மண வாழ்வில் களவொழுக்கம் ஏன் எப்படி ஆரம்பிக்கிறது? (பாகம் 2 )
மணவாழ்க்கை என்பது மரம் செடி கொடிகளை போன்றதுதான் அதற்கு தேவையான நேரத்தையும் அதற்கான கவனிப்பையும் செலுத்தாமல் இருந்தால் அது பட்டுப் போகும் அதை போன்று நேரமும் தேவையான கவனிப்பும் இல்லாததால் மணவாழ்க்கை பட்டுபோகத் தொடங்குகிறது. பட்டு போக தொடங்கும் போது அருகில் உள்ள மற்றவர்களின் மீதும் படரத் தொடங்குகிறது.அப்படி படரும் வரை கவனிக்காமல் விட்டுவிட்டு அதன் பின் களை எடுக்க முயற்சிப்பதைவிட அதற்கான நேரம் செலவிட்டு முதலிலேயே கவனிப்பது மிக மிக அவசியம்.
காதலுக்கு நேரம் என்பது காதலின் சுவாச காற்று அது இல்லாவிட்டால் காதல் செத்துவிடும். காதலிக்கும் போது நமக்கு எப்படியாவது நேரத்தை ஒதுக்கி காதலியை/காதலனை சந்திக்கும் நமக்கு கல்யாணம் ஆன பிறகு நேரம் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் காதலை சுவாசித்து மகிழ்ந்தவர்கள் அந்த சுவாசம் கிடைக்காத போது சுவாசிக்க வேறு இடத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றனர்.
இப்படி களவு காதலை நோக்கி செல்பவர்களை மட்டும் நாம் குறை கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி செல்ல தூண்டியவர்கள் அதாவது கணவன்/மனைவி மீது அக்கறை இல்லாதவர்கள் தான் முழு பொறுப்புக்கு காரணம் ஆவார்கள்.
இந்த கூடா உறவு இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் நடை பெற்று கொண்டிருக்கிறது ஆனால் மேலை நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள வித்தியாசம் மேலை நாட்டில் இந்த உறவுபற்றி வீட்டிற்கு தெரியவந்தால் சண்டை போட்டு விவாகரத்து வாங்கி அநேக பேர் சென்றுவிடுவார்கள் சிலர் உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்த்து மீண்டும் வாழ்வார்கள்.
ஆனால் இந்தியாவில் அது வெளிஉலகுக்கு தெரியவந்தால் ஆண்கள் என்றால் இப்படி அப்படித்தான் இருப்போம் என்று தெனாவட்டாக இருப்பார்கள் சிலர் மற்றும் சிலர் நான் தவறுதான் செய்துவிட்டேன் இனிமேல் தவறு செய்யாமல் இருக்கிறேன் என்று சொல்லி மீண்டும் தவறு செய்யாமல் இருப்பார்கள் அல்லது இருக்க முயற்சி செய்வார்கள். அதே சமயத்தில் இந்திய பெண்களாக இருந்தால் நான் ரொம்ப யோக்கியமாக ஒன்றும் தெரியாத அப்பிராணியாகதான் இருந்தேன் என்னை ஆசை காட்டி மயக்கிவிட்டான் என்று கண்ணிர்விட்டு நாடகமாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தான் செய்தது தவறு என்று ஒரு போதும் ஒத்து கொள்ளமாட்டார்கள். ஏதோ சிறுவயது பெண் இப்படி சொன்னாள் நம்பலாம் ஆனால் 2 மூன்று குழந்தைகளைப் பெற்ற 30, 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இப்படி கூறுவதை ஏற்க முடியாது. இந்த வயதில் மிகவும் அனுபவ முயற்சியுடன் குடும்ப நிர்வாகத்தையே தன் கையில் வைத்திருக்கும் இந்த பெண்கள் ஏவனோ ஆசை வார்த்தைகள் சொல்லிவிட்டான் அதனால்தான் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகிவிட்டேன் என்று கூறுவதை வேண்டுமானல் குடும்ப கவுரம் கருதி ஆண்கள் ஏற்று கொள்ளலாம் ஆனால் அதற்கு தான் எந்த காரணம் அல்ல என்பதை ஏற்று கொள்ள முடியாது என்பதை படித்தவர்கள் அனைவரும் ஒத்து கொள்வார்கள்
ஆண்கள் என்றாலே சபல புத்திகாரகள் என்று சொல்வது உண்மையே ஆனால் இந்த காலத்தில் பெண்களும் சபலதிற்கு ஆளாக தொடங்கிவிட்டார்கள் அப்படி ஆவதற்கு மீடியாக்களும் சினிமாக்களும்தான் காரணம்
அது மட்டுமல்ல இப்போது பெண்களும் மிக புத்திசாலிதனமாக செயல்பட ஆரம்பித்து விட்டார்கள் சில பெண்கள் இமெயிலில் மற்றும் டெக்ஸ்ட் மெஜெஸில் நலம் மட்டும் விசாரித்து விட்டு போனில் பேசும் போது தங்கள் சபலங்களை கொட்டி தீர்த்து விடுவார்கள் ஆனால் ஆண்கள் விபரமாக இல்லாமல் தங்கள் சபலங்களை இமெயிலும் சொல்லிவிடுவார்கள் ஆனால் அவர்களுக்குள் பிரச்சனைகள் வரும் போது பெண் தான் மிக யோக்கியமாகவும் அவந்தான் தவறாக அணுகியதாகவும் சொல்லி தப்பித்து விடுவார்கள். இப்படிபட்ட சம்பவங்கள் எனது உடன் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது அதன் ஆதாரத்தில்தான் நான் இதை மிக உறுதியுடன் இங்கு கூறுகிறேன்
சிலபேர் மனது கட்டுப்பாடு வேண்டும் அதற்காக யோக கற்று அதன் மூலம் மனத்தை கட்டுபடுத்த முடியும் என்று சொல்லுவார்கள்.அதுவாலும் முடியாது காரணம் நமது சக பதிவர் ஒருவர் எழுதிய பதிவில் அவருக்கு தெரிந்த நண்பர் இப்படித்தான் யோகா கற்று மனத்தை கட்டுபடுத்த வேண்டுமென்று சென்று நன்கு கற்று தேர்ந்து இறுதியில் கற்றுதந்தவரிடமே அவர் மனதை பறிக் கொடுத்துவிட்டாராம் அந்த கல்யாணம் ஆன பெண்மணி
இப்படி வளரும் களவொழுக்கத்தை நிறுத்துவது ஒரே ஒரு செயலால் மட்டும்தான் முடியும் அது உறவுகளுக்கு இடையே அதிக நேரம் செலவிடுவதும் ஒருத்தரை ஒருத்தர் குறை கூறாமல் நிறைகளை மட்டும் சொல்லி வாழ்க்கையை நடத்துவதால் மட்டுமே முடியும் என்பது எனது உறுதியான கருத்து
தொடரும்..........
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய மதுரைத்தமிழனின் கருத்துக்கள் உங்கள் பார்வைக்காக
மனம் விட்டு கணவனும் மனைவியும் பேசி ஒருவரை ஒருவர் நன்கு புரிதலோடு ஈகோ இல்லாமல் விட்டு கொடுத்து அன்புடன் வாழ்ந்தால் எல்லாம் சுகமே! உங்களின் பதிவு நன்று! என் வளைக்கும் உங்களை அன்புடன் அழைக்கிறேன்!
ReplyDeleteஅனைவருக்கும் தக்க நேரத்தில் தகுந்த விழிப்புணர்வு பகிர்வு நன்றி.
ReplyDeleteநல்ல அலசல்...
ReplyDeleteமுடிவில் நீங்கள் சொன்னது போல், நண்பர் ஒருவர் (யோகா + கள்ளத் தொடர்பு) இறந்தே போய் விட்டார்.. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்...
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!!பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
ReplyDeleteகளவொழுக்கத்தை நிறுத்துவது ஒரே ஒரு செயலால் மட்டும்தான் முடியும் அது உறவுகளுக்கு இடையே அதிக நேரம் செலவிடுவதும் ஒருத்தரை ஒருத்தர் குறை கூறாமல் நிறைகளை மட்டும் சொல்லி வாழ்க்கையை நடத்துவதால் மட்டுமே முடியும் என்பது து உறுதியான கருத்து
ReplyDeleteநல்ல பதிவு .நன்றி
ReplyDelete