Sunday, July 28, 2013



இந்த பதிவு கனகா கேன்சரில் பாதிக்கப்பட்டு தனியாக மரண வாசலில் இருக்கிறார் என்று தமிழக பத்திரிக்கை உலகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது,.

இன்று கனகா வெளியிட்ட அறிக்கையின் படி அவர் உடல் நலத்துடன் இருப்பாதாக செய்திகள் வெளி வந்துள்ளன.


கனகா  மிகவும் நல்ல நிலையில் உயிரோடுதான் இருக்கிறார்.....ஆனால், இறந்ததென்னவோ ஊடகங்களின் நம்பகத்தன்மைதான்.

தமிழக ஊடகங்களில் வந்த செய்தியை உண்மை என்று நம்பி நானும் பதிவு எழுதி வெளியிட்டுள்ளேன். அது மிகவும் தவறு என்பதை நான் உணர்ந்ததால் நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


07/30/2013


============================================================

மரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில்  நடிகை கனகா: 




மரண நாளை எதிர் நோக்கி அனாதையாக ஹாஸ்பிடலில்  நடிகை கனகா


கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. பழைய நடிகை தேவிகாவின் மகள் ஆவார்  தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் மிக பிரபலமாக திகழ்ந்தார். தமிழில் ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தது போல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என பிரபல முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார் கனகா.


1990ஆம் ஆண்டு இறுதிகளில் திடீரென காணாமல் போனார்.  2000வது ஆண்டில் அவரது தாயாரும் மறைந்து போக கனகா தனிமரம் ஆனார். கனகாவின் தாய்  தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை.

வெளிநாட்டு இன்ஜினீயரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு  அந்த வாழ்க்கையும்  இனிக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, பயம் அவருக்கு. அதனால் ஒரு மனநோயாளி போன்றே நடந்து கொள்ள ஆரம்பித்தார். தந்தை தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற்சிப்பதாகவும் வழக்கு போட்டார். தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு சென்னையில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டார் கனகா. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது. இப்போது அவரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.


கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓராண்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது அந்த  மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

கனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளகூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்கவில்லை என்று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்று கனகா கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் கனகாவை யாரும் சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள்.

கருப்பு, வெள்ளை காலத்து கனவு கன்னியின் மகள், வண்ண சினிமா காலத்தில் மின்னிய நாயகி இப்போது யாருமற்றவராக மரணப் படுக்கையில்...!!

திரையில் மின்னும் நட்சத்திரங்களின் வாழ்வு கடைசி காலங்களில் இருண்டு போனதாகவே இருக்கிறது, இவர்கள் புகழின் உச்சியில் இருக்கும் போது  கொண்டாடும் ஊடகங்கள் திரை உலகங்கள் அவர்களின் செல்வாக்குகள் குறையும் போது சாக்கடையில் தூக்கி ஏரிந்து விடுகின்றன.

இப்படிபட்ட வாழ்வை வாழதான் நமது இந்திய டிவிக்கள் நம் மக்களை பழக்கி வருகின்றன. நமது மக்களும் இப்படி குறுகியகாலப் புகழுக்காக தன் வாழ்க்கையை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வேதனைப்படுவதை தவிர்க்க முடியவில்லை


இறந்துவிட்டால் ஆயிரம் பேர் வந்து இரங்கல் தெரிவிப்பார்கள் ... இருக்கும் போது கண்டு கொள்ள மாட்டார்கள்... இவரை போன்றவர்க்கு உதவி செய்யாமல் இருக்கும் நடிகர் சங்கம் போன்றவைகள் இருந்து என்ன பயன் . பாராட்டு விழாவை மட்டும் நடத்துவதுதான்  சங்கம் செய்யும் சாதனையா அல்லது தடை செய்யபடும் உல்க நாயகன் படங்களுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதுதான் சாதனையா?



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. சிறிது நேரம் முன்னர் தான் முகப்புத்தகத்தில் இச்செய்தியினைப் படித்தேன்.... வருத்தம் தான்.....

    நமது நடிகர்-நடிகைகள் ஒழுங்காக காசு சேர்க்காது இருந்தால், மார்க்கெட் போனபிறகு, உடல் நலிவடையும்போது, வயதானபிறகு ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள்...சக நடிக-நடிகையர்கள் கவனிப்பதில்லை என்பது வருத்தமான விஷயம் தான் .....

    ReplyDelete
  2. இந்நிலையில் யாரையும் சந்திக்காமல் இருப்பது மேலும் வேதனையைத் தரும்... வருத்தமான செய்தி...

    ReplyDelete
  3. வருத்தமான செய்தி.... பாவம் கனகா!!

    ReplyDelete
  4. சரியான கேள்வி! சினிமா சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?. கோடி கோடியாக கொட்டிக் குவிக்கும் நடிகர்களுக்கு நோயால் வாடிக் கொண்டிருக்கும் கனகாவுக்கு உதவ முடியாமல் போனது வேதனைதான்.

    ReplyDelete
  5. உண்மைதான் நண்பரே, தங்களின் ஆதங்கமும் நியாயமானதுதான். வருத்தத்திற்குரிய செய்தி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.