Thursday, June 6, 2013






பதிவர்களே மரணம் என்பது தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறதா?

அடுத்து அடுத்து பதிவர்களின் மரணம்  மட்டுமல்ல சில நண்பர்களின் மரணம் கூட சில சமயங்களில் என் மனத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.. இப்படி பதிவர்கள் இறக்கும் போது நாம் அவர்களைப் பற்றி தெரிந்து இருந்தால் அஞ்சலி என்ற பெயரில் அவர்களைப் பற்றி  பதிவுகளைப் எழுதி அவர்களின் படங்களை போட்டு செல்கிறோம் அல்லது அவர்களது நெருங்கிய நண்பர்களாக இருந்தால் அவர் இறுதி சடங்கு நடக்கும் தினத்தில் யாரும் பதிவுகள் போட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுவிப்பதுடன் நமது செயல் முடிந்துவிடும். இது ஒரு தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது.

இதை படிப்பவர்களிடம் இப்போது ஒரு கேள்வி. நீங்களோ அல்லது உங்களின் நண்பர்களோ 35 வயதிற்குமேற்ப்பட்டவரா? அப்படியானால் நீங்கள் எப்போது கடைசியாக மருத்துவ பரிசோதனை  பண்ணிக் கொண்டீர்கள் என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று ஒரு முறை யோசியுங்கள்.

இப்போது நானே அதற்கு பதிலை சொல்லுகிறேன் அதை மட்டும் சரியா என்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்.உங்கள் பதில் அதற்கு இல்லையென்றுதான் இருக்கும்.

இப்பொதெல்லாம் வயது 35 முதல் 40 வயது உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது உடற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் என்பது எல்லாம் உங்களுக்கு  நன்கு தெரிந்ததுதான் காரணம் உலகெங்கும் நடக்கும் பல விஷயங்களை உடனுக்குடன் படித்து செய்திகள் வெளியிடும் உங்களுக்கு இந்த விஷயம் தெரியவில்லை என்றால்தான் அதிசயம்தான்

இப்படி தெரிந்த உங்களிடம் என்ன இப்படி தெரிந்து இருந்தும் ஏன் பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்று கேட்டால் போப்பா இந்த டாக்டரிடம் போனால்  நமக்கு கொழுப்பு சத்து அதிகமாக இருக்கிறது அல்லது சர்க்கரை வியாதி இருக்கிறது என்று நமக்கு இல்லாததை எல்லாம்  இருப்பதாக சொல்லி நம்மை பயமுறுத்தி விடுவார்கள். நான் இப்போது நன்றாகத்தான் இருக்கிறேன் அதனால் இந்த பரிசோதனை மண்ணாங்கட்டி எல்லாம் தேவை இல்லை. இதை பெரிசா நீ வேற சொல்ல வந்துட்ட போப்பா போ என்று சொல்லுவீர்கள்.

இப்படி சொல்லி தப்பித்தல் தற்காலிகமானதுதான் என்பதை எப்போது உணரப் போகிறிர்கள் நண்பர்களே. இதில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது என்ற போதிலும் நீங்கள் தப்பிக்க முயற்சித்து கொண்டிருக்கிறீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால் பூனை கண்ணை முடிக் கொண்டால் உலகம் இருண்டு கிடக்கும் என்று நினைப்பது போல அல்லவா இருக்கிறது நாம் குடிசைவீட்டில் தங்கி இருக்கும் போது எங்காவது ஒரு சிறு புகை வந்தால் நாம் அதனை உடனே என்ன வென்று  கவனிக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் சிறிது நேரத்தில் வீடே பற்றி ஏரிந்து போக வாய்ப்பு உண்டல்லவா? அது போலத்தான் நம் உடம்பும் கவனிக்க வேண்டிய நேரத்தில் கவனிக்கவில்லையென்றால் குடிசையை போல மயானத்தில் நமது உடலை எரிக்க வேண்டியது வரும்.


நம்மில் அநேகம் பேர் வாழ்க்கையின் யதார்த்தங்களை சந்திக்க இயலாத கோழைகளாகவே இருந்து கொண்டிருக்கிறோம் என்பது மிக கசக்க கூடிய உண்மை.. இப்படிபட்ட  உண்மையை எதிர் கொண்டு நடவடிக்கையை இப்போதே எடுக்க வேண்டும் அப்படி இல்லையெனில் பிரச்சனை வந்த பின் நாம் இப்படி செய்து இருக்க வேண்டும் அல்லது அப்படி செய்து கொண்டிருக்க வேண்டும் என்று பேசி வருத்தப்படத்தான் முடியும்

அதனால் தற்காலிகமாக தப்பிக்க நினைப்பதைவிட வாழ்வின் நிதர்சனத்தை எதிர் கொள்வது மிகவும் அவசியம் நண்பர்களே.

நண்பர்களே வாழ்க்கை வாழ்வதற்கே...அதானால் உங்கள் உடம்பை மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் அனைவரையும் உடல் நலனில் அக்கறை காட்டச் சொல்லுங்கள்  நான் சொல்ல வரும் விஷயத்தை நீங்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள் என்பதால் இன்னும் நிறைய எழுதலாம் என்றாலும் இதோடு நிறுத்து கொள்கிறேன்


இந்த பதிவில் நான் சொல்லி இருக்கும் கருத்து சம்பந்தமாக நீங்கள் ஏதும்  அல்லது மேலும் சொல்லவிரும்பினால் பின்னுட்டமாக இடுங்கள் அது இந்த பதிவை படிப்பவர்களின் கண்களை மேலும் திறக்க உதவும். நன்றி

அன்புடன்
மதுரைதமிழன்
டிஸ்கி : இதை படித்தவர்கள் உடல்நிலையை பரிசோதிக்க செல்லுங்கள் உங்கள் நண்பரையும் அழைத்து செல்லுங்கள். போடா போ உனக்கு வேற வேலை இல்லை என்று சொல்லும் 40 வயதை தாண்டிய பதிவர்களா முடிந்தால் உங்களைப் பற்றிய விபரங்களை போட்டோவுடன் எனக்கு அனுப்பி வைத்தால் எதிர்காலத்தில் பதிவு போட ஏதுவாக இருக்கும்.



12 comments:

  1. உங்கள் கருத்துடன் நான் நூறு சதம் ஒத்துப் போகிறேன். மரணம் என்றாவது ஒரு தினம் தவிர்க்க இயலாததுதான். என்றாலும், வாழும் நாட்களில் பிரச்னையின்றி வாழ்வதற்காக நிச்சயம் ஆண்டுக்கொரு முறை பரிசோதனை செய்து கொள்ளத்தான் வேண்டும்! அவசியமான கருத்தை அக்கறையுடன் வலியுறுத்திய உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

    ReplyDelete
    Replies
    1. தலைவரே சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது??

      Delete
  2. மருத்துவ பரிசோதனை என்பது எத்தனை முக்கியமோ அன்றாட வாழ்வில் மன அழுத்தமின்றி இயல்பாக வாழ்வதும் அதை விட முக்கியம்.

    ReplyDelete
  3. அஹா இதற்காகத்தான் ஒரு
    தொடரே எழுதிக்கொண்டு உள்ளேன்
    பத்து நாட்களில் வாழ்வைத் தலகீழாக
    புரட்டிப்போட்ட என் நண்பனின் கதைதான் அது
    மிக அருமையாக சுருக்கமாக ஆயினும்
    மனதில் நிலக்கும்விதமாக சொல்லிப்போனதற்கு
    மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி நண்பரே

    ReplyDelete
  5. உங்க கூற்று மிகச்சரிதான் சகோ! அப்பா மருத்துவ துறையில இருப்பதால, கடந்த 2 வருடமாக மாதம் தவறாமல் ரத்தம், சிறுநீர், ரத்த அழுத்தம் பரிசோதிப்போம். வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை பண்ணிப்போம். உங்க மாப்பிள்ளையை கூப்பிட்டா ஏன் தண்ட செலவு,இப்படிலாம் டெஸ்ட் பண்ணா அவன் எதாவது குண்டை தூக்கி போட்டுட்டா என்ன செய்யன்னு கேப்பாங்க.

    ReplyDelete
  6. உபயோகமான தகவல்..நன்றி

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு. மருத்துவ பரிசோதனை என்பது முக்கியம்.

    அதுவும் நீரிழீவு, கொலஸ்டரோல், பிரசர் உள்ளவர்கள் டொக்டரிடம் செக்கப் செய்து ஆலோசனையுடன் மருந்துகள் எடுக்க வேண்டும் என்பதும் முக்கியம். தாங்கள் மேதாவிகள் என நினைத்து தாங்களாகவே மருந்துகளை கூட்டிக் குறைத்துப் போடுவார்கள் சிலர். இதனால் பின்னர் பாதிக்கப்படுவது அவர்கள்தான் என்பதை உணர்வதில்லை. .

    ReplyDelete
  8. காலை ஆட்டிக்கிட்டே இருந்தாதான் உயிர் இருக்கிறதுன்னு நினைப்பாங்க !
    பதிவர்களும் பதிவு போட்டு கொண்டே இருக்கணும் ,இல்லைன்னா 'பூட்ட கேஸ் 'முடிவு செய்து விடுவார்கள் !ஆரோக்கியம் மிகவும் அவசியம்தான் !

    ReplyDelete
  9. உண்மை தான். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்வது மிக நல்லது.

    ReplyDelete
  10. நான் கடைசியாய் 2009 ஆம் ஆண்டு பரிசோதித்து உங்கள் பதிவை படித்த பின்பு மறுபடி பரிசோதனை பண்ண தோன்றுகிறது நன்றிண்ணே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.