உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 1, 2012

எங்கே சென்றார்கள் தமிழக டாக்டர்கள்? ( டாக்டர் சமூகம், ஏன் இந்த கொடூரத்தை கண்டிக்கவில்லை?)
SHAME ON YOU
எங்கே சென்றார்கள் தமிழக டாக்டர்கள்? (  டாக்டர் சமூகம், ஏன் இந்த கொடூரத்தை கண்டிக்கவில்லை?)


//செய்தி :மதுரை: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். "சபலத்தில் செய்துவிட்டேன்' என போலீசிடம் தெரிவித்தார்.//

விபரமான செய்திக்கு இங்கே  க்ளிக் ---------->  ( தமிழ் , ஆங்கிலம் ) <-------- செய்யுங்கள்


தன் மனைவிக்கு அளித்த தவறான சிகிச்சையின் காரணமாகத்தான் தன் மனைவி இறந்துவிட்டாள் என்று கருதிய படிக்காத இளைஞன் சிகிச்சை அளித்த டாக்டரை கொன்ற போது அதை கண்டித்து ஹாஸ்பிட்டலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல வீதிக்கு வந்து போராடிய டாக்டர் சமுகம் இப்போது எங்கே சென்றது. ஏன் அவர்கள் வீதிக்கு வந்து இந்த அயோக்கிய டாக்டருக்கு எதிராக போராடி மிகுந்த தண்டனை வாங்கதர கூடாது. அதுமட்டுமல்லாமல் மருத்துவதுறை கவுன்சிலலில் சொல்லி இனி வாழ் நாள் முழுவதும் யாருக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்று சொல்லி அவரின் டாக்டர் லைஸென்ஸை ரத்து செய்ய கூடாது அப்படி செய்ய இயலாது என்றால் அவரின் ஹாஸ்பிடல் வாசலில் இங்கு காமுகன் ஒருவன் சிகிச்சை அளிக்கிறான் என்று போர்டு போடக்கூடாது.


இந்த அயோக்கிய டாக்டர் ஜெயிலில் " A " ப்ரிவு வசதி கேட்டானாம். அவனை நல்ல ஜெயிலுக்கு அனுப்புவதாக சொல்லி அமெரிக்காவில் ஆண்கள் இருக்கும் ஜெயிலுக்கு ஒரே ஒரு மாதம் அனுப்பிவையுங்கள் அதன் பிறகு அவனுக்கு புரியும் ரேப் என்றால் என்ன வென்று...


இந்திய டாக்டர் சமுகம் இவனுக்கு எதிராக போராடுமா அல்லது  போலீஸ் நடவடிக்கை எடுக்ககூடாது என்று வக்காலத்து வாங்குமா?


மதுரை மக்களே நீங்கள் இந்த செய்தி கேட்டது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? போலிஸ்  செல்வதற்கு முன்பு அங்கு சென்று அவனை எல்லோரும் கல்லால் அடித்து கொன்று இருக்க வேண்டாமா? அவன் வாழ்வதை விட சாவதே மேல் அல்லவா?


டிஸ்கி  : இதை பற்றி ஏன் எந்த ஒரு வலைதளமும் எழுதவில்லை இது உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லையா ? இல்லை இது எங்கள் தமிழகத்தில் இதெல்லாம சகஜம் என்று இருந்து விட்டீர்களா? அல்லது நான் படித்த இந்த செய்தி உண்மையில்லையா?


மன வேதனையுடன்
மதுரைத்தமிழன்
 


 
ஆஸ்பத்திரி,  சமூகச் சீரழிவுகள், டாக்டர்,  கற்பு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்,

11 comments :

 1. கோபம் புரிகிறது; ஒரு தந்தையையாக மனிதனாக! அவன் தவறு செய்திருந்தால் தண்டிக்கப் படவேன்டும்; என்னைப் போருதவரை இது இந்தியாவில் நடக்காது.

  மேலும், கைது தான் செய்து இருக்கிறார்கள்; டாகடர் போலீசிடம் சொன்ன ஏதும் நிக்காது; அடி உதை; உருத்திராட்சக் கோட்டையை நசுக்கினால், குற்றம் செய்தவனும் செய்தேன் என்ரு ஒத்துக் கொள்வான்.

  நீனக் சொன்ன மாதிரி, நம்ம ஊத்த வாயன் காஞ்சி சுப்புனியையும், "அமெரிக்காவில் ஆண்கள் இருக்கும் ஜெயிலுக்கு ஒரே ஒரு மாதம் அனுப்பிவையுங்கள் அதன் பிறகு அவனுக்கு புரியும் ரேப் என்றால் என்ன வென்று...///

  ஒகேவான்னே!

