Saturday, June 29, 2013



சுதந்திர அமெரிக்காவில் இந்தியாவை போல சுதந்திரம் இல்லையே? (விதிகள் மீறப்படுவதற்கா?)

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதே என்று இந்தியாவில் உள்ள பெரியவர்கள் சொல்லுவார்கள். இப்படி பெரிசுகள் சொல்லவதையெல்லாம் கேட்டு நடக்காத ஆண்கள் இந்த விஷயத்தில் மட்டும் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். நானும் இந்தியாவில் இருக்கும் போது அப்படிதான் இருந்தேன். ஆனால் அமெரிக்கா வந்ததும் இங்குள்ள மக்களை பார்த்து நானும் மாறிவிட்டேன். இப்படி இந்தியாவில் நான் இருக்கும் போது செய்ததை நினைத்தாலும் இன்னும் எனக்கு வெட்கமாக இருக்கிறது.
 
இந்தியாவில் வசிக்கும் போது குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட ஏற்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இங்கு வந்து நல்ல பழக்கத்தை கற்றுக் கொண்ட பின் இப்போது இந்தியா வந்தாலும் யாருமே பார்க்க முடியாத இடமாக இருந்தாலும் கூட வெளி இடங்களில் மூத்திரம் போவது கூட கிடையாது அப்படிதான் கடந்த முறை இந்தியா வந்த போது நண்பர்களுடன் கோயம்புத்தூர் அருகில் இருக்கும் கடம்பூர் மலையில் உள்ள அரசினர் கெஸ்ட் ஹவுஸில் 2 நாட்கள் தங்கி இருந்த போது யூரின் போக வேண்டுமென்றால் பாத்ரூக்கு போகும் போது நண்பர்களால் கேலி செய்யப்பட்டேன். எனக்கு என் நண்பர்கள் அந்த காடுகளில் யூரின் போகும் போது நான் அவர்களை கேலி செய்தேன்

ஒன்று மட்டும் அன்று தெரிந்தது நல்லது எது என்று நமக்கு புரியும் வரை கெட்டதும் நமக்கு நல்லவையாகவே இருக்கின்றது என்பது.

இது நண்பர் பால கணேஷ் எழுதிய விதிகள் மீறப்படுவதற்கா? என்ற பதிவை படிக்கும் போது என் மனதில் சட்டடென்று உதித்தது. அதனால் அதை இங்கு பதிவாக வெளியிடுகிறேன்.

இந்த பதிவை எழுதி முடித்ததும் மனதில் ஒரு சிறு கேள்வி. நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் வெளி இடத்தில் யூரின் போனால் என்ன தண்டனை என்று  நெட்டில் பார்த்த பொழுது என் கண்ணில் பட்டது இதுதான். அதை அப்படியே இங்கு தருகிறேன்



No New Jersey State statute explicitly prohibits urinating in public. The closest that the New Jersey Code of Criminal Justice comes to the subject of urinating in public is lewdness. We discuss lewdness on a different page on this site.

Although no State statute prohibits urinating in public, local ordinances enacted by numerous New Jersey towns do. New Jersey local government law allows towns to adopt such ordinances, and to specify punishments for violating them. The maximum punishment that a local government can impose is limited by New Jersey local government law. More particularly, N.J.S. 40:49-5 allows a municipality to specify fines of up to $2,000.00, and jail for up to ninety days, for violating a local ordinance. The town can also require unpaid community service for up to ninety days.

Although “only” a municipal ordinance, a conviction for urinating in public canurinating in public in NJ New Jersey Criminal Lawyer and NJ Criminal Defense Lawyer. limit future school, employment, or housing opportunities. Urinating in public is a charge that accused persons should therefore take seriously. Criminal Lawyers in New Jerey™ are available to assist persons charged with this offense.

We give some examples, below, of ordinances relating to urinating in public. New Jersey has hundreds of towns. We limit our examples to just a few urinating in public ordinances. These ordinances are typical. Persons charged in a different town with urinating in public can obtain the text of the ordinance from the town clerk, from a New Jersey lawyer and, often, through the internet.
Section 170-5 Nuisances Specified.

Any thing, condition or act which is or may become injurious or hazardous to public health is hereby declared to be and is defined as a nuisance. The following specific things, conditions and acts, each and all of them, are hereby declared to be and are defined as nuisances:NJ lawyer urination in public lawyer for NJ ordinances of New Jersey

Q: Urinating or defecating in public places.

(1) It is unlawful for any person to urinate or defecate on a public street, sidewalk or in any other public place or in any other places opened to or use by the public, other than when using a toilet, urinal or commode located in a rest room, bathroom or other structure enclosed from public view.

(2) The enforcement provisions of this Subsection Q shall not apply to the following individuals who may not be able to adequately control the bodily functions that control urination or defecation:

(a) Children nine years of age or younger;

(b) Persons of any age who violate this ordinance due to a verified medical and/or psychiatric condition.

Section 170-6 Nuisances prohibited.

No person shall create, commit, maintain or suffer to be created, committed or maintained any nuisance as defined in the foregoing section of this chapter.

Section 170-25 Violations and Penalties.

