வாத்தியார் கணேஷும் சிஷ்யன் சீனும் பேஸ்புக்கில்
பேசியது என்ன?
அவங்க பேஸ் புக்குல இருந்து ஒடலாம் ஆனா வலைதளத்தில் வந்துதானே ஆகனும். இங்க அவங்க வராங்கலான்னு பார்க்கலாம்.
டிஸ்கி: இந்த பதிவு நீங்கள் படிக்க நகைச்சுவையாக இருக்க நான் எழுதினாலும் இதன் மூலம் ஒரு செய்தியை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என்பதுதான் உண்மை. அந்த செய்தி என்ன என்று அறிய ஆவலா ?
அதுதானங்க என் பதிவை பார்த்தவர்கள் ஒன்றை நன்றாக கவனித்து பார்தால் நான் டிசைன் செய்து இருக்கும் இந்த பதிவு படம் உண்மையை போலவே இருக்கிறது ஆனால் அது உண்மையல்ல. கற்பனை ஆனால் இந்த என் கற்பனை நகைச்சுவைக்காக படைக்கப்பட்டது. ஆனால் இணையத்த்தில் பல கயவர்கள் திரிகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்த கயவர்கள் நினைத்தால் தனக்கு இணங்காத பெண்களை அவமானப்படுத்த போலியாக இப்படி உருவாக்கி அவர்களின் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். அதனால் இப்படி பெண்களின் பெயரை கெடுக்க யார் இப்படி செய்தாலும் அதை உண்மை என்று நம்பி அதை பல பேருக்கு ஷேர் செய்து பெண்களின் வாழ்க்கையை குலைக்க எந்த விதத்திலும் உதவ வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.
நன்றி
அன்புடன்
மதுரைத்தமிழன்
அப்பாடா... கற்பனை...!
ReplyDeleteசொன்ன அறிவுரையும் நன்று...
எனது கற்பனை நகைச்சுவையாகவும் விழிப்புணர்வாகவும் வந்து இருக்கிறது. ஆனால் இதே கற்பனை கயவர்களிடம் இருந்து வரும் போது பாதிக்கப்படுவது பெண்களே
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
உங்கள் எச்சரிக்கை மிகவும் தேவையான ஒன்று. தனக்குச் சம்பந்தம் இல்லாத பெண்களின் முகநூல் புகைப்படங்களைக் கவர்ந்து ‘ஷேர்’ செய்வதன் மூலம் தவறான கைகளில் அப்படங்களை நழுவவிடும் செயல் உண்மையில் ‘கயமை’ என்ற வகையில் தான் அடங்கும். மக்களே போல்வர் கயவர் என்று வள்ளுவரும் சொன்னார். குறைந்த பட்சம் நமது கயமை உணர்வுகளையாவது நாம் கட்டுப்படுத்திக் கொள்வோமாக.
ReplyDeleteஉணர்வுகளை கட்டுபடுத்த எல்லோரும் முயற்சிப்பது நல்லது உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
Deleteகாமெடி பதிவுக்கு பின்னால் சீரியசான ஒரு விடயத்தையும் பகிர்ந்திருக்கீங்க.கமென்ட்களுக்கு விழுந்த லைக்க வச்சுத் தான் கண்டுபுடிச்சேன்.டிசைனிங்கும் கமென்ட்சும் கலக்கல்
ReplyDeleteலைக்ஸை வைத்து கண்டுபிடித்த உங்களது கூர்மையான பார்வையை கண்டு வியக்கிறேன் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
Deleteமிக மிக அருமை
ReplyDeleteதங்கள் கருத்தை வலியுறுத்த தாங்கள்
மேற்கொண்ட யுக்தி மனம் கவர்ந்தது
உண்மையில் ஸ்டேசசும் அதற்கான
பின்னுரைகளும் மிக மிக அருமை
வாழ்த்துக்கள்
குருவிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கள் மிகவும் சந்தோஷத்தை தருகின்றன
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
அழகான டிசைன்! நான் கூட உண்மை என்றே நினைத்தேன்! எப்படி இப்படி டிசைனில் பதிவிட முடிகிறது? ரொம்ப ஆராய்ச்சி செய்வீங்க போல!
ReplyDeleteஇதனால்தன் கண்ணால் காண்பதும் கூட தவறு தீர விசாரித்து உண்மையை அறிவதே நன்று.
Deleteஇப்படித்தான் சில சமயங்களில் பொய்களும் உண்மையாகின்றன...
நான் எனது பதிவுகளுக்கெல்லாம் ஆராய்ச்சி செய்வது எல்லாம் கிடையாதுங்க. எதையாவது படிக்கும் போது பார்க்கும் போது மனதில் க்ளிக் என்ரு ஒரு விஷ்யம் படும் உடனே அதைப் பிடித்து மனதில் தோன்றியதை எழுதி படத்துடன் பதிவாக வெளியிடுவேன் நான் ரொம்ப யோசிப்பது எல்லாம் கிடையாது. நான் எனது தளத்திற்கு வருபவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக கொடுக்க முயற்சி செய்கிறேன் அவ்வளவுதாங்க
உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
செம கற்பனை... ஒரு எச்சரிக்கை உணர்வையும் கொடுத்ததற்கு நன்றி...
ReplyDeleteஅது சரி... கடைசி பாரா மட்டும் தப்பு...
வாத்தியார் கணேஷ், சிஷ்யன் சீனு யார் என்று தெரியாதவர்கள் தயவுசெய்து உயரமான கட்டிடத்திலிருந்து குதித்துவிடவும் என்று இருக்கவேண்டும்....
ஸ்கூல் பையன்க்கு குசும்பு ஜாஸ்தி ஆகிருச்சு... இருக்கட்டும் இருக்கட்டும் :-)
Deleteபதிவுலகில் எழுதி வரும் அனைவருக்கும் கணேஷ் , சீனு ஸ்கூல்பையன், மதுரைத்தமிழன் Etc,,,, என்று அனைவரையும் ஒருவருக்கொருவர் தெரியும். ஆனால் இந்த பதிவுலகத்தை சுற்றி மற்றொரு வட்டம் உண்டு அதில் சைலன்ட் ரீடர்கள் வருகிறார்கள். அது ஒவ்வொரு பதிவருக்கும் அந்த வட்டம் மாறுபட்டு இருக்கும். உதாரணமாக உங்கள் வட்டத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு என்னைப்பற்றி தெரிந்து இருக்கும் அதே சமயத்தில் பலருக்கும் என்னை தெரியாமல் இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் மதுரைத்தமிழ்ன் என்று குறிப்பிடும் போது அவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை அதனால் ஒருத்தரை சுட்டிக் காட்டும் பொழுது அவருக்குறிய லிங்கையும் சேர்த்து கொடுத்தால் படிப்பவர்கள் அவர்களை பற்றி அறிய விரும்பினால் அதௌ உதவிகரமாக இருக்கும் என்பது என் கருத்து. அதன் காரணமாகவே நான் யாரையும் குறிப்பிட்டால் அவர்களுக்குரிய லிங்கையும் சேர்த்து குறிப்பிடுவேன்
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
கலாய்த்தலும் கலாய்க்கப்படுதலும் எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். மதுரைத் தமிழன் என்னதான் பண்ணியிருப்பாருன்னு ஆவலோட வந்தேன். ஏறக்குறைய நானும் சீனுவும் உரையாடினா எப்படி இருக்குமோ அப்படி... நம்ம தனபாலன் ஸார் மாதிரி நபர்கள் நிஜமோன்னு நம்பற அளவுக்கு அருமையா உருவாக்கி அசத்திட்டீங்க நண்பா! தொடர்ந்து நீங்க சொனன அறிவுரை மிகச் சரியான ஒன்று. அனைவருக்கும் அவசியமான ஒன்று. பாராட்டுகள்!
ReplyDeleteதனபாலன் சார் மிக அப்பாவி வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர்
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
ஆஹா! ஆரம்பிக்கும்போதே நினைச்சேன். உங்க கை வண்ணமாத்தான் இருக்கும்னு. கணேஷ் சீனு இருவரும் உண்மையிலேல்யே சாட் பண்ண மாதிரிதான் இருக்கு..சிரிக்கவும் வச்சு சிந்திக்கவும் வச்சுட்டீங்களே மதுரை தமிழன். வித்தியாசம்னா அது மதுரை தமிழன்தான். ஒட்டுவேலை அற்புதம்
ReplyDeleteமுரளி எதையும் சீரியஸா சொன்னா யாருக்கும் பிடிக்காது அதனால் நகைச்சுவையை கலந்து சொன்னால் சீரியஸான விஷயம் கூட மனதின் ஆழத்தில் பதியும்
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
உங்களுடைய இந்த படைப்பை பார்த்தவுடன் எவ்வளவு கச்சிதமா டிசைன் செய்து தேவையான மெசேஜ் சொல்லிருக்காருனு நினைக்கும்போது ,எங்க ஊர்ல புத்திசாலித்தனமா /கிறுக்குத்தனமா ஏதாவது செய்தாலும் நீயெல்லாம் அமெரிக்காவில் இருக்கவேண்டிய ஆளுன்னு சொல்வது நினைவு வந்தது.
ReplyDeleteநீங்க அப்படி சொல்லுவீங்க ஆனால் அதையே அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள் திருப்பி சொல்லுவோமுங்க
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
அனைவருக்கும் அவசியமான ஒன்று... தங்கள் திறமை அபாரம்... அட்டகாசம்...!!!
ReplyDeleteஉங்களது பாராட்டிற்கு மிகவும் நன்றி &
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
நல்ல உதாரணத்தோடு கூடிய அறிவுரை. நானும் உண்மை என்றே நம்பினேன்.
ReplyDeleteஎதை வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறதே இணையத்தில். நம் privacy எங்கோ தொலைந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
எச்சரிக்கை மணியடிக்கும் பதிவுக்கு நன்றி.
எதையும் உடனடியாக நம்ப்விடக்கூடாது என்பதை இதன் மூலம் பலரும் இன்று அறிந்திருக்கலாம்
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
அண்ணன் பேரை வெச்சு ஒரு பதிவு போட்டதால் தப்பிச்சீங்க. இல்லாட்டி, எங்க அண்ணனை எப்படி இப்படி பண்ணலாம்ன்னு ஃப்ளைட்ல சுமோ நிறைய ஆட்களாஇ அனுப்பி இருப்பேன்.., உங்களை கவனிக்க!!
ReplyDeleteஇன்று அண்ணன், ஆனால் சகோதரிகளான உங்களையும் சசிகலாவையும் மறக்க முடியுமா என்ன. அதனால் உங்கள் இருவரையும் எனது அடுத்த பதிவில் இழுத்து விட்டிருக்கிறேனாக்கும்... ஹீ.ஹீ.ஹீ
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
முதலில் பார்த்ததும் நான் கூட உண்மை என்று நம்பி விட்டேன், அப்புறம் அந்த சின்னவீடு ஜோக் பார்த்ததும் தான் சுதாரித்தேன், ஆகா எதோ வில்லங்கம் இருக்குன்னு, செம கலாய் போங்க.... 200/100 சதம் நிஜம் போல் உள்ளது, படகலவை அற்புதம், இதன் பின்னே இருக்கும் நாட்டுக்கு சொல்லிய நல்லதும் அருமை...
ReplyDeleteகடைசி பாராவுக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன் :-)
காதல் இளவரசே எதையும் உடனடியாக உண்மை என்று நம்பிவிடாதீர்கள். உங்களுக்கு வரும் காதல் கடிதத்தையும் சேர்த்து வைத்துதான் சொல்லுகிறேன். பாராட்டிற்கு நன்றி &
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
என்னடா காலங்காத்தால 8 மணிக்கு அதுவும் திங்கட்கிழமையே இப்படி ஆரம்பிச்சுட்டாங்களேன்னு பார்த்தா, கடைசிலே பல்பு வாங்குனது நாமதான்னு நினைக்கும் போது ஒரே சிரிப்பாயிடுச்சு. சிரிச்சுக்கிட்டே சிந்திக்கவும் சிந்தித்துக்கிட்டே சிரிக்கவும் வைத்த மதுரைத்தமிழனுக்கு நன்றிங்கோ!
ReplyDeleteரசித்து மகிழ்ந்ததற்கு நன்றிகள்
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
ஹாஹஹா நான் கூட உண்மையோன்னு நினைத்து விட்டேன்
ReplyDeleteஇன்னும் எத்தனை பேர்தான் இப்படி உண்மை என்று நினைத்து ஏமாந்து இருப்பிர்கள்
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
பார்த்ததும் உங்க கைவண்ணம் என்று நினைத்தேன்.
ReplyDeleteஎனது அடுத்த கைவண்ணத்தில் உங்களையும் எனது பதிவில் இழுத்துவிட்டுள்ளேன்
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
அருமையான கிராபிக்ஸ் தமிழ்guy....
ReplyDeleteதலைப்பிலேயே ஏதோ செம மேட்டர் இருக்கும்னு நெனச்சேன்.. ஆனா இப்படி ஒரு மேட்டர்...
நல்ல சிந்தனை.. சிறந்த உழைப்பு...
இப்படி ஒரு படம் போடுவது மிக எளிது யாரும் இதை செய்யலாம். இதை எப்படி செய்தேன் என்றால் ப்பூ இவ்வளவுதானா என்று சொல்லிவிடுவார்கள்
Deleteஇதில் உழைப்பு என்று ஏதும் இல்லை இதில் நான் செய்தது என்னவென்றால் செய்தியை வித்தியாசமாக தர முயற்சிப்பதுதான்
பிரகாஷ் உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக நன்றி
உண்மையிலேயே உண்மையான உரையாடல் என்று நினைத்தேன்...கடைசியில் இது அவர்கள்-உண்மைகள் எழுதிய உண்மை என்ற உண்மை அறிந்து....சிரித்தேன்....எப்படியெல்லாம் உண்மைகள் உணமைகளில் இருந்து தவறுகின்றன என்று சிந்தித்தேன்....நன்றி அவர்கள்-உண்மைகள் (நான் அதிகமாக யாருக்கும் கருத்திடுவதில்லை...தங்கள் பதிவைப் படித்த பின் கருத்திடாமல் இருக்க முடியவில்லை..அண்ணேன்...அவர்கள் உண்மைகள் அண்ணேன்...இது என்னோட உண்மை....அண்ணேன்)
ReplyDeleteஅதிகம் கருத்திடாத நீங்கள் கருத்து இட்டது எனக்கு மிகவும் பெருமையை தருகிறது. அதற்கு நன்றிகள் பல.
Deleteஎனது தளம் சைலன்ட் ரீடர்களின் ஆதரவால் தினமும் வளர்ந்து கொண்டிருக்கிறது நண்பரே
உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக நன்றி
உண்மை என்றே நினைத்துவிட்டேன்! நல்லதொரு விசயத்தை நகைச்சுவையாக சொல்லி விழிப்புணர்வு தந்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉண்மை என்ரு நினைத்துவீட்டேன் என்று பலரும் சொல்லியதை பார்க்கும் போது நான் பலரையும் ஏமாற்றி விட்டேனோ என்ரு நினைக்க தோன்றுகிறது. ஆனாலும் மனதில் ஒரு சந்தோஷம் பலருக்கும் புரியும்படி ஒரு நல்ல விஷயத்தைதான் கொடுத்திருக்கிறோம் என்று......
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி
அடடடடடா... நண்பா கலக்குறீங்க.
ReplyDeleteஇப்போதான் உண்மையில் நான் கலக்க போறேன் தப்பா ஏதும் நினைச்சுடாதீங்க நான் சொன்னது காபி கலப்பதை சொன்னேன் ஹீ,ஹீ
Deleteஅவர்கள் உண்மைகள் எப்போதும் உண்மையைத்தான் பேசுவார்கள் என்று நினைத்தேன்.
ReplyDeleteகற்பனையாகக் கலாய்த்திருந்தாலும், செய்தி/ எச்சரிக்கை பொருத்தமாக இருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteநல்ல கற்பனை மதுரைத் தமிழன்.
ReplyDeleteமுகப்புத்தகம் பற்றிய எச்சரிக்கை தேவையான ஒன்று......
wanakam madhurai thamilan aiya avargale ungal padhivugal ennai romba kawarndhu ulladhu muiiaka withiyasamana karpanai .walthukal
ReplyDelete