Thursday, August 2, 2012



இப்படிபட்டவர்களா சென்னைக்காரார்கள்?

சென்னைக்கார நண்பரிடம் அடிக்கடி பேசும் போது சொல்வார்  மற்றவர்களுக்கு உதவுவது என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லுவார். அவரைத்தேடி வீட்டுக்கு வருபவர்களுக்கு உதவாவிட்டால் அவருக்கு தூக்கமே வாராது என்று சொல்லிக் கொண்டிருப்பார். அதனால் அவர் மீதான மதிப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.

என் வாழ்க்கையில் எனக்கொரு பிரச்சனை வந்தது அப்போது எனக்கு இவர் நினப்புதான் வந்தது. அதனால் அவரிடம் சென்றால் நமக்கு உதவுவார் என்று எண்ணி அவர் வீட்டுக்கு சென்றேன். வீட்டுக்கு போன என்னை அவர் மனைவியிடம் அறிமுகப்படுத்தி இவர் என் வலைத்தள நண்பர் அதனால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் காபி போட்டு கொடு என்று சொன்னார்....சிறிது நேரம் கழித்ததும் ஒருசிறு  கப்பில் ஏதோ கொண்டு வந்து வைத்தார் அதை பார்த்த நான் என் நண்பருக்குதான் அவர் ஏதோ மருந்து கொண்டு வந்திருக்கிறார் என்று எண்ணி சார் மருந்தை மறக்காமல் சாப்பிடுங்கள் என்றேன் அதற்கு அவர் அது மருந்து இல்லைங்க உங்களுக்கு என் மனைவி போட்டு கொடுத்த காபி சாப்பிடுங்கள் என்று சொன்னார் அடக்கடவுளே மருந்து குப்பியைதான் இந்த சென்னைக்கார்கள் காபி கப் என்று சொல்லுவது புரிந்தது.....


அந்த காபியை குடித்துவிட்டு அதுதாங்க நாக்கில் தடவிவிட்டு அவரிடம் சார் நீங்க எல்லோருக்கும் உதவுவதாக எப்போதும் சொல்வதால் நான் உங்களிடம் ஒரு உதவியை எதிர்பார்த்து வந்திருக்கிறேன் என்று சொன்னதுதான் தாமதம் உடனே அவர் எழுந்து செருப்பை காலில் போட்டு என் கூட வாருங்கள் என்று என்னை அழைத்து சென்றாவாறே என்னை மேலே எதுவும் பேசவிடாமல் செய்து நான் வந்த வழியே என்னை அழைத்து சென்று சொன்னார் யாரு எந்த வழியில் வந்தாலும் அவர்களை அதே வழியில் அன்ப்பி வைப்பதே அவர் அவர்களுக்கு செய்யும் உதவி என்று சொல்லி சென்றுவிட்டார்....


.....இப்பதான் புரிந்தது சென்னைக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவுவது இப்படித்தான் என்று...

மக்களே சென்னைக்காரர்கள் பற்றி நீங்கள் இப்போது நல்லா தெரிந்து கொண்டிர்களா?


அல்வாவுக்கு பெயர் போனது திருநெல்வேலி ஆனாஅல்வா கொடுப்பதற்கு பெயர் போனவர்கள் சென்னைக்காரர்கள் மக்காஸ்

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


ஆண்கள்  சின்ன வீடு வைச்சுக்குறது தப்பா??

தப்பே இல்லை மக்கா...இதற்கெல்லாம் பெண்கள்தான் காரணம்,அவர்களுக்கு இரண்டு வீடு இருப்பதால் ( பிறந்த வீடு,புகுந்த வீடு)  பிரச்சனை வந்தால் மற்றொரு வீட்டிற்கு செல்வார்கள் ஆனால் ஆண்களுக்கு அப்படி ஒரு வீடு இல்லாததால் அவர்கள் வசதிகேற்ப ஒரு சின்னவீட்டை பிரச்சனை வந்தால் செல்வதற்காக ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்..இதெல்லாம் என்ன தப்பாங்க?


I’d like to help you out today. Which way did you come in?
02 Aug 2012

14 comments:

  1. romba kusumu ungalukku ... any way good post

    ReplyDelete
  2. எப்படில்லாம் யோசிக்கிரீங்கப்பு

    ReplyDelete
  3. சின்ன வீடு வெச்சுக்குறதுக்கான நீங்க சொன்ன காரணம் இருக்கே அடடா, தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சு ராயல்டி வாங்கி வெச்சுக்கோங்க. வரலாறு உங்களை நினைவு வெச்சுக்கும்.

