Monday, June 3, 2013






அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கும் திமுக தலைமையகம்


தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லையென்றாலும் அந்த கட்சி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆனால் நாடாளுமன்றத்தில் அந்த கட்சியின் உறுப்பினர்கள் தேவையான அளவு இல்லையென்றால் அந்த கட்சிக்கு மட்டுமல்ல அந்த கட்சியின் தலைவரின் குடும்பத்திற்கும் வாழ்வா சாவா என்ற பிரச்சனை ஆகி விடும்.


இதை புரிந்து கொண்ட திமுக-வின் தலைமையகம் ஜெயலலிதா அவர்களிடம் இருந்து ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டது. அது தான் விஜயகாந்த கட்சி எம் எல் க்களை விலைக்கு வாங்கும் ஜெயலலிதாவின் பார்முலா. இதையே நாமும் ஏன் பண்ணக் கூடாது என்று திமுக தலைமையகம் யோசித்தது. அதனால் விளைந்ததே அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை விலைக்கு வாங்கும் திமுக தலைமையகம்.

இந்த வியாபாரம் மிகவும் மறைமுகமாக நடைபெறுகின்றது . இந்த வியாபரத்தின்படி அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் அவர்கள் கட்சியில் இருந்தவாரே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உள்குத்து வேலைகளை செய்து அவர்களின் கட்சி வேட்பாளர்களை மண்னை கவ்வ செய்வதுதான் அப்படி செய்வதன் மூலம் திமுக கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதுதான். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் அதிக சீட்டுகளுடன் நுழைந்து தான் நினைத்ததை சாதிப்பதுதான் திமுகவின் தலைமையகத்தின் எண்ணம்

ஜெயலலிதா அவர்களைப் போல அதிக சீட்டுக்களை பெற்றால் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் துளி கூட இல்லாததால் பிரதமர் பதவிக்கு ஆசைபடும் எந்த தேசிய கட்சியும் அவர்களை ஏற்றுக் கொண்டு அதற்கு பதிலாக அவர்கள் கேட்கும் கோரிக்கைகளை அவர்கள் விருப்பபடி செய்து கொடுக்கும்.

அதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக அளவு சீட்டுக்களை அல்ல வாய்ப்புகள் இருப்பதாகவே தோன்றுகிறது.


இந்த கற்பனை செய்தியை அவர்கள்...உண்மைகள் வலைதளத்தின் அரசியல் டிடெக்டிவ் பிரிவை சார்ந்த மதுரைத்தமிழன் அவர்களின் கற்பனையில் உதித்தது. அது இங்கு பதிவாக வந்திருக்கிறது. இது உண்மைச் செய்தி அல்ல கற்பனை செய்தியே

ஆனால் இந்த கற்பனை செய்தி உண்மையான  செய்தியாக மாறக் கூடச் செய்யலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்


எனது முந்தைய பதிவை படிக்காதவர் படிக்க :

ஜெயலலிதா கலைஞருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இப்படி செய்தி வரவேண்டுமோ?

 


2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.