சென்னை பதிவர் விழாவும் புறக்கணிக்கப்பட்ட மூத்த பதிவரும்
கடந்த ஞாயிற்று கிழமை சென்னையில் நடைபெற்ற குழு மிகவும் சிறப்பாக மதுமதி,பாலகணேஷ், சசிகலா, சென்னைபித்தன், புலவர், மற்றும் பலரால் நடத்தப்பட்டது. அந்த விழாவில் மூத்த பதிவர்களை கவுரவித்தனர். மூத்த பதிவர் என்பவர்கள் பதிவுலகில் அதிக காலம் எழுதியவர்கள் என்பது அல்ல பதிவுலகில் உலாவி வரும், வயதில் மூத்தவர்களை மட்டும் குறிப்பதாகும். இப்படிபட்ட ஒரு நிகழ்ச்சி அகில உலகில் எங்கும் நடைபெற்றதாக செய்திகளை இதற்கு முன்னாள் யாரும் கேள்விபட்டு இருக்க மூடியாது. அப்படிபட்ட ஒரு நிகழ்ச்சியில் வயதில் மூத்தவரும் எல்லோருக்கும் தெரிந்தவர் ஒருவரை இந்த பதிவுலகம் புறக்கணித்துள்ளது..
இவர் பல நூல்களை எழுதி இருக்கிறார். மிகப் பெரிய குடும்பஸ்தர். முதன் முதலில் சென்னையில் வலைப்பதிவு கூட்டம் நடத்தபோவதாக அறிவித்த உடன் இவர் தனக்கென ஒரு வலைதளத்தை ஆரம்பித்து அதன் பின் பேஸ் புக் மற்றும் டிவிட்டரிலும் அக்கவுண்ட் ஒப்பன் பண்ணி இருக்கிறார். இவருக்கு இப்படிபட்ட விழா என்றால் ரொம்ப பிடிக்கும் அதிலும் யாராவது பொன்னாடை போத்தினால் மிகவும் சந்தோப்படுவார் அப்படிபட்டவர் தம்மையும் இந்த வலைதள கூட்டத்திற்கு கூப்பிடுவார்கள் என்று கருதி வேறு எந்த வேலையும் செய்யாமல் இருந்திருக்கிறார். அப்படிபட்ட வயதில் மூத்தவரை இந்த விழா பொறுப்பாளர்கள் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கின்றனர். அது நியாமா?
பலருக்கு பல கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் நம் பதிவுலகத்தில் கூட்டம் நடத்தும் போது மாறுபட்ட கருத்துக்களை மறந்து ஒன்றாக கூடி மகிழ்வதுதான் இந்த கூட்டத்தின் நோக்கம். ஆனால் இந்த பதிவுலகம் அதையும் மறந்துவிட்டதா?
ஓ....அவர் யாரு என்று சொல்ல மறந்துவிட்டேன். அந்த முதியவர் வேறு யாருமில்லை. நம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் வருங்கால முதலமைச்சருமான கலைஞர் அவர்கள்தான்.( என்ன அவர் வருங்கால முதலைமைச்சாரா என்பவர்களுக்கு என்னுடைய பதில் நம் தமிழக மக்கள் குழந்தைகள் போன்றவர்கள் அதிகம் சிந்திப்பதில்லை எப்படி அப்பா கோபமாக இருந்தால் அம்மாதான் நல்லவர் என்றும் அம்மா கோபமாக இருந்தால் அப்பா நல்லவர் என்று சொல்வது போல் சொல்லி இவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி பதவியில் வைப்பார்கள்)
அதனால் மக்களே அடுத்த தடவை பதிவர் கூட்டம் நடத்தும் போது இவரை மறக்காமல் கூப்பிடுங்கள்... ஒரு வேளை அம்மாவும் வலைத்தளம் தொடங்கினால் அவரையும் கூப்பிடுங்கள். கலைஞரை கூப்பிட்டால் சசிகலாவுக்கு போட்டியாக அவரும் கவிதை புத்தகம் வெளியிடுவார். அம்மாவை கூப்ப்பிட்டால் விழா நடத்துவர்கள் காலில் விழுந்து கும்பிட தயாராக இருக்க வேண்டும்.