A. Any person who shall violate any of the provisions of this chapter shall, upon conviction, be subject to a fine or penalty not to exceed $500, and not less than $2 for each offense. Each day or part thereof during which such violations shall continue shall constitute a separate offense.

B. Any person who shall neglect or refuse to pay any fine imposed in accordance with the preceding subsection shall he subject to imprisonment in the county jail for a period not to exceed 90 days. Any person who shall have been twice convicted within the space of six months of having violated this Code may, in addition to the imposition of the penalty prescribed in Subsection A, be imprisoned in the county jail for any number of days not exceeding one for each dollar of the penalty.


 

அன்புடன்
மதுரைத்மிழன்

7 comments:

  1. நல்ல கழிப்பறைகள் எங்கும் இருந்தால் பொதைவில் சிறுநீர் கழிக்க அவசியம் இல்லை. ஆங்காங்கே இருக்கும் கொஞ்ச நஞ்ச கழிப்பறைகள் அதற்கும் ஒன்றிரண்டு ரூபாய்கள் உள்ளே சென்றால் குடலே வாய் வழி வருமளவு கப்பு எனில், நம்மவர் தான் என்ன செய்வர், அடக்குவோர் அடக்குவர், அடங்காதோர் நோய்தனை எங்கும் பரப்புவர், பாரத சமுதாயம் வாழ்க வாழ்கவே !!!

    ReplyDelete
    Replies
    1. நாம் அரசாங்கத்தை இதற்காக வற்புறுத்தி பல போராட்டங்களை நடத்தி பொதுகழிப்பிடங்களை கட்டச் செய்யவேண்டும். அது போல ஹோட்டல்களும் வணிக வாளாகங்களும் பொதுகழிப்பறையை கட்டி அதை நல்ல முறையில் மெயிண்டையின் செய்ய வேண்டும். மேலும் அங்கு வந்து செல்லும் பொதுமக்களும் அதை முறையான முறையில் பயன்படுத்த வேண்டும் இது நிச்சயம் முடியும்

      Delete
  2. Today Happen to c your post... Entertaining.

    God bless. Will follow your blogs and share my opinion also.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் மனதிற்கு சந்தோஷம் தரும் கருத்துக்கும் மிகவும் நன்றி. எனது பதிவுகள் சமுகத்தை திருத்தவோ அல்லது யாருக்கும் அறிவுரை வழங்கவோ எழுதப்படுவதில்லை. அது போல தமிழை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் எழுதப்படுவதில்லை. ஆனால் காலத்திற்கு ஏற்ப பணம் செலவு செய்யாமல் படிக்க பொழுது போக்க சுவைபட விஷயங்களை தருவதுதான் எனது நோக்கமும் பொழுது போக்கும் கூட அவ்வளவுதாங்க..

      உங்களுக்கு எனது பதிவுகள் பிடித்து இருந்தால் அதன் பின் நேரம் இருந்தால் நன்றாக இருந்தால் பாராட்டையும் அப்படி இல்லையென்றால் கண்டங்களையும் தெரிவிக்கலாம் எப்போதும்.

      நன்றி

      Delete
  3. திரு.நிரஞ்சன் தம்பி குறிப்பிட்டது போல் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் செய்து தரப்படும் வசதிகள் இங்கு இல்லை என்பது மிக உண்மைதான். ஆனால் இதுபோல ஆயிரம் காரணங்கள் கூறி தவறான செயலை நியாயப்படுத்துவதை என் மனம் ஏற்க மறுக்கிறது. காரணங்கள் சொல்ல நினைத்தால் ஆயிரம் கற்பிக்கலாம். ஆனால் ஒழுங்கைக் கடைப்பிடிக்க நம் மனம் பக்குவப்பட வேண்டும். இதே இந்தியாவில், தமிழ்நாட்டில் வசிக்கும் நான் இப்படி சாலையோரங்களில் ஜிப்பை இறக்குவதில்லை. பிறகு கம்பத்தினருகில் நின்று காலைத் தூக்குவதற்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கொடுத்திருப்பது போல அபராதமும் சிறை தண்டனையும் கிடைக்குமெனில்தான் நம் (தமிழ்) இனம் திருந்துமெனில் அது இன்றைய அவசியத் தேவை என்பது என் எண்ணம். உங்கள் கருத்தைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழா!

    ReplyDelete
    Replies
    1. அரசாங்கமும் மக்களும் நினைத்தால் இதை நிச்சயம் மாற்ற முடியும். நான் சிறுவனாக இருக்கும் போது மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தது அப்போது மதுரையில் பல இடங்களில் பொதுகழிப்பறையை கட்டி இருந்தனர். அதை அப்போது பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம். ஆனால் அது காலப்போக்கில் கவனிப்பு இல்லாமல் கயவர்களின் இடமாக மாறி போய்விட்டது

      அதனால் அரசாங்கமும் மக்களும் மனதுவைத்தால் இதைசெயல்படுத்தலாம்

      Delete
  4. அருமையான பதிவு! மனங்கள் மாறினால் மாற்றங்கள் நிச்சயம் வரும்! திறந்தவெளியில் சிறுநீர் கழித்து சுகாதார கேடை விளைவிப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் மாறுவார்கள்! நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.