது தமிழ் கலாச்சார பழக்கம் இல்லைனா மூடப்பழக்கம் தான்//
ஒரு புத்தகத்தில் இருந்தால் மட்டும் அது கலாச்சாரம் ஆகிவிடுமா!!!!மூடப்பழக்கம் என்றால் உங்களின் வரையறை என்ன??ஒரு செயல் மூலம் ஒரு செய்தியை பறிமாறுவது என்பதுதான் உலக நடைமுறை. நம் ஊரில் வாழையிலை இருப்பதால் வாழையிலையில் விருந்து பறிமாறுகிறோம். இன்றும் பல தமிழர்களின் இல்ல விழாவில் வேண்டா வெறுப்பாக உறவு முறைக்காக கலந்து கொள்பவர்கள் தங்களின் விருப்பமில்லா கடமைக்காக மட்டும்தான் வருகையை இலை மடிப்பின் மூலம் காட்டுவர் .இம்முறை நீ அழைத்ததால் வேறு வழியின்றி வர வேண்டியது ஆயிற்று. இனி உன் உறவு எனக்கு வேண்டாம் என்பதே இதன் பொருள்.மூடநம்பிக்கை என்றெல்லாம் எதுவும் கிடையாது. எல்லாமே நம்பிக்கைதான்.அது பலன் கொடுக்கிறதா என்பதுதான் பிரச்சனை. எல்லா நம்பிக்கைகளும் பலன் கொடுக்கிறது என்பதை யாராலும் நிருபிக்க முடியாது.நம்பிக்கைகள் மனதுக்கு ஒரு ஊன்றுகோல். இது எல்லைக்குல் இருப்பின் பிரச்சனை ஏதுமில்லை. நாம் இலைமடிப்பு போன்ற பல விடயங்களை உங்கள் மதப்புத்தகத்தில் இருந்து எடுத்துகாட்ட முடியும். என்றாலும் தவிர்க்கிறேன்
வவ்வால். அவர்கள் சொன்ன கருத்தில் இருந்து சில வரிகளை கட் செய்து அதை இங்கு வெளியிட்டு இருக்கிறேன்
Delete@அய்யா ரப்பாணி உங்களுக்குதான் கேள்வி கேட்க தெரியுமா? இலையில் இந்தியர்கள் சாப்பிடுவார்கள் என்று விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் சொல்லி இருக்கிறார்.அப்பறம் இலையை மடிப்பது என்பது கலாச்சார குறியீடா இருக்கிறது. இதையெல்லாம் கேட்க உங்களுக்கு தகுதி இருக்க வேண்டும்
தமிழ் கலாச்சாரம் என சொல்லும் நீங்கள் தமிழ் புலவர்களா?? உங்களின் தமிழ் புலமையை நிரூபிங்க
ReplyDeleteஇல்ல தமிழர்களை பற்றி ஆராட்சி செய்த நிபுணர்களா??
நான் புலவன் இல்லை மற்றும் நான் கவிதையை பற்றி இங்கு விமர்சனம் செய்யவில்லை அதனால் எனது புலமையை நிருபிக்க வேண்டியது இல்லை. நடை முறையில் இருக்கும் பழக்கத்தை சொல்ல ஆராய்ச்சிகள் தேவையில்லை. இருந்த பழக்கம் மறைந்து இருந்தால் தான் அதை ஆராய்ச்சி செய்து வெளியிட வேண்டும் என்பது கூட புரியாமல் நீங்கள் மற்றவர்கள் பதிவுகளை படித்து அரைகுறையாக புரிந்து கருத்து வெளியிட வேண்டாம்.
Deleteஇலையை எந்தப் பக்கம் மடிப்பது என்பது மூடப்பழக்கம் கிடையாது....
ReplyDeleteமூடுற பழக்கம் - எனக்கு அவ்வளவு தான் தெரியும்.
(என்னங்க “உண்மைகள்“ இதுக்கெல்லாம் ஒரு பதிவா?)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றிகள். என் தளம் பல்சுவைகளைத்தாங்கி வருவதால்தான் இது போல சில பதிவுகளை இட்டு வருகிறேன்
Deleteஅவர்கள்,
ReplyDeleteகலாச்சாரம் என சொன்னது நான் தான் எனக்கு தான் எதிர்ப்பதிவு போட்டு இருக்கார்,ஆனால் நான் கருத்து சொன்னால் மாடரேஷன் வச்சு வெளியிட மாட்டேன்கிறார் :-))
அவருக்கு என்னைப்பார்த்தால் பயம் அதனால் என் பேரைக்கூட சொல்லாமல் தன் பதிவுப்போட்டு இருக்கார் ஆனால் சொன்ன விஷயத்தினை அப்படியே காபி செய்து மூட நம்பிக்கை என்று சொல்லி இருக்கார், இல்லை என பின்னூட்டம் போட்டும் பார்த்தேன் வரவில்லை, வந்தால் பார்ப்போம்.
வேட்டிக்கட்டு ,இலையை மடிப்பது, வாசலில் கோலம் போடுவது என பல கலாச்சாரப்பழக்கங்கள் இருக்கு, அதில் மூட நம்பிக்கை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்,ஆனால் இலையை மடிப்பது மூலம், தலையை மேலும் கீழும் ஆட்டினால் ஆம் என யார் டிக்ஷனரி போடு பொருள் சொன்னார்கள் ,அதே போல குறியீடு இருக்கு என சொன்னேன் அவ்ளவு தான்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றிகள்
Deleteஇலையில் வெளிக்கு போவது உட்பட எல்லாமே "நல்ல" நம்பிக்கை தான்!
ReplyDeleteசகோ இரப்பானி,
ReplyDelete//எந்த அடிப்படையில் இதை சொல்லுறீங்க
இது சம்பந்தமா சங்க கால இலக்கியங்களில் உள்ளதா??நற்றினை,குறுந்தொகை,ஐயிங்குருநூரு,அகநானூறு,புற நானூறு,போன்ற எட்டு தொகை இலக்கியங்களில் இருக்குதா?? இல்லை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இருக்க??/ இருந்தா சொல்லுங்க அப்பத்தான் அது தமிழ் கலாச்சார பழக்கம் இல்லைனா மூடப்பழக்கம் தான்//
ஒரு புத்தகத்தில் இருந்தால் மட்டும் அது கலாச்சாரம் ஆகிவிடுமா!!!
மூடப் பழக்கம் என்றால் உங்களின் வரையறை என்ன?
ஒரு செயல் மூலம் ஒரு செய்தியை பரிமாறுவது என்பதுதான் உலக நடைமுறை.
நம் ஊரில் வாழை மரம் இருப்பதால் வாழை இலையில் விருந்து பரிமாறுகிறோம்.
இன்றும் பல தமிழர்களின் இல்ல விழாவில் வேண்டா வெறுப்பாக உறவு முறைக்காக கலந்து கொள்பவர்கள் த்ங்களின் விருப்பமில்லா கடமைக்காக மட்டுமான் வருகையை இலை மடிப்பின் மூலம் காட்டுவர். இம்முறை நீ அழைத்தததால் வேறு வழியின்றி வர வேண்டியது ஆயிற்று.இனி உன் உறவு எனக்கு வேண்டாம் என்பதே பொருள்.
மூட நம்பிக்கை என்றெல்லாம் எதுவும் கிடையாது எல்லாமே நம்பிக்கைதான்.
அது பலன் கொடுக்கிறதா என்பதுதான் பிரச்சினை!!!
எல்லா நம்பிக்கைகளும் பலன் கொடுக்கிறது என்று யாராலும் நிரூபிக்க முடியாது!!!
நம்பிக்கைகள் மனதிற்கு ஒரு ஊன்றுகோல்!.இது எல்லைக்குள் இருப்பின் யாருக்கும் பிரச்சினை இல்லை!
நாம் இலை மடிப்பு போல் பல விடயம் உங்கள் மத புத்தகங்களிலும் காட்ட முடியும் என்றாலும் தவிர்க்கிறேன்.கட்டாயம் வேண்டுமெனில் வாரி வழங்க நாம் தயார்!!!
ஒரு சேம்பிள் பாருங்கள்!!
//1254. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்" என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார்.
Volume :2 Book :23//
இந்த ஹதிதில் உள்ளது மூட நம்பிக்கையா இல்லையா!!!!
உங்கள் நம்பிக்கை உங்களுக்கு உயர்ந்தது போல் பிறருக்கும் அவ்வளவுதான்!!!
நன்றி
ஹாஹா, கடைசியில் உங்களுக்கும் வெறுப்பாயிருச்சா?
ReplyDeleteஅவுங்க புஸ்தகத்தில் போட்டிருப்பது கிறுத்தானமானாலும் அது பகுத்தறிவு மற்றவர் வழக்கமெல்லாம் முட்டாள்தனம் என காட்டுத்தனமாக யோசித்தால் பலருக்கு கடுப்பானது என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள்.
இப்படி அடாவடித்தனம் செய்வதினால்தான் சார்வாகன்,வவ்வால் போன்ற பகுத்தறிவாளரும் இவர்கள் மீது எரிச்சலடைந்துள்ளார்கள். ஆனா இவங்க திருந்த வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
///ஹாஹா, கடைசியில் உங்களுக்கும் வெறுப்பாயிருச்சா?///
Deleteஎனக்கு யாருமீதும் எப்போதும் இதுவரை வெறுப்பு வந்தது இல்லை நண்பரே
//இவங்க திருந்த வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.//
நீங்கள் சொன்னதில் ஒரு சிறு திருத்தம் நண்பரே அவர்கள் தவறு செய்யவில்லை திருந்துவதற்கு..அவர்களுக்கு புரிதல் என்பது இல்லை அதனால் அவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆசை
மூடநம்பிக்கைகள் என்று அவர்கள் சிலவற்றை நினைத்து கிண்டல் செய்வதாக நினைத்து கொண்டே மதபுத்தகத்தில் உள்ளதை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு அர்த்தம் கூட தெரியாமல் பின்பற்றி கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இவர்களின் அறியாமையை எண்ணி நீங்கள் மெளனமாக சிரிக்க வேண்டுமே தவிர அவர்களை சொல்லால் நாம் காயப்படுத்த வேண்டாம்.அப்படி செய்யவில்லை என்றால் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை
//இது சம்பந்தமா சங்க கால இலக்கியங்களில் உள்ளதா??நற்றினை,குறுந்தொகை,ஐயிங்குருநூரு,அகநானூறு,புற நானூறு,போன்ற எட்டு தொகை இலக்கியங்களில் இருக்குதா?? இல்லை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இருக்க??//
ReplyDeleteஎங்க முன்னோர் அதை இலையில எழுதி வச்சிருந்தாங்க, ஆனா அந்த இலைய ஒரு ஆடு தின்னுருச்சி. புரிஞ்சிச்சா ? ஆடு தின்ன கத ஒங்களுக்கு ஒன்னும் புதுசு இல்லையே
இறை நாடினால் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டுமின்னுட்டு சொல்லிப்பிட்டு ,இவனுக சாந்தியே இல்லாம எப்பப் பாத்தாலும் திரிய்ரான்களே ...ஒரு வேளை இறைவன் இவங்கள இன்னும் நாடல போல ..அதுக்கும் புக்ல போட்ருக்குன்னு சொல்வாயுங்க , அதுவரைக்கும் வெயிட் பன்னுகப்பா , மிட்சவங்கள கொல்லாதீங்க, புண்ணியமா (?) போகும்!!
ReplyDeleteபுடவை கட்டுவது, மஞ்சள் பூசுவது, வேட்டி கட்டுவது, பூ வைப்பது,மருதாணி வைப்பது,வளையல் போடுவது, தமிழ் கலாச்சாரம்!
ReplyDeleteஇலையை மடிப்பது தமிழ் மக்கள் மட்டுமல்ல இந்தியர்களில் இந்துகள் அனைவரும் பின்பற்றுகின்றார்கள் முஸ்லிம் மட்டும் இந்துகளுக்கு எதிர்விதமாக இலையை மடிக்கின்றார்கள் என்பதே உண்மை!நான் இதை நேரடியாக கண்டிருக்கின்றேன்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
Deleteநீங்கள் இப்படி விளக்க பதிவு எழுதியதிற்கு பாராட்டுகள்.
ReplyDeleteசகோ சார்வாகன் உண்மையை தெளிவாக சொல்லிவிட்டார். "அவர்கள் தெரியாமல் செய்யவில்லை.அவர்கள் மத புத்தக்த்தில் சொன்ன விடயங்கள் தவிர பிற மத சமூக விடயங்கள் அனைத்தையும் தாழ்த்தி விமர்ப்பதுதான் நோக்கம்"
குட்டிபிசாசு அவர்கள் சொன்ன கருத்தில் இருந்து சில வரிகளை கட் செய்து அதை இங்கு வெளியிட்டு இருக்கிறேன்
ReplyDelete@வவ்வாலு பழக்கவழக்கம் எல்லாம் பொஸ்தகத்தில் போட்டு இருக்கான்னு என்று கேட்டு இருக்காங்க. நாம் படிக்கிற பொஸ்தகத்துல கழுவரது மடிகிரது தொடக்கிரது எல்லாம் எங்க இருக்கு
I feel, there is some logic behind that. When you go marriage kind of good occasions, due to the happiness, people eat rice + poriyal items (which will be served on the opposite site in the leaf) completely. So, they its easy for them to fold from other side to their side. On the other hand, due to the sadness, they won't enjoy the other items, just for survival, people take only rice which served on the same side not porial. So its easy for them to fold from this side to opposite side
ReplyDelete//அதாவது எதிர்ப்புறம் எப்போது மடிப்பாங்களாம் என்றால்... இனி துக்கமே இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்றாம்..! //
ReplyDeleteதம் வாழ்நாளில் வரக் கூடாது என்கிற விருப்பத்தின் பெயரில் செய்வது, அதாவது தாம் இருக்கும் வரை இந்த வீட்டில் துக்கம் நடப்பதில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றே பொருள்.
அந்த கோஷ்டிக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமென்றால் ப்ராக்கெட் போட்டு தான் கொடுக்க வேண்டும்.
அதாவது
துக்கவீட்டில் எதிர்ப்புறம் இலையை மடிப்பது ஏன் என்றால் (மீண்டும்) இந்த வீட்டில் (எனக்கு தெரிந்து) இழவு நடக்கக் கூடாது, (அன்றியும்) நல்ல நிகழ்வு இல்லை, இவை தொடர்ந்து நடக்காதிருக்க (நான்) விரும்புகிறேன்.
என்று விளக்க வேண்டும், ப்ராக்கெட் போட்டே எழுதி / படித்துவருபவர்களுக்கு ப்ராகெட் இன்றி படித்தால் புரியாது, புரிந்து கொள்ளுங்கள்,
வேட்டி மூட்டிக்கட்டாதது மூடப் பழக்கம் என்று கூட அவர்கள் சொல்லுவார்கள், விளக்கம் கேட்டால் அசந்து தூங்கும் பொழுது விலகிவிடும் என்று விளக்கம் சொல்லுவாங்க.
ReplyDelete:)
என்னக் கேட்டா , கோழிய கொல்றதுன்னு முடிவு பண்ணிட்டு , அத மந்திரம் சொல்லி கட் பண்ணாதான் கரெக்ட் ன்னு சொல்லிக்கிட்டு சாபிட்றது கூட மூடத் தனம் தான் ... யார் வேணா அவங்க வசதிக்கு தகுந்த மாதிரி புக் தயார் பண்ணிக்கிட்டு இதாம்லே சரின்னு விதண்டாவாதம் பண்ணலாம் ...புக் ல பேஜ் காட்டு ன்னு சொல்றதெல்லாம் ஓவர் அய்யா !
ReplyDelete:)
Deleteமிகவும் நல்லதொரு பதிவு சகோ....
ReplyDeleteகலாச்சாரப் பழக்கம் என்பதில் நல்லவையும் இருக்கு கெட்டவையும் இருக்கு !!!
சிலக் கலாச்சாரப் பழக்கங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாறிவிடுவதுண்டு, சில மாறாது இருக்கும்.
பெரும்பாலான சமயங்கள் கொண்டிருக்கும் சமயப் பழக்க வழக்கம் எல்லாம் தானாக உருவாகிவிடுவதில்லை. மாறாக அந்த சமயங்கள் தோன்றிய மண்ணின் கலாச்சாரப் பழக்கங்களைத் தான் எடுத்துக் கொள்கின்றன.
மூட நம்பிக்கை என்று நாம் எப்படி வரன் முறை செய்கின்றோம் என்பதில் தான் சிக்கலே !!!
ஒரு நம்பிக்கை கட்டாயமாக விரும்பப் படாதோர் மீது திணிக்கப்படும் போது,
ஒரு நம்பிக்கை மற்றவர்களின் உயிர், உடமை, வாழ்வு, சுதந்திரம் போன்றவற்றை பறிக்கும் போது,
ஒரு நம்பிக்கை ஒருக் குறிப்பிட்ட மக்களால் பின்பற்றப் பட விருப்பம் இல்லாத போதும் அதனைக் கட்டாயமாக கடைப்பிடிக்கச் சொல்லும் போது
இப்படியான சூழல்களிலேயே அவற்றை எதிர்க்கச் செய்கின்றோம் ...!!!
வாழை இலை மடிப்பு என்பது யாருக்கும் எந்த தொந்தரவு இல்லாத ஒரு பழக்க வழக்கம் - அத்தோடு அது ஒன்றும் கட்டாயப் படுத்தப் படும் பழக்கமல்ல !!! பெரும்பாலான தமிழர்கள் இன்று தட்டுக்களுக்கு மாறிவிட்டார்கள் !!!
வாலை இலையைத் தூக்கிப் பிடித்த பதிவர் அனைத்து பழக்க வழக்கங்களையும் சாடி இருப்பாரானால் எதோ நியாயம் என்றாவது சிந்திக்க வழியிருக்கு !!!
ஆனால் குரானில் சொல்லப்படாதவைகள் அனைத்தும் மூடப் பழக்கம் - சொல்லப்பட்டவைகள் மாத்திரம் முற்போக்குப் பழக்கம் என வாதிடுவதைக் கேட்டால் சின்னப் பிள்ளைகள் கூடு வாய் விட்டு சிரிக்கும் !!!
ReplyDeleteஇஸ்லாமியர்களிடம் இருக்கும் மூடப் பழக்கங்களை பட்டியலிட்டால் ஒரு ஏரணமான பதில்களும் வருவதில்லை !!!
1. குறிப்பாக மெக்காவைப் பார்த்து முகம் கழுவாமல் இருப்பது !!!
2. கொட்டாவி விடுவது சாத்தானின் செயல்
3. சாத்தான் காதுகளில் உச்சாப் போவதால் ஒருவர் அதிக நேரம் தூங்குகின்றார்
4. கழிவறைக்கு செல்லும் போது இடதுக் காலை தான் முன் வைக்க வேண்டும்
5. வீட்டில் நாய் வளர்ப்பது தீட்டு
6. ஒருவன் எச்சில் துப்பும் போது இடதுப் பக்கத்தில் தான் துப்ப வேண்டும்
7. ஒன்றுக்கு போகும் போது ஆண்குறியை இடக் கையால் மட்டுமேத் தொட வேண்டும்
8. சாத்தான் மூக்கின் மேல் தூங்குவான்
9. கெட்டக் கனவுகளை துரத்தப் படுக்கையின் இடப்பக்கம் துப்ப வேண்டும்
10. காலணிகள் அணியும் போது வலக்காலில் தான் முதலில் அணிய வேண்டும் ... !!!
இது இன்னும் நீள்கின்றது ...
இவை எல்லாம் என்ன மூடப் பழக்கம் இல்லாமல் என்னப் பழக்கம் என்று அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் ப்ளீஸ் !!!
நீங்க எனக்கு தமிழ் நண்பர்கள் தளத்தில் ஓட்டு போட்டீங்களா...
ReplyDeleteஉங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைத்து ஓட்டு போடா சொல்லுங்களேன்..
இணைப்பு இதோ.....
http://kavithai7.blogspot.in/2012/08/blog-post_1008.html
வவ்வால்!என்னை மாதிரி நோஞ்சான்களைக் கண்டே பயப்பட்டு பின்னூட்டத்தை மூடி வைக்கும் போது உங்க மாதிரி ஹெவி வெயிட் சேம்பியன்கள் வரும் போது பறக்குறதுக்கு முன்னாடியே கடைக் கதவை சாத்திடுவாங்களே:)
ReplyDeleteசரி! நான் வந்த விசயம் வேற!எகிப்தியன் ஒருவன் நான் இல்லைன்னு இடது புறமும் தலையாட்டினா நான் ஆமாம் சொல்கிறேன் என்று புரிந்து கொண்டான்.அவர்கள் வழக்கப்படி இடது வலது தலையாட்டல் = ஆமாம்.தலையை கீழும் மேலும் ஆட்டினால் இல்லை:)
கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்காருவதும் கூட கௌரவ குறைவாம்.ஆனால் பொது மேடைகளில்,தொலைக்காட்சிகளில் கால் மேல் கால் போட்டு உட்காருவதுதான் பலருக்கு வசதியாக இருப்பதோடு நாகரீகமாகவும் கருதப்படுகிறது.இன்னும் சிலர் கால் மேல் கால் போட்டு உட்கார்வது மட்டுமல்லாமல் மடிச்ச காலை பக்கத்தில் உட்கார்பவர் இடுப்பு பக்கம் கொண்டு போய் வைத்துக் கொண்டு உட்கார்வது சரியான நாகரீகமாக படவில்லை.இந்தி நடிகர்களில் பெரும்பாலான ஆண்கள் இந்த தவறை செய்கிறார்கள்.
இலை மடிப்பு சங்க காலத்தில் இருக்கிறதா?வங்க தேசத்தில் இருக்கிறதா என்று ஆராயமல் ரசம் எந்தப் பக்கம் வழிகிறதுன்னு பார்த்துட்டும் கூட இலையை மடிக்கலாம்:)ஆனால் பழக்க வழக்கங்கள் என்று சில அதுவாகவே வந்து விழுகின்றன.அவற்றிற்கெல்லாம் குறிப்புக்கள் கிடையாது.ஒருவேளை இலைமடிப்புக்கும் கூட யாராவது பாடல் சொல்லி வைத்திருக்கலாம்.நமக்கு தெரியாமலும் இருக்கலாம்தானே?
வவ்வால்...
ReplyDelete// அவருக்கு என்னைப்பார்த்தால் பயம் அதனால் என் பேரைக்கூட சொல்லாமல் தன் பதிவுப்போட்டு இருக்கார் ஆனால் சொன்ன விஷயத்தினை அப்படியே காபி செய்து மூட நம்பிக்கை என்று சொல்லி இருக்கார், இல்லை என பின்னூட்டம் போட்டும் பார்த்தேன் வரவில்லை, வந்தால் பார்ப்போம். ///
அவர் தான் தலைகீழின்னு தெளிவா சொல்லி இருக்காரே??? தலைகீழின்னா நீங்கதான்னு எல்லாருக்கும் தெரியுமே... அப்புறம் எதை வைத்து சகோ பயப்படுகிறார் என்று சொல்கிறீர்கள்...???
பதில் சொல்லி வைங்க.. நியாபகம் இருந்தா இந்த பக்கம் வந்து பார்க்கிறேன்....
சிராஜ்,
Deleteநீங்க தான் சிட்டிசனா?
//அவர் தான் தலைகீழின்னு தெளிவா சொல்லி இருக்காரே??? தலைகீழின்னா நீங்கதான்னு எல்லாருக்கும் தெரியுமே... அப்புறம் எதை வைத்து சகோ பயப்படுகிறார் என்று சொல்கிறீர்கள்...???
//
அப்புறம் நானும் என் "மொழியில்" சிட்டிசனை சொன்னால் நீங்க சும்மா இருக்காமல் அப்படிலாம் பேசக்கூடாது என எந்த அடிப்படையில் நியாயம் பேசுறிங்க, உங்களுக்கான மரியாதையை இப்படி பக்க சார்பாக பேசி குறைத்துக்கொள்கிறீர்கள் என்பதை அறிவீர்களா?
நான் ஏற்கனவே சொன்னது தான் நன்றாக பேசினால் மிக நன்றாக பேசுவேன் ,முரட்டுத்தனமாக பேசினால் அதை விட அதிகம் முரட்டுத்தனமாக பேசுவேன் ,அப்புறம் குத்துதே குடையுதே என புலம்பக்கூடாது :-))
இப்பவும் சொல்கிறேன் என்னைப்பார்த்து பயம் தான் , எனது பின்னூட்டங்களை ஆரம்பத்தில் வெளியிடாமல் பின்னரே வெளியிட்டார், எனக்கும் அப்படி காத்திருந்து பதில் சொல்ல விருப்பமில்லை, மட்டுறுத்தல் இல்லாமல் பேசினால் பேசலாம் இல்லை எனில் , நீங்களே பேசி முடிவு செய்துக்கொள்ளவும், உண்மையை பலரும் அறிவார்கள்.
நல்ல பதிவு
ReplyDeleteWell said!
ReplyDeleteஅன்பின் நண்பரே,
ReplyDeleteசௌக்கியமாப்பா?
நம் முன்னோர்கள் நிறைய நல்லவைகளை சொல்லிவிட்டு போயிருக்காங்க... அதை நாம் பின்பற்றுகிறோம்.. எனக்கு வாழை இலையில் சாப்பிட ரொம்ப பிடிக்கும்.. ஆனால் அது குவைத்ல கிடைக்காது...
இங்கு நடந்த ஒரு பூஜைக்கு போனபோது இலை நான் தான் போட்டேன் அப்ப தான் இதோ நீங்க போட்டமாதிரி கேள்விகள் எழுந்தது... இலையை எப்படி போடனும், சாப்பிட்டதும் இலையை எப்படி மடிக்கணும் என்பது தான்....
எனக்கு என் பாட்டி தாத்தா சொல்லிக்கொடுத்தது போல நான் இடது பக்கம் நுனி இலை இருக்கணும்னு சொன்னதால அப்படி தான் இலை போட்டேன். அதே போல சாப்பிட்டதும் எதிர்ப்பக்கம் மடிக்காம நம் பக்கம் மடிக்கணும் அப்ப தான் உறவு நிலைக்கும்னு சொல்வாங்க.
துக்க வீட்டில் எதிர்ப்பக்கம் மடிக்க சொல்வாங்க. திரும்ப இப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் இருக்க நான் வேண்டிக்கிறேன் என்பது அர்த்தமாகும்...
மனுஷன் பிறப்பவன் என்னிக்காவது இறப்பான் என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். அதுக்காக நம் வீட்டில் யாராவது இறந்துவிட்டால் நம்மால் அப்படி ஈசியா எடுத்துக்கிட்டு இருக்கமுடியுமாப்பா? இத்தனை நாள் உடன் இருந்து ஜீவித்து இப்ப இனி எப்பவுமே இல்லாமல் போகும் கொடுமை நினைத்தாலே நமக்கு பதறும் தானே? அப்ப அவங்களுக்கு நம்மால் முடிந்த சமாதானமாக செயலில் காண்பிப்பது தான் இலையை எதிர்ப்பக்கமாக மடிப்பது... வார்த்தையால் சொல்ல இயலாத ஆறுதலும் சமாதானமும் நம் கனிவான செயல்களால் இயலும் என்பது என் நம்பிக்கை...
இதெல்லாம் நான் பாட்டியிடம் கற்றது...
நானும் அப்படியே தான் பின்பற்றுகிறேன்...
அன்பு நன்றிகள் நண்பரே அருமையான பதிவுக்கு...
தமிழர்களின் கலாச்சாரம் அனைத்தும் உயர்ந்தவை போற்றப்படல் வேண்டும் என நான் சொல்லவில்லை. தற்பெருமைத் தனம் சமூகத்துக்கு உகந்தது அல்ல. ஆனால் அனைத்தையும் மூடநம்பிக்கை என ஒதுக்கிவிட வேண்டியதில்லை. இடத்துக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளுங்கள், காலத்துக்கு தக்கவாறு பொருந்தாப் பழக்க வழக்கங்களை நீக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவு தான். என்ன மதச் சட்டமாக நாம் அனைத்தையும் கருதிவிட்டால் அதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விடுகின்றன.
ReplyDeletehttp://www.kodangi.com/2012/08/club-le-mabbu-le-tamil-bloggers.html