Monday, June 17, 2013




 
அப்படி என்ன கோபங்கள் இவர்கள் இருவருக்குள்ளும் ( கலைஞர் Vs சிதம்பரம் )

தமிழகத்தில் ஒய்வு இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது கலைஞரும் அவர் வீட்டில் உள்ள பேக்ஸ் மிஷினும் டெலிபோனும் என்பது உலகம் அறிந்த செய்தி ஆனால் அந்த மூன்றும் ஒரு நாள் ஒய்வு எடுத்து விட்டன என்பது அதிசய செய்தி. அந்த நாளில்தான் தமிழர்களின் மரபை கட்டிகாக்கும் கலைஞர் அந்த மரபை போட்டு உடைத்தார்.அந்த நாள் எந்த நாள் என்று அறிய பலருக்கும் அறிய ஆவல்தான். அந்த நாள் ஜூன் 7ம் தேதி ஆகும் அப்படி என்ன அந்த நாளில் நடந்துச்சுன்னா


மத்திய நிதி அமைச்சர் .சிதம்பரத்தின் தாயார் லட்சுமி (வயது-92), ஜூன் 6ம் தேதி, வியாழக்கிழமை நள்ளிரவு காலமாகி விடுகிறார். மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் செய்திகள் வெளியாகின்றன. தமிழ்நாட்டில் என்ன  நடந்தாலும்  அந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து தன்னையும் அந்த விஷயத்துக்கு ஈடாக தலைப்புச் செய்தியாக்கி விடுவது  கலைஞரின் வழக்கம்.

எந்த மரண வீடாக இருந்தாலும, அந்த வீட்டுக்கு முதல் ஆளாகச் சென்று மாலை போட்டு அதை படம் எடுத்து பத்திரிகை குறிப்புடன்  எல்லா நாளிதழுக்கும் அனுப்பி வைக்கும் பழக்கமுடைவயவர் தான் கலைஞர். யார் மறைந்தாலும், அந்த செய்தி, பத்திரிகை அலுவலகங்களுக்கு வருவதற்கு முன்னால் தனது இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துவிடுவார் கலைஞர். ஆனால், "வேட்டி கட்டிய தமிழர்' என்றும், "செட்டிநாட்டுச் சீமான்' என்றும் ஒரு காலத்தில் புகழ்ந்தவரின் தாயார் மரணத்துக்கு துக்கம் கேட்கப் போகாதது இருக்கட்டும், அடுத்த வாரிசையும் அனுப்பவில்லை. இரங்கலும் தெரிவிக்கவில்லையே ஏன்?

பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பலரும் .சிதம்பரத்துக்கு தொலைபேசி மூலம் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர். மற்றும் பல தலைவர்களும் தங்கள் வருத்தங்களை தொலை பேசிமூலம் செய்திதாள்களின் மூலமும் தெரிவித்தனர். இந்த விஷயம் எல்லா பத்திரிகைகளிலும் வந்தது.

ஆனால், அந்த பட்டியலில் கலைஞர் அல்லது ஸ்டாலின் அல்லது தி.மு..வின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட சென்றதாகவோ அல்லது வருத்தம் தெரிவித்தாகவோ பத்திரிகைகளில் செய்தி வரவில்லை. சரி. ஒரு வேளை எல்லா பத்திரிகையும் கலைஞர் வருத்தம் தெரிவித்த செய்தியை இருட்டடிப்பு செய்து விட்டது என்று நினைத்தாலும் முரசொலியிலும்  சிதம்பரத்தின் தாயார் மறைவு செய்தியே அங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. 

 சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய போது விஜயகாந்த் ஒரு கும்பிடு போட்டார். அவ்ளோதான், அதை லபக் என்று போட்டோ பிடித்து, பத்திரிகை குறிப்பு தயாரித்து போட்டோவையும் இணைத்து அனுப்பியது தி.மு.. அலுவலகம். மணிவன்னனின் மறைவுக்கு ஸ்டாலின் ,பாலு மற்றும் பல திமுக தலைவர்களை அனுப்பி வைத்தார் கலைஞர்.அப்படிப்பட்ட கலைஞர், ஏன்.சிதம்பரத்தின் தாயார் மறைவுக்கு செல்லவில்லை. அட குறைந்தபட்சம் ஓர் இரங்கல் அறிக்கையாவது வெளியிடவில்லையே அது  ஏன்?