அவ்வளவுதாங்க... எனக்கு தெரிந்தை நான் சொல்லிப்புட்டேன்.. இனி கூப்பிடுவதும் கூப்பிடாதும் உங்கள் இஷ்டம்
டிஸ்கி : பதிவர் திருவிழா பற்றி பதிவு ஏதும் போடவில்லை என்றால் சாமி வந்து கண்ணை குத்திபோடும் என்று சொன்னதால்தான் இந்த கற்பனை பதிவு.
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
என்னமோ...ஏதோ... என்று வந்தால்...
ReplyDeleteபோட்டுத் தாக்குங்க... நன்றி...
சரியாத்தான் சொன்னீங்க.
ReplyDeleteநோட்டேட்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஹா ஹா ஹா...
ReplyDeleteஎதிர்பார்த்தேன் சாமீ!!!
ரைட்டு...
ReplyDeleteநம்ம தலைவருக்கு இந்த மாதிரி தினமும் விழாக்கள் என்றால் கூட மகிழ்ச்சிதாங்க...
ReplyDeleteஎன்ன பண்றது இவருக்கு விழாக்கள் பாரட்டுக்கள் மரியாதைகள் இல்லை என்றால் உயிர்வாழ முடியாது...
விடுங்க பாஸ் கடைசி காலத்தில மகிழ்ச்சியா இருந்துட்டு போகட்டும்
அவரும் ஒரு பதிவர் ஆச்சே அவருக்கு நாம் ஒரு பொன்னாடை போர்த்தி இருந்தால் அவர் ஆட்சிக்கு மீண்டும் வரும் போது இதற்கென ஒரு துறை ஒப்ப்பன் பண்ணி பதிவரில் ஒருவரை அமைச்சர் ஆக்கி இருப்பாரே ஹும் இப்போ வடை போச்சே
Deleteஉங்க வீட்டை நோக்கி ஆட்டோவும், சுமோவும் வருதாம்
ReplyDeleteஅக்காவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இந்த பதிவுக்கு ஆட்டோவும் சுமோவும் பரிசாக வாங்கி அனுப்பிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறது என்றே தெரியவில்லை
Delete:))
ReplyDeletePathivu super hit aagidum :)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅச்சச்சோ......
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஉடன்பிறப்பே.. தள்ளாத வயதிலும் எதையும் தள்ளாலு வலையிலும் புகுந்திட்ட என்னை கவுரவிக்க மறந்த பதிவுலகுக்கு சிபாரிசு செய்த உனக்கு என் ஆட்சியில் அமைச்சர் பதவி நிச்சயம் தம்பீ. -இப்படி கடிதம் எழுதிட்டிருக்காரு தலைவர்ன்னு உளவுத்துறை நியூஸ் எனக்கு வந்திச்சு. உஷாருய்யா... ஓடிரு...!
ReplyDeleteஅமைச்சர் பதவியை உங்களுக்கு தர சொல்லிவிட்டு நான் உங்களுக்கு பிஏ ஆகிவிடுகிறேன்...இந்த காலத்தில் பிஏதான் அதிகம் சம்பாதிப்பதாக கேள்வி
Deleteஇதை சத்தியமா நான் எதிர்பார்க்கல...சூப்பர்..தானைத் தலைவர் எங்கள் நிரந்தர அமெரிக்க மாப்பிள்ளை சாரி சாரி அமெரிக்க ஜனாதிபதி வாழ்க வாழ்க
ReplyDeleteதோழரே..
ReplyDeleteவழக்கம் போல் பல்பு! :)
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete\\அப்பா கோபமாக இருந்தால் அம்மாதான் நல்லவர் என்றும் அம்மா கோபமாக இருந்தால் அப்பா நல்லவர்\\ இதெல்லாம் நம்ம நினைப்பு மட்டுமே, ஒருத்தராவது நிஜத்துல நல்லாயிருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நீங்க ரொம்ப ஆசைபடுறீங்க நண்பரே
Deleteநான் தலைப்பைப் படித்ததும் அந்த மூத்த பதிவர் நீங்கள் தான் என்று நினைத்து விட்டேன்.....
ReplyDeleteபதிவு பிடிக்கலைன்னா நேரவே திட்டுங்க...ஆனா அதுக்கு பதிலாக என்னை முதியவர் லிஸ்டில் சேர்த்து கிண்டல் பண்ண வேண்டாம் எனக்கு வயது என்றும் பதினாருதான்
Deleteபடம் அருமை சகோ எப்படியெல்லாம் அசத்துறிங்கையா.
