Wednesday, June 5, 2013







பேஸ்புக்கில் வெளிப்படையாக கருத்து சொல்லும் "அதிமேதாவிகள்"

வாழ்க்கையில் சிலர் மற்றவர்களிடம் பேசும் போதோ  அல்லது பேஸ்புக், டிவிட்டரில்  கருத்தை சொல்லும் போதோ, "நாம் கவனித்து பார்த்தால், சில பேர் தாங்கள் வெளிப்படையாக பேசுகிறேன் அல்லது சொல்லுகிறேன் என்று சொல்லி ,முகத்தாட்சாண்யம் பார்க்காமல் பட்டு என்று சொல்லிவிடுவேன் என்று சில கருத்துக்களை சொல்லுவார்கள். இப்படிபட்ட வெளிப்படையான பேச்சை மக்களால்  ஏற்றுக் கொள்ளா மூடியவில்லை

காரணம் இப்படிபட்ட சம்பாசணைகளை, நமது வாழ்க்கையில் அன்றாடம் பல நிகழ்ச்சிகளில், இடங்களில் கேட்கிறோம் & பார்க்கிறோம். இதில் ஒளிந்துள்ள பட்டவர்த்தாமான உண்மை என்னவென்று பார்த்தால், இப்படி வெளிப்படையாக  பேசுபவர்களிடம்  அவர்கள் சொல்லிய கருத்துகளுக்கு மாற்றாக திருப்பி நாம் வெளிப்படையான கருத்துக்களை சொன்னால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதனால் உடனே அவர்கள் நம்மை நோக்கி சொல்வது நமக்கு ஒன்றும் தெரியவில்லை சரியான முட்டாள் அல்லது நம்மிடம் மிகுந்த ஆணவம் இருக்கிறது என்று சொல்லி பேச்சை திசை திருப்புவார்கள்

இப்படி நாம் வெளிப்படையாக கூறும் சாதாரண உண்மைகள் கூட அவர்களுக்கு ஏற்றுக் கொள்ள மிக கடினமாக இருக்கின்றன. அப்படிபட்ட சூழ்நிலை நிலவும் போது அவர்களின் வெளிப்படையான பேச்சை மட்டும் மற்றவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். நல்லா யோசிச்சு பாருங்கள் மக்களே

உண்மையை சொல்லப் போனால் வெளிப்படையாக பேசுவதில் தப்பில்லை ஆனால் அப்படி பேசும் போது நாம் சொல்லும் கருத்துக்கள் மற்றவர்களை காயப்படுத்தும் விதத்தில் சொல்லும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. அதனால் நாம் வெளிப்படையாக பேசும் போது அதில் நம் பக்கம் நியாம் இருந்தாலும் அதை பக்குவமாக அவர்களை காயப்படுத்தாமல் சொல்ல முயற்சிக்க வேண்டும். நீங்கள் சொல்லும் கருத்து அடுத்தவர்களை காயப்படுத்தும் போது அவர்களால் அதை நீங்கள் எந்த அர்த்தத்தில் சொன்னிர்கள் என்று அலசி ஆராய்ந்து பார்த்து கொண்டிருக்க முடியாது.

அதனால் ஒருவரிடம் கருத்துகளை சொல்லும் போது எதை, எப்படி, எப்போது, எவ்வாறு எடுத்து சொல்லுகிறோமோ அதைப் பொறுத்துதான் அதற்கான விளைவுகளும் இருக்கும்

எனவே நாம் மட்டும் அதிமேதாவி என்று நினைக்காமல் நம் எதிரில் இருப்பவரும் எல்லாம் தெரிஞ்சவர்தான் என்ற எண்ணதோட உங்கள் உரையாடல்ளை வாழ்க்கையிலோ அல்லது பேஸ்புக்கிலோ டிவிட்டரிலோ அல்லது வலைத்தளத்திலோ சொல்லுங்கள்

இது எனது சாதாரண எண்ணம்தான்  எனது அதிமேதாவிதனத்தால் இதை சொல்லவில்லை.... இதைபடிப்பவர்கள் உங்கள் மனதில் தோன்றுவதை இங்கு அழகாக பதியலாமே

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. தன்னை அதிமேதாவியாக காட்ட நினைபவர்களால் தான் சார் இந்த பிரச்சனையே துவங்குகிறது.. பேஸ்புக் உலகம் மூலம் மொத்த உலகின் முகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது அவ்வளவே

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சீனு அண்ணா,தங்கள்அறிவாளித்தனத்தை காட்ட இவர்கள் மற்றவரை முட்டாளாக்கி விடுவார்கள்

      Delete
  2. நாம என்ன சொன்னாலும் அதிமேதாவிகள் கேட்க மாட்டார்கள்

    ReplyDelete
  3. இது உமது சாதாரான எண்ணம் இல்லை சரியான எண்ணம்தான்.

    ReplyDelete
  4. சரியான சிந்தனை.

    அடுத்தவர்களின் தவறினைச் சுட்டிக்காட்டுபவர்கள், தனது தவறினை உணர்வதும் இல்லை! சொன்னால் அவர்களுக்குப் புரிவதும் இல்லை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.