பதிவர்கள் செய்யும் அட்டகாசங்கள் (மனதை வருத்தும் செய்தி)
சென்னையில் பதிவர் திருவிழா நடக்க முதலில் கணேஷ், மதுமதி, சென்னைபித்தன் ஐயா , சகோ சசிகலா ஆகியவர்கள் மூயற்சி செய்து ஆரம்பித்தனர். அதில் இருந்து இன்று வரை அதை கவனித்து வருகிறேன். சிறுதுளி பெரும் வெள்ளம் என்பது போல அது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த வெள்ளம் வரும் ஆகஸ்ட் 26ம் நாள் சென்னை மேற்கு மாம்பலத்தில் கரை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயலை பற்றி கேள்வி பட்ட தமிழ் பதிவர்கள் என்ன செய்வது ஏது செய்வது என்று கூட்டம் கூட்டி அவர்கள் மற்ற பதிவர்களின் மனதை கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஒவ்வோரு வாரமும் கொள்ளை அடித்து வருகிறார்கள். இந்த கொள்ளை இந்தியாவில் நடந்த 2 ஜி கொள்ளையை விட மிகப் பெரிய கொள்ளையாக கருதப்படுகிறது..
அது மட்டுமல்ல மனதை பறி கொடுத்தவர்கள் தான் பறி கொடுத்ததை மீட்க அவர்களும் இந்த கொள்ளைகாரர்களை போல மற்றவர்கள் மனதை கொள்ளை அடிக்க கிளம்பி இருக்கிறார்கள்..
இந்த கொள்ளை விஷ காய்ச்சலாக எங்கும் பரவி கொண்டிருக்கிறது
டிஸ்கி : மனம் வருந்தும் செய்தி என்பது. நான் அதில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதுதான்.
ஹீ...ஹீ...ஹீ...ஹீ...ஹீ...ஹீ...ஹீ...ஹீ...
மற்றபடி எந்த வித மனக் குழப்பங்களும் இல்லாமல் நான் பெரியவன் சிறியவன் என்று இல்லாமல் எல்லோரும் உங்கள் இல்லத் திருவிழா போல நினைத்து கலந்து கொள்ள எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
இதுவரை அட்டகாசம் பண்ணியவர்கள் லிஸ்ட் _ இந்த லிஸ்ட் சகோதரி ஸாதிகா அவர்களின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நன்றி சகோதரி ஸாதிகா
2.திரு.கவிதை வீதி செளந்தர் - பதிவர் சந்திப்பை புறக்கணிக்கும் பிரபல சென்னை பதிவர்கள்... மறைக்கப்படட உண்மைகள்.!
அன்பின் இனிய உறவுகளே அலையெனத் திரண்டு வருவீரே!
21. திருமதி.ஸாதிகா அலை கடலென திரண்டு வாரீர்!
மண வாழ்வில் கள்ள காதல் ஏன் எப்படி ஆரம்பிக்கிறது? (மனப்பக்குவம் உள்ளவர்கள் மட்டும் படிக்க) தவறாமல் எனது அடுத்த பதிவை படிக்கவும்
ஆஹா முதல் பந்தி நானேதான்...!
ReplyDeleteபந்திக்கு முந்தும் ஆள் படைக்கு பின்வாங்குவார்கள் என்று சொல்லுவார்களே ..அப்ப நீங்க? ஓ நீங்க அருவாக்கார தளபதி என்பது மறந்து போச்சே .... ஹீ..ஹீ
Deleteவிழா சிறப்புற வாழ்த்துகள்...!
ReplyDeleteநானும் உங்களை மாதிரிதான் வாழ்த்தான் முடியும் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் நமக்கு இல்லை
Deleteமனம் வருந்தும் செய்தி என்பது. நான் அதில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதுதான்.
ReplyDeleteஉண்மையாகத்தான் மனம் வருந்தி இருக்கிறீர்கள்!!
“நானும் உங்களை மாதிரிதான் வாழ்த்தத்தான் முடியும் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் நமக்கு இல்லை“ - எனக்கும் இல்லைங்க.
நான் மட்டும்தான் இப்படி நினைத்தேன் என்றால் என்னை போல நினைத்தவர் இன்னொருவர் உள்ளார் என்பதை உங்கள் பதில் மூலம் அறிந்து கொண்டேன்... நன்றி
Deleteவிழா குறித்த அத்தனை பதிவுகளையும்
ReplyDeleteஇணைத்தது அருமை
நானெல்லாம் எப்போதாவது என்னையும் அறியாமல்
வித்தியாசமாக யோசித்தால்தான் உண்டு
நீங்கள் எப்போதுமே வித்தியாசமாக யோசிப்பது
ஆச்சரியமளிக்கிறது
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
//விழா குறித்த அத்தனை பதிவுகளையும் இணைத்தது அருமை///
Deleteஇதற்குள்ள முயற்சி மற்றும் உழைப்பிற்கு சொந்தகாரர் சகோதரி திருமதி .ஸாதிகா அவர்களுக்குதான் இந்த பெருமை சேரும்
//விழா குறித்த அத்தனை பதிவுகளையும் இணைத்தது அருமை///
இதற்குள்ள முயற்சி மற்றும் உழைப்பிற்கு சொந்தகாரர் சகோதரி திருமதி .ஸாதிகா அவர்களுக்குதான் இந்த பெருமை சேரும்.
அதனால் உங்களின் வாழ்த்தோடும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்
மீண்டும் அவர்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்
பதிவர் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteசேகரிப்பு செய்திகள் பிரமாதம் பிரமாதம் நீங்க விழாவுக்கு வந்தா மதுரையே வந்த மாதிரி.
ReplyDeleteவிழா இனிதே நடைபெற இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிழா இனிதே நடைபெற இதயங்கனிந்த வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇதுவரை அட்டகாசம் பண்ணியவர்கள் லிஸ்ட் _ இந்த லிஸ்ட் சகோதரி ஸாதிகா அவர்களின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நன்றி சகோதரி ஸாதிகா
ReplyDelete>>>>
இணைப்பினை சரியான விதத்தில் இணைக்கவும்.
தாங்கள் கொடுத்த மூலம்: http://www.blogger.com/%20http://shadiqah.blogspot.com/2012/08/blog-post.html
நன்றி
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு சுத்தமாக வருத்தமே இல்லை MT !
ReplyDeleteநாங்கள் அனைவரும் தப்பித்தோம் பிழைத்தோம்
என்ற பெருமூச்சில் உள்ளோம் ! ஹஹஹா..