உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, December 18, 2012

மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!

மதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்குமுங்க!!!

பிரபல பதிவாளரின் மனைவி மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவர் எனக்கு துரோகம் பண்ணுகிற மாதிரி இருக்கு, அதை நீங்கதாங்க விசாரிச்சு எனக்கு தீர்ப்பு சொல்லனும் என்று கடிதம் எழுதி இருந்தார். அவரது கணவர் பஹைரனில் வேலை பார்ப்பதாகவும் சொல்லி நடந்த விஷயங்களை சொன்னார். எல்லா தகவலையும் அறிந்த உலகமாக அறிவாளி மதுரைத்தமிழன் உடனே பஹைரைனுக்கு ஒரு போனை போட்டு அந்த பிரபல பதிவாளரை அழைத்து சொன்னார்

யோவ் பதிவாளரே உண்மையைச் சொல்லு...உன் மனைவி உன்னை அவசரத்திற்காக பல தடவை செல்போனில் கூப்பிடறப்போ எல்லாம் 'நீங்கள் தொடர்பு கொள்ளும் இந்த வாடிக்கையாளரை இப்போது நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது" என்று ஒரு பொம்பளை குரல் சொல்லி இருக்கு. அது ஒரு தடவை இல்லை ஒவ்வொரு தடவையும் அதே குரல் கேட்டிருக்கு,,,ஆக சந்தர்பம் சாட்சியங்களை வைத்து பார்க்கும் போது நீ தப்பு பண்ணி இருக்கே....நீ தப்பு பண்ணி இருக்கே....அதனால இரண்டு நாளில் மும்பைக்கு போற வழியை பாரு.. இல்லை பஹைரைனுக்கு "ஆபிஸரை" அனுப்பி வைப்பேன் அல்லது "ஆர்மிக்காரனை" அனுப்பி வைப்பேன்

அடுத்தாக ஒரு பிரபல பெண்பதிவாளர் ஆரணியில் இருந்து(காணாமல் போனது கணவரா அல்லது கனவுகளா?) மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி என் கணவரை தீபாவளி முதல் காணவில்லை . நீங்கள்தான் கண்டுபிடித்து தரனும் என்று சொல்லி இருந்தார்.

அதற்கு மதுரைத்தமிழன், " அன்புள்ள அத்தானுக்கு நான் செய்த தீபாவளி பலகாரங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன.அதனால் நீங்கள் எங்கு ஒழிந்து இருந்தாலும் தைரியமாக வாருங்கள். இனிமேல் வீட்டில் நான் பலகாரம் ஏதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து தருகிறேன் என்று எல்லா டிவியில்வருமாறு விளம்பரம் தரவும் என்று அந்த மதுரைத்தமிழ்ன் சொன்னார்

அடுத்தாக பிரபல பெண்பதிவாளர் கவிதை எழுதுவதில் ஒரு புயல் அவரும் மதுரைத்தமிழனுக்கு ஒரு கடிதம் எழுதி நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறுக்கே வருகிறார் இதை தடுத்து நிறுத்த ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்


அதற்கு மதுரைத்தமிழன், " நீங்கள் எது செய்தாலும் உங்கள் மாமியார் குறுக்கே வருகிறார் அதுதானே பிரச்சனை..இதற்கு தீர்வு எல்லாம் ரொம்ப ஈஸிம்மா... நீங்கள் உடனே ஒரு தண்ணி லாரியை வாடகைக்கு எடுத்து ஒட்டு , பிரச்சனை உடனே தீர்ந்துவிடும் என்றார்.


என்ன மக்காஸ் மதுரகார்ய்ங்க தீர்ப்பு சொன்னா மிகச் சரியாகத்தானே இருக்கும்... உங்களுக்கும் பிரச்சனை ஏதும் இருந்தா மறக்காம எனக்கு எழுதி அனுப்புங்க...


டிஸ்கி: யார் அந்த பஹரைனில் இருக்கும் அந்த பதிவாளர் யார் தெரியுமா? அந்த ஆபிஸர் & அந்த ஆர்மிகாரர் பெயர் தெரிந்தால் தெரியாதவர்களுக்காக பின்னுட்டத்தில் சொல்லவும். இரண்டு பிரபல பதிவாளர்கள் யார் என்று உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லலாம்


நான் படித்த நகைச்சுவையை எனது பாணியில் எனக்கு பிடித்த பதிவாளர்களை வைத்து கலாய்ய்து இருக்கிறேன். அவர்கள் தவறாக எடுத்து கொள்ளமாட்டர்கள் என நினைக்கிறேன். மக்கா உங்களை காயப்படுத்தி இருப்பதாக நினைத்தால் சொல்லவும் மாற்றி எழுதிவிடுகிறேன்


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

18 comments :

 1. நல்லவேளை நான் இல்ல, தப்பிச்சிட்டேன்...நான் ஊர்லதான் இருக்கேன் இப்போ...!