  ReplyDelete
 2. செய்தி கேட்டு கோர்ட்டுக்கு சென்றேன் அவனுக்கு சகல பாதுகாப்பு மற்றும் மூஞ்சியை மூடித்தான் அழைத்து சென்றார்கள் பலருக்கு விஷயம் தெரியவில்லை செய்தியாளர் கூட்டம் அதிகம் சில வழக்கறிகற்கள எதிர்ப்பு கோஷமிட்டனர் இது பற்றி விவரமாக எழுதுகிறேன்

  ReplyDelete
 3. மருத்துவரை கடவுளுடன் ஒப்பிடுகிறோம்,இது போல அய்யோக்கியதனம் பண்ணும் மருத்துவரை எந்த செருப்பால அடிப்பது,செய்தியை படித்தவுடன் மனது கொதிக்கிறது! இவன் MBBS படிப்பை படித்திருக்கமாட்டான்,காசுகொடுத்துதான் வாங்கியிருப்பான் இந்த கிழட்டு பயளுக்கு மனைவி,மகள் இருக்குமில்ல அங்கு போறது!

  இவனை வண்மையாக கண்டிக்கிறேன்!


  உண்மைவிரும்பி.
  மும்பை.

  ReplyDelete
 4. அதிர்ச்சியான விசயமாக இருந்தது நண்பா! நேற்று முழுவதும் மின் தடையால் இதைப்பற்றி அறிய முடியவில்லை! கண்டிப்பாக இந்த மருத்துவனை மருத்துவத் தொழில் பார்க்கவிடாமல் தடை செய்ய வேண்டும்! மக்கள் விழித்தெழுந்து போராட வேண்டும்!

  இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

  ReplyDelete
 5. போலிஸ் செல்வதற்கு முன்பு அங்கு சென்று அவனை எல்லோரும் கல்லால் அடித்து கொன்று இருக்க வேண்டாமா? அவன் வாழ்வதை விட சாவதே மேல் அல்லவா?

  உண்மை தான் சகோ சிறிது நாட்களுக்கு முன்பு பஸ்சை எரித்தது போல இது போன்றவர்களை எரித்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 6. டி.வில பார்த்தேன், பார்க்கும்போதே மனசு கொதித்தது. டாக்டர் என்பது ஒருபுறமிருக்கட்டும். ஒரு வேளை இளைஞன் இந்த இழிசெயலை செய்திருந்தால்கூட இவ்வளவு கோவம் வந்திருக்காது. வயசுக்கோளாறு என மனசு இரங்கியிருக்கும். ஆனா, மத்திய வயதை கடந்தவர், திருமணமாகி பிள்ளை, பேரன் பேத்தி என பக்குவப்பட்ட மனசோடும், உடலோடும் வாழ வேண்டியவர்ன்னு நினைக்கும்போது இன்னும் ஆத்திரம் அதிகமாகிறது சகோ.

  ReplyDelete
 7. எல்லோருக்கும் நிறைய கோபம் , ஆற்றாமை , வருத்தம்

  இருக்கிறது தான். சமீபத்தில் பத்திரிகையில் படித்தது ...

  இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பும் , உரிமையும் , மதிப்பும் மிக மிகக் குறைவு

  என்று. G20 - யில் முதல் ஐந்து இடத்தில உள்ளது . குவஹாத்தியில் நடந்ததும் .....

  இதில் மேல்நாடு போல அதைப் படம் பிடித்தது அதை விடக் கொடுமையே.

  ஜீரணிக்க முடியவில்லை.

  ReplyDelete
 8. இந்த தகவலை நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது நண்பா....என்ன இருந்தாலும் குற்றம் புரிந்தவனுக்கு தண்டனையும் கண்டனமும் கொடுத்தே ஆகவேண்டும்.

  ReplyDelete
 9. nanpaa!

  ivanai kallaaal
  adiththu kolla vendaamaa!?
  entra kopam purikirathu!

  ithai thaan islaam
  solluthu!

  athai thaane -
  intru ulakam ennamo...
  solluthu...
  ivanai adikkalaam mithikkalaam-
  eththanai eththanai naayikal engenglaamo-
  theriyavae seykirathu.....

  ReplyDelete
 10. நான் ஒரு ஈழத்தமிழன் எனக்கு கருணாநிதி மீது அளவு கடந்த வெறுப்பு ஆனால் அதற்காக அவரை ஒருமையில் அழைக்கவோ திட்டவோ தயாராக இல்லை. எமக்கு விரோதியாக இருந்தாலும் அவரை ஒருமையில் அழைப்பது, திட்டுவது நாகரிகமற்ற செயலாகும். இது தமிழர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்று தாங்கள் கூறுவது சரியல்ல. எல்லா இனங்களிலும், மொழிகளிலும் இமாதியான பிரச்சினை உள்ளது. தமிழில் நான் சமீபத்தில் பார்த்த வலை தளம் மிக மோசமான தரத்தில் உள்ளது. அதன் சுட்டியை தருகின்றேன்(http://marmayogie.blogspot.com/)

  ReplyDelete
 11. நாளை இரவு நம் பதிவுக்கு வரவும். உங்களுக்கு மொய் உண்டு. இன்று நிறைய உங்கள் பதிவுகள் படித்தேன். உங்கள் உண்மையான திறமைகளை கொஞ்சம் தான் எப்போதும் வெளியே காட்டிக் கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog