உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, June 1, 2013

கட்சியை வளர்க்க பாடுபடுகிறார் கலைஞர் ஆனால் ஸ்டாலின் ?


கட்சியை வளர்க்க  பாடுபடுகிறார்  கலைஞர் ஆனால் ஸ்டாலின் ?90  வயதை இன்னும் சில நாட்களில் எட்டிப் பிடிக்கும் நிலைகளில் இருக்கும் கலைஞர் இந்த தள்ளாத வயதிலும் கட்சியை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்து வருவதில் அக்கறை காட்டிவருகிறார். அதில் சிறிது குடும்ப நலம் இருந்த போதிலும் கட்சியை வளர்ப்பதற்கு தன் கவுரத்தை பல இடங்களில் இழந்து நின்ற போதிலும் கட்சியை காப்பாற்றுவதில் அவரைப் போல சிறந்த தலைவர்கள் யாருமில்லை என்று சொல்லாம்.

ஆனால் அவரால் கட்சியில் தளபதியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருங்கால கட்சியின் தலைவாராக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாலின் அவர்களின் செயல்களை பார்க்கும் போது எதிர்காலத்தில் திமுகவிற்கு இறங்கு முகத்தைதான் இந்த தலைவர் காட்டுவார் போல இருக்கிறது.

இதற்கு சில காரணங்களை சொல்லாம்.

தலைவன் என்பவன் மக்களால் அல்லது தனது கட்சிகாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் எதிர்காலத்தில் வெற்றியை தேடி செல்ல முடியும் ஆனால் இவரோ நியமிக்கப்பட்ட தலைவராகவே இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் தலைவர்கள் என்று சொல்லும் போது அவர்களுக்கென்ர தனிப்பட்ட திறமைகள்(கவர்ச்சிகள்) இருக்க வேண்டும்.
கலைஞரிடம் சாணக்கியதனமும் எழுத்து பேச்சு  போன்ற திறமைகள் இருந்தன. எம்ஜியாரிடம் இரக்க குணம் இருந்தது. ஜெயலலிதா அவர்களிடம் தைரியமும் யாருக்கும் அடிபணியாத குணமும் இருக்கிறது வைகோவிடம் பேச்சாற்றலும் உண்டு. கனிமொழி அவர்களிடம் நல்ல படிப்பும் தந்தையை போல நல்ல எழுத்தாற்றல் இருக்கிறது.ஏன் அழகிரி அவர்களிடம் அரசியல்வாதிக்களுக்கென்ற அடாவடித்தனம் என்ற தனித்தன்மை இருக்கிறது இது ஒரு தனித்தன்மையா என்று கேட்கலாம் சினிமா படத்தில் ஹீரோக்களை விரும்புவர்களும் உள்ளனர் வில்லன்களையும் விரும்புவர்களும் உள்ளனர். ஆனால் கெளரவ வேடத்தில் வருபவர்களை விரும்புவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஸ்டாலின்  கலைஞரின் பிள்ளை என்ற கவுர வேடத்தை ஏற்று கொண்டு வருகிறாரே  தவிர வேறு ஏதுமில்லை எனலாம்.

தனக்கு தலைவர் பதவி வந்ததும் தனது கூடப் பிறந்த அழகிரி, கனிமொழியை அணைத்து அரவணைத்து தனது அதிகாரத்தை பகிர்ந்து அளித்து செல்லமுடியாதவர் எப்படி கட்சியில் பல எண்ணங்களை கொண்ட உடன் பிறப்புகளை அரவணைத்து செல்ல முடியும் என்பது ஒரு கேள்விக் குறியே! கலைஞரோ தன்னை தலைவனாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொன்ன  அன்பழகனையே தன் அருகில் வைத்து கட்சியின் பொருளார் பதவியை கொடுத்து தைரியமாக தலைவர் பதவியில் எந்த வித சஞ்சலம் இல்லாமல் இருந்து வருகிறார். அன்பழகன் என்ன அவர் கூடப் பிறந்தவார என்ன? ஆனால் ஸ்டாலின் தன் கூடப் பிறந்தவர்களையே சந்தேக கண்ணால் பார்த்து வந்தாரானால் அவரால் எப்படி கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும்.

கனிமொழி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு ஆட்கள் அதிகம் வருவார்கள் என்று அறிந்ததும் அந்த கூட்டத்தையே கலைக்க வைத்த தைரியம் இல்லாதவர் எப்படி தலைவராக இருக்க முடியும் இதே இடத்தில் கலைஞர் இருந்தால் அந்த கூட்டத்தையே எப்படி தனக்கு ஆதரவாக மாற்ற  முடியும் என்று யோசித்து செயல்பட்டு இருப்பார்

கலைஞர் கனிமொழியை எம் பி ஆக்க தனது கவுரவத்தை இழந்தும் ஆதரவு தேடி வரும் நிலையில் எங்கே தன் தங்கை       மீண்டும் மத்திய அரசில் இடம் பிடித்தால் அங்கு தனது அதிகாரம் இல்லாமல் போய்விடும் என்று எண்ணி  பாமாகவின்  கூட்டணிக்காக எந்த திராவிட கட்சிகளும் காத்திருக்கவில்லை என்று அறிவித்ததன் மூலம் ஸ்டாலின் அவர்கள்  வெண்ணை திரண்டு வரும் நிலையில் தாளியை உடைத்தது போல உடைத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த் மைத்துனருக்கு அந்த சீட் போய்விட வேண்டும் என்று திரை மறைவு வேலையிலும் இறங்கியதாக செய்திகள் உலா வருகின்றன.அடுத்தாக குஷ்பூ சொன்ன கருத்திற்காக அநாவசியமாக அதில் தலையிட்டு மூக்குடைப்புபட்டது வருங்கால தலைவருக்கு தேவையில்லாத விஷயம்.இப்படி தலைவர் என்ற முழு அதிகாரம் தன் கைக்கு வரும் நிலையிலேயே ஆட்டம் போட ஆரம்பித்தால் கட்சி எப்படி வளரும். ஆட்சியை எப்படி பிடிக்க முடியும். ஸ்டாலின் முதன் முதலில் தன் குடும்பத்தில் உள்ள உடன் பிறப்புகளை அரவணைத்து கொண்டு செல்லக் கற்றுக் கொண்டால் அதன் பின்னால் கட்சியில் உள்ள உடன்பிறப்புகளின் இதயத்தை மட்டுமல்ல மக்களின் இதயத்தையும் கொள்ளை கொள்ளலாம்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. சரியா சொன்ன தோழா.

  ReplyDelete
 2. Excellent analysis and very well written. 90% of what you have written is, in fact, a fact.!

  ReplyDelete
 3. சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளைன்ற ரேஞ்சுலதான் இருக்கு ஸ்டாலின் நிலமை.

  ReplyDelete
 4. இன்னும் எதிர்காலத்தில் கட்சிக்குள் என்னனன்ன கலவரங்கள் வரப்போகிறதே...

  ReplyDelete
 5. இங்கு வருகை தந்து கருத்து சொன்ன பால கணேஷ், நம்பள்கி, ராஜி, கவிதைவிதி செளந்தர் அனைவருக்கும் நன்றி உங்கள் வருகையாலும் கருத்துக்களாலும் இந்த தளம் மேலும் மெருகேறுகிறது . நன்றி

  ReplyDelete
 6. you mentioned little bit family welfare, but it is not true

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog