Tuesday, December 25, 2012





உலகம் ஏண்டா அழியலை.....

உலகம் அழிஞ்சுடும் அப்படின்னு பல மக்கள் நம்பி வந்தனர். அதைப்பற்றி எழுதியும் வந்தனர். ஆனால் அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை. அது ஏன் நடக்கவில்லை என்று யோசித்த போதுதான் அதற்கான காரணங்கள் என் மனதில் எழுந்தன. இதோ அந்த காரணங்கள். இது மட்டும் நடந்திருந்தால் ஒரு வேளை உலகம் அழிந்திருக்குமோ??

ஐஸ்வர்ய்யா ராய் மகள் ரஜினிக்கு ஜோடியா நடிக்கணும்.. ( ஐஸ்வர்ய்யா மகள் பாட்டி வேடத்திலும் ரஜினி ஒரிஜனல் வேடத்திலும் ஜோடியாக நடிக்கலாமே )

ஜெயலலிதா பாரதப் பிரதமாராக ஆகணும். ( பாரதப் பிரதமர் என்ன அமெரிக்காவின் ஜனாதிபதியாக கூட ஆகலாம். ஆசைப்படுவதில் தப்பு இல்லையே)

மன்மோகன் சிங் ஐநாவின் பொதுச் செயலாளராக ஆகணும் ( என்ன சோனியவின் பேச்சை கேட்டு நடந்தவருக்கு அமெரிக்காவின் பேச்சை மட்டும் கேட்டு நடக்க முடியாதா என்ன?)

நடிகர் விஜய் தமிழக முதல்வாராக ஆகணும்.( அடே யாரப்பா அங்கே சீக்கரம் விஜயை வைச்சு அவர் முதலைமைச்சாராக வர்ர மாதிரி ஒரு படம் எடுங்கப்பா இல்லைன்னா இவரோட அப்பா பண்ணுற ரவுசு தாங்க முடியலைப்பா)

குஷ்பூ திமுகவின் பொதுச் செயலாளராக ஆகணும்.( யாரு கண்டா எதுவும் நடக்கும் )

ராமதாஸ் ஐயா அவர்களும் அவரது மகனும் ஒரே தொகுதியில் எதிர் எதிராக போட்டியிடணும். (தாமரைகனி மாதிரி இவர்கள் குடும்பமும் ஆகிவிடலாம் ...பாவம்)

விஜய் டிவியில் சூப்பர்  ஒல்டேஜ் சிங்கர் வரனும் அதில் பிரகதி, சுகன்யா, ஆஜித்,கெளதம் போன்றவர்கள் பைனலில்  வரணும் ( அய்யா சூப்பர் ஐடியா )

டாஸ்மாக்கில் சரக்கு விலையை ஏற்றியதை கண்டித்து ஆண்களும் பெண்களும்  பஸ்மறியலில் ஈடுபடணும்.( பால் விலை ஏற்றத்திற்கு போராடியது அந்த காலம். இது நவின காலம் மக்கா)

தமிழகத்தில் மாதத்திற்கு ஒரு நாள் முழுவதும் பவர் சப்ளை வரணும் ( அம்மா ஆட்சி செய்தா நிச்சயம் இது கண்டிப்பா நடக்கும் )


அமெரிக்கன் தமிழகத்தில் இட்லி கடை ஆரம்பிக்கணும்.( பிட்ஸா, பாஸ்தா, பர்கர் போன்றவைகள்  அதிகம் விரும்பி சாப்பிடும் தமிழகத்தில் இதுவும் நடக்கும் காலம் ஒன்று வரும் )

வருஷம் பூராவும் காவிரியில தண்ணிர் வெள்ளமாக கரை புரண்டு ஒடனும். ( காவிரியின் அகலம் சிறிய பைப் லைனாக மாறும் பட்சத்தில் இது நடக்க வாய்ப்பு இருக்கலாம் )

பாராளுமன்ற தேர்தல மக்களுக்கு 4G போன் இலவசமா தந்து காங்கிரஸ் ஆட்சியை புடிக்கனும்.


இதனாலதான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது. இதெல்லாம் நடந்து இருந்தா இன்நேரம் உலகம் அழிந்திருக்குமுங்க,,,


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

8 comments:

  1. இதெல்லாம் நடந்தால்தான் உலகம் அழியனும் என்று இல்லை, இதெல்லாம் நடந்தால் நானே தற்கொலை பண்ணிக்குவேன்.

    ஹா ஹா ஹா

    செம செம தூள் கிளப்பிட்டிங்க!

    ReplyDelete
    Replies
    1. நீங்க தற்கொலை பண்ணிப்பீங்கன்னூதான் இதெல்லாம் நடக்காமா இருக்குதோ என்னவோ

      Delete
  2. உலகம் 475 கோடி ஆண்டுகள் அழியாது என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஒருவேளை இந்த கால கட்டத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளவை நடந்தாலும்(!) ஆச்சரியப்படுவதிர்க்கில்லை.

    ReplyDelete
  3. நிச்சயமாக.......! உங்கள் கற்பனை திறனை என்னவென்று வாழ்த்துவது .....! கண்டிப்பாக அழிய கூடாது நம் தமிழ் மக்கள் பழைய
    தமிழ் மக்களாக மாறும் வரை .......!

    ReplyDelete
  4. “ஐஸ்வர்ய்யா ராய் மகள் ரஜினிக்கு ஜோடியா நடிக்கணும்..“

    எது நடக்குதோ இல்லையோ
    இது கண்டிப்பாக நடந்துவிடும் “உண்மைகள்“

    ReplyDelete
  5. உங்க பதிவு நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete
  6. ;))))) நல்ல நகைச்சுவையான கற்பனை. இன்று இதனை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளனர். பாராட்டுக்கள் ... நண்பரே. அன்புடன் VGK.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.