    ReplyDelete
  4. ஒ அப்படியா சங்கதி......


    சின்ன வீடு நல்லாவே பத்த வச்சிட்டீங்க

    ReplyDelete
  5. \\அல்வாவுக்கு பெயர் போனது திருநெல்வேலி ஆனாஅல்வா கொடுப்பதற்கு பெயர் போனவர்கள் சென்னைக்காரர்கள் மக்காஸ்\\ உண்மையிலேயே சென்னையில் பிறந்து வளர்ந்து அங்கேயே பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்கள் மிகக் குறைவு. சென்னையை மற்ற மாவட்டத்துக்காரங்களும், வெளி மாநிலத்துக் காரங்களும் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். அவ்வாறு சென்னையை ஏகத்துக்கும் ஆக்கிரமித்து எல்லாத்தையும் ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பவர்கலில் முதலில் வருபவர்கள் நீங்கள் சொன்ன அல்வா கிண்டும் திருநெல்வேலிக்கார அண்ணாச்சிகள் தான். சென்னையில் புகழ் பெற்ற ரங்கநாதன் தெருவிற்குப் போனால் அங்காடித் தெரு படத்தில் பார்த்த மாதிரி பத்து கடைகளை உங்களால் பார்க்க முடியும், சென்னை முழுவதும் அண்ணாச்சிகள் தான் மளிகை வியாபாரம் செய்ய முடியும் என்ற அளவிற்கு கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் மலையாளிகள் மட்டும் நாற்ப்பது லட்சம் பேருக்கும் மேல் இருக்கிறார்கள், அப்புறம் இருக்கவே இருக்கிறார்கள் சுந்தரத் தெலுங்கு பேசுபவர்கள், ராஜஸ்தானில் இருந்து கையும் காலோடும் இங்கு வந்து வட்டிக்கு விட்டு கோடி கொடியை சொத்து சேர்த்திருக்கும் சேட்டுகள் எல்லாம். ஆகையால், பச்சை சென்னைக்காரர் என்று எவரையும் கை நீட்டி சடுதியில் சொல்லிவிட முடியாது. சொல்லப் போனால், கண்ட கண்ட ஊர்க்காரனெல்லாம் இங்க வந்து எங்க பேரைக் கெடுத்துட்டாங்க என்று சென்னை வாசிகள் பலர் புலம்புவதைப் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. வந்த வழியே (சேதாரம் இல்லாமல்) அனுப்பி வைத்தாரே... அதே பெரிய விஷயம்... ஹா... ஹ...

    ReplyDelete
  7. ஏமாற்றுக்காரர்கள் எங்கும் இருக்கிறாகள் இங்கு கொஞ்சம் அதிகமாய் இருக்கிறாகள்.... இரண்டாம் நனைகையில் சுவை சற்று தூக்கல்

    ReplyDelete
  8. நாக்கில் தடவிய காப்பிக்கு நன்றியா இது....

    சரியாக வந்தவழியைக் காட்டியவரைக் கேவலப்படுத்தலாமா....? அப்புறம்... நீங்கள் சென்னையில் வந்தவழி தெரியாமல் அங்கேயே சுற்ற வேண்டியது தான்...

    ReplyDelete
  9. சின்னவீடு சமாசாரம்...

    தப்பிக்கிறதுக்கு என்னமா யோசிக்கிறீங்க...!!

    ReplyDelete
  10. வந்தாரை வாழவைக்கும் சென்னை பத்தி இப்படி எல்லாம் பேசப்படாது.
    காப்பி கொஞ்சமாக் குடிச்சாத்தான் டேஸ்ட்.ஒரு சொம்பு காபி தண்ணியா குடிக்கக் கூடாது பாஸ்

    ReplyDelete
  11. சென்னையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் மதுரையில் கெட்டவர்களும் இருக்கிறார்கள்! இதெல்லாம் ஊரினால் வருவது அல்ல! ஊறியதால் வருவது!

    ReplyDelete
  12. So, If somebody does not help you then they are Bad on your view isn’t it.
    Asking help is a polished word of BEGGING. Real friend never blame his friend’s mistake to anybody but you .........
    May god bless you.

    ReplyDelete
  13. வந்தாரை வாழ வைக்கும் சென்னை...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.