Monday, December 3, 2012



துப்பாக்கி விமர்சனம் - என் பார்வையில்


துப்பாக்கி - நிஜத்தில் சுட்டது உங்க பர்ஸைத்தான் என்பது படம் முடிந்த பின் உங்களுக்கு நல்லா தெரிஞ்சுருக்கும்.

என்னடா எல்லோரும் விமர்சனம் செய்து  ஒய்ந்து போன பின்பு இவன் எழுத வந்திருக்கான் என்று கேள்வி கேட்கலாம். என்ன செய்யுறதுங்க நாங்க எல்லாம் அமெரிக்காவில் இருக்கிற தமிழனுங்க இப்ப வர தமிழ் படத்தை 15 டாலர் கொடுத்து பார்க்கிற முட்டாள் இல்லைங்க.. அப்ப திருட்டு சி.டி வாங்கி பார்த்திங்களா என்று கேட்கிறீர்களா அதுவும் இல்லைங்க அதுக்கு 3 டாலர் கொடுத்து வாங்கி பார்க்கிற ஏமாளி இல்லைங்க .அப்ப எப்படித்தான் பாத்தீங்கள் என்று கேட்கிறீர்களா? எங்க வீட்டில் ஒலிபரப்பாகும் டிவியில் தமிழ் சேனல்கள் எல்லாம் ஜெயா டிவி தவிர எல்லாம் ஒளி பரப்பாகும் அதில் வரும் ஒரு சேனலில் தமிழில் வரும் புதுப்படங்களை 2 வாரம் கழித்து  அடுத்த புதுப்படங்கள் வரும் வரை தொடர்ந்து ஒளி பரப்புவார்கள் அதில்தான் இந்த படத்தை சனிக்கிழமை பார்த்தேன்  இதையாவது கொஞ்சம் பார்க்க முடிந்தது பிட்சா ஆரம்பித்த 2 நிமிஷங்களிலேயே அறுக்க ஆரம்பித்துவிட்டது..சரி இப்ப படத்திற்குள் செல்வோம்

விஜய்காந்த் அரசியலுக்கு வந்துவிட்டதால் அவர் நடித்திருக்க வேண்டிய படத்தை விஜயை வைத்து முருகதாஸ் எடுத்திருக்கிறார் அவ்வளவுதாங்க

கதை இதுதாங்க

மிலிட்டரி கேம்பில் இருந்து மும்பைக்கு 40 நாள் லீவில்  வரும் விஜய் கையில் எதேச்சையாக ஒரு தீவிரவாதி மாட்ட, அவனை வைத்து, மும்பையில் பல இடங்களில் குண்டுவைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவருகிறது. இண்டெலிஜன்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் விஜய், எப்படி அதை கண்டுபிடித்து, எதிரிகளையும், அதன் தலைவனையும் அழிக்கிறார் என்பதுதான்.


இந்த படத்தில் முருகதாஸ் இந்திய ரயில்வே துறையை நன்றாக கிண்டல் அடித்து இருக்கிறார்... விஜய் வந்த ரயில் லேட்டாம் அந்த நேரத்தில் ஒரு முழுப்பாடலை ஒட விட்டிறிக்கிறார். நல்ல வேளை லேட்டான ரயிலில் இருந்து இறங்கிய விஜய் தீவிரவாதிகளை எல்லாம் அழித்துவிட்டு விட்ட ரயிலை மீண்டும் அதே இடத்தில் வந்து பிடிப்பதாக காண்பிக்கவில்லை.

ஒரு வேளை அடுத்த படத்தில் இந்த மாதிரி லேட்டாகும் ரயிலில் இருந்து இறங்கிய விஜய்  அமெரிக்காவிற்கு விசா அப்ளை பண்ணி அமெரிக்கா வந்து குழந்தைகளை பெற்று நன்கு வளர்த்து அதன் பின் தீவிரவாதிகளை அழித்துவிட்டு இந்தியாவிற்கு வந்து விட்டு போன ரயிலை அதே இடத்தில் பிடித்து ஊருக்கு போவதாக கூட எடுப்பார்கள்

அரசியல் வாதிகள்தான் வெள்ளை வெளேரென்று வேட்டி சட்டை போடுவார்கள் என்பதை பார்த்த எனக்கு ஆர்மியில் இருந்து வரும் விஜய்மட்டும் வெள்ளை வெளேரென்று முண்டா பனியன் போட்டு வருகிறார் ஒரு வேளை ஆர்மியில் ஸ்பெஷல் ஆபிஸருக்கும் மட்டும் முழு யூனிபார்ம் போடாமல் வெள்ளை  பனியன் மட்டும் போட அனுமதியுண்டோ? என்ன