கருணாநிதிக்கு அந்த தேதியில் உடல் நலக்குறைவு என்றுபார்த்தால் அதுவும்  இல்லை...அட... அப்படியே அவருக்கு உடல் நலத்தில் குறைவு என்றாலும், ஸ்டாலின் சென்றிருக்கலாமே? அவரும் போகவில்லையே? ?

அதேபோல, குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி தலைநகர் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னபோது, .சிதம்பரம் மட்டும் வாழ்த்துத் தெரிவிக்காதது ஏன்?

இதற்கு மக்கள் மத்தியில் பல காரணங்கள் உலாவருகின்றன. இவர்கள் இருவரிடமும் ஏன் இந்த பிரிவினை என்று பார்த்தால் அதில் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன . இருவருக்குள்ளும் அப்படி என்ன கோபங்கள் அதிருப்திகள் ?

சிதம்பரத்தின் கோபத்திற்கான காரணங்கள்

கலைஞரை  கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி, கூட்டணியிலிருந்து விலக வேண்டாம் என்று சமரசம் செய்ய, டெல்லியிலிருந்து  .சிதம்பரம், குலாம் நபி ஆசாத், .கே.அந்தோணி ஆகியோர் வந்தனர். எல்லாவற்றையும் சரி சரி என்று கேட்டுவிட்டு வந்தவர்கள் டில்லி போக விமானம் ஏறுவதற்கு முன்பு கூட்டணிக்கு எதிராக அறிக்கை விட்டு பின் விலகியது சிதம்பரத்திற்கு அதிக வருத்தத்தை கொடுத்தது என்றும் அதானால்தான் அவர் கலைஞ்சரின் 90வது பிறந்த தினத்தில் வாழ்த்து சொல்லவில்லை என்றும் செய்திகள் உலா வருகின்றன.

கலைஞரின் கோபத்திற்கான காரணங்கள்

1. தனது மனைவியை கோர்ட் விசாரணைக்காக டில்லி வரச் சொன்னது. அப்படி வாரமல் இருக்க செய்ய சிதம்பரம் உதவி செய்யவில்லை என்ற கோபம்

2. ராஜ்ய சபா சீட்டிற்காக கனிமொழிக்கு ஆதரவு தராமல் பின் வாங்குகிறது காங்கிரஸ் என்ற கோபம்.

3. சோனியாவின் மருமகன் சிதம்பரத்தின் மனைவி மகன் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தவறு செய்தாலும் அவர்கள் கோர்ட்டு வாசப்படியையோ அல்லது சிறைப்படியையோ அடையாமல் காப்பாறுகிறார்கள் ஆனால் தன் குடும்ப உறுப்பினர்களை மட்டும் அலையாய் அழைக்கழிக்கிறார்கள் என்ற கோபமும்

3. ஸ்பெக்டர்ம் ஊழலில் இருகட்சிகளுக்கும் பங்கு இருந்தும் திமுக கட்சியை மட்டும் அதற்காக சேதப்படுத்துகிறார்கள் என்ற் கோபமும் தான் காரணம்

எதுவாக இருந்தாலும் ஒரு துக்கக்கரமான விஷயத்தில் பங்கெடுப்பது தான் தமிழர்களின் மரபு. அந்த மரபை கட்டிக்காப்பது போல நடித்துக் கொண்டிருக்கும் கலைஞர் ஏன் கலந்துக் கொள்ளவில்லை. அட, போக முடியவில்லை என்றாலும் இரங்கல் செய்தியாவது அனுப்பி இருக்கலாமே

அது ஒரு நல்ல தலைவருக்கு அழகா?

அன்புடன்
மதுரைத்தமிழன்
DC | K. Karthikeyan | 09th Jun 2013

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.