  ReplyDelete
 2. பரவாயில்லையே எனது தீர்ப்பை கேட்டு உடனே ஊருக்கு சென்றதுக்கு.......இந்த நாட்டாமை தீர்ப்பை கேட்டு அருவாளை தூக்கி போட்டுட்டு சென்ற உங்களை பாராட்டுகிறேன். ஹீ.ஹீ

  ReplyDelete
 3. தீபாவளி பலகாரம்லாம் தீர்ந்து போச்சு.., ஆனா, கார்த்திகை பலகாரம்லாம் இருக்கு. சீக்கிரம் வாங்க.., வந்து நீங்களும், அமெரிக்காவுல இருக்காரே உங்க மச்சான் அவரும் சேர்ந்து காலி பண்ணுங்க

  ReplyDelete
  Replies
  1. தீபாவளி பலகாரத்திற்கு கணவர் ஒடிப்போனார் அது மட்டுமில்லாமல் கார்த்திகை பலகாரம் கொடுத்து சகோவையும் இந்த பதிவுலகில் இருந்து விரட்ட முயற்சியா... நாங்க மாட்டமாட்டோம்ல

   சகோ நீங்க செய்யும் பலகாரங்களை அரசியல்வாதிகளுக்கு கொடுத்தா அவர்கள் நாட்டைவிட்டு துண்டைகாணும் துனியை காணும் என்று ஒடிவிடுவார்கள் முடிந்த புத்தாண்டுக்கு முயற்சி செய்யுங்கள்

   Delete
 4. ரெண்டு பெரும் சரண்டராகி வெறுப்பேத்துறாங்க மை லார்ட் , நீங்க தீர்ப்பை மாத்தாந்திங்க .

  ReplyDelete
  Replies
  1. இன்று என் கோர்ட் விடுமுறையாக இருப்பதால் நீங்களே தீர்ப்பை மாத்தி சொல்லிடுங்க.

   Delete
  2. அருமையான தீர்ப்பு
   ரசித்து மகிழ்ந்தோம்
   பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

   Delete
  3. கவியுலக அரசரே இதை அருமையான தீர்ப்பு என்று சொன்ன பிறகு வேறு என்ன சொல்ல முடியும்
   ரசித்து மகிழ்ந்தற்கு எனது நன்றிகள்

   Delete
 5. புயல் இன்னும் தீர்ப்பை பாக்கலயோ.இதோ இப்பவே சொல்லிடறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை லாரி வாங்க போய்விட்டார்களோ என்னவோ?

   Delete
 6. ஹா ஹா ஹா !!! செம சிரிப்பு, பதிவின் தலைப்பும் வடிவேல் படமும் என்னை வேறு எதையோ உணர்த்த உங்கள் எழுத்து என்னை சிரிக்க வைத்துவிட்டது.. செம..

  ReplyDelete
  Replies
  1. வடிவேலின் இந்த படம் மிக பொருத்தமாக இருக்கும் என கருதியதால் இட்டேன். ரசித்தற்கு நன்றி

   Delete
 7. நகைச்சுவையான பதிவு.
  சிரித்து மகிழ்ந்தேன்.
  (தென்றல் இன்னும் புயலாக வரவில்லையே....? ஏன்...?
  ஒரு சமயம்... மாமியார் குறுக்கே நிற்கிறாரோ...)

  ReplyDelete
  Replies
  1. புயல் வங்ககடலில் மையம் கொண்டு கவிதைகளை எழுதிவருவதாகவும் அதன் பின் எனது வலைத்தளம் நோக்கி மிக கடுமையாக தாக்கி கரை சேரப்போவ்தாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் எல்லோரும் பாதுகாப்பாக வேறு வலைத்தளம் நோக்கி செல்லுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்

   Delete
 8. ஹஹஹஹ எப்படிங்க கண்டு பிடிச்சிங்க கடுமையாக வரப்போவதாக... இந்த பக்கம் வாங்க உங்களுக்கு இருக்கு.

  ReplyDelete
 9. பெண்ணினத்தை வாருவதுன்னாவே அல்வா சாப்பிட மாதிரிதான்.............

  ReplyDelete
  Replies
  1. Irukumila pathiluku halwa kodutha teriyum.......... santhossssssssssssssssss

   Delete
  2. sir enaku oru problem neenga thaan judgement solanum......

   Yaro Madurai tamilana torcher thanga mudila sir mudiyala ratham varuthu aluthuduvane ithuku neenga thaan oru nala theerpa solanum   Nandri
   Tamilachi

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog