Tuesday, June 18, 2013






இணையத்தின் இதயதுடிப்பு...

எச்சில் பண்டங்களுக்கு ஆசைப்பட்டு எச்சில் இலையாக மாறும் தேமுதிக கட்சிக்கார்கள்

ஆற்றுச் சுழலில் சிக்கி கொண்டவனும் ஜெயலலிதா பிடியில் சிக்கி கொண்டவனும் ஒன்றுதான்.


இதை அறியாதவர்கள் தமிழகத்தில் இருந்தால் அவர்கள் வடிகட்டின முட்டாள்களே. அப்படிபட்ட முட்டாள்கள் தேமுதிக கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் விபரம் தெரியாமல் விளக்கை நோக்கி செல்லும் விட்டில் பூச்சிகள் போல ஜெயலலிதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை வெளிச்சத்தை நோக்கி எடுத்து செல்வதாக இருட்டை நோக்கி செல்லும் அப்பாவிகளாக இருக்கிறார்கள்.


இந்த காலத்தில் எம் எல் ஏக்களாக வருபவர்கள் தாங்கள் அரசியலுக்கு வருவதையே ஒரு பிஸினஸாக கருதிவருகின்றனர். அதானல் அதில் தாங்கள் முதலிடு செய்ததை உடனடியாக லாபத்துடன் எடுத்துவிட வேண்டும் என்று துடிக்கின்றனர் அதன் விளைவே மாற்று கட்சியினருக்கு ஆதரவு தருதல் என்ற நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். இதில் முன்னணியில் இருப்பவர்கள் விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் அதிமுகவோட கூட்டணி வைத்து வெற்றி பெற்றவர்கள். அவர்கள் கூட கூட்டணி வைத்தால் தாங்கள் நல்ல அறுவடை பண்ணலாம் என்று கனவோடு தேர்தலில் நின்று அதிகம் செலவழித்து வெற்றி பெற்றார்கள். தாங்கள் விட்ட பணத்தை எப்படியும் பெற்றுவிடலாம் என்று கனவோட இருந்தவர்களின் வாழ்க்கையை அப்படியே திருப்பி  போடச் செய்துவிட்டார் விஜயகாந்த்..

அதன் விளைவாகவே பல தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தெரியாது இந்த புது வாழ்க்கை நீண்ட காலம் சந்தோஷத்தை தரப் போவதில்லை என்று.

இவர்களுக்கு தெரியவில்லை ஜெயலலிதாவை அதிமுக கட்சியின் தலைவராக தங்கள் உயிரையும் பணயம் வைத்து செயல் பட்ட எம்ஜியார் அமைச்சரவையை அழகு பார்த்த நபர்கள் இப்போது எப்படி எங்கே இருக்கிறார்கள் என்று. தத்து எடுக்கப்பட்ட மகனும் அவர் குடும்பத்தாரும் சரி தன் தோழியும் அவர் குடும்பதினாராகட்டும் அல்லது அவரை ஆதரித்தவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களின் நிலமையை கூர்ந்து பார்த்தால் இந்த முடிவை எடுத்து இருக்க மாட்டார்கள் இந்த தேதிமுக கட்சியை சார்ந்தவர்கள்


இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து இருந்தால் இப்ப இல்லையென்றாலும் எதிர்காலத்தில் ஆளும் அரசாங்கத்தில் நல்ல வாய்ய்பை பெற  வழிகள் கிடைத்திருக்கும் ஆனால் இவர்கள் ஜெயலலிதாவிடம் கிடைத்த யூஸ் அண்ட் த்ரோவ் தட்டுகளாக மாறி பயன்பாட்டிற்கு அப்புறம் குப்பை தொட்டியை நோக்கி பயணிக்க போகிறார்கள்.. எச்சில் பண்டங்களுக்கு ஆசைப்பட்ட இவர்கள் தாங்கள் எச்சில் இலைகளாக மாறப் போகும் நாட்கள் அதிகம் தூரம் இல்லை என்பதை விரைவில் பிரிந்து கொள்வார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நியாயம் யாருக்கு வேணும்
    பிழைக்க வேணாமா
    அவர் மனைவிக்கும் மைத்துனனுக்கும்
    பதவி தேடி அலைகையில்
    இவர்கள் முதலீட்டு அசலுக்கு லாபம்தேடித்
    திரிகிறார்கள்
    அவ்வளவுதான் வித்தியாசம்
    பேப்பர் தட்டுதான் இப்போ வசதியாயிருக்கு
    இல்லாட்டி கழுவி அடுக்கு யார் கஷ்டப்படுறது

    ReplyDelete
  2. தல இவனுகலாம் நூடுல்ஸ் போல உடனே சம்பாதிக்க நினைக்கும் வியாபாரிகள் போயி தொலையட்டும்

    ReplyDelete
  3. இவங்க எல்லாரும் one time wonder தான்! அவர்களுக்கே அது தெரியும். அதனால் தான் நல்ல விலை கிடைத்தவுடன் போய்விட்டார்கள். இனி எது கிடைத்தாலும் லாபமே. கிடைக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லை!

    ReplyDelete
  4. சரியாய் சொன்னீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. விட்டில் பூச்சிகள் விட்டுத்தள்ளுங்கள் இவை சாவதிர்கேன்ன்றவே வருகின்றன

    ReplyDelete
  6. விட்டில் பூச்சிகள் விட்டுத்தள்ளுங்கள் இவை ச்சாவேதிர்க்காகவே சுத்துகின்றன செத்துத்தொலய்யட்டும்

    ReplyDelete
  7. போட்ட பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் என்று வரும்பொழுது இதெல்லாம் சகஜம். அரசியல் ஒரு unethical வியாபாரம் என்பது தெரிந்தது தானே. ஜெயலலிதா, கருணாநிதி, சோனியா.. எல்லாம் ஒன்று தான். bandhu சொல்வது போல ஒரு மினுக் நட்சத்திரம் இவர்கள். பிழைத்துப் போகட்டும். அப்படி அவர்கள் விஜய்காந்தை நம்பி இறங்கியிருந்தால் - கட்சி தாவுவானேன்? விஜய்காந்த் எப்படிப்பட்ட தலைவர் என்பதி இதிலிருந்து புரிகிறது.
    கடைசியில், இன்னலென்னவோ மக்களுக்குத் தான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.