Tuesday, August 14, 2012

மண வாழ்வில் களவொழுக்கம் ஏன் எப்படி ஆரம்பிக்கிறது? (மனப்பக்குவம் உள்ளவர்கள் மட்டும் படிக்க- (Mid-Life Crisis\Love affair )



மண வாழ்வில் யாரும் இறுதி வரை  நூறு சதவிகிதம் சந்தோஷமாக இருந்தது கிடையாது. மகிழ்ச்சியற்ற நாட்களும் உண்டு அது தம்பதிகளை பொறுத்து மாறுபட்டு கொண்டே இருக்கிறது. அந்த சமயத்தில்தான் இந்த களவுக் காதல் என்பது தீ போல பற்றிக் கொள்கிறது. ஏதோ இது  இந்த மீடியாக்கள் மற்றும் ஆன்லைன் இருக்க கூடிய சமுக வளைத்தளங்கள் வந்த பின் தான்  ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்றும் பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தவறு இந்த களவுக் காதல்  இதிகாச காலங்களிலும் நடந்து இருப்பதாக தகவலும் உண்டு. பழைய காலத்திற்கும் இப்போதைய காலத்திற்கும் உள்ள வித்தியாசம் முந்தைய காலங்களில் அது வெளியே அவ்வளவாக  தெரிவதில்லை இப்போது அது அதிக அளவு தெரிவதற்கு இப்போது இருக்கும் தகவல் தொடர்பு சாதனங்களே அது மட்டுமல்ல இப்போது உலகம் மிகவும் சுருங்கிவிட்டது


இந்த மாதிரியான காதலில் யாரும் வேண்டுமென விழுவதில்லை அது போல யாரும் தம் வாழ்க்கை துணையை ஏமாற்றும் எண்ணமும் கிடையாது. ஆனால் வெளியே சொல்ல முடியாத பல காரணங்களால் மகிழ்ச்சியற்று இருக்கும் சமயத்தில் அதே எண்ண அலையில் இருக்கும் மற்றவர்களின் அறிமுகம் கிடைக்கும் போது நம்மையறியாமல் வீழ்ந்து விடுகிறோம். அது எப்படியென்றால் நம் காபி கப் காலியாக இருக்கும் போது மற்றொருவர் பெரிய ஜார் முழுவதும் மணமணக்கும் காபியை எடுத்து நம் வரும் போது நமக்கு அதை ருசிக்க வேண்டும்மென்ற ஆர்வம் தோன்றுவது இயல்பே...முடிந்த வரை எல்லோரும் ஆசையை கட்டுபடுத்த முயல்கின்றனர்...ஆனால் பல பேரால் அதை கட்டுபடுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை..

இந்த காதல் அவர்களை அறியாமல் தோன்றுகிறது. இந்த உறவு மிக சாதாரண உறவாக ஆரம்பித்து சாதாரண செய்திகளை பறிமாறி கொள்ள ஆரம்பிக்கிறது  அதுவே நாட்கள் செல்ல செல்ல மெதுவாக எமோஷனல் உறவாக உருமாறுகிறது . அப்போது அவர்களுக்குள் பறிமாறப்படும் தகவல்கள் சாதாரண தகவல்களில் இருந்து மிக நெருக்கமான தகவல்கள் பறிமாறிக் கொள்ளும் நிலையை அடைகிறது. இது எல்லாம் அவர்கள் அறியாமலே நிகழ்கிறது என்பதுதான் உண்மை. இந்த நிலை வரும் போது அவர்களுக்குள் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது அதே நேரத்தில் அவர்களுக்குள் ஒரு அதிபயங்கர குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. காரணம் யாருக்கும் ( ஆண்/பெண்  இருவருக்கும் ) அவர்கள் வாழ்க்கை துணையை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

சில சமயங்களில் இது மேலும் தொடர்வதற்கு காரணம் சிலருக்கு விவகாரத்து செய்ய மனமில்லாது குடும்ப வாழ்க்கையை தொடர்வதுதான் இதற்கும் பல காரணங்கள்  தங்களை நம்பி குழந்தைகள் இருப்பது அல்லது பண ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது குடும்ப பெருமை, நமது கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் நமது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் நாம் விவாகரத்து செய்தால் நம்மை மிகவும் இழிவாக கருதுவார்கள் என்று கருதுவதன் காரணமாகவும் அவர்கள் விவாகரத்து செய்யாமல் வாழ்வை தொடர்கிறார்கள்.

இந்த உறவு யாருக்கும் தெரிய போவதில்லை என்றும் அது யாரையும் காயப்படுத்துவதில்லை என்று எண்ணி ஒரு மாயை உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள்  அவர்களுக்கு இது மிகவும் நார்மலாக இருக்கிறது அவர்கள் எதிர்காலத்தை நினைத்து கவலைபடுவதில்லை .நிகழ்காலத்தில் இந்த உறவு மிக மிக சந்தோஷத்தையும் கவலையை மறக்க ஒரு மாற்று மருந்து போல கருதுவதால் அதை தொடர்கிறார்கள். எந்த மருந்திற்கும் பக்க விளைவுகள் இருப்பதை மறந்தும் போகிறார்கள். சில சமயங்களில் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் உயிர் இழப்பு ஏற்படுகிறது.... இறுதியில் மிகவும் அவமானப்பட்டு போகிற வரை எல்லாம் அவர்களுக்கு illusion னாகவே இருக்கிறது.

இப்படி நடக்கும் சம்பவங்கள் மிடில் க்ளாஸ் பேமிலியிலும் அதற்கு கிழ் உள்ள நிலையில் உள்ளவர்களுக்கும் அல்லது புகழ் பெற்ற நிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டு தெரியும் போது அது மிகவும் பரபரப்பு செய்திகளாக ஊடகங்களில் ஏற்படுகிறது.மற்ற நிலைகளில் உள்ளவர்களின் இந்த தொடர்பு எளிதாக மறைக்கப் படுகிறது.


தொடரும்....


டிஸ்கி :ஏகபத்தினி விரதனாக இருக்கும் வரை பிரச்சனையில்லை ஆனால் ஏகப்பட்ட பத்தினிகளுக்கு விரதனாக  இருக்க ஆசைப்பட்டால் இறுதியில் பிரச்சனைதான். இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும்.


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்  படித்ததை தெரிந்ததை அறிந்ததை என் அறிவுக்கு எட்டியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

13 comments:

  1. அருமையான பதிவு சகோ. முதலில் சில திருத்தங்கள் - எனக்கு இந்தக் கள்ளக் காதல் என்ற பதத்தில் உடன்பாடு இல்லை.. இதனை மணம் மீறிய உறவு என்று தான் கூற வேண்டும் ... !!! கள்ளக் காதல் நல்லக் காதல் எல்லாம் வெளியில் இருந்து நம்மால் கூறிவிட முடியாது ... !!!

    அடுத்து மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் மன சலனம் இருக்கவே செய்யும், இயல்பாகவே ஒவ்வொரு மனிதனும் இன்னொருவர் மீது எதோ ஒரு வகையில் ஈர்ப்புக் கொள்கிறோம்.. பலர் சொல்லுவதில்லை, சிலர் சொல்லிவிடுகின்றனர் ... !!!

    ஒவ்வொருவரின் மணவாழ்விலும் ஒரு தொய்வு நிலை வரவே செய்யும், அந்த தொய்வு நிலையை சரியாகப் புரிந்துக் கொண்டு இருசாராரும் நீக்கிவிட்டால், வேறு இடம் தேடி செல்ல வேண்டியதில்லை ... !!!

    ஆனால் காதலிலும் சரி, திருமணத்திலும் சரி ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக நினைத்து தம்மையே தாம் ஏமாற்றிக் கொள்கின்றனர். ஒவ்வொரு காதல் / திருமணத்திலும் தம்பதியினருக்கு என ஒரு சில உடன்பாடுகளைக் கொண்டிருப்பார்கள், அப்படியான உடன்பாடுகளை உடைத்துவிட வேண்டாம் .. சிலருக்கு மணம் மீறிய தொடர்பு பெரும் பிரச்சனையாக இருப்பதில்லை, பலருக்கு பிரச்சனையே !!! உடலளவில் தான் ஒருவர் மணம் மீறி போகின்றனர் என்றில்லை, மனதளவிலும் பலர் மணம் மீறி தொடர்புகள் கொள்கின்றனர் .. எதுவாக இருந்தாலும் தம்பதிகள் தமக்குள் இருக்கும் சிக்கல்களை பேசி தீர்க்க முனைய வேண்டும், அது முடியாத பட்சத்தில் பிரிந்துவிடுவது மிக நல்லது ... !!!

    ReplyDelete
    Replies
    1. //எனக்கு இந்தக் கள்ளக் காதல் என்ற பதத்தில் உடன்பாடு இல்லை//

      எனக்கும்தான் நண்பரே அதில் நான் உங்களோடு முழுவதும் ஒத்து போகிறேன்


      //மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் மன சலனம் இருக்கவே செய்யும், இயல்பாகவே ஒவ்வொரு மனிதனும் இன்னொருவர் மீது எதோ ஒரு வகையில் ஈர்ப்புக் கொள்கிறோம்.. பலர் சொல்லுவதில்லை, சிலர் சொல்லிவிடுகின்றனர் .///

      இதையும் நான் முழுவதுமாக ஒத்து கொள்கிறேன்.


      ///அது முடியாத பட்சத்தில் பிரிந்துவிடுவது மிக நல்லது ... !!!//

      அது இன்னும் எளிதுஅல்ல நமது இந்திய சமுதாயத்தில் அதற்கு சிறிதுகாலம் எடுக்கும் என நினைக்கிறேன். ஆனால் இப்படி விவாகாரத்து பெற்று வாழ்ந்து வரும் முன்று தமிழ் குடும்பங்களை நான் இப்போது வாழும் பகுதியில் தினம் பார்க்கிறேன்

      Delete
  2. எந்தக் காலத்திலும் இது போன்ற உறவுகள் இருக்கத்தான் செய்திருக்கும் அனால் இப்பொழுது இதற்கான குற்ற உணர்வு குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.மேலும் கொடிய முறையில் கொலை செய்யத் தூண்டுமளவுக்கு இருப்பது வேதனைக்குரியது.ஆராயப் படவேண்டிய விஷயம்தான்.

    ReplyDelete
    Replies
    1. குற்ற உணர்வுகள் என்றும் குறைவதில்லை ஆனால் ஊடகங்கள் மூலம் இந்த நிகழ்ச்சி பரபரப்பாக்கபட்டு பணம் சம்பாதிக்க பார்க்கும் தினசரி வார இதழ்கள் மூலம் அடிக்கடி பெரிதாக்கப்பட்டு வருவதால் உங்களுக்கு அந்த மாதிரி தோன்றி இருக்கலாம் என நான் நினக்கிறேன்...

      Delete
  3. *Mid-Life Crisis.*

    Human mind is precarious. It applies to all stages of growth and development. Mid-life marital conflicts should be handled thoughtfully.

    ReplyDelete
  4. அவசியமான பதிவு...பல பெண்கள் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது மாதிரி தொடர்பில் லயித்து போகிறார்கள். அறிவிழந்து புகைபடங்களை பறுமாரிக் கொள்கிறார்கள். பிறகு உட்கார்ந்து அழுகிறார்கள்...
    நான் இது குறித்து ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறேன். தமிழில் என்னால் எழுத முடியும். எழுதினால் ஏற்றுகொள்வர்களா என்பது தெரியாததால் எழுதவில்லை....
    பதிவை படித்து பாருங்கள்....
    http://artglaze.blogspot.in/2012/07/facebook-relationships.html

    ReplyDelete
    Replies
    1. மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா மாட்டார்களா என்பதை யோசித்து பார்த்து எழுதக் கூடாது. உங்கள் மனதுக்கு சொல்ல வருகிற விஷயம் நல்லதாக பட்டால் தைரியாமாக எழுதுங்கள்.சொல்லுங்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். அடுத்தாக எழுதுவதை தமிழில் எழுதுங்கள் காரணம் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர் அதிகமாகவும் உள்ளனர். ஆனால் தமிழில் இந்த மாதிரி செய்திகள் குறைவு. தமிழில் படிக்க விரும்புவர்களுக்கு எல்லா செய்திகளும் தமிழில் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. இறுதியாக ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் இருபால் இனத்திலும் உண்டு அதனால் எழுதும் போது இருபாலரும் பயன் பெரும் வகையில் பொதுவாக எழுதுங்கள். நன்றி

      Delete
  5. சம்மந்தமில்லாத ஒரு விடயத்தை இங்கு பதிகின்றேன். ஒரு காமெடி பீஸின் லேட்டஸ்ட் உளறல்.
    "சமீபத்தில் நான் படித்த wolf totem நாவல் என் எழுத்தைப் பற்றிய என்னுடைய மேற்கண்ட மதிப்பீட்டை உறுதிப் படுத்துகிறது. மேன் ஏஷியன் புக்கர் பரிசு பெற்று 2 கோடி பிரதிகள் விற்றிருக்கும் இந்த நாவலை விட பல மடங்கு உயர்வானது எக்ஸைல். "
    "Transgressive writing-ஐப் பொறுத்தவரை சர்வதேச அளவில் சுவாரசியமாகவும் தரமாகவும் எழுதக் கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இரண்டு பேர். ஒருவர், Cristina Peri Rossi. இன்னொருவர், அடியேன். இதை நீங்களே மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களோடு ஒப்பிட்டுத் தெரிந்து கொள்ளலாம்."
    இவர் உண்மையிலேயே லூசா அல்லது லூசு மாதிரி நடிகிறாரா

    ReplyDelete
    Replies
    1. லூசு கிடையாது.....தன்னைப் பற்றி தாதனே அதிக பெருமை பட்டு கொள்ளும் ஆள். அடுத்தாக இப்படி அவரே அவரை பற்றி புகழ்ந்து கொண்டால் அவரின் ஜால்ராக்களும் அதை அப்படியே திரும்ப திரும்ப சொல்லி என்னமோ அவர் அப்படிதான் என்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துவார்கள் காரணம் அவரின் வாசகர்களுக்கு சுய கருது சொல்ல தெரியாது அல்லது தெரிந்தாலும் உண்மையை சொன்னால் அவர் தப்பாக எடுத்து கொள்வாரோ என்ற பயம்தான்

      Delete
  6. மிகவும் அருமையான அலசல்! உண்மையான கருத்துக்கள்! சிறப்பு! நன்றி!
    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    ReplyDelete
  7. நல்ல பதிவு... நம்ம பதிவுக்கும் வாங்க...வந்து பார்த்து கருத்து சொல்லுங்க நண்பரே.... எனது தளம்..
    http://varikudhirai.blogspot.com

    http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.