இதுபோல நிறைய நம்ம காதை குத்தும் செயல் படம்முழுவதும் வருமுங்கமுங்க

பேஸ்புக்கில் ஏதோ கருத்து சொன்ன பெண்ணையும் அதற்கு லைக் போட்ட பெண்னையும் கைது செய்த அரசாங்கம் இந்தியாவின் மிகப் பெரிய பதவியான டிபென்ஸ்  செகரெட்ரி  தீவிரவாதிகளுக்கு உதவுவதாக சித்தரிப்பது பற்றி யாருமே ஏன் கண்டிக்கவில்லை. இந்த நிகழ்ச்சி மக்களுக்கு ஒரு மோசமான உதாரணத்தை தராதா என்ன?   இதை மறுத்து இந்தியாவில் உள்ள தலைவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று ஆதாரம் தரலாம். அந்த ஆதாரம் உண்மையாக இருந்தாலும் அதை படத்தில்  காட்டுவதன் மூலம் மக்கள் மனதில் அப்படி செய்வது தவறாக இல்லை என்று படிந்துவிடுமே...


அது மட்டுமல்ல படத்தில்தான் ஹீரோ ஜெயிக்க முடியும் ஆனால் நிஜத்தில் ஜெயிப்பது என்பது என்னவோ துரோகிகள்தானே...

என்னங்க இந்த படத்தில் நல்லதே உங்கள் கண்ணில் படவில்லையா என்று கேட்பவர்களுக்கு


தீவிரவாதிகள் என்பவர்கள் வேறு கிரகத்தில் இருப்பவர்கள் அல்ல அவர்கள் சாதாரண மக்களோடு மக்களாக இருப்பவர்கள்தான் என்று இயக்குனர் நம்மை  எச்சருத்திருக்கிறார் அதுபோல  வில்லனுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் அந்த ஊரில் வசிக்கும் சாதாரண மக்களாகவே இருப்பதும் அதிர்ச்சி தருகின்றன .அவர்கள் சமூகத்தின் மீது கோபம் கொண்ட திவிரவாதிகள் என்றும் சொல்லாமல் சொல்லி இருப்பது  வரவேற்க தக்கது

படத்தில் வந்த வரிகளில் இந்த வரிகள் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய வரிகள் என்று சொல்லாம்

ஆயிரம் பேரை அழிக்க உயிர கொடுக்குறான்,
 ஆயிரம் பேர காக்க உயிர கொடுக்க கூடாதா?


மொத்தத்தில்  சொல்லப் போனால் வழக்கமான  கதையை காலத்திற்கு ஏற்ப  சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்திய ஆர்மியில் வேலை செய்பவர்களின் குடும்பங்கள் பெருமை கொள்ள வைக்கும் முயற்சி இது என்று சொல்லாம்



இதுதாங்க என் பட விமர்சனம்...

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

20 comments:


  1. விஜய்காந்த் அரசியலுக்கு வந்துவிட்டதால் அவர் நடித்திருக்க வேண்டிய படத்தை விஜயை வைத்து முருகதாஸ் எடுத்திருக்கிறார் அவ்வளவுதாங்க//

    அருமையாகச் சொன்னீர்கள்
    விமர்சனமும் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் மனதில்பட்டதை எழுதி இருக்கிறேன் அவ்வளவுதான் சார்

      Delete
  2. படம் வந்த பிறகு வந்த விமர்சனங்களில் உண்மையான விம்ரர்சனம் இதுதான், படம் ஓஹோ............என்று கொண்டாடுகிறார்களே, இது கொஞ்சம் டூ மச்.....

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ............என்று கொண்டாட வேறுபடம் ஏதுமில்லை என்பதால்தான் இதை ஓஹோ............என்று கொண்டாடுகிறார்களோ??

      Delete
  3. துப்பாக்கி - நிஜத்தில் சுட்டது உங்க பர்ஸைத்தான்

    உண்மை

    ReplyDelete
    Replies
    1. உங்க பர்ஸையும் சுட்டுட்டாங்களா????

      Delete
  4. இப்படி கேள்வியெலம் கேட்கப்படாது ..எங்கள மாதிரி பார்த்தோமா வந்தோமானு இருக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி கேள்வியெலம் கேட்கப்படாது ..எங்கள மாதிரி பார்த்தோமா வந்தோமானு இருக்கனும்.


      நாங்க படத்தை பார்த்துவிட்டு அதைப்பற்றிதான் கேள்வி கேட்போம் ஆனா உங்கள மாதிரி உள்ளவங்க படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து வீட்டுகாரரிடம் என்னங்க நீங்க விஜய்மாதிரி சண்டை ஞாயத்திற்கு சண்டை போட மாட்டுகிறீங்க என்று கேள்வியா கேட்பீங்க..

      Delete
  5. பொழுது போச்சு,விஜய் பன்ச் எல்லாம் பேசலை.பாடல்கள் சுகமில்ல.விஜய் பிடித்தவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. பொழுது போகனுமுன்னா எவ்வளவு வழி இருக்குங்க அதுக்காக காசை கரியாக்கனுமா.....பேசாம இணையதளம் வந்தீங்கனா பார்க்க எவ்வளவோ இருக்குங்க...

      Delete
  6. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதான் இருக்கு! நன்றி!

    ReplyDelete
  7. கதாநாயகி அப்பாவைக் கன்னத்தில் அறைகிறாளே.... அந்த ஒரு சீனே போதும்...
    நம் நாடு வல்லரசு ஆகிவிடும்.
    நல்ல நல்ல முன் உதாரணங்கள் காட்டுகிறார்கள் நம் நாட்டு படங்களில்...

    போங்க “உண்மைகள்“... வர வர படம் தமிழ் படம் பார்க்கவே பிடிக்கலை.

    ReplyDelete
    Replies
    1. சில நல்லபடங்களும் வந்து கொண்டிருக்கின்றன... சுந்தரபாண்டியன் மிக நன்றாக இருந்தது பார்க்காவிட்டால் பாருங்கள்

      Delete
  8. நான் இந்த படத்தைப் பார்க்க தனியாக தியேட்டருக்கு போயிருந்தேன், பாப்கானும் தண்ணீர் பாட்டிலும்தான் அடிக்கடி தீர்ந்துகொண்டிருன்தது, கண்டிப்பாக எனது பர்ஸ் காலியானது உண்மைதான் இந்த விஷயம் எப்படி உங்களுக்கு தெரிந்தது என்றுதான் தெரியவில்லை.ஹா ஹா ஹா !

    ReplyDelete
    Replies
    1. //இந்த விஷயம் எப்படி உங்களுக்கு தெரிந்தது என்றுதான் தெரியவில்லை.///

      உங்களின் அருகில் இருந்து நீங்கள் வாங்கிய பாப்கானையும் தண்ணீர் பாட்டிலையும் உங்களுக்கு தெரியாமல் தீர்த்து கட்டியது நாந்தானுங்க ...இப்ப புரிஞ்ச்சுருக்குமே

      Delete
  9. >>அதில் வரும் ஒரு சேனலில் தமிழில் வரும் புதுப்படங்களை 2 வாரம் கழித்து அடுத்த புதுப்படங்கள் வரும் வரை தொடர்ந்து ஒலி பரப்புவார்கள்.

    அது என்ன சேனல் சார் ? தெரிந்து கொள்ளலாமா ?

    ReplyDelete
    Replies
    1. மின்னல் சேனலில் உள்ள மின்னல் சினிமாவில் புதிய படங்களும் மின்னல் மூவியில் சிறிது பழைய படங்களும் மின்னல் வண்ணத்திரையில் 89, 90 படங்களையும், மின்னல் வெள்ளிதிரையில் ரொம்ப ஒல்டு படங்களையும் ஒளிபரப்புகிறார்கள்

      Delete
  10. வள வளா இல்லாத, விமர்சனம் / அனுபவ??!! பகிர்வு அருமை.

    //ஒலிபரப்பாகும் அதில் வரும் ஒரு சேனலில் தமிழில் வரும் புதுப்படங்களை 2 வாரம் கழித்து அடுத்த புதுப்படங்கள் வரும் வரை தொடர்ந்து ஒலி பரப்புவார்கள் அதில்தான் இந்த படத்தை சனிக்கிழமை பார்த்தேன்//
    'ஒலி' பரப்பினால் (சாதாரண கண்ணால்)பார்க்க??!! முடியாது. கேட்க தான் முடியும்.

    ஒரு வேளை ஒளி / ஒலி பரப்பி, அதைப் பார்த்து, கேட்டு, வளி கெட்டு தலைவலி வருவதைத் தவிர்க்க, நீங்கள், புது வழி ஏதும் கண்டு பிடித்திருக்கிறீர்களா?

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக்காடியதற்கு நன்றி


      //'ஒலி' பரப்பினால் (சாதாரண கண்ணால்)பார்க்க??!! முடியாது. கேட்க தான் முடியும்.//

      நான் தமிழ்படத்தை பார்க்கும் போது பார்பதைவிட அது ஒடும்போது வசனத்தை கேட்டுகொண்டே லேப்டாப்பில்தான் மேய்ந்து கொண்டிருப்பேன் சில இடங்களில்தான் வசனத்தை பொறுத்து கண்ணை திரையில் செலுத்துவேனுங்க

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.