ReplyDeleteபடத்தை பார்த்து பாராட்டியது நீங்கள் ஒருவர் மட்டுமே நன்றி
Deleteகலைஞரை கூப்பிட்டால் சசிகலாவுக்கு போட்டியாக அவரும் கவிதை புத்தகம் வெளியிடுவார்.
ReplyDeleteஎந்த சசிகலாங்க தெளிவா சொல்லனும் ஆமா.
கவிதையில் கலக்குவது ஒரு சசிகலாதான் அது நீங்கதான் என்பது இந்த உலகத்திற்கு தெரியும்
Deleteeppati ippatiyellaam yosikkireenka????..
ReplyDelete
Deleteகனவில் சாமி வந்து சொன்னதுதான் ,இப்படி ஒரு பதிவு போடலைன்னா கண்ணை குத்திவிடுவேன் என்று பயமுறுத்தி சென்றதுங்க
அப்பப்பா....என்னமா தலைப்பு யோசிக்கீறீங்க..சூப்பர்..நிஜமாவே அவர் வருத்தப்படுவார்
ReplyDeleteஆமாங்க அவர் வருத்தப்பட்டார் என்று பல உடன் பிறப்புகள் எனக்கு தந்தி மேல் தந்தி கொடுத்தார்கள்
Deleteநல்ல குத்து தோழரே
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteமதுரையிலிருந்து அண்ணன் அஞ்சாநெஞ்சன் வர்றார்
ReplyDeleteஎன்ன அவரும் ஒரு வலைபதிவாரா? சரி சரி அவருக்கு மதுமதி பால கணேஷ் விலாசம் கொடுத்துடுங்க
Deleteசெம செம செம!.... நான் கூட தலைப்பப் பாத்து பதறிப்போய் வந்தா... அவ்வ்வ்வ்வ்வ்வ்....
ReplyDeleteஅப்பறம்,////டிஸ்கி : பதிவர் திருவிழா பற்றி பதிவு ஏதும் போடவில்லை என்றால் சாமி வந்து கண்ணை குத்திபோடும் என்று சொன்னதால்தான் இந்த கற்பனை பதிவு./// ஐயையோ, இந்த மேட்டரு தெரியாம நான் வேற அந்த சந்திப்பப் பத்தி பதிவு போடாம இருக்கேனே! அப்போ சீக்கிறமாவே போட்டுட வேண்டியதுதான்!
இந்த பொண்னுங்களே இப்படிதான் வம்பு செய்தியை பார்த்தாது பதறிப்போய் வரது...
Deleteஎன்ன இன்னும் நீங்கள் திருவிழா பத்தி பதிவு போடலைய்யா சீக்கிரம் போட்டுடுங்க இல்லை சாமி வந்து கண்ணை குத்திடும் இல்லன்னா நான் அதுக்கு பரிகாரம் ஒன்னு வைச்சிருக்கேன்
என் வலைதளத்தை பற்றி உங்கலுக்கு தெரிஞ்ச எல்லாருக்கு இமெயில் அனுப்புங்கள் அதன் பிறகு அவர்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அனுப்ப சொல்லி மறக்காம என் பதிவுக்கு எல்லாம் வந்து கமெண்ட்ஸ் போட்டு செல்லுங்கள் இப்படி எல்லாம் செய்தால் சாமிக்கிட்ட சொல்லி உங்கள் கண்ணை பாதுகாக்குறேன் ஒகே வா????
என் புகைப்படமா அது எப்படி உங்கள் கையில் கிடைத்தது என் வீட்டு பாத்ரூமில் கேமரா பொருத்தி இருக்கீங்களா???????????
ReplyDeleteநீங்கள் சொல்வதும் சரிதான்
ReplyDeleteஅவரை அழைத்திருந்தால் எப்படியும்
பதிவர் சந்திப்பில் ஒரு குறையும் இல்லை என்கிற
எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது
கலைஞரை அழைத்திருந்தால் நிச்சயம்
அந்தக் குறையும் இல்லாமல் நிச்சயம் செய்திருப்பார்
அந்த நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோம்
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சுவாரசியமான எழுத்து!
ReplyDeleteஒரு வருஷம் லேட்டா வந்தாலும் வந்து படிச்சு ரசிச்சேன்.....
ReplyDelete