மனைவியிடம் சொல்லாமல் மறைத்த ரகசியம்
தலையில் நச்சு என்று ஏதோ தாக்கியது என்னவென்று பார்த்த போது வேற ஒன்றுமில்லைங்க வழக்கமாக தலையை தடவி பார்க்கும் 'பூரிக் கட்டைதாங்க' அந்த காலத்துல யானை வரும் பின்னே மணி யோசை வரும் முன்னே என்று சொல்லுவாங்க. ஆனா எனக்கு கல்யாணம் ஆன பின் அந்த பழமொழி இப்படி மாறிவிட்டதுங்க மனைவி வருவாள் பின்னே பூரிக் கட்டை வரும் முன்னே என்றுதாங்க...
பூரிக் கட்டை என்னைதாக்கியதும் நான் உடனே சுதாரித்து லேப்டாப்பை பாதுகாப்பாக மூடிவைத்து விட்டு பக்கத்தில் இருந்த புத்தகத்தை கையில் எடுத்து படிப்பது போல நடித்து மூஞ்சியை அப்பாவி போல வைத்து கொண்டேன்.
மனைவி அருகில் வந்ததும் என்னம்மா தங்கம் என்ன என்று கேட்டுவிட்டு தங்கம் பூரிக்கட்டையை பாதுகாப்பா வையுமா நம்ம குழந்தை விளையாட்டு தனமா அதை தூக்கி எறிந்து விளையாடியது போல அது தெரியாத்தனாமா அது என் மேல் வுழுந்து விட்டது என சொன்னேன் அதற்கு அவள் உங்களை எத்தனை தடவை கூப்பிடறது உங்களூக்கு லேப் டாப் கிடைத்தால் காதே கேட்காதே அதனால் தான் நான் காலிங்க் பெல்லை அடித்தேன் என்றாள் அவளுக்கு எப்போதும் கிண்டல் தாங்க பூரிக்கட்டையைதான் அவள் காலிங்க் பெல் என்று மத்தவங்க முன்னால் சொல்லுவாள்.
காலிங்க்பெல் அடித்தது அவள்தான் என்று தெரிந்த பிறகு வேறு ஏதும் கேட்க முடியுமா என்ன? அதுனால அம்மா எதுக்கும்ம்மா என்னை கூப்பிட்ட என்று அப்பாவியாக அவளை காதல் உணர்வுடன் கேட்டேன்
அதற்கு அவள் எனக்கு நீண்ட நாளா ஒரு சந்தேகமுங்க எவ்வளவோ பொண்ணுங்க இருக்கிற போது என்னை மட்டும் ஏன் காதலித்தீங்க என்று கேட்டாள்
அதற்கு நான் உன்னைத் தவிர மற்ற பொண்ணுங்க எல்லாம் என்னை கல்லைக் கொண்டு அடிக்காதகுறையாக விரட்டி விட்ட உண்மையை எப்படி சொல்ல முடியும் அதானால நான் உன் பார்வையை கண்டு மயங்கி விட்டேன் என்று சொன்னேன் அதை அவளும் நம்பிவிட்டாள்.
(இதை படிக்கும் நீங்களும் அதை உண்மை என்று நம்பி இருப்பீங்களே மக்களே அவளின் சாந்தப்பார்வையை பார்த்து மயங்கல அவளின் கோப பார்வையை பார்த்து பயந்து மயங்கி போனேன் நான் என்பதுதான் உண்மை அப்படி மயங்கிய என்னை தட்டிக் கொடுத்து எழுப்பினாள் அப்போது நான் விளையாட்ட சொன்னேன் அடிக்கிற( அவள் தட்டிக் கொடுத்தது அடிப்பது போல இருந்தது அந்த வலிதாங்கமல்தான் நான் மயக்கத்தில் இருந்து முழித்தேன்) கைதான் அணைக்கும் என்று ஆனால் அதை அவள் நகைச்சுவையாக எடுத்து கொண்டு என் மீது காதல் கொண்டாள்)
இப்போது அவள் சந்தேகம் தீர்ந்ததால் அவள் மீண்டும் பூரிக் கட்டையை கையில் எடுத்தாள் என் உடலோ மீண்டும் ஆடத் தொடங்கியது உடனே அவள் என்னை பார்த்து அய்யாவுக்கு என்ன ரொமண்டிக் மூடு வந்துடுச்சா என்ன பிரபு தேவா போல ஆட ஆரம்பிச்சுட்டேங்களே என்று கிண்டல் பண்ணிவிட்டு சொன்னாள் கவலைப்படாதீங்க இந்த தடவை பூரிக் எடுத்தது உங்களை அடிக்க அல்ல என்னை காதலித்த உங்களுக்கு உங்களுக்கு பிடிச்ச பூரியை பண்ணி தரத்தான் என்று சொல்லி போகாத கிச்சனுக்குள் அடி எடுத்து இருக்கிறாள்
இது இப்படி இருக்க நம்ம பதிவாளர் சீனு காதல் கடிதம் எழுதும் போட்டி வைச்சிருக்கிறார். அதுல கலந்துக்க ஆசைதான் ஆனால் அதுல பெரும் சிக்கல் இருக்குதுங்க. அவர் சொன்ன படி நான் காதல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு வேளை என் மனைவி அதை பார்த்துவிட்டாள் அதை நான் வேறு யாருக்கோ எழுதுவதாக எண்ணி என்னை அடித்து பின்னிவிடுவாள். அதனால என் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு மற்றவங்க எழுதுற கடிதத்தை படித்து மன ஆறுதல் அடைய வேண்டியதுதான். ஹும்ம்ம்
சீனு போன்ற இளைஞர்களுக்கு காதல் என்றால் என்ன வென்று ஒரு சிறு விளக்கம் இங்கே
பலாப்பழம் உரிப்பது வரை கஷ்டம்.
ரயிலில் ஏறுவதுவரை கஷ்டம்.
முதலிரவில் அணைப்பதுவரை கஷ்டம் - அதாவது விளக்கை.
காதலில் மட்டும்தான்
தொடங்குவது கஷ்டம்;
தொடர்வது கஷ்டம்;
முடிப்பது கஷ்டம்;
முடிந்தாலும் கஷ்டம்.
என் மனைவி ரொம்ப நல்லவங்க நிறைய இடம் வேண்டும் என்றதும் அவளின் இதயக்கடலில் இடம் கொடுத்துவிட்டாள் நான் அதில் மூழ்கி வெளியே வர முடியாமல் தவிக்கிறேன் |
அப்ப வரட்டாங்க.
அன்புடன்
அப்பாவி கணவன்
மதுரைத்தமிழன்
காலிங் பெல்லை வீட்டுல ஒளிச்சு வெச்சுட வேண்டியதுதானே ம.தமிழா? நான்லாம் அப்படித்தான் தப்பிச்சுட்டிருக்கேன்... ஒன்றிரண்டு சந்தர்ப்பங்கள்ல மட்டும்! ஹி... ஹி...!
ReplyDeleteகட்சீல சீனுங்கற கொயந்தப் பயலுக்கு காதலப் பத்தி ஒரு வெளக்கம் குட்த்திருக்க பாரு... அசத்திப்புட்டே நைனா! ஜுப்பரு...!
நாம் அவங்க வெளியில இருக்கிற ஒரு காலிங்க் பெல்லை ஒழிச்சு வைத்தால் அவர்கள் எனக்கு தெரியாமல் ஒழித்து வைத்திருக்கும் ஸ்டாக்கில் இருந்து ஒன்றை ரீலீஸ் பண்ணி விடுகிறார்கள். என்ன செய்வது நண்பா
Deleteதம்பி சீனுவும் நம்மபளை மாதிரி மாட்டிக்கிட்டு முழிக்க கூடாதுன்னு சொல்லுறேன் ஆனா அவர் எங்க கேட்கப் போறாரு மாட்டிக்கிட்டு என்னைப் போல எதிர்காலத்துல நகைச்சுவை பதிவு வெளியிடப் போறாரு ....
இது வரமா சாபமா :-)
Deleteஅந்த "பயம்" கூட காதலே...
ReplyDeleteமுடிவில்... சில உண்மையான கஷ்டங்கள்...
அசத்தல்......
ReplyDeleteசீனுவின் காதல் போட்டி பதிவினை இன்னும் படிக்கவில்லை..... படித்து விடுகிறேன்.
வெங்கட் நாகராஜ் ,எனது அநேக பதிவுகளை ஒரே மூச்சில் படித்து கருத்திட்ட உங்களுக்கு எனது மனம்மார்ந்த நன்றிகள்
Deleteவிரைவில் நீங்களும் ஒரு சிரிதாயனத்தை ரெடி செய்யுங்கள் :-)
ReplyDeleteபரிசுப் போட்டி குறித்து தெரிவித்ததற்கு மிக்க மகிழ்ச்சி... ஆயிரம் அடிவாங்கினாலும் பரவாயில்லை துணிந்து போட்டியில் கலந்து கொள்ளுங்கள் (ஆயிரம் இருந்தாலும் அடிவாங்குவது நீங்க தானே :-) )
காதல் முடிந்தாலும் கஷ்டம் என்று அருமையான ஒரு கவிதையை எழுதியே மதுரைக் கவியே நீர் வாழ்க :-)
இறுதியாக கஷ்டம் என்று சொன்னது கவிதை அல்ல அது மட்டும் என் சொந்த கருத்து அல்ல மண்டபத்தில் இருந்து கிடைத்தது சீனு
Deleteஎனக்கு மிக்க சந்தோஷமா இருக்குங்க.. உங்க வீட்டு காலிங்பெல் அடிக்கடி அவங்களை பயன்படுத்த சொல்லுங்க. எங்க வச்சோம்னு மறந்துடப்போறாங்க அதுக்காக சொன்னேன்.
ReplyDeleteஉங்களை மாதிரி நல்ல ஐடியா தரவங்க என் மனைவி பக்கத்தில் இல்லை....ஆமாம் என் இந்த கொலைவெறி
Delete